கவிதை. 99
வண்ண வண்ண நிறங்களில் மட்டுமே இது வரை மலர்களை பார்த்ததுண்டு உன்னை பார்த்த பின்பு தான் அறிந்தேன் கரு நிற மலரும் உண்டென்று, கருவாச்சி....!
கண்டவுடன் வந்த காதலும் இல்லை, உந்தன் பேச்சினால் பூத்த காதலும் இல்லை, மனமும் மனமும் மணந்து கொண்டதால் வந்த காதல் இது......!
சில நேரம் தனிமை பல உண்மைகளை புரிய வைக்கிறது.....!
என்ன பிடிக்கும் என்பதற்கெல்லாம் என்னை பிடிக்கும் என்கிறாய் என்ன செய்தேன் அப்படி நான் என்னை எனக்கே பிடிக்குமளவு எனக்கே நான் என் என்னை நானே...!
என் அத்தனை சோகத்தையும் நெற்றியில் இதழ் பதித்துமொத்தமாய் தந்துவிட்டாய் இன்பத்தை, என் மழலை மனதில்ஆயிரம் பட்டாம்பூச்சி....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro