!!!13!!!
மகேஷ் மகிழினி கல்யாணம் இதோ விடிந்தால் என்ற நிலையில் இங்கு திருமணத்து காண வேலைகள் வேகமா நடக்க அங்கு ஒரு மர்ம நாடகம் அரங்கேறத் துவங்கியது
" சமத்துப் பொண்ணா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்த ஆதிரையை மொத்த குடும்பமும் விசித்திரமாக பார்க்க ..
" ஆதி , எதாவது பிரச்சனையா” என்று அவளது தந்தை கேட்க ....
" இல்லைப்பா சும்மா தான் கேம்பஸ் பத்தி யோசிச்சுட்டு இருக்கேன் அப்பா நநான் கொஞ்சம் வெளியே போயி அரவிந்தனைப் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன். அவங்கப்பாதான் இந்த பீல்ட்ல பெரிய ஆளு , அப்புறம் நாளைக்கு லினிக்குக் கல்யாணம். அவள் கூடத்தான் இன்னிக்கு தங்கணும்ன்னு இருக்கேன்.” அதை கேட்டு அவளது அம்மா ஒரு பெரிய பையே தூக்கி வந்து அவள் முன்னாள் வைத்தார்
அதை பார்த்து "என்ன ம்மா இது நான் பக்கத்துல இருக்குற பெருங்குடி தானே போறேன் அதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பேக் ?"
"அப்பிடியே போட்டேனா வாய்ல அப்புறம் தெரியும்,உனக்குக் கல்யாணத்துக்குக் கட்டிக்கறதுக்கும் மகி பொண்ணுக்கும் சேலையும் இருக்குஅங்கேபோனவுன்டெஅவளுக்கந்தப்புள்ளைக்கு குடுத்துரு ,அப்புறம் உனக்குக் கொஞ்சம் நகையும் இருக்கு.
"என்னது சேலையா , அம்மா கல்யாணம் அவளுக்கு தானே எனக்கு ஏன் ம்மா இப்பிடி " அதிரை புலம்ப
"இப்போ இந்த சேலையையே நீ நாளைக்கு கல்யாணத்துக்கு கட்டிக்கிறேன்னு சொன்னாதான் இப்போ இங்கு இருந்து போக முடியும். இல்லேன்னா முடியாது ", என்று கறாராக சொல்லி முடிக்க ...
தனது தாயின் பிடிவாதம் அறிந்ததால் அவர் குடுத்த பேக்கை வாங்கிக்கொண்டு அருவை பார்க்க சென்று விட்டாள்
அரவிந்தன் எப்படி ஆரம்பிக்க என்று யோசனையோடு அமர்ந்து இருக்க .......அவன் முதுகில் ஓங்கி ஒன்றை வைத்தாள் ஆதிரை
"ஆஆ அம்மா வலிக்குது டி ஏண்டி என்ன அடிச்ச என்று அரவிந்தன் கத்த "
"பின்ன நான் வந்து எவ்ளோ நேரம் ஆகுது இப்படியே ஆர்யபட்டா ரேஞ்சுக்கு யோசனை பண்ணிட்டு உட்காந்து இருக்க ,நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு எனக்கு இப்போ தெரிஞ்சு ஆகணும் , என்று அவள் கேட்க "
அரவிந்த் , " சொல்லுறேன் , அதுக்கு முன்னால ஒரு கேள்வி , நீ அவன லவ் பண்ணுறியா என்ன இவ்ளோ டிடைல்ஸ் கேக்குற , " என்று கேட்டது தான் தாமதம் ..
ஆதி அவன் மேல் ரேக்கில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் எடுத்து எறிய ஆரம்பித்துவிட்டாள்
"ராஸ்கல் யார பார்த்து என்ன கேள்வி கேட்குற உன்ன கொன்னாலும் என்னோட ஆத்திரம் அடங்காது டா எருமை மாடே ,என்று கத்த
" ஹே ஆதி கண்ணு சாரி டா நீ விசாரிக்க சொன்ன உடன் எனக்கு சந்தேகம் வந்துடுச்சு வேற ஒண்ணும் இல்லை.விசாரிச்சுட்டு பார்த்தா இவன் ஒரு ட்தர்ட் கிரேட் ரோக் , அது தான் " என்று நிறுத்த ..
"ஆதி அரவிந்த் சொன்ன விசையத்தை கேட்டு அப்பிடியே அதிர்ந்து போய் சோபாவில் தொப்பென விழுந்தாள் , இதோ பாரு என்று அரவிந்த் அவளிடம் ஒரு சிடி மற்றும் பைல், சில போட்டோக்களுடன் கொடுக்க, அதை நடுங்கும் கைகளுடன் வாங்கி பார்த்த ஆதிக்கோ கண்ணீர் இமை மேல் முட்ட ஆரம்பித்தது. மேலும் எதையும் பார்க்க சக்தியற்று சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள், தோழி சொன்னதுப்போல் ஆரம்பித்தில் இருந்து அனைத்தும் தவறாக தான் இருந்து இருக்கிறது , கொஞ்சம் அவள் பேசுவதை கேட்டு இருந்து இருக்கலாமோ என அதிரைக்கு டீ தோன்றியது .
"அது மட்டும் இல்லை ஆதி, இவன் சென்னைல மூணு வருஷம் முன்னாடி ஒரு குடும்பத்தை கொலை பண்ணிட்டு இயற்கையின் சீற்றம்தான்னு காரணம் காட்டி அந்த கொலையையே மறைத்து விட்டான், பொறுக்கி என்று சொல்ல ......"
"அப்பிடி பட்டவன பத்தி என்னோட தோழி விசாரிக்க சொன்னா அதை நான் எப்படி எடுத்துக்கறது , இப்போ சொல்லு எதுக்கு நீ இவன பத்தி விசாரிக்க சொன்னே .."என அரவிந்த் அதிரையின் பதிலுக்காக அவளையே பார்த்திருந்தான்
" ம்ம்ம் நான் இவனப் பத்தி விசாரிக்க சொன்னது லினிக்காக டா அரு , ஆரம்பத்துல இருந்தே அவளுக்கு விஷயம் என்னமோ சரி இல்லைன்னு தோணியிருக்கு. இன்னைக்கு அவ வீட்டுக்கு போனா அங்க அவ சொந்த அக்கா அவளுக்கு இவனோட சேர்ந்து குழி பறிக்கிறாடா.என்னால அதைத் தாங்கிக்க முடியல, இப்போ நீ சொன்ன விஷயம், என்னோட சப்த நாடிகளும் ஆட்டம் காணுது. நான் என்ன பண்ணுறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியல ......ஆனால் " என்று நிறுத்த ..
அரவிந்தனால் , லினிக்காக பரிதாபம் தான் பட முடிந்தது ....
பிறகு ஏதோ யோசனை தோன்ற , அதை அப்பிடியே ஆதிரை இடமும் சொன்னான்
ஆதி, " அது விடிஞ்சா தான் தெரியும் அரு , எவ்வளோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா , என்று சொல்லி விட்டு தனது மனதுக்குள் ஒரு திட்டம் தீட்டி அங்கிருந்து கிளம்பினாள். ஆனால் விதி வேறு திட்டம் போட,
(" வாங்க கடவுள் ஓட கட்டளை என்னனு பார்ப்போம்”)
நேர லினி வீட்டுக்கு வந்த ஆதியைக் கூட கவனிக்காமல் அவளை இடித்து விட்டு லினி உள்ளே ஓட, ஆதி சற்றுத் தடுமாறி அருகில் இருந்த தூணைப் பிடிக்க ,
"எம்மா , இவளுக்கு இதே வேலையா போச்சு எப்போ பார்த்தாலும் என்னைக் கீழே விழ வைக்கறதுன்னு சபதம் எடுத்துருக்கா போல ... உன்னை இரு வரேன் என்று உள்ள போக ""அங்கு லினி அழுது கொண்டு இருந்தாள் , அதை பார்த்த ஆதி அவள் இடம் வேகமாக அவள் அருகில் சென்று என்ன என்று விசாரிக்க "
லினி இன்னும் ஓங்கி அழுது கொண்டே , " திரு.....திரு, அக்கா அக்கா, அவனும் ..என்று ஆதியே கட்டி கொண்டு கதற
ஆதி , ஹே ஆச்சு என்ன யாரு என்னன்னு சொல்லுடா சொல்லு எதுக்கு இப்பிடி அழற , என்று பதறிய படி கேட்க லினி ,
" ஆதி அக்கா அப்புறம் அந்த மகேஷ் இருக்கான்ல அவனும் ...என்று தேம்ப
"அவனும் , உங்க அக்காவும் என்ன பண்ணினாங்க?
"அங்க இருக்காக ..அங்கே என்று வாசலை நோக்கி காட்ட "
"அங்க என்னடா ...ம்ம் சொல்லு சரி அழாதே வா போய் பார்க்கலாம் , என்று ஆதி எழுந்து கொண்டு அவளையும் கை பிடிச்சு எழுப்ப ....லினி," வேண்டாம் ஆதி நாம போக வேண்டாம் ப்ளீஸ் என்று கெஞ்ச ,
"அவளை முறைத்து பார்த்து விட்டு ஆதி , நீயா வரியா இல்லை நா என்று ஒரு எட்டு எடுத்து வைக்க
லினி , "அப்போ இருந்தே நீ இப்பிடி தான் இரு வரேன் . என்று கிளம்ப " அங்கு ஒரு வீட்டுக்கு அழைத்து போன ...லினி , ஜன்னல் பக்கமாக ஆதியை இழுத்துச் செல்ல
ஆதி , "ஹே ஏண்டி , இப்பிடி இழுத்துகிட்டு போறே, நா பொம்பளப் புள்ளடி நான் உன் கூட வர மாட்டேன் .போ என்று வழக்கம் போல விளையாட ,
"ச்சீ , அங்க பாரு என்று லினி கை காட்டிய இடத்தில் பார்த்த, ஆதிக்கோ என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை, அப்போது தான் அதிரைக்கு யோசனை வந்தது டக் என்று தனது ஹான்டி கேம் எடுத்து .. அதில் படம் பிடிக்க ஆரம்பித்தாள்
"அதை பார்த்து லினி, " ஹே என்னடி பண்ணுற என பதறி அது தப்பு , அக்கா பாவம் என்று லினி சொன்னதும் ஆதி பார்த்தாளே ஒரு பாசப் பார்வை, அதில் லினியின் வாய் தன்னாலே மூடி கொள்ள , ஆதி தனது வேலையில் இறங்கினாள். அப்போது தான் யாரோ படார் என்று கதவை திறந்து கொண்டு உள்ளே வர இங்கு காதல் சரசம் கொண்டு இருந்த மகேஷும் தேவகியும் அவசரமாக விலகி யார் இப்பிடி வரது என வெளியே சென்று பார்க்க, அங்கு கொலைவெறியோடு விஜயன் நின்று கொண்டு இருந்தான் ....அவன் நின்றிருந்த கோலம், மகேஷை சற்று அச்சுறுத்த, அவன் கொஞ்சம் பின்னால் நகர்ந்தான் ..தேவகி மகேஷின் காதில் யாருங்க இது என கேட்க
விஜி , அவனை நோக்கி ஒரு ஒரு அடியாக எடுத்து மகேஷை நோக்கி வைக்க ...அதே போல் மகேஷும் பின்னால் செல்ல
"ஏன்டா இப்பிடி பண்ணின , நான் உனக்கு என்ன துரோகம் பண்ணினேன்னு நீ இப்பிடி என்னோட மொத்த குடும்பத்தையும் அழிச்ச , எங்க அம்மா உன்னை பையன் மாதிரி தானே பார்த்து கிட்டாங்க அவங்களைப போய் எப்பிடிடா? நீ நெனைச்சு இருந்தால் அவங்கள கடற்கரைக்குப் போக விடாமல் தடுத்து நிறுத்தி இருக்கலாமே, உனக்கு என்னோட சொத்துதான் வேணும்னா என் கிட்ட கேடு இருந்தா நானே தர மாட்டேனா, எதுக்கு நீ எவனோ ஒருவனை வச்சு என்னோட அப்பாவோட நிலத்தை விக்க ஏற்பாடு பண்ணிருக்கே? என்று சொல்லவும் ..
"பின்னால் அடித்து பிடித்து ஓடி வந்த அஸ்வத் ,விது சொன்னதை கேட்ட பின் தலையில் கை வைத்து விட்டான் '' இப்பிடி எப்படி ஒருத்தன் முட்டாளாக இருப்பான் என்று தனக்குள்ளேயே நொந்து கொண்டான்”
அப்போது தான் மகேஷ் பின்னால் தேவகி நின்று கொண்டு இருப்பதைக் கவனித்தான் விஜி ,
“டேய் , மகேஷ் யாருடா இந்த பொண்ணு , விடிஞ்சா கல்யாணத்த வச்சு கிட்டு இது என்னடா புது பழக்கம்” என்று விஜயன் கேட்க,
"இவர்களின் அனைத்து உரையாடலையும் கவனித்து கொண்டும் கேமில் பதிவு செய்து கொண்டு இருந்த ஆதி பேச்சு தேவகி பக்கம் திரும்ப உஷார் ஆனாள்.
விஜியும் நீ இப்போ பதில் சொல்லியே ஆகணும்ன்னு என மகேஷின் பதில் காக காத்து இருக்கிறேன் என்று மகேஷ்யே பார்க்க ...
"இங்கு மகேஷ் தனது திட்டங்கள் அனைத்தும் வீணாவதை பார்த்து கொண்டு இருந்தான் ...."
சமாளிக்க வேண்டுமே என
" இல்லைடா இவங்கதான் மகி அக்கா,மாமா எதோ கைல கொடுத்து அனுப்பினாங்க அதை .....”
"போதும் மகேஷ் ஒரு பொய்யே மறைக்க இன்னும்எத்தனை பொய் சொல்லுவே , நானே பார்த்தேன் ..என்று சொல்ல ... மகேஷ் அண்ட் தேவகி அதிர்ந்து போய் அவனை நோக்க .."
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro