!!!9!!!
ஹோஸ்டேல் ....
தன் ட்ரெஸ்ஸை ,பெக் செய்து கொண்டு இருந்த லினி , பின்னால் இருந்து அவளை யோசனையோடு பார்த்துக் கொண்டு இருந்த ஆதியே திரும்பி பார்த்தால் .....
"என்ன ரொம்ப யோசிக்கிற மாதிரி இருக்கு ,ஏன் ஆதி நான் போய்த் தான் ஆகுமா எனக்கு பிடிக்கலப்பா, ப்ளீஸ் நீ யோசிக்கிறதப் பார்த்தா என்ன போக வேண்டாம்னு தானே சொல்ல போற , நா என்னோட திங்க்ஸ் எல்லாம் எடுத்த எடத்துல அப்பிடியே வச்சுரவா, என ஆவலோடு கேட்க ......
அவள் பேசிய விதத்தைப் பார்த்து ஆதிரை
"ஹே லூசு, நீ போகலைன்னா எப்படி நீதானே கல்யாணப் பொண்ணு, அப்புறம் நான் யோசிச்சது அதைப் பத்தி இல்லை காலைதானே ட்ரைன் இல்லே நைட் ட்ரைன்க்குப் போறியான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்."
ஆதியின் பதிலை கேட்ட லினி ......கோபமாக ...
"என்ன தொரத்தி விடுரதுலயே குறியா இருக்கேள போ எனக்கு அவனப் பிடிக்கல அப்படின்னு சொன்னா உனக்குப் புரியலையா?" என லினி அழுகை உடன் கத்த
அவளின் மனநிலைமை அதிரைக்கு புரியாமல் இல்லை .இருந்தும்
"லினிமா நடப்பது எல்லாம் நன்மைக்கே இப்போ எல்லா திங்க்ஸ் எடுத்து வை. நான் டிக்கெட் conform பண்ணிட்டு வந்துடறேன்" என சொல்லிவிட்டு ஆதி சென்றாள் .
அஸ்வத்தின் வீடு........
"என்னடா அன்னைக்குக் கோவிலுக்குப் போயிட்டு வந்ததிலேர்ந்து ஏதோ யோசனைலே இருக்கிறாப்புல தெரியுது. என்ன விஷயம்?" என்று விதுவின் பக்கத்தில் அமர்ந்தபடி .கேட்க...
"இங்கே பாரு" என்று அஸ்வத்தின் கையில் ஒரு கார்டை நீட்டினான் விது.
அதைப் பிரித்து பார்த்த அஸ்வத் ....."அவனுக்குக் கல்யாணம்ன்னு தெரியும்.நீ போய்த்தான் ஆகணுமா என்ன?" அஸ்வத் கேட்க
"என்னடா அஷு இப்பிடி கேட்குற .....அவன் நம்ம பிரின்ட் .... இங்கே வந்த லீவ்லதானே போகப்போறேன்.அப்படியே வீட்டையும் பார்த்த மாதிரி இருக்கும்.நீயும் அம்மா அப்பாவும் வாங்களேன்.சேர்ந்தே போகலாம்.எனக்கு எனக்கு....."அதற்கு மேல் பேச இயலாமல்.....விதுவின் தொண்டை துக்கத்தில் அடைக்க
"என்னடா இது விடு விஜி ..எல்லாரும் சேர்ந்து போகலாம்.மதுரையை நீதானே சுத்திக்காட்டப் போறே.வரும்போது உனக்கான தேவதையோடதான் இங்கே வருவோம்.எப்படி?" என்று விட்டு அஸ்வத்நகர்ந்துவிட்டான்.பக்கத்தில ) இருந்தா யார் வாங்கிக் கட்டிக்கறது?)
இங்கு விது முன்னால் போவது என்று முடிவு செய்யப்பட்டு விது மட்டும் முன்னால் கிளம்ப..
அங்கு லினி கிளம்ப, (விதி வலியது)
இங்கு மகேஷின் திருமணத்திற்கு ஒரு நாள் முன்னால் செல்லலாம் என்று முடிவு எடுத்த விது மற்றும் ..அஷு.சற்று நேரம் கிரௌண்டில் உட்காந்து பேசினார்கள் .....
"ம்ம் அப்புறம் டா, ரோபோடிக் லைப் ஆச்சுல இப்பிடி நாம உட்காந்து பேசி எவ்வளோ நாள் ஆச்சு ..இல்லை .
"ஆமா நீயும் என்னோடு வரலாம்ல டா " என விது கேட்க ...
"ம்ம் வரலாம். யாரோ காலேஜ் ஸ்டுடென்ட் final year project நம்ம headquarters லேதான் பண்ணப் போறாளாம். அவளுக்கு நம்ம mission பற்றி சொல்லி ஒரு project completion report கொடுக்க வைக்கணுமாம். அதனாலதான் நீ முன்னால் போ. நான் அப்புறம் வரேன்னு சொன்னேன்.
"ஓகே இப்போ போகலாமா? நைட் ட்ரைன்டா உனக்கு என்று இருவரும் வீட்டிற்கு சென்றார்கள்.
ஆதி ஹாஸ்டல் வராண்டாவில் தலையில் கையை வைத்துக்கொண்டு project study material மற்றும் permission letter ஐ மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன இது? நான் எப்படி அங்கே போவேன்? மகியை விட்டுட்டு நான் மட்டும் army headquarters போய் அந்த அஸ்வத்தோ வாத்து மண்டையனோ அவனை இண்டர்வியு பண்ணி report வேறே தரணுமாம் காட்சில்லா ,,உன்னை என்ன பண்ணலாம்?"
( அதானே பார்த்தேன் நீயாவது சும்மா அமைதியா இருக்க போறதாவது)
"ம்ம் லினி இப்போ போயா உனக்குக் கல்யாணம் வைக்கணும்?உன்னை அங்கே அனுப்பிட்டு நான் ரொம்ப கஷ்டப் படறேன்? நாளைக்கு அந்த டக்லஸ் மண்டையனைவேறே போய்ப் பார்க்கணும்.....என புலம்பிய படியே உறங்கி விட......
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro