
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
ஹலோ மக்களே இந்த கதை ஒரு உண்மை கதை நிறைய பேர் இதை ரிலேட் பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறேன். நம்ம எல்லாருக்கும் சில பிரண்ட் பிரண்ட்ஸ் இருப்பாங்க . அவங்க நமக்கு பேமிலிமாதிரி இருப்பாங்க. அவங்க கூட நம்ம பேசுறமா இல்லையா அது கணக்கு இல்ல. ஆனா நமக்கு தெரியும் அவங்களுக்கு நம்ம குடுத்த இடம் வேற யாருக்கும் கிடைக்காதுன்னு அந்த மாதிரி என்னோட ஒரு பிரண்ட் ஹரிணி அவ கூட நான் பேசுன அந்த ஒரு சம்பவம் அதைதான் நான் இங்க எழுத போறேன். முக்கியமான ஒரு பாயிண்ட் ஹரிணி பேரு கேட்ட மாதிரி தோணுதா நம்ம யாருக்குள் இங்கு யாரோ ஹரிணி கேரக்டர் இவங்க கேரக்டர் பேஸ் பண்ணதுதான். அவளுக்கு நஸ்ரியா ரொம்ப பிடிக்கும் அதான் நான் அவங்க இமேஜ் ஹரிணின்னு போட்டேன்.
ஓகே வாங்க கதைக்கு போலாம்.
ஹரிணி :ஹாய் G.N(என்னோட இனிஷியல் G.Nநான் அதனால எல்லாரும் என்ன G.Nன்னு கூப்பிடுவாங்க )
அபி :ஹாய் ஹரிணி. ஹரிணி நான் இண்ணைக்கு ஒரு சம்பவம் பண்ண
ஹரிணி :என்ன பண்ண
அபி:இண்ணைக்கு சர்க்கியூட் மாத்தி கொடுத்து காம்ப்பொனன்ட்ஸ் பத்திக்கிச்சு.
ஹரிணி :அடி பாவி உனக்கு ஒண்ணும் ஆகலயே
அபி:இல்ல அதுக்குள்ள எடுத்துட்டேன்.இல்லை அவ்ளோதான் காம்போனென்ட்ஸ் ல இருந்து புகை கிளம்பி மேம் கிட்ட மாட்டிருப்போம்
ஹரிணி :🤣🤣🤣🤣.சாப்டியா
அபி :நான் சப்பிட்டேன் என்கிட்ட இந்த கேள்விய ஏன் கேக்குற நான் எண்ணைக்கு லேட்டா சாப்பிட்டுருக்கேன். (நமக்கு இந்த சாப்பிட்டியான்னு கேக்குற பழக்கமே இல்ல )
ஹரிணி :🤣🤣🤣அதுவும் உண்மைதான்
அபி:என்னோட பிராக்டிகல் இவ்ளோ காமெடியா போகுதே உனக்கு எப்படி போகுது உன்னோட பிராக்டிக்கல் ரொம்ப கஷ்டம் ஆச்சே. நாங்க அடலீஸ்ட் தப்பு பண்ணா எதாவது எரியும் ஆனா நீ தப்பு பண்ணா உயிரே போய்டுமே (anesthesia technology padikira). அப்போ ஆபரேஷன் தியேட்டர் எல்லாம் போவியா.
ஹரிணி :ம்ம்ம் போவேன் G.N.இப்போ 3rd இயர் ல அதான் போவேன்.
என்னோட பிரண்ட் ப்ரெக்னெண்ட்டா இருக்கா அப்டியே பேசி பேசி இங்க ஸ்டாப் பண்ணோம்
அபி :ஹரிணி அப்போ நீ டெலிவரிக்கு கூட போய் இருக்கியா அவங்க கத்துவாங்களா பயமா இருக்குமா. நீ தான் பயப்படுவியே எப்படி நின்ன
ஹரிணி :அண்ணைக்கு நான் பெரிய சம்பவம் பண்ண
அபி :சொல்லு கேப்போம்
ஹரிணி :அதுவந்து G.N.அண்ணைக்குதான் முதல் நாள் வேற எனக்கு என்ன பண்ணன்னே தெரியல. சோ நான் வெளிய ஓடி வந்துட்டேன்
அபி:என்னடி சொல்ற ஆபரேஷன் தியேட்டர் விட்டு ஓடி வந்துட்டியா . உன்ன திட்டலயா
ஹரிணி :முதல் நாளுங்கறதால திட்டல
அபி :அப்போ நீ என்ன பண்ண
ஹரிணி :அந்த அக்கா ஹஸ்பண்ட் கிட்ட உக்காந்து இருந்தேன். அப்புறம் நான் டென்ஷன்ல வாக்கிங் பண்ணிட்டு இருந்தேன்.
அபி :அந்த அண்ணா ஒண்ணும் பண்ணலயா
ஹரிணி :அது அவரு உள்ள போய் பாக்க சொன்னாரு நான் போகவே இல்ல என்ன பத்தி தான் உனக்கு தெரியுமே. என்ன பண்ண அந்த அண்ணாக்கும் முதல் முறை எனக்கும் முதல் முறை
அபி :ஐயோ என்னால முடியல ஹரிணி. அப்புறம் என்ன பேபி பொறந்துச்சு
ஹரிணி:பையன் பாப்பா.
அபி :அந்த அண்ணா என்ன சொன்னாரு
ஹரிணி :டாக்டர்க்கு அடுத்து எங்கிட்டதான் முதல்ல குழந்தைய குடித்தாரு. அப்புறம் ஸ்வீட் குடுத்தாரு . நான் கேட்டேன் நான் தான் ஒண்ணும் பண்ணலையேன்னு பின்ன எதுக்குன்னு அவர் சொன்னாரு என்கூட சேந்து பயந்ததுக்குன்னு.
அபி :நல்ல மனுஷன்யா. மறக்க முடியாத தருணம்ல
ஹரிணி :ஆமா அது வேற பீலிங்
அபி :எனக்கு உன்ன நினைச்சா பெருமையா இருக்கும்மா
ஹரிணி :நன்றி
அப்புறம் நிறைய பேசுனோம் அவ சொன்னா மனைவிய விட கணவர்கள்தான் அதிகம் வலியில இருப்பாங்கன்னு நானும் கேட்ருக்கேன் மனைவிநினைச்சும் குழந்தைய நினச்சும் மனைவிய விட அதிக அளவு துன்பம் அடைவது கணவங்கள் தான் (எல்லாரும் சொல்ல மாட்டேன் நல்ல கணவர்களுக்கு மட்டும் இது பொருந்தும் ).நான் அப்பிடி இப்படின்னு கதை சொல்ற பசங்க கூட மனைவி பிரசவ அறைக்கு போய்ட்டா நடுங்கி போய்டுறாங்க. ஏன் எதுக்குமே அழாத சிலர் அவங்க மனைவி அலறல் கேட்டு அழுவாங்க.ஏன் எங்களுக்கு செமினார் எடுக்க வந்த ஒருத்தர் சொந்தமா கம்பெனி வச்சிருக்காரு. ஆயிரம் பேரு முன்னாடி அவரால தைரியமா பேச முடியும் ஆனா அவரே அவங்க மனைவி டெலிவரி அப்போ ரெண்டு நாள் பெட்ல இருந்துருக்கார். அவங்க மனைவி தைரியமா இருந்துருக்காங்க இவர்தான் டென்ஷன்ல மயக்கம் போட்டுட்டாரு.
இதனாலதான் சொல்வாங்களோ ஒவ்வொரு பிரசவத்திலும் ஒரு தந்தையும் புதிதாக பிறக்கிறார்கள் என்று.
சில பதிவுகள் நம்ம மனச லேசாக்கும் இது அந்த மாதிரிதான். மற்ற படி எந்த கருத்தும் இல்ல. நீங்க இந்த மாதிரி சம்பவம் பண்ணி இருக்கீங்களா அத கமெண்ட்ல சொல்லுங்கோ
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro