முன்னோட்டம்
தாரா "யூ நோ வாட் உங்ககிட்ட நான் பதில் சொல்லனுன்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல. பட் சொல்லாம போனா நல்லாவா இருக்கும். அதனால சொல்லிடறேன். எனக்கு சேலஞ்ச் பண்ணி வின் பண்ணுறது ரொம்ப பிடிக்கும் தான்.ஆனா அது ஹெல்தியான போட்டியா இருக்கனும். வன்முறையும் வன்மமும் இருக்க கூடாது. அடுத்தவங்கள காயப்படுத்துற ஒரு சின்ன ஸ்மைல் கூட தப்புன்னு தளபதியே சொல்லியிருக்காரு." என்று கெத்தாக தான் ஒரு தளபதி ரசிகை என்பதை பறைசாற்றினாள்.
அந்த புதியவள் "வன்மமும் பகையும் எங்களுக்கு தானே தாரா. இதுல உனக்கென்ன பிராப்ளம். பெட்ல ஜெயிக்க போற பணம் வாங்கிக்க போற" என்று திமிறாக பேச தாராவின் பொறுமை நீராவியாக மறைந்தது. மூச்சை இழுத்து வெளியேற்றியவள் உச்சிக்கொட்டியபடி "உங்களுக்கு மனசுதான் இல்லைன்னு பார்த்தா மூளையும் இல்லையா" என்றவள் இருவரையும் அற்ப புழுக்களை போல பார்த்தாள். பக்கவாட்டில் அமைதியாக நின்றிருந்த பிந்துவிடம் "பிந்து நீ இந்த பேட்மேன் மூவி பார்த்திருக்க." என்று கேட்டபடி இவர்கள் இருவரையும் பார்த்தாள்.
பிந்து இல்லை என்று தலையை ஆட்ட "இதோ ஒரிஜினல் வர்ஷன்." என்று கைநீட்டி காட்டியவள் "அடுத்தவங்க சந்தோஷத்த கெடுக்க நினைகிற நீங்க ரெண்டு பேரும் சைகோ, சாடிஸ்ட். ஆனா நான் அப்டி இல்லப்பா. தாரா ரொம்ப ஸ்வீட்" என்றாள் கண்களை மூடி. சோனியாவும் அவளது தோழியும் கோபத்தில் தீ கணலாக கொதிக்க முகம் தக்காளி சாஸை அப்பியது போல காட்சியளித்தது.
******************
ஜெனி மெல்ல கண்களை திறக்க "அவள தனியா விட்டுட்டு நீங்க எல்லாரும் என்ன பண்ணிட்டு இருக்கிங்க. நீங்க அவளுக்கு பெர்சனல் செக்ரெட்டரி அவ கூட இருக்க தான் உங்களுக்கு சம்பளம் தராங்க." என்று பொரிந்து தள்ளினான் கிருஷ். அவன் முன் ஜெனியின் பி.ஏ. சதீஸ் பதில் சொல்ல திணறி நின்றான். அவன் பேச வாய் திறக்கும் முன் "ஐ டோண்ட் நீட் எனி எக்ஸ்பிலனேஷன்." என்று விரல் நீட்டி எச்சரித்தான். ஜெனி தன் சோர்வையும் மறந்து மென்னகை சிந்தினாள்.
"கிருஷ்டி " என்ற அவளது அழைப்பை செவியுற்ற அடுத்த கணம் கோபம் மறந்து முகம் பதட்டத்தை அப்பிக்கொள்ள இரண்டு எட்டில் அவளை நெருங்கினான். "ஜெனி" என்றான் குரல் சிறிது கம்மியது. ஜெனி "இது ஒரு ஆக்ஸிடன்ட் டா. அதுக்கு சதீஸ் என்ன பண்ணுவாரு" என்று நியாயம் பேச "நீ பேசாத. என்னதான் நெனச்சுட்டு இருக்க உன் மனசுல. தனியா போக அப்டி என்ன அவசியம் வந்துச்சு . " என்றான் காட்டமாக.
******************
கிருஷ்" ஹாய் வெண்ண டப்பா. "என்றான்.தாரா " இவனா?இவன இப்போ யாரு கூப்டா? ஹாய் வெண்ண டப்பா... லூசுப்பய"என்று அவனைபோலவே பாவனை செய்தவள் இளித்தபடி நிற்க "ஆமா காலையில கிளாஸ் போகாம இங்க என்ன பண்ணுற?" என்று கேட்க தாரா "ஏன் சார் இங்க வரத்துக்கு உங்ககிட்ட பெர்மிஷன் எதுவும் வாங்கனுமா?" பொய் சிரிப்புடன் சொன்னவள் தரையில் விழியை பதித்தாள்.
கிருஷ் புருவம் உயர்த்தி "ஓஹ்...அவ்ளோ திமிரா?" என்று எண்ணியவன் "ஆமா எதாவது தேடுறியா என்ன? வந்ததுல இருந்து கீழயே பார்த்துட்டு இருக்க" என்று கேட்க தலையை உயர்த்தி அவளை பார்த்தவள் "ஆக்சுவலி உங்கள் பிராப்ளம் என்ன சார். நான் உங்ககிட்ட எதாவது கேட்டேனா? இல்லல்ல. போங்க எங்க வேலைய நாங்க பார்த்துக்குவோம்" என்றவள் காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
அவளது அலட்சியமான பேச்சு அவனை மேலும் சூடேற்றி பார்க்க "அதாவது என்னனா வெண்ண டப்பா நான் இங்க வந்தேனா? அப்போ இதோ இது கீழ கிடச்சுச்சு. யாரோ மிஸ் பண்ணிட்டாங்க போல. நீயும் எதையோ தீவிரமா தேடிட்டு இருந்தியா உன்னோடதா இருக்கமோன்னு கேட்டேன். சரி விடு எதுக்கு டென்ஷனாகுற" என்றவன் அவள் முன் அவளது ப்ரேஸ்லெட்டை காட்டிவிட்டு சட்டென்று இழுத்துக்கொண்டான்.
தாரா அது கிடைத்து விட்ட சந்தோஷத்தில் சிரித்தவள் "இது என்னோடது தான் நான் இத தான் தேடி வந்தேன். " என்றவளின் பிம்பத்தை மொத்தமாக அள்ளி நெஞ்சாங்கூட்டில் அடைத்தவன் அவள் அதை எடுக்க முயற்சிக்க விரல்களுக்குள் அடக்கியவன் "ஆன்... இது நல்ல கதையா தான் இருக்கு. இது உன்னோடதுன்னு நான் எப்டி நம்புறது" என்று வம்பிழுக்க துவங்கினான்
*****************
தாரா "ச்ச மனுஷனா இவன் எப்டி பேசுறான். ஸ்டேடஸ் தான் முக்கியமா இருந்தா எதுக்கு பல்ல பல்ல காட்டி இளிக்கனும். இடியட் எல்லாம் பணத்திமிரு"என வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு நரக போக மீண்டும் ஒரு குரல் கேட்டது. இது வேறு குரல் ஒரு ஆணின் குரல் " டேய் பாவம் டா அவ கிட்ட சாஃப்டா சொல்லியிருக்கலாமே."என கேட்க முதலில் பேசிய அந்த குரல் " நான் சாஃப்டா சொன்னா அவ அத ஒரு பொருட்டாவே பார்த்திருக்க மாட்டா. அந்த பொண்ணு நம்மல மாதிரி இல்ல மேடி. ரொம்ப கஷ்டபடுற ஃபேமிலி டா அவளிது. வீட்டுக்கு மூத்த பொண்ணு அவ படிச்சு முன்னேறுனா தான் அவளுக்கு அடுத்து இருக்கவங்க முன்னுக்கு வருவாங்க."என்று அவன் விளக்க அவனால் மேடி என்று விளிக்கப்பட்டவனோ "அதுக்கும் நீ இப்போ திட்டினதுக்கும் என்ன சம்பந்தம்" என்று கேட்க "இருக்கு பொண்ணுங்களுக்கு அவங்க செல்ஃப் ரெஸ்பெக்ட பாதிக்கிற மாதிரி பேசினா சுத்தமா பிடிக்காது. அப்டி பேசினவங்கள லைஃப்ல திரும்பியும் பார்க்க மாட்டாங்க. நமக்கு படிக்கனுன்னு எந்த அவசியமும் இல்ல நாளைக்கே போனா கூட எம். டி போஸ்டிங் நமக்காக வெய்டிங்ல இருக்கும். ஆனா இவ அப்டி இல்ல. இத நான் சொல்லி புரியவைக்க முடியாது. சோ அவளுக்கு புரியுற மாதிரி சொன்னேன் "என்றான்.
********************
அடியேய் நானும் காலையில இருந்து பார்க்குறேன் ரெண்டு பேரும் டாம் அன்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போடுறிங்க." என்று கேட்கவும் மதன் அவர்களை நெருங்கவும் சரியாக இருந்தது.
நிது திருதிருவென முழிக்க மதன் எந்த வித்தியாசமும் காட்டாமல் இருந்தான். அஞ்சலி இடுப்பில் கை வைத்து "உங்க ரெண்டு பேருக்கு எதுவும் சண்டையா?" என்று பல நாள் சந்தேகத்தை கேட்க இருவரும் ஒரு சேர தலையை ஆட்டினர். நிது இல்லை என்று ஆட்ட மதன் ஆம் என ஆட்டி வைத்தான். அஞ்சலி இருவரையும் முறைக்க மதன் "அண்ணி அத்த என்கிட்ட இவள காலேஜ் கூட்டிட்டு போக சொல்லி சொன்னாங்க. இவ கேப்ல போறேன்னு அடம் பிடிக்கிறா. நீயே சொல்லு என்கூட வந்தா இவளுக்கு என்ன ப்ராப்ளம். ஒரு சாங்க் கேட்டதுக்கு இவ்ளோ கோவப்படுறா?" என்று கொளுத்தி போட நிது கண்களை அகழ விரித்தவள் "இல்ல இல்ல அஞ்சலி நான்... " என்றவளின் பார்வை மதனை சென்றடைய அவன் கண்களில் ஏதோ ஒரு திருட்டுத்தனம் ஒளிந்துகொண்டு தலையை மட்டும் வெளி காட்ட "ஏதோ ப்ளான் பண்ணிட்டான்! " என்று எண்ணிக்கொண்டாள் நிது.
"அஞ்சலி எனக்கு டைம் ஆச்சு சீக்கிரம் வர சொல்லு" என்றவள் மீண்டும் பார்க்கிங்கை நோக்கி சென்றாள்.அஞ்சலி "அதான் சொல்லிட்டாளே போடா! " என்றபடி நமட்டு சிரிப்புடன் நகர்ந்தாள்.
*******
ஹாய் ரீடர்ஸ்:
இது என்னோட நெக்ஸ்ட் ஸ்டோரி. பிரதிலிபியில தான் போட போறேன். ஏன்னு தெரியல எழுதவா வேண்டாம்ன்னு என் மனநிலைய குழப்பிவிட்ட கதை இது. தொடங்கி பாதியில முடிக்காம விட்டுடேன். இப்ப முடிக்கலாம் ன்னு ஒரு யோசனை. அண்ட் இந்த பதிவு ஸ்டோரி நேம் ரிஜிஸ்டர் பண்ண மட்டுமே. கதை இந்த தளத்தில் பதிவிடப்படவில்லை.
நன்றி🙏💕
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro