♠9♠
அலுவலகம் முடிந்து வெளியே வந்த சிவணி, ஷேர் ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
நன்றாகப் படிக்கும் சிவணிக்கு ஏதாவது ப்ரொபஷனல் டிகிரி செய்ய வேண்டும் என்று ஆசை.
ஆனால் வழக்கம் போல் பாட்டி அதை எதிர்த்தார். ஏதாவது ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் படி போதும் என்று விட்டார்கள்.
தாத்தாவின் அறிவுரையை மனதில் கொண்டு, கிடைத்ததை தனக்கு ஏற்றவாறு சாதிக்க மாற்றிக் கொண்டாள்.
டிகிரியில் கார்பரேட் செக்ரட்டரிஷிப் கோர்ஸ் எடுத்துப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே... பார்ட் டைமில் ஏ.சி.ஸ். கோர்ஸ் படித்தாள்.
யுனிவர்சிட்டி ராங்க் ஹோல்டராக வந்ததால், ரெப்யூடட் கார்பரேட் கம்பெனியில், உடனடியாக நல்ல சம்பளத்தில் வேலைக் கிடைத்தது.
ஆனால் எத்தனை சாதித்தாலும், அதை ரசிப்போரோ... பாராட்டுவாரோ... யாரும் இல்லை.
அவள் மனதில் அது ஒரு பெரிய ஏக்கமாகவே இருந்து வந்தது. தனக்காக சந்தோசபடவோ... வருத்தப்படவோ என்று யாராவது வர மாட்டார்களா என்று ஏங்குவாள்.
தன் மனதில் இத்தனை வருடம் தேக்கி வைத்துள்ள அன்பு, பாசம், நேசம் என்று அனைத்தையும் வெளிப்படுத்த அவளுக்கு ஒரு வடிகால் தேவைப்பட்டது.
மொத்தத்தில் பூங்கொடியான இவள் ஆதரவாய் படர ஒரு கொம்பைத் தேடினாள்.
"ஏய்... ஒரு நிமிடம் நில்லு!" என்ற குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்த சிவணி, திரும்பிப் பார்த்தாள்.
அங்கே விமல் நின்றுக் கொண்டிருந்தான்.
'இவன் எதற்கு இங்கே வந்தான்?' என்ற யோசனை மனதினில் ஓட, வெளியே புன்னகையுடன் எதிர்க்கொண்டாள்.
"என்ன அத்தான் இந்தப் பக்கம்?"
"உன்னைப் பார்க்க தான் வந்தேன்!"
மனதில் ஆச்சரியம் தோன்ற தலைமுடியை ஒதுக்கியபடி, "வீட்டிற்கு வந்திருக்கலாமே..." என்றாள்.
"உன்னையெல்லாம் வந்து வீட்டில் பார்த்தால், என் இமேஜ் என்னவாகிறது?" என்றுக் கேட்டான் அலட்சியமாக.
'ம்ம்...' என்று மனதினுள் உதடு பிதுக்கியவள், 'பெரிய துரை... பின்னே இங்கே எதற்கு வந்தாராம்?' என்று கண்ணில் கேள்வியோடு பார்த்தாள்.
"ஆக்ட்சுவலி உனக்கு ஒரு பெரிய தாங்க்ஸ் சொல்லத் தான் வந்தேன். நேற்று ஈவ்னிங் பாட்டி, உன்னை எனக்குத் திருமணம் செய்து தருவதாக அம்மாவிடம் உறுதி கூறியதும்... எனக்கு அதிர்ச்சியான அதிர்ச்சி. ஐயோ! என்னடா செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்... நல்ல வேளை பாட்டியே, அம்மாவுக்குப் போன் செய்து திருமணம் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். எனக்கு பெரிய நிம்மதி!" என்றான் விமல்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அவனைப் பார்த்தாள்.
"பரவாயில்லை நீ கூட நன்றாக யோசித்து, உன் நிலை அறிந்து..." என்று பேசிக்கொண்டே சென்றவனை வேகமாக இடைமறித்தாள் சிவணி.
"ஒரு நிமிடம்! தேவையில்லாமல் சொல்லி ஒரு தேங்க்ஸை வேஸ்ட் செய்யாதீங்க. நேற்று நான் திருமணம் வேண்டாமென்று சொன்னது முழுக்க முழுக்க எனக்காக தான்... உங்களுக்காக இல்லை. உங்களை திருமணம் செய்துக் கொள்ள, எனக்கு பாயின்ட் பர்ஸன்ட் கூட சுத்தமாக இன்ட்ரெஸ்ட் இல்லை. ஏனென்றால்... எனக்கென்று வரப்போகிற கணவனைப் பற்றி நான் சில எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறேன். அதில் ஒன்று கூட உங்களுக்குப் பொருந்தவில்லை. அப்படியிருக்கும் பொழுது, நான் எப்படி உங்களை மணந்துக் கொள்வேன்...? கண்டிப்பாக மாட்டேன். ஸோ... டோன்ட் வொரி அபௌட் தட்! எனக்கானவர் கண்டிப்பாக நீங்கள் கிடையாது..." என்று கூறியபடி அவன் கண்களை நேருக்கு நேர் தீர்க்கமாகப் பார்த்தாள்.
அவளின் பேச்சைக் கேட்டு விமல் பிரமித்துப் போய் நிற்க,
"ஓகே அத்தான்! எனக்கு டைம் ஆகிறது... நான் கிளம்பறேன், பை!" என்று தன் வாட்சைப் பார்த்தவாறு, அவனை விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள் சிவணி.
சீலிங்கில் ஓடும் ஃபேனையே பார்த்தபடி படுத்திருந்தாள் சிவணி. மனம் நிச்சலனமாய் இருந்தது.
திரும்பி படுத்தவளின் விழிகளில், அவள் மொபைல் போன் பட்டது.
மெல்ல அதை எடுத்து, அவளுக்கு மிகவும் பிடித்தப் பாட்டை ப்ளே செய்தாள்.
"விழியே... கதை எழுது... கண்ணீரில்... எழுதாதே... மஞ்சள் வானம், தென்றல் சாட்சி...
உனக்காகவே நான் வாழ்கிறேன்..."
கண்கள் மூடி அந்தப் பாட்டின் வரிகளை அனுபவித்து கேட்டாள்.
விழிகளின் ஓரம் நீர் வழிந்துக் காதருகே இறங்கியது.
'எங்கே இருக்கிறீர்கள் நீங்கள்? எப்பொழுது என்னைத் தேடி வருவீர்கள்? திருமணம் என்கிற உறவின் புனிதம் புரிந்ததலிருந்து... எனக்கே எனக்கென்று என்னை அன்பாய், கனிவாய், அக்கறையாய் கவனித்துக் கொள்ளும் ஜீவன் வரப் போகிறது என்று எவ்வளவு ஆவலாய் காத்திருக்கிறேன் தெரியுமா...? இதுவரை யாரிடமும் நான் சண்டையிட்டதில்லை, கோபித்து கொண்டதில்லை, செல்லம் கொஞ்சியதில்லை... ஆனால் அத்தனையையும் உங்களிடம் செய்வேன், எல்லா உரிமையையும் நானே எடுத்து கொள்வேன் என்று மௌனமாய் தன் கண் முன் இதுவரை வராத எதிர்கால கணவனிடம் மனதோடு சண்டையிட்டு அழ ஆரம்பித்தாள் சிவணி.
நாட்கள் பறந்தோடியது.
இரண்டு மாதத்திற்கு முன், பிரியாவை பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு... அவளை மிகவும் பிடித்துப் போக, உடனே திருமணத்தை உறுதி செய்தனர்.
இதோ... இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்தம், அதற்கு தான் சிவணி தயாராகி கொண்டிருந்தாள்.
வேகமாக கதவைத் திறந்துக் கொண்டு பெரியம்மா வந்தார்.
"சிவணி! கிளம்பிட்டியா... சீக்கிரம் பிரியாவிடம் போ. அவள் கூடவே இருந்து, அவளுக்கு தேவையானதைக் கவனித்துக் கொள். நான் விருந்தினர்களை கவனிக்க வேண்டும்!"
"இதோ பெரியம்மா... நான் சென்றுப் பார்க்கிறேன்!" என்று பிரியாவிடம் சென்றாள் சிவணி.
மாப்பிள்ளை வீடு நல்ல வசதி. அவர்கள் வீட்டில் எல்லோருமே... நல்ல ஜாபில் வெல் செட்டில்டாக இருந்தனர்.
மணமேடையில் பிரியாவின் அருகிலேயே இருந்து, அவளுக்கு தேவையானதைக் கவனித்துக் கொண்டாள் சிவணி.
இடையிடையே ஐயர் கேட்கும் பொருளை அவரிடம் எடுத்துக் கொடுத்துக் கொண்டும், உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இளம் புன்னகையுடனும் பதிலளித்துக் கொண்டிருந்தாள்.
அவற்றையெல்லாம் ஒரு ஜோடி விழிகள், ஆவலுடன் வைத்தக் கண் வாங்காமல் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro