Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

❣️ 02. உனக்கெனச் செதுக்கிய இதயம் ❣️

காலையில் வந்த கனவின் தடம் கண்ணாடி முன் நின்று கிளம்பிக் கொண்டிருந்த சாலிஹாவின் முன் படமாய் ஓட , 'ம்ஹ்க்கும்! ம்ஹ்க்கும்! ஏன் அமிகோ இப்படித் தொல்லை பண்றீங்க? நீங்க மட்டும் நேர்ல இருந்தீங்க அவ்ளோ தான்... இம்சை அரசா... பேசாம உங்களைத் தேடி நான் ஊட்டிக்கு வந்துடலாம் இருக்கேன்.. ஆனா அம்மா அப்பா இதுக்கு சம்மதிக்கவே மாட்டாங்க ' என அவனின் கடிகாரத்தை ஏக்கமாய் பார்த்து தன் கண்களின் ஓரத்தில் துளிர்ந்த இரண்டுச் சொட்டுத் துளிகளைச் சுண்டி விட்டாள்.

அப்போது , "அக்கா அக்கா " என சாலிஹாவின் தம்பி தாஹா அழைத்துக் கொண்டே அக்காவின் அருகில் வந்தமர்ந்தான்.

தன் அக்காவின் மனதைப் புரிந்துக் கொண்ட தாஹா , " என்ன க்கா காலையிலே மாமா உன் கனவுல வந்துட்டாரு போல " என  சாலிஹவைப் பார்க்க, சாலிஹா திருதிருவென  விழிக்கத் தொடங்கினாள்.

தன் அக்கா விழிப்பதைப் பார்த்த தாஹாவிற்கு சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது. தன் தம்பி சிரிப்பதை பார்த்ததும் , "டேய்! எதுக்கு டா சிரிக்கிற? " என சாலிஹா புரியாமல் கேட்டதும் , "இப்ப நான் என்ன கேட்டுட்டேன் சொல்லி இப்படி முழிக்கிற? " என தாஹா கேட்டதும் , "நா..நான் ஒன்னும் முழிக்கலை... " என சாலிஹா சமாளித்தாள்.

"அதெல்லாம் இருக்கட்டும்.. நீ இன்னும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கலாம் முடிவு பண்ணி இருக்க? "  என தாஹா தன் அக்காவை நோக்கினான்.

சாலிஹா, "எப்படி டா? " என புரியாமல் தாஹாவைப் பார்த்தாள்.

"இப்படியே மாமாவோட கனவுல வாழ்ந்துடலாம் முடிவு பண்ணிட்டியா??? "  - தாஹா

"......" - சாலிஹா

"என்ன க்கா இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? " -  தாஹா

"என்னோட மவுத் வரைக்கும் இப்படியே இருந்திடலாம் முடிவு பண்ணிட்டேன் டா போதுமா? "- சாலிஹா

"என்ன க்கா இப்படிலாம் பேசுற? " - தாஹா

"பின்ன என்ன டா பண்ண சொல்ற இப்ப? " -  சாலிஹா

"நீ ஏன் க்கா மாமாவை தேடி ஊட்டிக்கு போக கூடாது??? " - தாஹா

"இது ரொம்ப நாளா என் மனசுல எழுந்த யோசனை தான் தாஹா , ஆனா.. " - சாலிஹா

"ஆனா என்ன க்கா? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு " - தாஹா

"அம்மா அப்பா விடுவாங்களா?? " - சாலிஹா

"இவ்ளோ தானா?  அம்மா அப்பாவை பத்தி  கவலைப்படாத! அம்மா கிட்டயும் அப்பா கிட்டயும் பேசி சம்மதம் வாங்க வேண்டியது என்னோட பொறுப்பு.. சரியா " - தாஹா

"தேங்க்ஸ் டா " - சாலிஹா

"நீ என் அக்கா க்கா.. உனக்காக நான் செய்ய மாட்டேனா?? " என தாஹா கூறியதும் , சாலிஹாவின் கண்கள் கலங்கியது.

"அக்கா போ போய்... ஊட்டிக்கு கிளம்புற வழியை பாரு... நான் அப்பா அம்மா கிட்ட பேசுறேன் " என தாஹா நம்பிக்கை கொடுக்க , சாலிஹா வேலைக்கு கிளம்பினாள்.

அன்ஸர் : சாலிஹாவின் அப்பா. குடும்பத் தலைவர். கடலூரில் அமைந்திருக்கும் சிப்காடில் வேலை செய்கிறார்.

வாஜிஹா : சாலிஹாவின் அம்மா. குடும்பத் தலைவி. தனியார் பள்ளி ஒன்றில் கேஷியராக பணிபுரிகிறார்.

சாலிஹா : அன்ஸர் - வாஜிஹா தம்பதியரின் மூத்த மகள். சாலிஹா , இளநிலை இயற்பியல் படித்து விட்டு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்து இப்போது தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். சாலிஹாவிற்கு தன் தம்பி தாஹா என்றால் உயிர். யாருக்காகவும் தன் தம்பியை விட்டுக் கொடுக்க மாட்டாள்.

தாஹா : அன்ஸர் - வாஜிஹா தம்பதியரின் இளைய மகன். சாலிஹாவின் தம்பி.  BBM இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறான். தாஹாவிற்கு தன் அக்கா என்றால் உயிர். அக்காவிற்காக எதையும் செய்ய துணியும் தம்பி இவன். 

நடுத்தரமான குடும்பம் என்றாலும் சந்தோஷத்திற்கு மட்டும் பஞ்சமில்லை எனலாம்.  காரணம் சாலிஹாவும் தாஹாவும் தான். இருவரின் செல்ல சண்டைகளும் வீட்டை அழகாகி விடும்.

சாலிஹா , சாப்பிட்டுவிட்டு எட்டு மணிக்கெல்லாம் தன் வண்டியில் , வேலைக்குச் சென்று விட்டாள்.  சாலிஹா சென்றதும் , தாஹா தன் அப்பாவிடம் சாலிஹாவை ஊட்டிக்கு அனுப்பி வைக்கும் விஷயத்தை பேசத் தொடங்கினான்.

அன்ஸருக்கு இரவுப் பணி என்பதால் , வீட்டில் இருந்தார். வாஜிஹா , தன் வேலைக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.  எப்போதும் சாலிஹா தான் தன் அம்மாவை பள்ளியில் இறக்கி விட்டுத் தன் பள்ளிக்கு செல்வாள். ஆனால் , சாலிஹாவிற்கு  இன்று முக்கியமான வேலை இருந்ததால் , விரைவாக சென்று விட்டாள்.

அன்ஸர் , நாற்காலியில் அமர்ந்து நாளிதழை புரட்டிக் கொண்டிருந்தார். தாஹா, மெல்ல தன் தந்தை அருகில் சென்று ,  "அப்பா உங்க கிட்ட ஒரு விஷயம் பேசனும் " என்றவுடன் , அன்ஸர் , நாளிதழில் கவனம் செல்லுத்திய படியே , "சொல்லு டா என்ன விஷயம்? " என கேட்டார்.

"அக்காவைப் பத்தி பேசனும் ப்பா " என  தாஹா கூறியதும் , நாளிதழை சற்று தள்ளி , கேள்வியாய் தாஹாவை நோக்கினார். தன் அப்பாவின் பார்வையை உணர்ந்த தாஹா , " முக்கியமான விஷயம் ப்பா... அக்காவோட வாழ்க்கை பத்தி! " என கூறியதும் நாளிதழை மடித்து வைத்துவிட்டு , " சொல்லு டா " என  அன்ஸர் தன் மகனைப் பார்த்தார்.

தாஹா , "அம்மா நீயும் வா ம்மா " என அழைக்க , வாஜிஹாவும் வந்து அமர்ந்தார்.

"சொல்லு டா! சாலிஹாவோட வாழ்க்கை பத்தி பேசனும் சொன்னீயே! என்ன சொல்லு " -  அன்ஸர்

"அது வந்து ப்பா... அக்காவை ஊட்டிக்கு அனுப்பி வைங்களே ப்பா.. அந்த பையனைத் தேடி "  எனத் தாஹா கூறியதும் , கடுமையாக முறைத்தார் , அன்ஸர்.

தன் தந்தை முறைப்பதை உணர்ந்த தாஹாவிற்கு உள்ளுக்குள் சற்று பயம் ஏற்பட்டாலும் , அதை வெளிக்காட்டாமல் தைரியமாக , " அப்பா , அக்காவுக்கு அந்தப் பையன் தான் வாழ்க்கையே! அவள் அந்தப்  பையனோட மனசளவில வாழ ஆரம்பிச்சிட்டாள் ப்பா.  ப்ளீஸ் ப்பா அந்தப் பையனைத் தேடி ஊட்டிக்கு போக அனுமதி கொடுங்க ப்பா. ப்ளீஸ் ப்பா... அம்மா நீயாவது அப்பாக்கு சொல்லி புரிய வை ம்மா... " எனத் தன் அக்காவிற்காக கெஞ்சினான். 

அன்ஸருக்கு கோபம் ஏற , " டேய்! என்ன டா அவளை அனுப்புறது எல்லாம் அடுத்தது. அவள் நேசிக்கிற பையன்  யாரு? என்ன? அவன் குடும்பம் எப்படி? அவன் எப்படிப்பட்டவன்? நம்ம குடும்பத்துக்கு ஏத்தவனா? இல்லையா? இப்படி எதுவுமே தெரியாம நான் எப்படி டா அவளை அனுப்புறது? " என கேள்வி எழுப்பியதும் ,

" அப்பா , எனக்கு அந்தப் பையன் பெயர் , ஊரு இதை பத்தியெல்லாம் தெரியாது ஆனா அவன் நல்லவன் மட்டும் தெரியும். அவன் நல்லவனா இருந்ததால தான் அன்னிக்கி அக்கா பத்திரமா வீட்டுக்கு வந்து சேர்ந்தா. இல்ல அப்பாடினா??? அவனை நம்பி நம்ம அக்காவை கல்யாணம் பண்ணி கொடுக்கலாம் ப்பா " என மறுபடியும் தன் தந்தைக்கு புரிய வைக்க முயற்சித்தான் , தாஹா. 

"ஏங்க ஒரு நிமிஷம் அவன் சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்குல! " என அம்மா வாஜிஹா பரிந்துப் பேச , 
"ஹே! என்னடி நீயும் இவனோட சேர்ந்துட்டு முட்டாள் தனமா பேசுற? " என கோபமாக தன் மனைவியை நோக்கினார் , அன்ஸர்.

"ம்ச்! ஏங்க அந்தப் பையன் நினைச்சிருந்தா எப்படி வேணாலும் நடந்திருக்கலாம்... ஆனா அப்படி பண்ணாம இருந்தானே.. அதுவே போதாதா அவன் எப்படிப்பட்டவன் சொல்றதுக்கு! நம்பி அனுப்பி வைப்போம் சாலிஹாவை " என வாஜிஹா கூறியதும் ,  யோசிக்கத் தொடங்கினார் , அன்ஸர்.

தாஹா, மனம் படபடத்துக் கொண்டிருந்தது. தன் அப்பா சம்மதிப்பாரா? இல்லையா?  என ஒவ்வொரு நொடியும் ஆவலாக அன்ஸரையே பார்த்துக் கொண்டிருந்தான். 

"சரி நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் சொல்றதால நான் சாலிஹாவை ஊட்டிக்கு அனுப்ப சம்மதிக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன்! " என அன்ஸர் கூறியதும் ,

" என்ன கண்டிஷன் ப்பா? " - தாஹா

"அவளுக்கு மூனு மாசம் தான் டைம். அதுக்குள்ள அவனைத் தேடி கண்டுபிடிக்கனும் இல்ல அப்படினா நான் பார்க்கிற பையனை அவள் கல்யாணம் பண்ணிக்கனும்?? " என கறாராக அன்ஸர் கூறியதும் , " கண்டிப்பா ப்பா. சாலிஹா, அவனை மூனு மாசத்துல கண்டுபிடிப்பா " என தாஹா நம்பிக்கையாக கூறியதும் , "சரி டா இப்ப நீ காலேஜ்க்கு கிளம்பு. " என அன்ஸர் கூறிவிட்டார்.

அதன்பின், தாஹா சந்தோஷமாக கல்லூரியை நோக்கி தன் அப்பா வண்டியில் பறந்தான்.

🖤 தொடரும் 🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro