!! 5 !!
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
பொருள் :
ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.
அப்பொழுது விஜயின் பின்னால் இருந்து ஒரு குரல்,
"யார் இந்த தேவதை.. யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை.. யார் இந்த தேவதை"
எனப் பாடிக் கொண்டே விஜியின் தோளை தட்ட, யாருடா அது என்று திரும்பும்போது தனது நினைவுகளை விட்டு நிகழ் காலத்திற்கு வந்த விஜயன்... , ஆச்சரியத்துடன் எதுவும் பேசாமல் நிற்க,
"ஹே...விஜி .. எப்பிடி டா.. இருக்க..??? என்ன காலங்கார்த்தாலே கனவா.. யார்அந்த ட்ரீம் கேர்ள்...." (யாருப்பா அந்த நியூ என்ட்ரி அப்படின்னு பார்க்கிறீங்களா..சொல்றேன்..வெயிட்பண்ணுங்க..)
"ஹே.. நீயா...நீ எப்போ இங்க ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தே.., சொல்லவே இல்லை...." என விஜயன் கேட்டான்
ட்ரான்ஸ்பர் அதுவும் நானு...நோ வே...மச்சி.., நான் வந்ததே உன்ன பார்க்க.. தான்.. என விஜயன் கேள்விக்கு அவன் சிரித்த படி பதில்... சொல்ல...
யார் அந்த நியூ என்ட்ரி பதில் சொல்லுமுன் நம்ம வானரங்கள் என்ன செய்யுது அப்படின்னு கொஞ்சம் பாப்போம்..
புனே - ஹோச்டேல்
"திரு.. திரு.. எங்கே இருக்கே நீ, சீக்கிரம் இங்க வா.." என லினி பதட்டமாகக் தேடி கொண்டே அதிரை ரூம்க்கு வர,
அங்கே ஆதிரை அவளை நோக்கி சிரிப்புடன் ஒரு பாட்டை பாட (என்ன பாட்டு அப்படின்னு பார்க்கிறீங்களோ..இதுதாங்க அது..
"ஓடோடி வந்ததால் உள்ள முச்சும் வாங்குதே..
உன் முச்சின் உள்ளே தான் என் மூச்சும் உள்ளதே..")
" எருமை மாடே ,எவ்வளவு பதட்டமா ஓடி வரேன், கைல ரோஸ் வச்சுட்டு என்னைப் பார்த்து என்ன பாட்டு வேண்டிக்கிடக்குது.. உனக்கு...ம்ம்ம்.. அதுவும் ஓடோடி வந்தேனாம்..." என அவளின் தோளில் அடித்துக்கொண்டே லினி கேட்க,
"ஆ ..அம்மா வலிக்குதுடி.. மெதுவா அடி.. ஓ.கே. நீயும் அப்படித்தானே வந்தே..எப்போவதுதான் தமிழ் சாங் வரும், வரப்போ ரசிச்சிக்கோ என்ன, அப்புறம் என்ன விஷயம் சொல்லு, எதுக்கு இப்படி கத்திக்கிட்டே ஓடி வர, அப்படி என்ன உனக்கு தலை போற அவசரம்." என ஆதி கேட்டுகொண்டே தனது பேகில் கல்லூரிக்கு எடுத்துட்டு போவதற்காக எல்லாம் எடுத்து வைத்துகொண்டு இருந்தாள்
"அதிரை.... ..நம்ம ப்ரேசெண்டேசன யாரோ திருடிட்டாங்கடா போல உன் லப்டோப்ல இல்லை இப்போ..என்ன பண்றதுன்னு தெரியல' என லினி அழ ஆரம்பிக்க,
" ஏய் கூல் பேபிம்மா , ஏன் இவ்ளோ டென்ஷன்,டைம் ஆய்டுச்சு பாரு... வா செமினார் ஹால் போய் கோட்ஜில்லா கிட்ட விசயத்தை சொல்லுவோம்... தப்பு நம்ம மேல இல்லை அப்புறம் எதுக்கு இவ்வளோ பயம், போய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.. ஒ.கே. வா..வா.. சும்மா அழுதுட்டே இருக்கக் கூடாது.. இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கட்டும்... வா போலாம் ." என ஆதி கூற,
அதை கேட்ட.. மகிழினி...உடனே, "ஹ்ம்ம்.. அப்படியா சொல்ற, நீயே தைரியமா இருக்கும்போது எனக்கு என்ன பயம்?வா.." எனச் சொல்லி அவளுடன் சேர்ந்து செல்ல, இருவரும்..பேசிக்கொண்டே செமினார் ஹால் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். ஆதி மறக்காமல் அந்த ரோஜாப்பூவை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
அதைப் பார்த்த லினி, " அடியேய் எதுக்கு இப்போ இந்த ரோஜாப்பூ.. அங்கே வந்து இதை வைத்து மீண்டும் பாடப் ஏதும் போறியா என்ன " என அவள் அலற,
ஆதியோ, எதுக்குடி இப்படி அலறவ ,உன்னைப் பார்த்தா பாடப் போறேன், பட் இப்போதைக்கு பாடப் போறது இல்ல.. இது சும்மா ஒரு சப்போர்ட்க்கு.. எதுக்குன்னு உனக்கு அப்போ தெரியும்.. சும்மா கேள்வி கேட்காம வா.. சரியா" என்று கூறி அவளை இழுத்துச் சென்றாள்.
"ஹே கேர்ள்ஸ்,என்ன நினைச்சுட்டு இருக்கீங்க உங்க மனசுல, ம்ம் .. ஒரு நாளாவுது கிளாஸ்க்கு கரெக்ட் டைம்க்கு வர ஐடியா இருக்கா இல்லையா? பர்ஸ்ட் டே லேட்டா வந்ததுக்கான பனிஷ்மென்ட்தான் இந்த செமினார்...அப்படி இருந்தும் செமினார்க்கே லேட்... எல்லோரும் எப்படி கரெக்ட்டா அவங்க டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ணி இருக்காங்க.. எங்கே உங்க ப்ராஜெக்ட் .கொடுங்க நான் பார்க்கணும்" என்று கோட்ஜில்லா கத்த.. அவ்வளவுதான் நம்ம தேவதைக்கு ... இவ்வளவு நேரம் கட்டி வச்சு இருந்த தைரியம் காற்றில் பறக்க, அவள் ஊ...ஊ...ஊ. என அழ ஆரம்பித்தாள். வழக்கம் போல் கோட்ஜில்லா மியூசிக் ஸ்டார்ட் பண்ண, ஆதி தமது வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டா... வேற..என்ன? HODஐ பார்த்தா பாருங்க ஒரு பார்வை..திட்டிட்டு இருந்த HOD, அதை நிறுத்தி விட்டு "what r u looking in my face?" எனக்கேட்க,
நம் ஆதியோ, ஒரு அடி அவரிடம் நெருங்கி.. வாவ்..மேம்... சில பேரு சிரிச்சா அழகு. பேசினா அழகு, பட் மேம் நீங்க கோபப்படுறதப் பார்த்த பின்பு கோபப்பட்டால் கூட ஒருத்தர் இவ்வள"வு அழகா இருக்க முடியுமான்னு பார்க்கிறேன்..மேம்.. now u r looking so cute...லவேண்டேர் கலர் சேலை , அதோட உங்கள் கோபமான சிவந்த ஸ்டிராபெரி மூக்கு..ம்ம்..மேம் நீங்க அவ்வளவு அழகு .. என்னன்னு நான் சொல்ல", என அவள் பேசி கொண்டே போக..
"ஸ்டாப் இட், அசைன்மென்ட் பத்திக் கேட்டா ஸ்ட்ராபெரி, செர்ரின்னு ஏதோ ஏதோ உளறக்கிட்டு இருக்க .."(கோட்ஜில்லாக்கு கோபம் அப்பவே போய்டுச்சு.. அம்மணி இவங்கள ரொம்ப அழகுன்னு சொல்லிட்டாங்க இல்ல.. அதான்...) இருந்தாலும் கோபம் போல் நடித்து "where is your presentation...??" எனக் கேட்க, ஆதியோ, "இருக்கு மேம், பஸ்ட் எல்லோரும் எடுத்து முடித்தவுடனே, நாங்க எடுக்கிறோம்,லாஸ்டா மேம், ப்ளீஸ்... எனக்குக் கொஞ்சம் ஸ்டேஜ் பியர்.." எனச் சொல்ல,
லினியோ, "ஆதியை ஒரு மார்க்கமாக பார்வையிட்டு, இவளுக்கா ஸ்டேஜ் பியர்... HODக்கே ரோஸ் கொடுத்தது மட்டும் இல்லாம..சைட் வேற.. நான் இங்க ஜெர்க் ஆகி நிற்கிறேன்.. இவ எப்படி இல்லாத ப்ராஜெக்டை ப்ரெசென்ட் பண்ணப் போறா , ஐயோ எனக்குத் தலையே வெடித்துடும் போல் இருக்கே.. தெய்வமே.. என்ன பண்ணப் போறா இவ.." என மனசுக்குள் ஆதியைப் பொறித்துக் கொண்டு இருந்தாள்.
"ஒ.கே..உங்க இடத்தில் போய் உட்காருங்க.. உங்க சான்ஸ் வரும்போது உங்களைப் பார்க்கிறேன்" என்று முறைத்தபடி சொல்ல,
"ஒ.கே மேம்" என இருவரும் கூறிக் கொண்டு அவர்களின் இடத்தில் போய் அமர்ந்தனர். செமினார் ஆரம்பிக்க, எல்லா ஸ்டுடென்ட்ஸ்ம் கொடுத்த டாபிக்கை வெற்றிகரமாக ப்ரெசென்ட் பண்ணிக் கொண்டு இருக்க, அதற்குள் ஆதி, லினியின் காதுக்குள் ஜெசிதான் ப்ரேசென்டேசன் சுட்டது என்று மட்டும் சொன்னாள்.
அடுத்ததாக ஜெசி முறை.. அவள் இவர்களின் ப்ரேசெண்டேசனைத் தான் தனதாக எடுத்து வந்து இருந்தாள். ஆனால்??? (என்னடா இங்க போய் இம்புட்டு கேள்விக்குறின்னு பார்க்கறிங்களா?.. வெயிட் பண்ணுங்க.. சொல்றேன்.. )
சிடியே கம்ப்யுட்டரில் ஓட விட.... அப்போது.... அதில் ப்ரேசெண்டசன்க்கு பதில் ..... ஸ்க்ரீனில் டிஸ்ப்ளே ஆனது...
"என்னைத் தாலாட்ட வருவாளா..
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா.." என்ற பாடல்..
அதைக் கேட்டவுடன் அமைதியாக, கோபம் குறைந்து குளிர்ந்து அமர்ந்து இருந்த நம்ம கோட்ஜில்லாவுக்கு மறுபடியும் கோபம் தலைக்கு ஏற...
அப்போது ஆதி, லினியிடம், " நாங்கல்லாம் பழனிக்கே பஞ்சாமிர்தம் தரவிங்க, எங்ககிட்டயேவா.. சூப்பர்ப் சாங் இல்ல, இப்போ நம்மளை தாலாட்ட பாட வரப்போறது நம்ம கோட்ஜில்லா" என காதுக்குள் சொல்ல, அதை கேட்ட லினியோ வந்த சிரிப்பை அடக்கப் பெரும் முயற்சி செய்துகொண்டு இருந்தாள்.
பிறகு ஆமா நம்ம சிடி எங்கே.. என மகிழ் கேட்க..
இதோ இங்க என ஆதிரை கையில் எடுத்து காட்டினாள்.....
அங்கே மறுபடியும் ஒரு யுத்தகளம். இந்த முறை ஜெஸ்சி அண்ட் கோட்ஜில்லா. அதன்பின் இவர்கள் முறை வர, இருவரும் நன்றாக ப்ரெசென்ட் செய்ய, அதை கோட்ஜில்லாவே பாராட்டியது என்றால் பார்த்துகோங்க..அப்போதிருந்து லினி அண்ட் ஆதி என்ன சேட்டை செய்தாலும் HOD, கண்டுக்காமல் விட்டுவிட்டார்.
பிரெசென்டேசன் முடிந்தவுடன் ஜெசியைப் பற்றி HODயிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கசொல்ல, அதை அறிந்த லினி, ஆதியைத் திட்டினாள் இது உனக்கு தேவையா
அவள் கூலாக, "இப்போஇவளை சும்மா விட்டால் நம்ம மேல்தான் பாய்வா, அதான் ஒருமுறை மாட்டிவிட்டேன், இனி அவள் நம் வழிக்கு வரமாட்டாள்இல்ல" எனச்சொல்ல,
லினியோ, "ஆதிரை , உனக்குஅறிவு இல்லை, நேத்தே அவளை நான் வார்ன் பண்ணினேன், இப்போ நீபோய் கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்க, என்குயரிஅது இதுன்னு நம்மளை போட்டு இழுப்பாங்க, சோ இது நம்ம ப்ரோப்லேம் அதை நாமளே முடித்துக் கொள்ளணும்"என்று சொல்லிக் கொண்டு செல்ல,
ஆதி, "சரி..சரி..ஏன் இந்தக்கொலைவெறி? என்மேல.உனக்கு...கொடுத்தத. இனி திரும்பிவாங்க முடியாது.. இனிமேல் இப்படிப் பண்ணாம நாமளே ஒருகை பார்த்துடலாம் சரியா.. இன்னும் என் மேல் கோபமா..சொல்லு. என்ன பண்ணணும்என்று, ஜெசியைஅடிக்கணுமா இல்லை அவள் முடியை கட் பண்ணனுமா சொல்லு லினி..."என ரைமிங்காககேட்க, அதைகேட்ட.. லினி சிரித்தாள் ,
அனைத்தும்கேட்டுக் கொண்டு இருந்த ஜெசி, அவர்கள்பக்கம் அதன் பின் வரவே இல்லை.. எதற்குவம்பு என்று. (ஒண்ணோ குட்டிப்பிசாசு, இன்னொண்ணுகாட்டேறி சிக்கினா என்ன ஆகறதுன்னுதான் எனவந்த வழியே சென்று விட்டாள்)
இப்படிஆரம்பித்த அவர்கள் நட்பு, முஸ்தபா.. முஸ்தபாஎன பாடும்படி.. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுஇருந்தது.
இணைபிரியாத்தோழிகளாய், ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துஇருந்தனர். இப்படியே வருடங்கள் ஓடின. அவர்கள்கல்லூரி வாழ்க்கையும் சேர்ந்து ஓடியது. ஏற்ற இறக்கங்கள், சின்னச் சண்டைகள், நிறைய மகிழ்ச்சிஎன சென்று கொண்டு இருந்தது.
இப்போதுகடைசி வருடத்தின் முதல் பகுதியின் முடிவில் இருந்தனர்.
செமஸ்டர் ஹாலிடே.. எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டு இருக்க, லினி ஆதியிடம் வந்து, ஒரு பார்சலை கொடுத்து.. "திரு, இந்த திங்க்ஸ் எல்லாம் வீட்டில் தர முடியுமா?" எனக் கேட்க, என்ன என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஆதி அவளைப் பார்த்து, பின், "நீங்க எங்க போறிங்கன்னு நான் தெரிந்து கொள்ளலாமா செல்லம்" எனக்கேட்க,
அவள், "இல்லை.. நான் ஊருக்கு இந்த டைம் போக வேண்டாம் அப்படின்னு நினைத்தேன்.. கோர்ஸ் கம்ப்ளிட் பண்ணிட்டுப் பிறகு போகலாம்ன்னு இருக்கேன்.. சோ நீ மட்டும் போயிட்டு வாடா.. உன் வீட்டில் வெயிட் பண்ணுவாங்க இல்ல.. உனக்கே தெரியும் எங்க வீட்டை பத்தி.." என சொல்லி நிறுத்தினாள்.
அப்போது ஆதி,லினியிடம் எதுவும் பேசாமல், உடனே யாருக்கோ தொலைபேசியில் அழைக்க, லினி குழப்பத்துடன் நின்றாள்.
"hello... Is it southern railway?,
...
ya, I would like to cancel my ticket booked for Madurai on day after tomorrow and this is my PNR number, could you able to do it now pls..
...
No need of postpone ..just cancel it,
.....
thank you..
இதைக் கேட்டுக் கொண்டு இருந்த லினி, " ஹேய் ஆதிரை ஏன் டிக்கெட்டை கேன்சல் செய்யற?" எனக் கேட்க,
"எனக்கும் ஊருக்குப் போகப் பிடிக்கல, நீ வரேன்னுதான் போகலாம் நினச்சேன் , இப்போ நீயே போகல. சோ" எனச் சொல்லிவிட்டு தன்னோட பொருட்களை இருந்த இடத்தில அடுக்க ஆரம்பிக்க.. அவளது செயலில் ,லினியின் கண்கள் லேசாக கலங்கியது. அவள் அதிரையே பார்த்து.... ஏன் டி . இப்பிடி இருக்க என கேட்க
அவளதுகேள்வியில்.. அதிரை.. மீண்டும் ஒரு முறை. மகிழினியே திரும்பி பார்த்து... உன் மேலஅம்புட்டு லவ் செல்லம்.., உனக்காக என்னவேணும்னாலும் பண்ணுவேன்...[ என்ன வேணும்னாலும் என்கிற வார்த்தையே அழுத்திசொல்லிவிட்டு அவள்வேலையே தொட்ரந்தாள் .
அதிரையின் பதில் கேட்டு கண் கலங்கி நின்றாள் மகிழினி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro