கவிதை. 90
இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ இலைமேலே பனிதுளிபோல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்.....!
உதிர்த்த வார்த்தைக்காக வருத்தப்பட்டிருக்கிறேன், கடைபிடித்த மெளனத்திற்கு என்றுமே சலனப்பட்டதில்லை.....!
கொஞ்சி விளையாட குழந்தைகள் இருந்தும் கொஞ்சவில்லை ஏழை கொட்டி கிடக்கும் பண மழையிலும் நனைய வில்லை பணக்காரன் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு....!
மதிப்பும், மரியாதையும் உன்தகுதி மற்றும் சூழ்நிலையை பொறுத்தே இங்கு கிடைக்கிறது. ஆனால், அது நிரந்தரமானதென எண்ணி, கர்வம் கொண்டு வீழ்கிறான் மனிதன்.....!
மற்றவர்களைப் பற்றி தவறாக பேசயாருக்கும் உரிமையில்லை, தவறு செய்தால் திருத்தம் செய்துகொள் என்று அன்பினால் அறிவுரை கூற மட்டுமே உரிமை உண்டு.....!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro