!!! 3 !!!
என்னடா சொல்லுற , இரு போன் பண்ணி கேட்கறேன் , ஒரு
நாளைக்கு மேல் அப்பாவும் அம்மாவும் அவங்க வீட்டுல தங்க எல்லாம் மாட்டாங்க டா ஹரி , என்று சொல்லிவிட்டு விஜி.... தனது தந்தையின் அலைபேசியில்... தொடருப்பு , அது ....."நீங்கள் டயல் செய்த எண் உபயோகத்தில் இல்லை என்று பதில் வந்தது ... விஜயனின் பதட்டம் .....மேலும் கூடியது ....
அவன் தனது நண்பனான "மகேஷ் " என்பவனுக்கு அழைத்தான்...
...
"ஹலோ , மகேஷ் ஹியர்......"
விஜயன்..... " ஹலோ ..மகேஷ் நான் விஜயன்.. பேசுறேன் டா ......"
மகேஷ் "டேய் விஜி . என்ன அதிசயம் , எப்பிடி டா இருக்கே
இப்போ தான் என் ஞாபகம் வந்துச்சா உனக்கு , சொல்லுடா என்ன
விஷயம் ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு.. , வீட்டுல எல்லாரும் நல்லம் தானே டா ......
விஜயன்... .. " என்ன டா சொல்லுறே ஒன்னும் தெரியாத மாதிரி கேட்குற ,
அம்மா – அப்பா எல்லாரும்... அங்க சென்னைக்கு உங்க வீட்டு
தானே வந்தாங்க , நீ என்னடானா ஒன்னும் தெரியாத மாதிரி
நல்லம் விசாரிக்கிற .. நீ முதல உன் அம்மா கிட்ட போன குடு நான்
கேட்குறேன் அவங்க கிட்ட ...
மகேஷ் ," என்ன டா இப்பிடி சொல்லுற நா இப்போ பிசினஸ் மீட்டிங்
விஷயமா பெங்களூர் ல இருக்கேன் , அம்மா அக்கா , அப்பா எல்லாரும்
கோவில்கு போயிர்காங்க டா சென்னைல ப்ரோக்ராம் முடிஞ்ச உடனே
இவங்கள அழைச்சுகிட்டு நா பெங்களூர் வந்துட்டேன் டா ஊருல...
அம்மாவும் அப்பாவும் கிட்ட சென்னை சுற்றி
பார்த்துட்டு தான் போவேன்னு சுஜி அடம் பண்ணினத்துனால... அவங்களும் சரி சொல்லி அங்கே தங்கினாங்க டா நான் அவங்க துணைக்கு ஒரு ஆள விட்டுட்டு தான் வந்தேன் இந்நேரம் ஊருக்கு போயிர்பாங்கன்னு நினைச்சேன் நீ இப்பிடி கேட்குற...
விஜயன்.... , " போனது போகட்டும்டா , நீ இப்போ அவங்க நல்ல
இருக்காங்களான்னு கேட்டு சொல்லுடா என்னால முடியல டா.....
இங்க மகேஷோ .... ஓஹோ.. அப்பிடியா சங்கதி , இருடா என்ன
எப்பிடி எல்லாம் உன்ன வச்சு எங்க அப்பா தாழ்த்தி பேசுவாரு...
உன் தங்கச்சியும் என்ன மதிச்சிர்பாளா
வேணும் அவளுகளுக்கு இந்தா சாவு வேணும் நான் செய்ய சொன்ன கொலை..இருந்து தப்பிக்க ஆண்டவன் எனக்கு... வழி காட்டிட்டான் ... நீ துடிக்கிறத...
பார்க்க எனக்கு ஒரு சான்ஸ் , நேத்தே உன்னோட
மொத்த குடும்ப கதை...முடிஞ்சு
போச்சுடா மடையா ....நீ கதறத பார்த்து நான் ரசிக்கணும் ..என
மகேஷ் மனுதுக்குள் நினைத்த படி இருக்க ...."
எந்த உறவிலும் நம்பிக்கை மிகவும் அவசியம். அது இல்லாமல் போனால்..எப்பிடி இழுத்து பிடித்து நிறுத்தினாலும்.. அந்த உறவு நீடிக்காது .அதை சமயம் . மனதுக்குள் வஞ்சம் வைத்து பழகினாலும் அந்த உறவு.... நீண்ட நாள் நீடிக்காது அது போல் தான் மகேஷ் விஜயன்.நட்பும்.....
மகேஷிற்கு விஜயனை கண்டால் பிடிக்காது.. ஆனால் விஜயனுக்கோ மகேஷ் என்றால் உயிர்.... அவன் எது சொன்னாலும். விஜயனுக்கு செய்து முடித்து தான் பழக்கம்... தன்னோட குடும்பம் அழிவதற்கு... தோழன்.... தான் கரணம் என்பது தெரியே வரும்போது .. விஜயனின் நிலை என்ன என்பது தான் தெரியவில்லை..
எங்க இங்கயே இருந்தா பிசினெஸில் தனக்கு போட்டியா
வந்து விடுவானோ என்கிற பயத்தில இவன் விஜியே ஆர்மியில் சேர்ந்துவிட சொன்னான்...
அதன் படி விஜியும் போய் சேர்ந்துவிட.. அங்கையும் விஜி பல வெற்றியே குவித்து நல்ல பேர் வாங்கி விட..
அந்த விசயமும்.. மகேசுக்கு பிடிக்காமல் போய்விட்டது..
மகேஷ், "ச்சே எங்க போனாலும் நல்ல பெயர் வாங்கிறன்டா
இவன்" மனதுக்குள் கருவியே படி ..தனது பிசினேஸில் கவனம்
செலுத்தினான் ..
இவன எப்படியாவது பழி வாங்கணும் என்று சிந்தித்து கொண்டு
இருக்கும் போதுதான் தனது அக்கா வீட்டின் விசேசத்தை தனக்கு
சாதகமாக பயன் படுத்த நினைத்து இருக்க, அதற்குள் தனது கம்பெனி வேலையாக பெங்களூரில் இருந்து போன் வர ...இங்க வந்த அவன் தனது வேலை ஆட்களை வைத்து விதுவின் குடும்பத்தினரை கொள்ள ஏற்பாடு செய்து இருந்தான் ....
கொஞ்சம் நேரம் கழித்து மகேஷ் விஜிக்கு போனை போட்டு , "ஹலோ விஜி.......விசாரிச்சுட்டேன் டா.. அது வந்து டா வந்து " என வந்த சிரிப்பை அடக்கி கொண்டு பேசினான்...
இங்க விஜயனுக்கு இதய துடிப்பின் அளவு கூடி கொண்டே இருக்க " மகேஷ் , சொல்லுடா என்ன ஆச்சு சொல்லுடா , நீ பீடிகை போடுறத பார்த்தா எனக்கு இதயமே நின்னுடும் போல இருக்கு டா ப்ளீஸ் சொல்லுடா, அம்மா – அப்பா , தங்கை எல்லாரும் நல்லா இருக்காங்க தானே?? ஏதும் பிரச்சனை இல்லையே ??
மகேஷ் இங்க மனசுக்குள் சிரித்த படி " இல்லடா வந்து சொல்லுறதுக்கே கொஞ்சம் கஷ்டமா இருக்கு
உன்னோட மொத்த குடும்பமும் சுனாமில மூழ்கிட்டங்கானு நினைக்கிறேன் , அப்புறம் உடல் கூட இன்னும் கிடைக்கலை டா
... எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல விஜி..........
இதை கேட்டு கொண்டு இருந்த விஜியின் உலகம் தட்டமாலையாக சுற்ற ,
அம்மா....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ .. என்று அலறி போனேனை கை நழுவ விட்டு மயங்கி விழ ஹரி அவனை தாங்கி பிடித்தான்......
ஹரி விஜி , டேய் விஜி..... , . , கண்ணை திறடா என விஜியின் கன்னத்தை தட்ட ஹ்ம்ம்ஹுன் பயன் இல்லை..இப்போது . ஹரியின் மனதில் பயம் பற்றி கொண்டது ,
"ஆபீசர்ஸ் ........ என ஹரி கத்த , அங்கு இருந்த சில கம்மாண்டோஸ் வந்து விஜியே .ஹோச்பிடல்கு அழைத்து போக உதவி செய்தார்கள் ....
அங்க டாக்டர் , விஜிக்கு . என்வென்று பார்க்க......, வெளியே இருந்த ஹரி .. , என்ன நடந்து இருக்கும் என்ன கிட்ட தட்ட யூகித்து இருந்தான் ,அவன் . மனத்திலும் நடந்ததை நினைத்து வேதனை சூழ்ந்தது..
விஜியின் .. நிலைமையோ ரொம்ப மோசமாக இருந்தது , மயக்கம் தெளிந்து, அம்மா – அப்பா , சுஜா என்ன கதறி அழுதுகொண்டே இருந்ததால் சக்தி எல்லாம் வடிந்து மறுபடியும் மயங்கி விழுந்தான்
வெளியில் வந்த மருத்துவர் ... ' ரொம்ப அதிர்ச்சி அடைஞ்சிருக்கார் , என்ன நடந்தது கேப்டன் .ஹரி . என அவர் கேள்வி கேட்க ,
ஹரி ஆபீசில் நடத்தை சொன்னான் , "டாக்டர் விஜிக்கு ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே , எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாக்டர் , whole family had gone in the bloody tsunami , ஒருத்தர் கூட மிஞ்சல அவன் குடும்பத்துல டாக்டர் , என கூறி கொண்டே ஹரி ...தரையில் மண்டி போட்டு அழ ..
டாக்டர் அவனை சமாதனம் செய்தார் ...come on young man நீங்களே இப்படி இருந்தா, அவர்
நிலையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க , நீங்க தான் அவருக்கு ஆறுதல் சொல்லணும் ,நீங்களே
இப்படி அழுதா ....ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர்ஸெல்ப் மிஸ்டர். ஹரி ..... Everything will be all right... டேக் கேர் எனச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார் ...
ஹரி .. மற்றும் அவனின் மனைவி ஷர்மிளா, விஜியே நினைத்து கவலை பட்டு கொண்டு நின்று இருந்தனர்......
ஷர்மிளா..." என்னங்க இப்பிடி ஆகிடுச்சு... "
அதான் ஷர்மி...எனக்கும் ஒன்னும் புரியல...... இப்போ இவன் என்ன பண்ண போறான் தெரியல...
" ரொம்ப நல்லா மனுசங்க அவங்க... என ஷர்மிளாவும் கண் கலங்க..
ஆமா ஷர்மி... நமக்கு நாம கேட்காமலே எவ்வளோ உதவி பண்ணிற்காங்க...."
**************
புனே ஸ்டேஷன் (இரவு 11 .௦௦மணி)
அப்போது தான்.. அங்கே வந்த ஒரு கால் டாக்ஸி.. நிறுத்தி..
ஆதி, "அண்ணா MITISBJ காலேஜ் போகணும் இங்க இருந்து போக எவ்வளோ ஆகும் ?"
அந்த கார் ட்ரைவேர்ரோ .. பொண்ணுங்களா. இந்த நேரம் எந்த வண்டியும் கிடைக்காது... எல்லாம் காலைல தான் என சொல்லிவிட்டு... அவர் சென்று விட...
விடிஞ்சா காலேஜ்..இதுங்க ரெண்டும் இன்னும் ஸ்டேஷனை
விட்டே போகல கொடுமை....
"காலேஜ் முதல் நாளே லேட்டா போய் வாங்கிக் கட்டிக்கப் போகுதுங்க ரெண்டும்.......ம்ம்ம்"
ஆதி, "எல்லாம் உன்னாலதான்... இப்போ பார் ஒரு ஆட்டோ கூட
கிடைக்க மாட்டேங்குது இப்போ" என்று கூறிக் கொண்டே மகிழினியைப் பார்த்து முறைக்க,
மகிழினி, " இப்போ எதுக்கு என்ன பார்த்து முறைக்கிற? நான் என்ன பண்ணினேன்?"
ஆதி, "ஆமாம் நீ ஒண்ணுமே பண்ணல, என் கூட வாக்குவாதம் பண்ணின நேரத்துக்கு சேர்ந்து வந்து இருந்து இருந்தா இப்போ , இந்நேரம் நாம ரெண்டு பேரும் ஹோச்டேல் போய் சேர்ந்து இருக்கலாம் தெரியுமா? இப்போ ஒரு வண்டியும் கிடைக்க மாட்டேங்குது..காலைல வரைக்கும் இப்பிடியே நிக்க வேண்டியது தான் .என்ன பண்ண?நீயே சொல்லு தாயே பரதேவதை, நமக்குன்னு வந்து வாய்க்கறாங்க பாரு, எங்கம்மா அப்போவே சொன்னாங்க உன் பாட்டுக்கு உன் வேலை பார்த்துட்டு போற வழிய பாருன்னு, இப்போ புரியுது ஏன் சொன்னாங்கன்னு .. எல்லாம் என் நேரம்டா சாமி ..."
"நான் ஒண்ணும் எனக்கு உதவி பண்ணுன்னு சொல்லவே இல்லையே நீ தானே என்ன பிரச்சனைன்னு கேட்ட? இப்போ என்னைக் குறை சொல்ற, வேணும்னா நீ உன் வழியைப் பார்த்துப் போ... எனக்கு என்ன வந்தது என்று மகிழினி கூற....."
" ஏய் ...", கொஞ்சம் நேரம் அமைதியா இருக்கியா.. எனக்கு வர கோபத்துக்கு அப்பிடியே உன்ன கடிச்சு வச்சுடுவேன்.. சொல்லிட்டேன்.. ஆதிரை மகிழினியே மிரட்ட...
அவளோ.. ஆதியின் பேச்சில் அமைதி ஆகிவிட்டாள் தன் இரு கைகளையும் கன்னத்தில் வைத்து கொண்டே... .. அவளுக்கும் எப்பிடி ஹோச்டேல் போய் சேர போகிறோம் என்கிற கவலை..
எப்படியோ இருவரும் முடியை இழுத்து சண்டை போடாமல் ஹாஸ்டலை வந்து அடைந்தனர்.
அடுத்தநாள்.. கல்லூரியில் முதல் நாள்..
அனைவரும் வகுப்பில் அமர்ந்திருக்க.. Lecturer அட்டேண்டன்ஸ் எடுத்து முடியும் சமயம்....அறைவாயிலில் இருந்து,
" எக்ஸ்க்யுஸ் மீ மேம் . May I get in?" என இரு குரல்கள் ஒருங்கே ஒலித்தன..
அது யாருன்னு உங்களுக்கே தெரிந்து இருக்கும்.நம்ம மகிழினியும், ஆதியும் தாங்க..
"கேட் இன் போத் ஒப் யு ( Get in both of you), இதுதான் கிளாஸ்க்கு வர டைமா . சொல்லுங்க.. ?" என H.O.D சாந்தினி கடிக்க,
ஆதி, நோ. மேம்.. அதுவந்து மேம்.. எஸ்டர்டே மழையினால்..."
"ஸ்டாப் இட்.. லேட்டா வந்ததும் இல்லாம. .எக்ஸ்ப்லனேசன் வேற.. உங்க ரெண்டு பேரையும்.??"
அப்போதுதான் ஆதி..ரெண்டு பேரா? இன்னும் ஒருத்தரா.. யாருடா அது என திரும்ப..
அங்கே இருந்தவளைப் பார்த்தவுடன் வாய் தானாக.. அம்மா டி மறுபடியும் நீயா .. என்று முணுமுணுத்தது...
"ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிரித்தாய்
என் உயிர் பூவை எரித்தாய்
முதல் நாள் பார்த்தாய், உறக்கம் கெடுத்தாய்,
முறையா என்றேன், கண்கள் பறித்தாய்..
என் வலி தீர, வழி என்ன.??
என் பனிப்பூவே மீண்டும் உன்னை பார்க்காமல் போனால் தான் என்ன?? "
ஒரு தடவ பார்த்ததுக்கே 24 மணி நேரம் புலம்ப விட்டுடா . திரும்பவும் இவளா...இன்னும் என்ன நடக்கப் போகுதோ..பெருமாளே..என்னைக் காப்பாத்தவே மாட்டியா ...ஆதிரை மனதுக்குள் புலம்ப
மகிழினிக்கும் அதை எண்ணம்.. இவளா , இவ எங்கே இங்க.. என நினைத்து கொண்டு இருக்கும் போது...
அதற்குள் கொட்ஜில்லா @ H.O.D, "I am asking something both of, answer me immediately.. you are getting me what I am saying.. right??"
எஸ் மேம் ..என இருவரும் வெளியே இன்னும் நிற்க (கொட்ஜில்லா இப்பவாவது உள்ளே போ அப்படின்னு சொல்றாளா என ஆதி மனதுள் புலம்ப)
நீங்க ரெண்டு பேரும் லேட்டா வந்ததுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கப் போறேன்.. "Do you know what's going on hot news now?"
நோ..மேம்.. என இருவரும் தங்களுக்கு தெரியாது என தலை ஆட்ட...
It is heart broken. The hot news is that the whole south east states have been attacked by horror waves is called tsunami. Though it's very dreadful, I want you people to know about what is tsunami and its impacts as you are journalism students.
சோ.. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இதைப் பத்தி ஒரு detailed report ப்ரிப்பேர் பண்ணி அசைன்மென்ட் சப்மிட் பண்ணனும்.. இதோட இதைப் பத்தி ஒரு .பி.பி.டி கொடுக்கணும்.. பேப்பர் கிட்டிங்க்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி அதை டிஸ்ப்ளேக்கு வைக்கணும் என்று முடிக்க,
"என்ன இவளோடவா?" ... என்று இருவருமே மாறிமாறி அந்த மேமிடம் அர்க்யு பண்ண
"ஸ்டாப் இட்...இங்க என்ன நடக்குது? எல்.கே.ஜி ஸ்டுடென்ட் மாதிரி பீகேவ் பண்ணிட்டு இருக்கீங்க..அறிவு இல்ல ரெண்டு பேருக்கும்.. ஜர்னாலிசம் படிக்க வந்திங்களா இல்ல பிஷ் மார்க்கெட் மாதிரி சண்டை போட வந்திங்களா?" அவர் மேலும் கத்த
"இங்க நான் ப்ரோபசரா இல்லை நீங்களா.. இப்போ நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து செய்யறீங்களா..இல்லை வேற யார் கூட..." அவர் முடிக்கும் முன்..
நம் ஆதி.." மேம் நாங்களே சேர்ந்து செய்யறோம்... என்று சொல்லிவிட்டு மெல்ல..
மகிழினி அருகில் சென்று அவள் காதில் "Known devil is better than Unknown angel" அதான் சரி சொன்னேன் புரிஞ்சுதா..இதுக்கும் சேர்த்து ரொம்ப ஓவரா சீன் கிரியேட் பண்ணாதே.. இப்போ" என பேசினது போதும் என்று முகத்தை திருப்பிகொண்டாள் ..
"இது உங்களுக்கு பனிஷ்மென்ட்.சோ த்ரி டேஸில் அசைன்மென்ட் சப்மிட் பண்ணி அடுத்த நாள் நீங்க செமினார் ஹாலில் உங்க செமினாரை ப்ரெசென்ட் பண்ணும் புரியுதா?"
அதை கேட்டே ஆதி... மனதுக்குள் , ' செமினார செமினார் ஹாலில் எடுக்காம பின்ன மேரேஜ் ஹாலிலா எடுப்பாங்க .. ஹையோ... இவளா பார்த்த அப்போவே நினச்சேன்....
"இவளை பார்த்ததில் இருந்துதான் என் சோதனை காலம் அப்படின்னு" என ஆதி நினைத்துக் கொண்டு இருக்க,
பின்னாலிருந்து... "வழியை விடு..நான் கிளாஸ்க்குள் போகணும் "என்று அந்த தேவதை குரல் கொடுத்தது.
"இப்போ என்னமோ உன் கைய நான் பிடிச்சுப் போகாதே அப்படின்னு தடுத்து நிறுத்தின மாதிரி பேசுற.... போ..மா..போ.."
"என் தலை எழுத்து இங்கேயும் உன்னோட..ஐயோ..." என மனசுக்குள்ளயே முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தாள் ஆதி..பின்ன இல்லேன்னா முன்னாடி நிற்கற கோட்ஜில்லா மறுபடியும் பாட்டை ஸ்டார்ட் பண்ணிடா .. அந்த பயம்தான் .. வேற எதுவும் இல்லை..
அசைன்மென்ட் கொடுத்தும் அந்த கோட்ஜில்லாக்கு சும்மா விட மனசு வரலை.."கிளாஸ் முடிந்ததும் ரெண்டு பேரும் டிபார்மென்ட் வந்து பாருங்க..முதல் வருஷம் முதல் நாள் லேட்டா வந்ததும் இல்லாம என் முன்னாடியே ரெண்டு பேரும் சண்டை போடுறிங்க.. ஹ்ம்ம்.. உங்களை.. நீங்க அங்கே வாங்க.. பேசிக்கிறேன் "என்றுசொன்னது..
"சாரி மேம்.." என்று சொல்லிக்கொண்டே இருவரும் சென்று ஒரே இடத்தில் அமர்ந்தனர்..அப்பாடியோவ்.. செட்டில் ஆகிட்டாங்க.. காலேஜ் பர்ஸ்ட் நாளே இப்படி என்றால் மூணு வருஷம் இவங்க இருந்தா இந்த காலேஜ் அண்ட் டிபார்ட்மென்ட் உருப்படுமா என்ன?
என்னதான் கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ஆதிரை முதல்நாளே எல்லாரோயிடமும் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டாள் ..ஆனால் மகிழ் தான் சற்றுதயங்கிய படி அடிக்கு ஒரு முறை ஆதியே திரும்பி பார்த்த படி இருந்தாள் ( எப்பிடிதான் இப்பிடி ஓயாமல் பேசிட்டே இருக்களோ என்கிற எண்ணத்துடன் )
****************
எபி போட்டேன் மக்கா படிச்சு சொல்லுங்க
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro