" மணி ஏழாச்சு.. எழுந்திருச்சு காபிய குடிச்சிட்டு வேலைக்கு போற வழிய பாருடா.. எப்படி இழுத்துப் போத்திட்டு தூங்குது பாரு..
தெண்டம் ஷாக்ச எங்க போட்டு வெச்சிருக்கு .. வீடு மாறியா வெச்சிருக்கான் ..குப்பைத் தொட்டி தோத்து போயிரும்.. அவங்கப்பனுக்கு பையன் தப்பாம பொறந்திருக்கான்."
எல்லாருக்கும் வணக்கம். இவ்ளோ
மரியாதையா திட்டும்போதே என்ன தான் திட்டறாங்கனு தெரி்ஞ்சிருக்கும்..
உங்களுக்கு.. வாங்க என் வாழ்க்கைய பத்தி சொல்லுறேன்..
என்னைப் பத்தி நானே சொல்றதால்ல கொஞ்சம் பில்டப்தான் பண்ணுவேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.. "
எங்களோடது மிடில் கிளாஷ் பேமிலி.. அப்பா போஸ்ட் மாஸ்டர்..
கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ரொம்ப சைலன்ட்.
அம்மா மீனாட்சி ஹோம் மேக்கர்..
பேருக்கேத்தமாறி எங்க வீட்ல மீனாட்சி சாம்ராஜ்யம் தான்..
எனக்கு சுமதின்னு ஒரு அக்கா இருக்கா.. இப்போதான் ரெண்டு வருசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு.
நான் அருண்..சைட் இன்ஜினியரா குப்பை கொட்டறேன்.. ஏன் அப்படி சொல்றேனு நினைக்கிறீங்களா.. பேருதான் சைட் இன்ஜினியர்.. ஆனா கொத்தனாருக்கு கொடுக்குற மரியாதை தான் எனக்கும்.. வெயில்ல வெந்து நூடுல்ஸ் ஆகாத குறைதான்..
சம்பளமும் சொல்லி்க்கற அளவு இல்ல.. உண்மைய சொல்லனும்னா எடுகேஷனல் லோனே இன்னும் நான் கட்டி முடிக்கல.
" டேய் அருண் இ்ன்னைக்கும் வரப்ப ஸ்வீட்டே வாங்கிட்டு வராத.. போன வாரத்துல வாங்கிட்டு வந்ததே இன்னும் ஈ மொச்சிட்டு இருக்கு.. இப்படியே போனா உங்கப்பா மாறி உனக்கும் சுகர் வந்துரும்.
உன் கல்யாணம் முடியற வரை வாயக்கட்டி இரு. "
ஆமாங்க எனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க.. என்னை பகடகாயா வெச்சு அக்கா கல்யாணத்துக்கு வாங்குன கடன அடைச்சிட்டு ஜம்முனு செட்டில் ஆகனும்னு தான் இப்போதைக்கு எங்கம்மாவோட சார்ட் டைம் கோல்..
" சரிம்மா. போயிட்டு வரேன்.. எதாவது வேணும்னா கால் பண்ணு.. பாய்.. " ன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணிட்டேன்..
என்ன இவன் அம்மாவ ஒன்னும் சொல்ல மாட்டிங்கறானே ரொம்ப நல்ல பையன்னு நினைக்கிறீங்களா.. அதெலாம் ஒன்னுமில்ல.. காலங்காத்தால என்னால குழாயடி சண்டைலாம் போட முடியாது.சண்டை போட்டு போட்டு அலுத்துட்டேன்..அதான்..
எங்க ஊரு பக்கா கிராமமும் இல்ல.. சிட்டியும் இல்ல.. சிட்டிக்கு கொஞ்சம் தள்ளியிருக்க கிராமம்னு கூட வெச்சுக்கலாம்..
என்னோட சைட் கூட பக்கத்துல தான் இருக்கு.. ஆனா நான் தான் ரெண்டு தெரு சுத்திட்டு போவேன்.. ஏன்னு உங்களுக்கேத் தெரிஞ்சிருக்கும் இந்நேரம்.
ஆமாங்க என் ஆளப் பார்க்கத்தான்.. சத்தமா சொல்லிராதீங்க என் தோல உரிச்சிடுவா.. என் காதலப் பத்தி சொல்லனும்னா என்னோட காதல் ஸ்கூல் டேஸ்லயே ஸ்டார்ட் ஆயிடுச்சு..
நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்கூல்.
அட்னென்ஸ்ல பாய்ஸ் நேம்ல நான் பர்ஸ்ட்..
கேர்ள்ஸ்ல அவ நேம் பர்ஸ்ட்.
ரெண்டு பேருமே லீடர்ஸ்..
நாங்க ரெண்டு பேரும் படிக்கறக்கு சண்டை போடறமோ இல்லையோ வொர்க் டன் நோட்டுல கையெழுத்து வாங்க போறதுல அடிச்சிக்குவோம்..ஏன்னா
அப்போதான கிளாஸ கட்டடிக்க முடியும்..
ஆனா அது நைன்த் வரைக்கும்தான். அதுக்கப்ரம் பொண்ணுங்க தேவையில்லாம வெளிய போகக் கூடாதுனு ஒரு மேம் திட்னாங்க.. அதுல இருந்து அவ எங்கிட்ட சண்டை போடறது இல்ல.. ஆனா நான் வேணும்னே வெளிய போயிட்டு கிளாஸ்க்கு லேட்டா வந்து அவளப் பார்த்து நக்கலா சிரிப்பேன்.. அப்போ அவ என்னை எரிக்கறமாறி ஒரு லுக் விடுவா பாருங்க.. எனக்கு காஷ்மீர்ல இருக்குறமாறி குளுகுளுன்னு இருக்கும்.. சரி சரி ரொம்ப இழுக்குல.. என்னோட பிளாஸ்பேக்க அப்போப்ப சொல்லிக்கிறேன்..
அரையாண்டு லீவுல மரத்துல ஏறும்போது கீழ விழுந்து கால்ல பிராக்சர் ஆகிடுச்சு.. 20 நாள் பெட் ரெஸ்ட் எடுத்துட்டுதான் ஸ்கூலுக்கு போனேன்.. எப்பவும் எனக்கு எதிர் பென்ச்ல உக்கார்ந்து காட்டுக்கத்து கத்திட்டிருக்கும் அவள காணாம்..என்னதான் ஸ்கூல் ஜாலியா போனாலும் சண்டை போட அவ இல்லாம எதோ ஒரு மாறி இருந்துச்சு.. ரெண்டு நாள் பொறுத்துப் பார்த்தேன்..
அப்ரோ நேரா அவ ஊருக்கே போயிட்டேன்..
அவளுக்கு அப்பா இல்ல.. அம்மாவும் அக்காவும் தான்..அக்கா காலேஜுக்கு போயிட்டு இருக்காங்க..
இப்போ
அவங்க அம்மா பாம்பு
கடிச்சு இறந்திட்டாங்கனு அவங்க டீக்கடைய பார்த்துக்க யாரும் இல்லைன்னு டீக்கடைய பார்த்துட்டு இருந்தா..
எப்பவும் ஸ்கூல் யூனிபார்ம்ல ரெட்டை ஜடை போட்டு அழகா சிரிச்சிட்டு இருக்கவ
நான் போகும்போது
எண்ணை வழிஞ்ச முகம்.. பரட்ட தலையோட
சூடா பஜ்ஜி சுட்டுட்டு இருந்தா... என்னைப் பார்த்ததும் சிநேகமாய் சிரிச்சிட்டு " பஜ்ஜி சாப்படறீங்களா சார்" னா.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. உடனே அந்த இடத்த விட்டு ஓடியாந்துட்டேன்.. அதுக்கப்ரோ அடிக்கடி அந்தப் பக்கம் போவேன் அவளுக்கு தெரியாம ...
அவ இப்போ எந்தக் கவலையும் இல்லாத மாறி கடைக்கு வர பெரிசுங்களோட ஜாலியா கதையளந்துட்டு இருக்கா..
எப்பவும் ஆள்நடமாட்டம் அதிகமா இருக்குறதால பாதுகாப்புக்கு குறைச்சலில்ல.. அது வரைக்கும் சந்தோசம்..
ஆனா எனக்குதான் எந்தப் பொண்ணாவது காலேஜ்கோ வேலைக்கோ போகும்போது அவளும் இப்படி சந்தோசமா இருக்க மாட்டாளான்னு மனசு அடிச்சிக்கும்..எத்தனை பொண்ணுங்கள பார்த்தாலும் யாரும் அவளமாறி அழகா இல்லைன்னு தோணும்.. அப்போதான் நான் அவள காதலிக்க ஆரம்பிச்டேனு புரிஞ்சிக்கிட்டேன்..
அவ பேரோட நிறைய பொண்ணுங்க என் கிளாஸ்லயே இ்ப்போ இருந்தாங்க.. ஆயிரம் பேர் வந்தாலும் அவளாகிட முடியுமா..
காலேஜ்ல எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்தும் போது கடுப்பாகும். ஆனா வேறயாரையும் அவ இடத்துல நினைச்சுக்கோட பார்க்க முடியல..
அன்னைக்கெலாம் அவள நல்லா திட்டிக்கிட்டே இருப்பேன்..
அவளும் கொஞ்சம் திறமைக்காரி தான்.. வெறும் டீக்கடையா இருந்தத பேக்கரியா மாத்திட்டா.. கடைல எப்பவும் குறைஞ்சது 4 பேராவது இருப்பாங்க. அவங்க அக்காவுக்கும் கல்யாணமாகிருச்சு.. அந்த கல்யாண செலவ அடைக்கத்தான் ராப்பகலா கஷ்டப்படறான்னு கேள்விப்பட்டேன்..
நான் மட்டும் பணக்காரனா இருந்தனா
இந்நேரம் அவ கடன அடைச்சி படிக்க வெச்சிருப்பேன். ஆனா அதான் முடியலையே..
இந்த பத்து வருசத்துல மறுபடியும் ஒரு தடவை அவ கடைக்குப் போனேன்..நான் அப்போ காலேஜ் செகன்ட் இயர். ஸ்கூல் படிக்கும்போது நல்லா கொளுகொளுன்னு இருந்தவ
இப்போ கொஞ்சம் இளச்சு கலர் நல்லாவே மங்கியிருந்தா. கையில எண்ணைய் தெறிச்ச காயம் நிறைய இருந்துச்சு.. நெருப்பிலயே வேலை செய்றால்ல அதான்.. அவளுக்கு என்னை அடையாளம் கூட தெரியல.. கொஞ்சம் திரும்பத் திரும்ப பார்த்துத்தா கண்டுபிடிச்சா..
அன்னைக்கு சிரிச்ச மாறி இன்னைக்கும் சிரிச்சா.ஆனா
என் பிரண்ட்ஸ் கூட இருந்தனால எங்கோட பேசாம போயிட்டா..
நான் வாழ்க்கையிலயே பண்ண பெரிய தப்பு அவ கடைல டீ குடிச்சது தான்.. தப்பு தப்பு அதுக்கு பேரு சுடுதண்ணியா.. சர்க்கரைப் பாகா.. என்னனு கூட சொல்ல முடியாது. அந்த டீய குடிக்கறதா துப்பறதா வேணாமான்னு தெரியாம உயிர் தப்பிச்சா போதும்னு மறுபடியும் ஓடியாந்துட்டேன்.. அதுக்கப்றோம்
அந்த தற்கொலை முயற்சிய நான் கை விட்டுட்டேன்.
ஆனா மனசு கேட்காம வாரம் ரெண்டு தடவை தெரிஞ்ச பையன் கிட்ட காசு கொடுத்து அவ கடை ஷ்வீட்ட வாங்கித் தர சொல்லுவேன்.பரவாலை ஸ்வீட் நல்லாத்தான் இருக்கு.. இல்லைனா எங்கம்மா என்னை கொலையே பண்ணிடுவாங்க..
எனக்கும் எங்கம்மா கல்யாணப் பேச்சு எடுத்த உடனே தான் என் காதல அவகிட்ட இன்னும் சொல்லவே இல்லைன்னு.. அவளே ஒத்துக்கி்ட்டாலும் எங்கம்மா ஒத்துக்க மாட்டாங்க.. என்ன பண்ணப் போறேனே தெரியல.. அவங்க வீட்ல பெரியவங்க இருந்தாக்கூட அவங்ககிட்ட பேசலாம்.. ஆனா அவுங்க அக்கா மாமாவும் அவளக் கண்டுக்கறதே இல்ல.. நானே அவகிட்ட பேசறத தவிர வேற வழியில்ல...
சரிங்க உங்க ஆசீர்வாதத்தோட அவகிட்ட என் காதல சொல்லப் போறேன்.. இதோ அவ கடை கூட வந்திருச்சு. பாய்ங்க. அவ இன்னும் என்னை மறக்காம இருக்கனும்னு வேண்டிக்கோங்க.உங்களுக்கு
என்ன ஆச்சுனு நாளைக்கு சொல்றேன்.. ...
நீங்க என்ன நினைக்கறீங்கனு எனக்கு நல்லாத் தெரியுது முன்ன இருக்குற கதைக்கே ஒழுங்கா அப்டேட் போடறது இல்ல.. இதுல புதுக்கதையான்னு.. எல்லாம் நீங்க இருக்குற நம்பிக்கைலதான்.. 😍😊
இந்தக் கதைய கொஞ்சம் எதார்த்தமாக கொண்டு போகலாம்னு நினைக்கிறேன்..ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க..உங்க கருத்துக்கள சொன்னீங்கனா உங்களுக்கு பிடிச்ச மாறி கொண்டு போக பார்க்கிறேன்..நன்றி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro