Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உனக்கென்றே உயிர் கொண்டேன்-1


அந்த காலை நேரத்தில் மரங்கள் சூழ்ந்த இடத்தில் சூரியனின் கதிர்கள் பரவ ஆரம்பித்தது.
புல் தரையில் படுத்திருந்தவன் மீது அந்த கதிர்கள் பட அவ்வளவு நேரம் இருட்டில் இருந்தவன் கண்களுக்கு வெளிச்சம் பட கண்களை லேசாக திறந்தான்.ஆனால் அந்த வெளிச்சம் அவன் கண்ணுக்கு பழக்க படாததால் மீண்டும் கண்ணை மூடி படுத்தவன் கொஞ்சம் நேரம் கழித்து கண்ணை திறந்து பார்த்தான்.மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு தலை பயங்கரமாக வலித்தது எனவே கொஞ்சம் நேரம் மௌனமாக இருந்தவன் கண்ணை திறந்து தலையை இடப்பக்கம் வலப்பக்கம் அசைத்துவிட்டு கொஞ்சம் நேரம் அப்படியே அமர்ந்திருந்தான்.அவன் மனதில் எந்த விதமான எண்ணமும் தோன்றவில்லை.அவன் மௌனமாக இருந்தான்.அந்த இடத்திலும் சத்தம் வரவே இல்லை அமைதியாக இருந்தது.மௌனமாக இருந்த அவன் காதுக்கு ஏதோ சத்தம் கேட்டது .எனவே அந்த சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்க்க அங்கே நதியொன்று கரைகளை உடைத்து கொண்டு பாய்ந்து சென்று கொண்டிருந்தது.அதை பார்த்தவன் பின்னே செல்ல போக அப்போதுதான் அந்த  பக்கம் ஒரு பெண் வேகமாக நதியை நோக்கி ஓடுவதை பார்த்தான்.அந்த பெண் ஓடுவதும் அந்த நதியின் வேகமும் அவனுக்கு ஏதோ தவறாக இருப்பதை உணர்த்த மிகவும் வேகமாக ஓட ஆரம்பித்தான்.கரைகளை உடைத்து கொண்டு ஓடும் நதிக்கும் அந்த பெண்ணுக்கும் 10 மீட்டர் இடைவெளி இருக்கும்போது அவளை பிடித்துவிட்டான்.அவன் கையை பிடித்ததும் அந்த பெண் திரும்பி கூட பார்க்காமல் அவனுடைய கையை உதறி தள்ள முயற்சி செய்தாள்.ஆனால் அவன் விடுவதாக இல்லை .அவளை பிடித்து இழுக்க அவள் அவன் மீது மோதி நின்றாள்.

வெள்ளை நிற சுடிதார் அணிந்திருந்தாள்.அவள் வேகமாக ஓடி  வந்திருந்தால் அவள் முடி கலைந்து இருந்தது.ஒரே ஒரு பொட்டு கம்மல் அணிந்து இருந்தாள் வேறு எந்த நகையும் இல்லை. அவளை பார்க்கவே அதிகம் பேச மாட்டாள் என்பது போல இருந்தது.இதெல்லாம் அவளை பார்த்த இரண்டு மூன்று நொடியில் அக்னி யோசித்தது.ஆனால் அவள் பேசிய சில நொடியில் அவளை அமைதியான பெண் என்று நினைத்தது  தன்னுடைய தவறு என்ன என்பதை அவன் புரிந்து கொண்டான்,

ஹே யார்றா நீ என்னோட கைய எதுக்கு பிடிச்சிருக்க.என்ன விடுடா என்று கத்தினாள் தென்றல்.

அவள் அப்படி கத்தியதும் அவளை ஆச்சர்யமாக பார்த்தான் அக்னி.

டேய் என்ன டா இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள எல்லாம் பார்த்ததே இல்லையா என்ன இப்படி பாக்குற.உனக்கு என்ன பிரச்சனை என்ன விடு  என்றாள் தென்றல் .

ஹலோ இங்க பாருங்க உங்கள நான் ஒண்ணும் தப்பான எண்ணத்துல பிடிக்கல.நீங்க என்ன தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க.என்று சொன்னான் அக்னி.

எப்பா டேய் உன்ன புரிஞ்சிக்கிட்டு நான் என்ன பண்ண போறேன் என்ன விடுடா எனக்கு அதிகம் நேரம் இல்ல என்று சொன்னாள் தென்றல்.

ஏங்க சாக கூட நேரம் பாப்பிங்களா என்ன .எனக்கு  புரியலங்க.சாகுறது எல்லாம் முட்டாள்தனம் எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம் கொஞ்சம் பொறுமையா இருங்க ப்ளீஸ் என்று கெஞ்சினான் அவன்.

இங்க பாருங்க உங்களுக்கு பொறுமையா புரிய வைக்க எனக்கு நேரம் இல்ல .எனக்கு நேரம் ரொம்ப கம்மியா இருக்கு .நம்ம வேணா சேர்ந்து போய் விழலாம் வாங்க  என்று சொன்னாள் தென்றல்.

என்ன ஆழுங்க நீங்க  நான் உங்களை காப்பதலாம்னு நான் பார்த்தா நீங்க என்னையும் சாக கூப்பிடுறீங்க. என்றான் அக்னி 

எனக்கு   விளக்கம் கொடுக்க நேரம் இல்ல என்ன தயவு செஞ்சு என்ன விட்டுடு என்றவள் அவன் கையை விட்டு தன்னுடைய கையை விலக்கி  கொள்ள போராட  அவன் தென்றல் கையை விடுவதாக இல்லை.

ஒரு உயிரோட மதிப்பு உன்ன மாதிரி  ஆளுக்கு எல்லாம் புரியவே புரியாதா.இங்க ஒவ்வொருத்தனும் வாழுறதுக்காக போராடிட்டு இருந்தா உன்ன மாதிரி வாழ வழி உள்ளவங்க எல்லாம் வாழ்க்கையை முடிக்க பாக்குறிங்க .அறிவு இருந்தாதான்.வாழ்க்கை ஒரு நொடியில் மாறிடும்.நீ சாகணும்னு நினைச்சா எல்லாம் உன்னால சாக முடியாது.ஒருவேளை அந்த தண்ணில குதிச்சு உனக்கு ஏதாவது ஆச்சு அப்படின்னா நீ உயிருக்கு போராட வேண்டியது வரும்.வாழுறது கொஞ்சம் கஷ்டம் .சாகுறது ஈஸி.ஆனா சாக முயற்சி பண்ணி ஏக போகமா அடி பட்டு அதுக்கப்புறம் கஷ்டப்பட்டாலும் உன்னால சாதாரண வாழ்க்கையே வாழ முடியாது அந்த சாதாரண வாழ்க்கையே ரொம்ப கஷ்டம் ஆகிடும் என்று சொன்னான் அக்னி

டேய் இப்போ மட்டும் சாதாரண வாழ்க்கையா வாழ்ந்துட்டு இருக்க. என்ன நிம்மதியா வாழ விடுடா என்று சொன்ன தென்றல் அவனைவிட்டு போக முயற்சி செய்ய அவன் விடுவது போல் தெரியவில்லை.

உன்ன என்ன ஆனாலும் நான்  சாக விடமாட்டேன் என்று அவள் கையை அவன் பிடித்து கொள்ள பெரும் சத்தத்துடன் பாய்ந்து வந்த நதி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. சத்தம் நின்றதும் அந்த பக்கம் பார்த்தான் அக்னி நதியை அவனால் பார்க்க முடியவில்லை.பாய்ந்து வந்த நதி காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சியில் நின்றான் அக்னி அவன் அதிர்ச்சி அடைந்ததை பார்த்தவள் அவனிடமிருந்து தன்னுடைய கையை எடுத்து கொண்டாள்.

இப்போ உனக்கு சந்தோசமா என்று கேட்டாள் தென்றல்.

இங்க என்ன நடக்குது என்று  குழப்பத்துடன் கேட்டான் அக்னி.

உனக்கு எல்லாம் நான் பதில் சொல்லணும்னு எனக்கு அவசியமே இல்ல.இப்போ உன்னாலதான் நான் பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்.என் கண்ணு முன்னாலேயே நிக்காத. போய் தொலை முதல்ல இங்க இருந்து என்று சொன்னவள் நடக்க ஆரம்பிக்க அவள் பின்னால் சென்றான்  அக்னி.

ஹெலோ ப்ளீஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க.இங்க ஆறு ஒண்ணு ஓடிச்சே அது எங்கன்னு உங்களுக்கு தெரியுமா என்று கேட்டான்  அக்னி.

ஏன் இப்போ போய் நீ அங்க குதிக்க போறியா என்று கோபமாக கேட்டாள் தென்றல்.

இப்போ எதுக்கு என்மேல இவ்ளோ கோப படுறீங்க நான் என்ன தப்பு பண்ண உங்களை காப்பாத்ததான நான் நினைச்சேன் அது கூட உங்களுக்கு தெரியலையா.நீங்க பாட்டுக்கு என்ன திட்டிட்டு இருக்கீங்க என்று கேட்டான் அக்னி.

நானானவது பரவாயில்லை .என்னோட இடத்துல வேற யாராவது இருந்தா உன் நிலைமை அவ்ளோதான்.நான் ரொம்ப பொறுமை உள்ளவ அப்டிங்குறவனாலதான் நான் இப்படி பேசிட்டு இருக்கேன் என்று சொன்ன தென்றல் மீண்டும் நடக்க போக அவன் முன்னால் வந்து நின்றான் அக்னி .

ஏங்க நீங்க என்ன நான் கொலை பண்ண மாதிரி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க.உங்களை காப்பாத்ததான செஞ்சேன்.என்று கேட்டான் அக்னி.

அட அரை பைத்தியம்.உனக்கு நான் என்னன்னு சொல்லி புரிய வைக்க .சரி தெளிவா ஒரே ஒரு கேள்வி கேக்குறேன் .நீ இதுக்கு முன்னாடி எங்க இருந்த என்று கேட்டாள் தென்றல்.

அது நான் இதுக்கு முன்னாடி பைக்கில ஏதோ மனம் போன போக்குல போயிட்டு இருந்தேன் என்றான் அக்னி.

ம்ம் அப்படியா அப்போ எனக்கு ஒரு விஷயம் சொல்லு அங்க இருந்த நீ இப்போ எப்படி இங்க வந்த என்று கேட்டாள் தென்றல்.

அதான் எனக்கும் தெரியல. எப்படி இங்க வந்தேன்னு என்று குழப்பத்துடன் சொன்னான் அக்னி .

நல்லா யோசி என்று சொன்னாள் தென்றல்.

பைக்கில போயிட்டு இருந்தேன் .அப்போ ஒரு லாரி வந்துச்சு அப்புறம் அது இடிச்சிச்சு.அச்சோ என்மேல லாரி மோதிச்சு.நான் சைடுல விழுந்தேன்.அப்புறம் எழுந்து பார்த்தா இங்க இருக்கேன்.என்னங்க எனக்கு அடி படவே இல்லை .சரி ரோடு எங்க .நம்ம போலாம் என்னோட பைக் எல்லாம் எங்க கிடக்குதோ என்று சொன்னான் அக்னி.

அது நிச்சயமா உலகத்துலதான் இருக்கும் என்று சொன்னாள் தென்றல்.அவளை பார்த்து முறைத்தான் அக்னி

இங்க பாருங்க நான் என்னவோ அமைதியா மரியாதையா பேசுனதுனால எனக்கு கோவம் வாராதுன்னு நினைக்க வேண்டாம்.பைக் உலகத்துலதான் இருக்கும்னு எனக்கு  தெரியாதா என்று கேட்டான் அக்னி.

பைக் உலகத்துலதான் இருக்கு .நீங்க உலகத்துல இருக்கீங்களா அதான் இப்போ கேள்வி என்று தென்றல் கேட்க அக்னி குழப்பம் அடைந்தான்.

இங்க பாருங்க உங்களுக்கு பைத்தியம் முத்திருச்சுன்னு நினைக்கிறேன் அதனாலதான் இப்படி உளறிட்டு இருக்கீங்க  நம்ம இப்போ உலகத்துலதான இருக்கோம் என்று கேட்டான் அக்னி.

இல்ல நம்ம உலகத்துல இல்ல.இந்த இடம் நம்ம வாழுற உலகம்  மாதிரி இருக்கு ஆனா இது நம்ம வாழுற உலகம் இல்ல .என்றாள் தென்றல்.

இங்க பாரு உனக்கு ஏதோ பிரச்சனைன்னு எனக்கு புரியுது.ஆனா  அதுக்காக இந்த அளவுக்கு குழப்பாத என்று சொன்னான் அக்னி.

நான் குழப்புறேனா அது சரி .இங்கதான விழுந்த ரோடு எங்க.சரி ரோட விடு உனக்கு இப்போ அடி பட்டுருக்கணும்ல உனக்கு ஏன் அடி படல .ஒரு நிமிஷம் கண்ண மூடி யோசிச்சு பாரு உனக்கு என்ன நடந்துச்சுன்னு உனக்கே தெரியும் என்று சொன்னாள் தென்றல்.அக்னி நம்ப முடியாமல் அவளை பார்த்தான்.

நீ நம்புனா நம்பு நம்பலன்னா இங்கேயே இரு .நான் போறேன் எனக்கு இருந்த வழியையும் கெடுத்துட்ட இருந்தும் நான் உனக்கு ஹெல்ப் பண்ணி இருக்கேன் நம்புனா நம்பு நம்பலன்னா போ என்று சொன்ன தென்றல் நேராக நடக்க ஆரம்பித்தாள்.

அக்னிக்கு கோபம் கோபமாக வந்தது அவன் கண்ணை மூடி கோபத்தை கட்டு படுத்த முயற்சி செய்தான்.அப்போது அவனுக்கு லாரியில் மோதியது விழுந்தது அங்கிருந்து தூக்கி எறியப்பட்டதும் ஏதோ ஒரு கதவு திறந்து  அவன் உடல் இங்கே வந்து விழுந்ததும் அவனுக்கு படம் போல மனதில் வந்தது.அதற்கு மேலே எதுவும் அவனுக்கு நினைவுக்கு வரவில்லை.கண்ணை திறந்து பார்க்கும்போது தென்றல் தூரமாக நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அவளை நோக்கி வேகமாக  ஓடி அவள் முன்பு சென்று நின்றான்.அவனுக்கு மூச்சு வாங்கியது.அவனை மேலும் கீழும்பார்த்தாள் தென்றல்.

எங்க எனக்கு இங்க நடக்குற எதையும் நம்பவே முடியல ஆனாலும் உங்ககிட்ட கேக்குறேன் என்று கேட்டான் அக்னி.

என்ன கேக்கணும் என்றாள் தென்றல் .

நம்ம அப்போ செத்து போயிட்டோமா என்று கேட்டான் அக்னி .

இன்னும் சாகல வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவுல இருக்கோம் என்று சொன்னாள் தென்றல்.

ஏங்க என்னங்க சொல்லுறிங்க ஏதோ கதை சொல்ற மாதிரி சொல்லுறீங்க என்று கேட்டான் அக்னி.

நான் சொல்றது நிஜம்.இப்போ நம்ம உயிருக்கு போராடிட்டு இருக்கோம் .பிழைச்சா மறுபடியும் உலகத்துக்கு போலாம் இல்ல மறைஞ்சு போய் உண்மையா செத்துடுவோம். என்றாள்  தென்றல்.அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியானான் அக்னி.சில நிமிடம் அவன் மௌனமாக இருக்க அவனை உலுக்கினாள் தென்றல்.அதில் நிஜ உலகுக்கு வந்தவன் பேச ஆரம்பித்தான்

என்னங்க சொல்றிங்க இங்க இருந்து எப்படி  தப்பிச்சு போறது என்று கேட்டான் அக்னி.

தப்பிக்க வழி இருந்துச்சு.ஆனா நான் தப்பிச்சு போக முயற்சி பண்ணுறப்போதான் நீங்க  வந்துட்டீங்க .அந்த நதியில விழுந்துருந்தா எப்போவோ தப்பிச்சிருக்கலாம்  .ஆனா நீங்கதான் உயிரை காப்பாத்துறேன்னு இல்லாத வேலை பண்ணி இருக்கீங்க .எனக்கு இப்போ கூட உங்க மேல கோபமா வருது ஆனா என்ன காப்பாத்த நினைச்சுதான் நீங்க அப்படி  பண்ணிங்கங்குற ஒரே காரணத்துனால நான் உங்களை திட்டல இப்போ நான் போறேன் என்று சொன்னவள் நடக்க அவள் முன்பு நின்றான் அக்னி.

ஏங்க உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை என்று கேட்டாள் தென்றல்.

ஒரு பிரச்சனையும் இல்லை .நம்ம இங்க வெய்ட் பண்ணலாம் அந்த நதி மறுபடியும் வர வாய்ப்பு இருக்குல்ல என்று கேட்டான் .

ஏங்க வத்தி போன சாதாரண ஆறே பலது இன்னும் தண்ணி பாக்கல .இது மாயநதி.திரும்ப வருமா வராதான்னு தெரியாது .நம்மளா பிழைச்சா போலாம் இல்லனா போக முடியாது அவ்ளோதான்
என்றாள் தென்றல்.

என்ன  மன்னிச்சிடுங்க நான் இந்த இடத்தைவிட்டு போக வழி கண்டு பிடிச்சு உங்களையும் நிச்சயம் கூட்டிட்டு போறேன். என்று உறுதியான குரலில் சொன்னான் அக்னி .

பரவாயில்ல.யாருன்னே தெரியாத என்ன காப்பாத்த அவ்ளோ தூரம் நின்னிங்களே அது எவ்ளோ பெரிய விஷயம் வேற யாராவது இருந்தா செத்தா சாவுன்னு விட்டுட்டு போயிருப்பாங்க.சாரி உங்களை திட்டிட்டேன் என்றாள் தென்றல் .

உங்க இடத்துல வேற யாராவது இருந்தா அடிச்சு இருப்பாங்க .நீங்க அடிக்கலயே அதுவரைக்கும் சந்தோஷம். என்று சொன்னான் அக்னி.அவனை பார்த்து சிரித்தாள் தென்றல்.

நம்மள மாதிரி யாருக்கு முதல் சந்திப்பு இருந்துருக்கும். என்னவோங்க என்னோட பேர் தென்றல் என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் தென்றல்.

நல்ல பேர் என்னோட பேர் அக்னி என்று தன்னை அறிமுகம் செய்தான் அக்னி.

இந்த இடத்தோட பேர் என்னது என்று கேட்டான் அக்னி.

இந்த இடத்தோட பேர்........

❤️அதை நான் அடுத்த எபிசோட்ல சொல்றேன்.❤️

ஓகே இந்த கதை ரொம்ப நாள் எழுத நினைச்சேன் இதை தொடங்காம என்னால இருக்க முடியலப்பா. அதான் இப்போ எழுதுறேன்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro