கதை - 9
ஆதிரா சென்ற திசையை பார்த்து கொண்டிருந்த நீல மனிதன் இவளின் குழப்பத்திற்கான காரணம் புரியாமல் குழம்பி அமர்ந்திருக்க கால்மணி நேரத்திற்கு பின் மீண்டும் உள்ளே வந்த ஆதிரா தான் சென்ற போது எப்படி இருந்தானோ அதே போலே அமர்ந்திருந்தவனை கண்டும் காணாமல் அவனை தள்ளி விட்டு விட்டு அவளின் இடத்தில் சென்று படுத்து கொண்டாள்...
போர்வையை முகம் வரை இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருப்பவளை குழப்பமாகவே பார்த்தவன் " ஏன் ஆதிமா.. உனக்கு இன்னைக்கு ஹோம்வொர்க் குடுக்கலையா என்ன?? " என சாதாரணமாகத் தான் கேட்டான் படக்கென எழுந்த ஆதிரா தன் ஒரு கையை நெற்றியில் வைத்து கொண்டு மறு கையை கட்டிலின் திண்டில் ஓங்கி அடித்தாள்...
அந்த ரியக்ஷனில் ஜெர்காகிய நீல மனிதன் " இப்போ என்ன கேட்டுட்டன்னு நீ இந்த குதி குதிச்சு எழுந்த?? " என மெதுவாய் கேட்டதற்கு அவள் அமைதியாகவே இருக்க அவளின் மறுக்கை தானாக அவளின் நெற்றியை நீவத் தொடங்கியது...
" அம்புட்டு தான்... தலவலி ஆரம்ச்சிடுச்சு " என சத்தமே வராமல் அவளிடமிருந்து நழுவியிருந்தான் அவன்... ஒரு பத்து நிமிடம் தலையை பிடித்தவாறே அமர்ந்திருந்தவள் " அம்மா.. நாளைக்கு நா லீவ் போட்டுக்கவா? " என ஒரு கத்த கத்த " எதுக்கு லீவு?? " என கூடத்திலிருந்து கத்தினார் அவளின் தந்தை... " எனக்கு போகத் தோனல அத்தா... நா போகல ப்லீஸ் " என எழுந்து அவரிடமே சென்றாள்...
அவளின் தந்தை : தேவையில்லாமலாம் லீவ் போட முடியாது ஆதிரா... என்ன நெனச்சிட்டு இருக்க... வேனுக்கு ஃபீஸ் கட்டியாச்சு... நியாபகம் இருக்கு தானே... பணத்தோட அருமை தெரியவே மாட்டேங்குதுமா உனக்கு...
ஆதிரா : நாளைக்கு மட்டும் நா போகல அத்தா
அவளின் தந்தை : ஏன் போகல... எதுக்கு போகல...
ஆதிரா : எனக்கு தலை வலிக்கிது.... ஆதிராவிற்கு ஒற்றை தலை வலி வருவது சகஜமான ஒன்று... ஆனால் அந்த நேரம் தலை பாரமாகி விட்டால் அதை தாங்கி கொண்டு வெளியே எங்கும் அவளால் இருக்க முடியாது... வலியை விடவும் அந்த பாரமான உணர்வு தான் இந்த தலை வலியிலே கொடூரமானது...
அவளின் தந்தை : இந்த வயசுல என்னமா தலவலி உனக்கு... போமா... என அவர் அத்தோடு பேச்சை முடித்து கொள்ள ஆதிராவாலும் அங்கு நிற்க முடியவில்லை...
" ஒரு லீவ் தானே கேட்டேன்... நான் நாளைக்கு போயே ஆகனுமா... ஹோம்ஒர்க் பண்ணல... அது முடிக்காததுக்கு தனி திட்டு விழும்... தலவலின்னு சொன்னா என் ஸ்கூல்க்கு வந்தன்னு கேப்பாங்க... யாருமே புரிஞ்சிக்கலன்னா நா என்ன தான் செய்றது... " என கண்ணீர் கன்னத்தை தாண்டி செல்ல தலையணையில் முகத்தை பதித்து படுத்திருந்தவள் " ஆதிரா நாளைக்கு ஞாயித்து கிழமை " என அவளின் தாய் கூறியதை கேட்டதும் ஒரு பெரிய பாரமே இறங்கியதை போல் உணர்ந்தாள்...
ஆதிரா : ச... இந்த விஷயத்துல அத மறந்துட்டனா... உஃப் என பெருமூச்சு விட்டவள் இவ்வளவு நேரமும் அருகில் அமர்ந்திருந்தவன் ஒரு ஓரத்தில் இப்போது ஒட்டி கொண்டிருப்பதை கவனித்தாள்...
அவனை கண்ட நொடியே மீண்டும் ஆதிராவின் நினைவுகள் அனைத்தும் ரீவைண்டாக அவளின் முகம் மீண்டும் சுருங்கியதை கண்டு அவன் தான் பெருமூச்சு விட்டான்...
நீல மனிதன் : ஆதிமா.. நா கேக்க இருக்கேன்ல டி... என்ன ப்ராப்லம்... வாயத் திறந்து சொல்லு... எதுக்கு பயப்புடுர என அவளின் கரத்தை பிடித்து அவன் மெதுவாய் கேட்க ஒரு சில நிமிடங்கள் அவனையே பார்த்திருந்தவள் பின் தயக்கத்தோடே வாயைத் திறந்தாள்...
ஆதிரா : உனக்கு தெரியும்ல என்னோட ஃப்ரெண்டோட தங்கச்சி.. என்னோட க்லோஸ்.. அவ ஒரு பையன லவ் பன்றான்னு... " ஹான் அவளுக்கு ப்ரேக்கப் ஆய்டுச்சுன்னு சொன்ன... திரும்ப லவ் பன்றாளா?? " என அவன் சாதாரணமாய் தான் கேட்டான் அவளுக்கு தான் அவளின் நட்பை கேவலமாய் கேட்டது போல் தோன்றியது போலும்...
ஆதிரா : தோ பாரு என் ஃப்ரெண்ட பத்தி தப்பா சொல்லாத...
நீல மனிதன் : ஹே நா ஒன்னுமே தப்பா சொல்லல டி என சரண்டராகினான் அவன்... ஆதிராவிற்கு அவளின் தோழிகளை பற்றி யார் தவறாய் கூறினாலும் பிடிக்காது... அதுவும் அவள் தோழியின் தங்கை அவளுக்கும் தங்கை தான்.. அவர்களே தவறு செய்திருந்தாலும் அதை ஒருவர் சரியான முறையை விட்டுவிட்டு கேளி செய்வதை போல் குறிப்பிட்டால் அறவே பிடிக்காது...
நீல மனிதன் ம.வ : உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன்னு நினைக்கிறேன்... ஆதிராக்கு கோவம் வந்தா கொஞ்சமாளாம் வராது.. ஏக போகமா வரும்...
ஆதிரா : இந்த வயசுல எல்லாருமே அப்டி தான்.. அவள ஒன்னும் தப்பு சொல்லாத... எவ்ளோ தான் ஒரு புள்ள கன்ட்ரோல்ல இருந்தாலும் இந்த வயசு அவங்கள அசைக்க ட்ரை பண்ணிட்டே தான் இருக்கும்... அவ லவ் பண்ணீட்டா ஒரு பையன... அவளுக்கு அவங்கள புடிச்சிருக்குதாம்...
நீல மனிதன் : இரு அந்த பையன் என்ன காலேஜ் படிக்கிறானா...
ஆதிரா : இல்ல... அவங்களும் டென்த் தான்...
நீல மனிதன் : ....... சரி கன்ட்டின்யூ...
ஆதிரா : அதான்... அவ நல்லா படிக்கனும்டா.. அவ ஒன்னும் என்ன மாரி இல்ல... என்னலாம் வேலைக்கு அனுப்புவாங்களான்னு தெரியல... நிச்சயம் அனுப்ப மாட்டாங்க... ஆனா அவ வேலைக்கு போகத் தான் படிக்கிறா... அவ படிப்புல கான்சென்ட்ரேஷன் போய்டுமோன்னு எனக்கு பயமா இருக்கு... இப்போதிக்கு இது வேணாம்னு நா எவ்ளோவோ சொல்லி பாத்துட்டேன்... உக்காந்து ஒரு மணி நேரம் என் அட்வைஸ கேக்குரவ அடுத்து அப்டியே ஓடீடுறா... அவ ட்ரீம அச்சீவ் பண்ணனும்... படிப்புல அவள சந்தேகப்படவே தேவையில்ல தான்.. இருந்தாலும் எதாவது தப்பா நடந்துடுமோன்னு பயமா இருக்கு... அந்த எரும மேல எனக்கு நம்பிக்கை இருக்கு தான்... ஆனா என் மேல தான் எனக்கு நம்பிக்கை இல்ல... அவள தப்பான வழில விட்டுடுவேனோன்னு... அவ செய்ர தப்பையெல்லாம் நா இப்போ ஒன்னுமே கேட்க மாற்றேன்... அவள இழந்துடுவேனோன்னு பயமா இருக்கு... அவ நல்ல வழில போறாளா... தப்பான வழில போறாளான்னும் எனக்கு தெரியல... இவ எவ்ளோ தான் சொன்னாலும் திருந்த மாட்டான்னு என்னால அப்டியே விட முடியல... எனக்கு ரொம்ப பயமா இருக்கு...
நீல மனிதன் : அப்போ இது தான் உன்னோட பயம் ??
ஆதிரா : என்ன அசால்ட்டா கேக்குற... என வேகமாய் முறைக்க
நீல மனிதன் : ஹே இல்லடி க்லரிஃபை பண்ணிக்கிறேன்... உன் வருத்தம் சரியானது தான்... ஒரு உண்மையான ஃப்ரெண்டு ஒரு ஃப்ரெண்ட் அந்த பாதைல போகும் போது பயப்புட தான் செய்வாங்க...
ஆதிரா : எனக்கென்ன செய்றதுன்னு தெரியல... வீட்ல சொன்னா அவ்ளோ தான்... உடனே என் ஃப்ரெண்ட பத்தி எதாவது பேச ஆரம்ச்சிடுவாங்க.. அவ கூட சேராத அது இதுன்னு.. அவளுக்கு நான்னா ரொம்ப புடிக்கும்.. எனக்கும் அவள ரொம்ப புடிக்கும்.. அக்கா தங்கச்சிங்குரத விட நாங்க க்லோஸ்ஃப்ரெண்ஸ் தான்.. அவ உண்மையாவே நல்லப் பொண்ணு டா... லவ் பன்றாங்குரதுக்காக அவ கரெக்ட்டர தப்பா பேசுனா எனக்கு கெட்ட கோவம் வருது... என் ஸ்கூலையும் ஒன்னும் சொல்ல முடியல... எவ்ளோ ரூமர்ஸ் தெரியுமா... ஹ்ம்ம்ம்ம் நா இத ஹசீனாட்டையும் மல்லி கிட்டையும் புலம்புனா அவளுங்க நம்மளால ஒன்னும் பண்ண முடியாது விடுங்குறாளுங்க... நா இப்போ இத பெருசா எடுத்துக்காம விட்டு இன்கேஸ் அவ ஃப்யூச்சர்ல காயப்பட்டு வந்தா என்னால என்ன பண்ண முடியும்... என கண்ணீரை மறந்து அவன் மடியில் அவள் தலை வைத்து கொள்ள அவளின் தலையை மென்மையாய் வருடியவனுக்கும் நன்றாகத் தெரியும் ஆதிராவுக்கு அவளின் தோழிகளென்றால் எந்தளவு முக்கியமென்று...
நீல மனிதன் : ஒன்னுமில்ல ஆதி.. எல்லாமே சரியாய்டும்... உன் ஃப்ரெண்டோட தங்கச்சி நல்ல பாதைல போனும்னு நீ நினைக்கிறது தப்பே கிடையாது டா... அவ ஆயிரம் முறை உன் பேச்சை கேக்கலனா என்ன... எப்டியும் உனக்கு பேசி பேசி வாய் வலிக்கப் போறதில்ல ஆயிரத்தி ஒன்னாவது முறையும் சொல்லு... அட்வைஸ் பண்ணு... என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா உன் ஃப்ரெண்டு புரிஞ்சிப்பா.. இந்த பதின்பருவம் நடுக்கடல்ல போற படகு மாறி... நீ சமாளிச்சு எந்த பாறைலையும் சிக்காம கரைய சேந்துட்டா போதும்... ஆனா இடைல பல பாரைகள் இருக்கும்.. உன் குட்டி ஃப்ரெண்டுக்கு நல்லா பாரைங்க பில்டிங் சைஸ்ல இருக்கு போல சீக்கிரம் தாண்டி வந்துடும் புள்ள...வேற ஒன்னும் இல்ல சரியா கவலப்படாத... அந்த பொண்ணோட கரெக்ட்டர்லையும் தப்பில்ல... எதையும் போட்டு கொழப்பிக்காத... என அவளை எழுப்பி அமர வைத்து புன்னகைத்தான்...
ஆதிரா : ஹ்ம்ம்ம்ம் சரி சாரி... ஈவ்னிங்லேந்து உன்னையும் நா ரொம்ப கொழப்பி விட்டுட்டேன் என தலை குனிந்து கூறியவளின் கன்னத்தை மிருதுவாய் ஏந்தி நிமிர்த்தியவன் அவளின் கண்ணீர் தடத்தை பொருமையாய் அழித்தவாறே...
நீல மனிதன் : உண்மை தான்... நா கூட இல்லாதப்போ ஸ்கூல்ல எதுவும் ஆயிருக்குமோன்னு ரொம்ப பயந்துட்துட்டேன்... கொஞ்ச நேரத்துல எவ்ளோ விஷயம் என் கண் முன்னாடி தாண்டி போச்சு தெரியுமா... கொஞ்ச நேரத்துல என்ன ரொம்ப பயமுறுத்தீட்ட டி... இனிமே எதுவா இருந்தாலும் என் கிட்ட சொல்லீடு... உன்ன இழக்குர மாரி ஒரு சிச்சுவேஷன் வந்துட்டா என்னால அத தாங்கிக்க முடியாது... ஏன்னா நீ எனக்கு அவ்ளோ முக்கியம்... என உணர்ச்சி வசத்தில் அவளின் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்திருந்தான்...
அதே நேரம் ஆதிராவின் தாய் தவறாய் அந்த அறைக்குள் என்ட்ரி குடுக்க ஆதிரா அதிர்ச்சியில் கண்களை மூடி திறக்கும் முன்பாக நீல மனிதன் காற்றாய் மறைந்திருந்தான்...
விட்டத்தை பார்த்து அமர்ந்திருந்தவளை அழைத்து அழைத்து நொந்து போன ஆதிராவின் தாய் ஒரு கத்து கத்திய பின்னே ஆதிரா சமநிலை பெற்று முறைத்து கொண்டிருந்த தாயையை கவனிக்க அவர் மின்விளக்கை அணைக்க கூறி விட்டு படுத்ததும் ஆதிராவின் முகம் முழுவதும் ஏதோ எரியத் தொடங்கியது போலிருந்தது அவளுக்கு...
அவளின் கைகள் நடுங்க சகஜமாகவே சற்று சிவப்பு நிறம் கொண்ட அவளின் கன்னம் இப்போது கொஞ்சம் அதிகமாகவே நாணம் பூசி கொண்டு சிவந்திருந்தது...
பின் வேறென்ன.. அங்கு தான் நேர் பாதையில் சென்று கொண்டிருந்த ஆதிராவின் பாதையில் ஒரு திடீர் ஸ்கிட் அடிக்கப்பட்டது...
அது மட்டுமல்ல... ஆதிரா அவனை இறுதியாய் கண்டதும் அதே நாளன்று தான்....
கதை தொடரும்...
ஹலோஓஓஓஓஓஓஓஓஓ எப்டி போகுது கதை... இதுக்கு மேல கடந்காலம் வராது... ஃப்லஷ்பக்லாம் முடிஞ்சிடுச்சு... சோ சீக்கிரமே யூடிகளோட வரேன்... இத எவ்ளோ சீக்கிரம் முடிக்கிறேனோ அவ்ளோ சீக்கிரத்துல நம்ம விழியின் மொழி ய ஸ்டார்ட் பண்ணலாம்... அத வேற நாழு நாளா நா எட்டி கூட பாக்கள... சரிங்க இதயங்களே... குட் நைட்... டாட்டா...
ஹே இதயங்களே... நேத்தே போட வேண்டிய யூடி.. நெட் இல்ல... அதோட நீங்க ரிப்லை பண்ணீருந்தது எனக்கு ரொம்ப நிம்மதியா இருந்துது இதயங்களே... அது உங்களுக்கு புரிஞ்சதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. தன்க் யூ சோ மச்... அப்ரம் கதை சீக்கிரமே முடிவடைய போகுது... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro