
உனக்கென்றே உயிர் கொண்டேன் -3
பிந்து கண்ணை திறந்து பார்த்தாள் அதை பார்த்த பிறகுதான் நிலனுக்கு நிம்மதியானது அவன் அமைதியாக நின்றான்.தென்றல் பேச ஆரம்பித்தாள்.
இப்போ உங்களுக்கு பரவாயில்லையா என்று கேட்டாள் தென்றல் பிந்து ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
சரி கொஞ்சம் நேரம் இங்க இருக்கலாம் அப்புறமா போலாம் என்று சொன்னாள் தென்றல் எல்லோரும் சரி என்பது போல தலை அசைத்தார்கள்.
பிந்து எதுவும் பேசவில்லை அவள் அமைதியாக இருந்தாள் நிலன் அவளுக்கு நேராக அமர்ந்திருந்தான்.எல்லோரும் மௌனமாக இருந்தார்கள்.அப்போது தென்றல் பேச ஆரம்பித்தார்கள்.
என்ன டைரக்டர் சார் ஏதோ சொல்ல வந்துட்டு எதுவுமே சொல்லாம இருக்கீங்க என்று கேட்டாள் தென்றல்.
சில நேரத்துல மனசுல சொல்ல நினைக்கிற விஷயங்கள் வெளிய சொல்ல அவ்வளவு சுலபமான இருக்குறது இல்ல என்றான் நிலன்.
அட என்ன சார் நீங்க சொல்லணும்னு நினைச்சா உடனே சொல்லிடனும் அதுவும் இங்க இருக்குறப்போ ஒரு விஷயம் சொல்லனும்னா உடனே சொல்லணும்.இங்க இருக்குறப்போ நம்ம வாழ்க்கை முடிஞ்சாலும் சரி இல்ல காப்பாத்தபட்டாலும் சரி நம்ம உடனே மறைஞ்சிடுவோம் அதனால திட்டணும்னாலும் சரி இல்ல மன்னிப்பு கேக்கணும்னாலும் சரி உடனே கேட்டுருங்க சரியா என்றாள் தென்றல்.
அவள் சொன்னதை கேட்டு மௌனமாக இருந்த நிலன் பேச ஆரம்பித்தான்.
என்ன மன்னிச்சிடுங்க பிந்து நான் உங்க கிட்ட அப்படி பேசனும்னு நினைக்கவே இல்ல ஆனா தெரியாம அப்படி நடந்துடுச்சு இனி நான் உங்க கிட்ட இப்படி கோப பட மாட்டேன் என்று சொன்னான் நிலன்.அவன் குரலில் பொறுமை அவ்வளவு இருந்தது.ஆனால் அவன் சொன்னதை கேட்ட பிந்துக்குதான் கோபம் கோபமாக வந்தது.
எப்படிங்க உங்களால இப்படி எல்லாம் வெக்கமே இல்லாம மன்னிப்பு கேட்க முடியுது.எல்லா தப்பையும் கேக்க முடியுது .என்ன கொன்னுட்டு நீங்க என்கிட்ட சாரின்னு ஒரு வார்த்தை சொன்னா நான் உங்களை மன்னிச்சுடணுமா.இவங்க எல்லாம் சொன்னங்களே நீங்க பெரிய டைரக்டர்னு அந்த எண்ணத்துலதான் இன்னும் நீங்க இருக்கீங்களா.நீங்க பெரிய ஆள் நாங்க எல்லாம் சின்ன ஆள்தான் அதுக்காக நீங்க மன்னிப்பு கேட்ட உடனே எல்லாம் சரி ஆகிடாது என்று கோபமாக பேசினாள் பிந்து.
இங்க பாருங்க உங்களுக்கு என்ன பாக்கவே பிடிக்கலன்னு எனக்கு தெரியுது ஆனா அதுக்காக என் பக்கம் நியாயம் என்னன்னு கேக்கவே மாட்டேன்னு சொன்னா அது எப்படிங்க என்று தன்மையாக பேசினான்.
எப்படி இவ்ளோ நல்லவர் மாதிரி பேசறீங்க. நீங்க ஓ அது சரி நீங்க ஒரு டைரக்டர்தான ஒரு நடிகன் எப்படி நடிக்கணும்னு சொல்லுறவருக்கு நடிக்க கத்து தரணுமா என்ன என்று கேட்டாள் பிந்து.
இப்படி எல்லாத்துக்கும். தப்பாவே அர்த்தம் கண்டு பிடிச்சா எதுவும் சரி வராதுங்க அப்புறம் உங்ககிட்ட என்னால பேச கூட முடியாது என்று சொன்னான் நிலன்
உங்ககிட்ட பேசனும்னு நான் நினைக்கவே இல்ல .அதோட உங்களை நான் பாக்க கூட விரும்பல இப்போ இந்த நொடி என் கண்ணுல இருந்து நீங்க மறைஞ்சு போனா என்ன விட சந்தோச படுற ஒரு ஆள் இருக்கவே முடியாது என்று சொன்னாள் பிந்து.
என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு என்றான் நிலன்.
ஏற்கனவே என்னோட ஸ்கூட்டில இடிச்சு நான் விழுந்து இப்போ இங்க இருக்கோம் இனி என்ன பண்ண முடியும் உங்களால என்று கேட்டாள் பிந்து.
உங்களை இடிக்க கூடாதுன்னு நான் என்னோட கார் திருபுனதுனாலதான் நான் மரத்துல மோதி இப்போ இங்க இருக்கேன் என்றான் நிலன்.
அவர்கள் இருவரின் சண்டையை பார்த்து கொண்டு இருந்த அக்னி மற்றும் தென்றல் இருவரும் பொறுமை இழந்தார்கள்.
அய்யோ போதும் நிறுத்துங்க இதுக்கு மேல உங்க வாக்குவாதம் எதையும் எங்களால பொறுத்துக்க முடியாது இயலாது நடக்காது என்று சொன்னாள் தென்றல்.சண்டை போட்டு கொண்டிருந்த இருவரும் அவளை பார்த்தார்கள்.
எதுக்குங்க இவ்ளோ சண்டை போட்டுட்டு இருக்கீங்க.கொஞ்சம் பொறுமையா இருங்க நம்ம வாழ்க்கை ஏற்கனவே ஊசலாடிக்கிட்டு இருக்கு இதுல நீங்க இப்படி சண்டை போட்டா எப்படிங்க.நீங்க போடுற சண்டை பாக்க கியூட்டா இருந்தா கூட பரவாயில்லை ஆனா நீங்க போடுற சண்டை பாக்க எனக்கு கஷ்டமா இருக்கு என்றாள் தென்றல்.
என்னால யாரும் கஷ்ட பட வேண்டாம் என்று சொன்ன நிலன் வேகமாக எழுந்து நடக்க ஆரம்பித்தான்.
அக்னி நீங்க இவங்க கூட இருங்க உங்ககிட்ட யாராவது புதுசா வந்து பேசுனா அவங்ககிட்ட நீங்க பேச வேண்டாம் பாக்க கூட வேண்டாம் என்று சொன்ன தென்றல் சொல்லிவிட்டு மிகவும் வேகமாக நிலன் பின்னால் ஓடினாள்.
டைரக்டர் நில்லுங்க என்று சொல்லி கொண்டே அவன் பின்னால் ஓடினாள் தென்றல்.ஆனால் அவன் நிற்கவில்லை அவன் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க அவன் முன்னே சென்று நின்றாள் தென்றல்.
இங்க பாருங்க நீங்க நினைக்குற மாதிரி இந்த இடம் இல்லை .இப்படி தனி தனியா போனா மொத்தமா பிரிஞ்சிடுவோம்.இங்க உயிருக்கு போராடுறவங்க இருக்காங்க ஆனா இங்க இருக்கவங்க எல்லாம் நல்லவங்க இல்ல.இந்த இடத்துல பல காலத்து மக்கள் இருப்பாங்க ஆனா எல்லாரும் நமக்கு நல்லது பண்னுரவங்களா இருப்பாங்க இந்த இடத்துல இருந்து நமக்கு தானா தப்பிச்சு. போக வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல அதனால நம்மதான் வாய்ப்பு உருவாக்கணும் நான் கொஞ்சம் நாள் முன்னாடியே இந்த இடத்துக்கு வந்ததுனால எனக்கு இந்த இடத்தை பத்தி கொஞ்சம் தெரியும்.இங்க மாயநதின்னு ஒரு நதி திடீர்னு பாயும் அது எப்போ பாயும்னு அவருக்குத்தான் தெரியும் அங்க நம்ம போணும்னா நம்ம எல்லாரும் ஒற்றுமையா இருக்கணும் நம்ம சண்டை போட்டுட்டு இருந்தா அவர பாக்க முடியாது என்று சொன்னாள் தென்றல்.
அப்போ நான் போறதுதான் நல்லது அவங்களுக்கு என்ன பாக்கவே பிடிக்கல.நான் பேசுறத கேக்க கூட அவங்க தயாரா இல்லை.இப்படி என்ன பாக்க பேச கூட பிடிக்காத ஒருதங்க கூட என்னால எப்படி போக முடியும் என்று கேட்டான் நிலன்.
அவங்க உங்க மேல கோபமா இருக்காங்க ஆனா உங்க மேல வெறுப்பை அவங்க காட்டல அவங்க கத்துற அளவுக்கு அவங்க வெறுப்பை காட்டினாங்க அப்படின்னா நீங்க இந்நேரம் இப்படி நின்னு பேசிட்டு இருக்க மாட்டீங்க.என்று தென்றல் சொல்ல அவளை ஆச்சர்யமாக பார்த்தான்.
ஆமா அவங்க உங்க மேல கோபமா இருக்காங்க மத்தபடி அவங்களுக்கு உங்க மேல வெறுப்பு எல்லாம் இல்லை.நீங்க அவங்க உயிருக்கு போராட காரணமாயிட்டீங்கன்னு அவங்க நினைக்குறாங்க அது எல்லாருக்கும் இயற்கைதானே அவங்க கோப பட்டா நீங்க கொஞ்சம் பொறுமையா போலாமே உங்க மன்னிப்பாயா படத்தோட ஹீரோ அர்ஜுன் மாதிரி என்று கேட்டாள் தென்றல் .அவளை பார்த்து சிரித்தான் நிலன்.
படத்துல பேசுற வசனங்கள் காட்சிகள் எல்லாமே ரொம்ப சுலபமா எழுதிடலாம் ஆனா அதை எல்லாம் நடைமுறைல பண்ணுறது ரொம்ப கஷ்டம் என்று சொன்னான் நிலன்.
உங்க படம் எதார்த்தத்தைவிட்டு ரொம்ப தூரம் தள்ளி இருந்ததே இல்லையே அது எப்போவும் எதார்த்தத்துக்கு கிட்டதான் இருக்கு என்று சொன்னாள் தென்றல் அவளை பார்த்து சிரித்தான் நிலன்.
நீ என்னோட படம் எல்லாம் ஒண்ணு விடாம பாப்பியா என்று கேட்டான் நிலன்.
நான் இதுவரைக்கும் உங்களோட ஒரு படம் கூட பார்த்தது இல்லை என்றாள் தென்றல் அவளை புரியாமல் பார்த்தான் நிலன்.
என்ன சொல்லுறமா நீ படம் பார்த்ததே இல்லையா அப்புறம் எப்படி எல்லாத்தையும் சரியா சொல்லுற என்று கேட்டான் நிலன்.
ம்ம்ம் அது என்னோட பிரண்ட் உங்களோட பெரிய ரசிகை அவதான் உங்க படம் பார்த்துட்டு வந்து சொல்லுவா.எனக்கு கேட்டு கேட்டு பழகிடுச்சு. எல்லா விமர்சனமும் படிப்பேன் உங்க இன்டெர்வியூ பாப்பேன் அப்புறம் உங்க கதை எப்படி இருக்கும்னு நானே கற்பனை பண்ணி பத்துப்பேன்.படம் பாக்குறதுல உள்ள சந்தோசத்தை இப்படித்தான் படம் இருக்கும்னு நினைக்குறதுல ஒரு சந்தோசம் இருக்கு என்று சொன்னாள் தென்றல் அவளை பார்த்து சிரித்தான் நிலன்.
என் படத்தை நல்லா இருக்குன்னு எத்தனையோ பேர் சொல்லி கேட்ருக்கேன் ஆனா உன்ன மாதிரி யாரும் சொன்னதே இல்ல.நான் சந்திச்சத்துல ரொம்ப வித்தியாசமான ரசிகை நான்தான் என்று சொன்னான் நிலன் அவளை பார்த்து சிரித்தான் நிலன்.
அப்போது அக்னி சத்தம் கேட்டது.சத்தம் வந்த பக்கம் திரும்பினார்கள் அங்கே பிந்து யாரிடமோ பேசிய படி நடந்து சென்று கொண்டிருந்தாள் .அதை பார்த்த தென்றல் முகம் கலவரம் அடைந்தது அவள் வேகமாக ஓடினாள் அவள் பின்னாலேயே நிலன் ஓடி வந்தான்.
பிந்து உங்க முன்னாடி என்ன தெரியுதா அது பொய் அது சொல்லுற விஷயமும் பொய் அதை நம்பாதிங்க .அது உங்களை வசியம் பண்ணுது அத நம்பாதிங்க அவங்க கூளி அவன் பின்னாடி போனா உங்க உயிருக்கே ஆபத்து என்று கத்தி சொன்னாள் தென்றல் ஆனால் பிந்து நிற்கவில்லை.என்கிட்ட கொடு என்கிட்ட கொடு என்று சொன்னபடி அவள் தொடர்ந்து முன்னே நடந்து கொண்டிருந்தாள்.
அச்சோ இப்போ ஏதாவது பண்ணி அவங்களை காப்பாத்தியே ஆகணும் .இல்லன்னா இவங்க இங்க வாழுற நாள் எல்லாத்தையும் அந்த கூளி எடுத்துக்கும் என்று சொன்னாள் தென்றல்.
இப்போ என்ன பண்ணுறது என்று கேட்டான் அக்னி .
அவங்க அது சொல்லுறத மட்டும்தான் கேக்குறாங்க போல.அதுல இருந்து அவர்கள காப்பாத்த அவங்ககிட்ட பேசி அந்த மயக்கத்தில இருந்து அவங்கள வெளியே கொண்டு வரணும் இல்ல அவங்கள போக விடாம பிடிச்சு இழுக்கும் ஆனா அப்படி பண்ணுறது ரொம்ப ஆபத்து நம்மளும் அவங்க கூட அந்த கூளிகள் உள்ள கருப்பு வனத்துக்கு போக வேண்டியது வரலாம் .இங்க கருப்பு புகை மாதிரி வர்றதுக்குள்ள அவர்கள் பேசி சுய நினைவுக்கு கொண்டு வந்துட்டோம்ம்னா பிரச்னை இல்லை அப்படி ஒருவேளை கருப்பு புகை வந்தா நான் அவங்கள பிடிச்சு இழுக்குறேன் நீங்க அவங்களை தொட வேண்டாம் என்று சொன்ன தென்றல் தொடர்ந்து பிந்துவை அழைக்க அவள் எதையும் கேட்டக்காமல் வேகமாக நடந்து கொண்டிருந்தாள்.
அப்போது கருப்பு புகை அவர்களை சுற்றி பரவ தென்றல் இதற்குமேல் விட்டால் சரி வராது என்று அவள் கையை பிடித்து இழுக்க போக அவளை அக்னி பக்கம் தள்ளி விட்ட நிலன் பிந்துவை பிடித்து இழுத்தான் அந்த கருப்பு புகை அவர்கள் இருவரையும் பிடித்து இழுத்து நிலன் கண்ணுக்கு அந்த கொடிய உருவம் தெரிந்தது அதை பார்த்தவன் இன்னும் வேகமாக அவளை பிடித்து இழுத்தான் அவள் கையை அவன் விடவே இலை கற்றுப்பு புகை இருவரையும் இழுத்தது.
பிந்து நீ பாக்குற எல்லாமே பொய் அது எதுவும் உண்மை இல்லை நான் சொல்லுறத நம்பு என்று நிலன் கத்த அவன் சொன்னதை கேட்டு நிஜ உலகுக்கு வந்தாள் பிந்து ஏதோ சாக் அடித்தது போல இருவரும் சற்று தள்ளி விழுந்தார்கள்.நிலன் அவளை கீழே விழ விடாமல் தான் கீழே விழுந்தான் நிலன் கீழே இருக்க அவள் அவன் மீது இருந்தாள்..பிந்து ஏதோ கெட்ட கனவில் இருந்து வெளியே வந்தது போல அவனை பார்த்து கொண்டிருந்தாள்.அந்த இடத்தில் இருள் விலகி வெளிச்சம் வந்தது.பிந்துக்கு அவள் நிலை உணரவே சில நொடி பிடித்தது .அவன் மீது படுத்திருந்தை உணர்ந்தவன் சட்டென்று எழுந்து நின்றாள்.நிலனும் எழுந்தவன்
இவ்ளோ வாய் பேசுறவங்க அதுக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் நடந்துகனும்.நீ பாட்டுக்கு போற கொஞ்சம் விட்ருந்தா மொத்தமா போயிருப்ப.அப்படி என்ன உயிர் போற விஷயம் அதுல தெரிஞ்சுச்சு என்று கோபமாக கேட்டான் நிலன் .
என் உயிர்தான் தெரிஞ்சுச்சு என்று சொன்னாள் பிந்து அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது.
என்ன சொல்லுற என்று குழப்பத்துடன் கேட்டான் நிலன்.ஏதோ சொல்ல வாய் எடுத்த பிந்து அப்படியே மௌனம் ஆனாள் .
உன்கிட்டதான் கேக்குறேன் என்று சொன்னான் நிலன்.
உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னாள் பிந்து.
இந்த திமிருக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல என்று சொன்னான் நிலன்.
ஆமா அவங்க ரெண்டு பேரும் எங்க என்று கேட்டாள் பிந்து அப்போதுதான் கவனித்தான் அவர்கள் இருவர் மட்டும் அந்த இடத்தில் இருபத்தி.
வெளிச்சம் பரவிய இடத்தில் மீண்டும் இருள் அடைய தொடங்கியது.
இருள் விலகி வெளிச்சம் தோன்றுமா என்பதை அறிய அடுத்த அப்டேட் படியுங்கள்.அடுத்த பதிவில் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெறுவது அபிராமி G.N
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro