❣️ 01. உனக்கெனச் செதுக்கிய இதயம் ❣️
"அமிகோ! அமிகோ! எழுந்திரிங்க அமிகோ... தொழுகைக்கு நேரமாகுது " என அவள் , தன் காதல் கணவனை எழுப்பிக் கொண்டிருக்க , "ரெண்டே ரெண்டு நிமிஷம் மஹ்ஜபீன்! " என உறக்கத்திலே கெஞ்சினான் , அவள் காதல் கணவன்.
"டேய்! எரும்மமாடு... இப்ப எழும்புரீயா இல்ல கடிக்கவா? " என தன் குரலில் சற்று கடுமையைக் காட்டியபடி அவள் மிரட்டியதும் , உறங்கிக் கொண்டிருந்தவன், தன் ஒற்றைக் கண்ணைத் திறந்து , அவளின் கரத்தைப் பிடித்துக் கட்டிலில் தள்ளியவன் , அவள் மேல் படர்ந்தான்.
அவள் கண்களை வசீகரமாக பார்த்தவன் , "எங்க இப்ப கடி பாப்போம் " என்றதும், அவளோ அவனின் வசீகர பார்வையில் நாணம் கொண்டு , "ஹ்ம்! போங்க..." என அவனை தள்ளியதும் கட்டிலிலிருந்து கீழே விழுந்தவன் , "அம்ம்மா! " என்ற குரலோடு எழுந்து அமர்ந்தவனுக்கு அப்போது தான் புரிந்தது , நடந்த அத்தனையும் கனவென்று.
"அல்லாஹு! கனவா! " என நினைத்தவன் , தன் தலையணைக்கு அடியில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை கையில் எடுத்தவன் , "மெரே ஜான்! உன்னே எப்ப பார்க்கப் போறேன் தெரியலை... ஆனா அந்த நாளுக்காக ஒவ்வொரு நொடியும் காத்திட்டு இருக்கேன் டி... நான் இன்னிக்கி ஒரு முடிவோட இருக்கேன்..." என அந்த ஆயிரம் ரூபாய் நோட்டிடம் பேசியவன் யோசித்தபடியே , அடுத்த வேலையை நோக்கி நடந்தான்.
-----
தன் அறையில் அமர்ந்து எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தவளின் அருகே வந்தவன் , "மெரி மஹ்ஜபீன்! என்ன தேடிட்டு இருக்க? " என அவன் கேட்டதும் ,
"அதுவா அமிகோ! அது நான் எழுதிட்டு இருந்தேனா அப்படியே என்னோட பேனாவை எங்கேயோ வைச்சிட்டேன். அதான் எங்கேயாவது இருக்கான்னு தேடி தாங்களேன் " என அவள் அவனைப் பார்க்க, அவன் நமட்டுச் சிரிப்புடன் அவளை நெருங்கத் தொடங்கினான்
"அமிகோ! என்ன நீங்க? பேனாவ தானே தேட சொன்னே? என் பக்கத்தில வரீங்க? " என பதற்றமாக அவனைப் பார்த்தாள்.
அவனோ வசீகர சிரிப்புடன் பொறுமையாக அவளை நெருங்கிக் கொண்டிருந்தான். அவள் பின்னால் அடி எடுத்து வைக்க வைக்க அவன் முன்னால் அடி வைத்து அவளை நெருங்கினான்.
அவளோ பதற்றத்தில் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவன் நமட்டுச் சிரிப்புடன் அவள் கையிலிருந்த பேனாவை உறுவியவன் , "கையிலே பேனாவை வச்சிட்டு ஊரெல்லாம் தேடிட்டு இருக்கீயா? " என ஒற்றை புருவத்தை உயர்த்தியபடி கேட்டுக் கொண்டே மந்தகாச சிரிப்பை சிந்தியவனிடம் தன்னை தொலைத்து நின்றிருந்தாள், அவள்.
அதிலிருந்து தெளிந்து எழுந்தவளுக்கு அப்போது தான் புரிந்தது இதுவரை நடந்தது அத்தனையும் கனவென்று.
'அல்லாஹு அக்பர்! இது கனவா... அல்ஹம்துலில்லாஹ்... ' என்றவள் தன் தலையணையில் வைத்திருந்த கடிகாரத்தைப் பார்த்தவள் , "ஹ்ம்! போங்க ஹன்பன். என்னே ரொம்ப தான் தொல்லை பண்றீங்க! உங்களை எப்ப பார்க்க போறேன் தெரியலை. ஆனா ஒவ்வொரு நாளும் தவமிருந்து காத்துட்டு இருக்கேன் ப்ளீஸ் என்கிட்ட வந்து சேருங்க அமிகோ " என ஏக்கமாக அந்த கைகடிகாரத்தைப் பார்த்தவள் ,அதை பத்திரமாக வைத்துவிட்டு அடுத்த வேலையைச் செய்யச் சென்றாள்.
-----
காலையில் வந்த கனவு மனம் முழுக்க நிறைந்திருக்க, அம்மகிழ்வோட கிளம்பிக் கொண்டிருக்க , "ஷாலிக்... ஷாலிக் பேட்டா! " என அம்மா ஜமீலா அழைத்துக் கொண்டே உள்ளே வந்தார்.
"போலோ ம்மி (சொல்லுங்க ம்மா) " என ஷாலிக் பதிலளிக்க ,
"ம் வேலைக்கு கிளம்பிட்டு இருக்கீயா ? " என ஜமீலா கேட்டதும் ,
"ம் ஆமா ம்மி " என தன் தலையை சீவிக் கொண்டே பதில் கொடுத்தான்.
"ம் சரி டா " என ஜமீலா கூறிவிட்டு தான் வந்த விஷயத்தை எப்படி கூறுவது என தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள்.
"ஹான் ம்மி! இன்னிக்கி நான் ஆபீஸ்'க்கு போய் வேலையை வீட்டுல இருந்த படியே செய்றதுக்கு மாத்திட்டு நாளைக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன்! " என கூறியதும் ,
உடனே ஜமீலா , "டேய்! என்ன டா நாளை கழிச்சு மறுநாள் உனக்கு மக்னா(நிச்சயதார்த்தம்) வைச்சிருக்கோம், இப்ப வந்து இப்படி சொல்ற? "என்றதும் தான் ஷாலிக் கோபம் கொண்டு பொங்கி எழுந்தான்.
"முடியாது... முடியாது... முடியாது... என்னால இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியாது... என் மனசுல அவள் தான் இருக்கிறாள். அவள் மட்டும் தான் இருக்கிறாள்... " - ஷாலிக்.
"எத்தனை வருஷம் டா? இதோட மூனு வருஷம் ஆகுது! இங்க பாரு.. உனக்கும் உன் மாமா பொண்ணு இஃப்ராக்கும் நிக்காஹ் பண்ணலாம் முடிவு பண்ணி இருக்கோம் " - ஜமீலா
"உங்களை யாரு என்னே கேட்காம முடிவுப் பண்ண சொன்னது? " - ஷாலிக்
"பெத்தவங்களுக்குத் தெரியாதா? தன்னோட பிள்ளைக்கு என்ன செய்யனும் செய்யக் கூடாது'ன்னு" என அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து, தன் கண்களைத் துடைத்துக் கொண்டே ஜமீலா கேட்டதும்
ஷாலிக் தன் அம்மாவின் அருகில் வந்து, மண்டியிட்டு அமர்ந்து , அம்மாவின் கைகளைப் பற்றி ,"தெரியும் , ஆனா! ஷாதி (கல்யாணம்) ஒரு வருஷம் ரெண்டு வருஷம் வாழ போறது இல்ல! மவுத் வரைக்கும் வாழ போறது. ஒரு பொண்ணை பார்த்ததும் உணர்வு வரனும் ம்மி! அவளை அம்மா தங்கை தோழி இப்படி எல்லா உறவுமா தனக்கு இருப்பா தோனனும். அப்படி ஒரு உணர்வு வந்தா மட்டும் தான் என்னால அவளை என் வாழ்க்கையோட பாதியா ஏத்துக்கவே முடியும்! எனக்கு அந்த மாதிரி ஒரு உணர்வை நான் அன்னிக்கி பார்த்த அந்தப் பொண்ணுக்கிட்ட தான் ம்மி கிடைச்சிது... " என தன் மனதில் உள்ளதை தெளிவாகவும் நிதானமாகவும் கூறி முடித்தான்.
ஆனால் , ஜமீலா அவனின் உணர்வை புரிந்துக் கொள்ளாமல் , "இங்க பாரு ! உனக்கு நாளை மறுநாள் மக்னா! அவ்ளோ தான். உனக்குத் தேவையான உடை எல்லாம் வாங்கனும் அதனால தேரி கர்னானிஸே ஜல்தி ஆக்கோ பவுஞ் கர்கூ( தாமதமாக்காம சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேரு)" என கறாராக கூறியவரிடம் ,
"நான் நாளைக்குத் தான் கடலூர்க்குக் கிளம்புறதா இருந்தேன். ஆனா இன்னிக்கி மதியமே கிளம்பலாம் முடிவு பண்ணிட்டேன் " என தன் முடிவை தெளிவாகக் கூறியதும் , ஜமீலா வெடுக்கென்று அங்கிருந்து எழுந்துச் சென்றார்.
ஜமீலா சென்றவுடன் , ஷாலிக் அண்ணன் தஹ்ஸீன் மற்றும் அண்ணி தகீயா அறையினுள் நுழைந்தார்கள்.
"வாங்க சாப்பிடலாம் " என தகீயா அழைத்ததும் , "நை பாபி. காம் ஹேண், மே பாஹர் ஜாக்கோ க்ஹாலத்தும். ஆப் க்ஹாவோ (வேணாம் அண்ணி! எனக்கு வேலை இருக்கு. நான் வெளியே போய் சாப்ட்டுகிறேன். நீங்க சாப்பிடுங்க) " என கூறிவிட்டு நகர சென்ற , ஷாலிக் , "ரேய்! க்ஹட் (டேய்! நில்லு) "என்ற தன் அண்ணன் தஹ்ஸீன் குரலில் நின்றான்.
"டேய்! என்ன டா? அம்மா தான் அப்படி பேசுறாங்க'னா நீயும் ஏன் டா ? " - தஹ்ஸீன்
"க்யா பஹாய்? (என்ன அண்ணா? ) என் மனசுல ஒரு பொண்ணு இருக்கும் போது நான் எப்படி பஹாய் இன்னொரு பொண்ணு கூட வாழ முடியும்? " - ஷாலிக்
"ஷாலிக், நான் சொல்றதை புரிஞ்சிக்கோ. இதையே தான் மூனு வருஷமா சொல்லிட்டு இருக்க! இப்ப உனக்கு வயசு என்னத் தெரியுமா? இருபத்தி எட்டு டா " - தஹ்ஸீன்
"யா ரப் ! நிறைய பேருக்கு நாற்பது வயசுல கூட வாழ்க்கை ஆரம்பிக்குது. எனக்கு இருபத்தி எட்டு வயது தானே பஹாய் ஆகுது " - ஷாலிக்
"சரி டா! இப்ப நீ அவளைத் தேடிப் போற ஆனா அவளுக்கு வேற பையனோட நிக்காஹ் ஆகிடுச்சுன்னா? என்ன பண்ணுவ? " - தஹ்ஸீன்
"கண்டிப்பா ஆகி இருக்காது. எனக்கு அல்லாஹ் மேலயும் என் காதல் மேலயும் நிறைய நம்பிக்கை இருக்கு " என கண்களில் அசையாத நம்பிக்கையோடு புன்னகையுடன் கூறினான் ஷாலிக்.
"அச்சா (சரி) , இதை ஏன் இவ்வளவு நாள் செய்யாம இருந்த? " - தஹ்ஸீன்
"ம் , முன்ன ஐயாயிரத்துக்கு கம்மியா தான் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். அந்த நிலையில போய் நான் உங்க பொண்ணை விரும்புற! எனக்கு அவங்களை நிக்காஹ் பண்ணி வைங்க'ன்னு சொன்னா உடனே அவள் அப்பா கேட்பார்! பையனுக்கு என்ன இருக்கு? எவ்வளவு சம்பளம்? கேட்பார், இப்ப இருபத்தி ஐந்து ஆயிரம் தான் சம்பளம். இதுக்கே அவர் பொண்ணை கொடுப்பாரா இல்லையா'ன்னே தெரியலை. இது படம் கிடையாது , வாழ்க்கை. நிறைய கஷ்டப்படனும் " - ஷாலிக்
"க்ஹைர் டா (சரி டா) . எனக்கும் கூட அந்த இஃப்ரா நம்ம வீட்டுக்கு மருமகளா வரது பிடிக்கலை.. எப்ப என் தம்பிக்கு இந்த நிக்காஹ்'ல விருப்பம் இல்ல'ன்னு உறுதி ஆகிடுச்சோ! யார் என்ன சொன்னாலும் இந்த நிக்காஹ் நடக்காது. நீ தைரியமா ஊருக்குக் கிளம்பு நான் பார்த்துக்கிறேன். " என தஹ்ஸீன் கூறியதை கேட்டதும் , "ப்...ப்..பஹாய்! " என தன் அண்ணனைப் பார்த்தான் , தஹ்ஸீன் சிறிய புன்னகையுடன் தன் தம்பியை நோக்கி ,
"ஹரே! நீ உன்னோட காதலுல எவ்வளவு உறுதியா இருக்கிற'ன்னு தெரிஞ்சிக்கத் தான் டா. ஜா(போ) போய் நீ, உன் மனசுக்குப் பிடிச்ச பொண்ணை நம்ம வீட்டு மருமகளா அழைச்சிட்டு வா... யார் எதிர்த்தாலும் இந்த பஹாய் உன் பக்கம் தான் நிக்கல்(நிக்கல் - கிளம்பு) "என ஷாலிக்கு நம்பிக்கை கொடுத்ததும் , மனம் நிறைவாக தன் அண்ணனை அணைத்துக் கொண்டான்.
"அல்லாஹு! வாங்க இப்ப வந்து சாப்பிடுங்க " என அண்ணி தகீயா அழைத்ததும் , "நை பாபி! நான் வெளியே போய் சாப்ட்டுகிறேன்" என ஷாலிக் மறுக்க , "கொன்றுவேன்.. சாப்ட்டு கிளம்பு டா" என அண்ணன் தஹ்ஸீன் அதட்டியதும் சாப்பிட்டு விட்டு வேலைக்குப் பறந்தான்.
இவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் பார்ப்போம்.
மர்ஸுக் - ஷாலிக்'யின் தந்தை. குடும்பத் தலைவர். ஊட்டியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து இப்போது வேலையிலிருந்து ஓய்வுப் பெற்றுக் கொண்டார்.
ஜமீலா - ஷாலிக்'யின் அம்மா. குடும்பத் தலைவி.
தஹ்ஸீன் : வீட்டிற்கு மூத்த பையன். ஷாலிக்'யின் அண்ணன். ஊட்டியில் அமைந்திருக்கும் , தனியார் தேயிலை நிறுவனம் ஒன்றில் அசிஸ்டாண்ட் மானேஜராக பணிபுரிகிறான்.
தகீயா - தஹ்ஸீன் மனைவி. பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டோடு இருக்கிறாள்.
அர்மான் - தஹ்ஸீன் - தகீயா இருவரின் மூன்று வயது அன்பு மகன் அர்மான்.
ஸபீரா - தஹ்ஸீன் தங்கை , ஷாலிக்'யின் அக்கா. திருமணம் முடிந்த பின்பும் தன் கணவர் , ரபீக்'வுடன் பிறந்த வீட்டிலே தங்கிக் கொண்டாள்.
ஆமீரா : ஸபீரா - ரபீக் இருவரின் நான்கு வயது மகள்.
ஷாலிக் - நம் கதையின் நாயகன். விஸ்காம் படித்து இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தவனை , பொறியியல் படிப்புத் தான் படிக்க வேண்டும் என பெற்றோர்களின் வற்புறுத்தலின் பெயரில் பொறியியல் படிப்பைப் படித்தவன், விருப்பமின்றி வேலைக்குச் சென்றுக் கொண்டிருக்கிறான்.
ஸல்ஃபா - ஷாலிக்'யின் தங்கை. இவளும் அக்காவைப் போல் தான் திருமணம் முடிந்தும் , தன் கணவன் ரயான்'னுடன் வீட்டோடு தங்கிக்கொண்டாள்.
பென்சீர் : ஸல்ஃபா - ரயான் இருவரின் இரண்டு வயது மகள்.
ஷாலிக் குடும்பம் உருது மொழி பேசுபவர்கள்.
(இவர்கள் அனைவரும் உருது மொழியில் பேசினாலும் வாசகர்களின் வசதிக்கேற்ப தமிழ் மொழியில் எழுதியுள்ளேன். அவ்வப்போது உருது மொழியும் வரும்.)
🖤 தொடரும் 🖤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro