கதை - 7
கடந்த காலம்
14 வயதான ஆதிரா பள்ளி சென்று விட்டு அப்போதே வீட்டிற்கு வந்திருக்க அவளின் தாய் கொள்ளை புறத்தில் அவர் ஆசையாய் வளர்க்கும் கோழி குஞ்சிகளோடு மும்மரமாய் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டிருப்பதால் அவள் முன் சென்றமர்ந்தான் நம் நீல மனிதன்...
அவனை கண்டதும் தான் செல்பேசியில் பார்த்து கொண்டிருந்த எதையோ தூக்கி எறிந்து விட்டு அவனை குடுகுடுவென ஓடி வந்து அணைத்து கொண்டாள் ஆதிரா...
நீல மனிதனுக்கோ உடல் முழுவதும் சிலிர்க்க பதறியடித்து அவளிடமிருந்து பிரிய முயன்றவன் " டோரீமான்... நீ இன்னும் சாகலையா... நா கூட நீ செத்துட்டன்னு சொல்லவும் நம்பீட்டேன் " என உளற ஒன்றும் புரியாமல் எதற்சையாய் அவள் பார்த்து கொண்டிருந்த செல்பேசியை கண்ட நீலமனிதன் மனதிலே தலையிலடித்து கொண்டான்...
அந்த ஒளிப்பதவில் பொம்மை திரை டோரீமான், நோபீட்டாவின் கற்பனை மட்டும் தான்.. டோரீமான் நோபீட்டா முன் இறந்தவுடன் அதை காப்பாற்ற முடியவில்லை என்பன போன்று தகவல் ஓடி கொண்டிருக்க தினம் பள்ளி கூடத்திலிருந்த வந்த அரை மணி நேரத்திற்கு தூக்கம் சொக்கும் நிலையில் தான் ஆதிரா இருப்பாளென்பதை நினைவில் கொண்டு அவளை அருகிலிருந்த சோபாவில் சாய வைத்தான்...
அவனே எதிர்பார்க்காதது நொடியில் ஆதிராவை தழுவி கொண்ட தூக்கத்தை தான்... " இந்த கொழந்தைய வச்சிட்டு எதிர்காலத்துல என்ன என்னலாம் பாடு பட போறானோ " என புலம்பியவாறு அவளருகில் அமர்ந்து கொண்டான்...
நாட்கள் ஓடியது மாதங்கள் ஓடியது... ஆதிரா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முட்டி மோதி 440 மதிப்பெண்களை தாண்டி விட்டிருந்தாள்... அதனாலே தினம் செல்பேசி நோண்டாதே தினம் கதை படிக்காதே என கழுவி ஊற்றிக் கொண்டிருந்த அவளது பெற்றோரும் அவளுக்கு அவை அனைத்திலுமிருந்தும் விடுமுறை அளித்திருந்தனர்...
இந்த குறிப்பிட்ட மாதங்களில் நம் நீலமனிதன் மற்றும் ஆதிராவினுடனான நட்பும் அழகாய் வேறூண்டியிருந்தது... ஆதிரா முன்பை போல் தனிமையை நாடவில்லை...தனிமையில் வாடவில்லை... வாய் விட்டு அழுவதை கேட்கவும் தலை சாய்த்து தோள் பற்றவும் உடன் ஒருவன் இருக்கிறான் என்ற திருப்தியே அவளின் அதிகபட்ச மனஉளைச்சலை குறைத்திருந்தது...
இன்றைய பதின்பருவத்தினர் பெற்றோரின் பேச்சை கேட்காதிருக்கலாம்... ஆனால் அவர்களின் கட்டளைகள் அனைத்தையும் ஏற்று தனக்குண்டான சில பிரச்சனை வெளியே கூறினால் திட்டினாலும் பரவாயில்லை இதுவெல்லாம் ஒன்றா என ஏளனப்படுத்திவிடுவரோ என இன்னல் படும் இளைஞர்கள் ஏராளம்... குழந்தைகள் பெற்றோரை விடவும் நண்பர்களிடம் அதிகம் பழகும் காரணமும் அவர்களிடையே உள்ள நம்பிக்கையும் தான் அவர்களுக்கு ஒரு நிம்மதி...
ஆனால் நண்பர்களிடமும் கூட பகிர முடியாத சிலர் என் செய்வர்... இரண்டு வருடம் ஆதிராவின் வாழ்கை அவ்வாறு தான் இருந்தது.. அவளின் வலியை கூறினால் ஆறுதலில்லை... ஆதரவுமில்லை... ஆதிராவை போன்ற இளம்பருவத்தினர் உடனே வரும் ரோபோட்டையோ மந்திர பரிசுகள் அளிக்கும் டோரீமோனையோ எதிர்பார்ப்பதில்லை...
அழுதால் கதறினால் புலம்பினால் அதை கேட்கும் ஒருவர்.. அவளின் கண்ணீரை துடைக்கும் ஒருவர்.. இரவில் அவளுடனே இருப்பதாய் வலியுறித்தி அவளை உறங்க வைக்கும் ஒருவர்... அந்த ஒரே ஒரு நபர் மட்டும் அவர்களுக்கு போதுமானதே..
எப்போதும் போல ஏதோ ஒரு ஆங்கில பாடலை கேட்டு கொண்டே ஒரு காகிதத்தில் ஏதோ கிருக்கிக் கொண்டிருந்த ஆதிரா படாரென ஏதோ சத்தம் கேட்டு தலை தூக்கி பார்க்க அவளின் மனித வெர்ஷன் டோரீமான் கட்டிலில் இருந்து புரண்டு கீழே விழுந்திருந்தது...
இவ்வளவு நேரமும் அவன் அவளருகில் தான் படுத்து ஏதோ செய்து கொண்டிருந்தான்... அவனை கண்டு சிரித்தபடியே எழுந்த ஆதிரா அவன் கீழே விழுந்தும் உறக்கத்திலிருந்து எழாமல் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதை கண்டு முதல் முறையாக அவன் கேசத்தை வருடினாள்...
அவளின் விரல்களிடையே கூசிப்புகுந்த அவனின் கேசமும் அவளின் விரல்கள் தரும் கோதலிலும் கண்களை திறந்தான் அவன்...
" என்ன " என ஆதிரா அவனிடம் கேட்க தான் கட்டிலில் இன்றி தரையில் கிடப்பதையும் ஆதிராவின் தாயார் அறைக்குள் நுழைவதையும் கண்டு அவன் மறைந்து போக தலையை கீழே தொங்க விட்டு கொண்டு அமர்ந்திருந்த மகளை கண்ட தாய் " ஹே என்ன டி பன்ற?? " என அதட்டி கொண்டே உள்ளே வர பொருமையாய் எழுந்தமர்ந்து " ஒன்னுமில்லையே " என சிரித்தாள் அவள்...
அவள் தாயும் மேலும் கீழும் பார்த்து கொண்டே மின் விளக்கை அணைத்து விட்டு அவளோடு வந்து கட்டிலில் படுத்து கொண்டார்.... " ம்மாஆஆஆ எனக்கு தூக்கம் வரலம்மா " என ஆதிரா இழுக்க " கண்ண மூடுனா தான் தூக்கம் வரும் " என மெதுவாய் கூறினார் அவளின் தாய்...
அங்குமிங்கும் புரண்டு கொண்டு தன் தாய் கண்ணை திறந்து பார்க்கிறாரா என உறுதி செய்து கொண்டு தனக்கு தூக்கமே வரவில்லை என அவள் நிரூபிக்க " ஓதீட்டே இரு டி தூங்கீடுவ " என இவளின் தொல்லை தாங்காமல் அவர் கடுகடுத்தார்...
" இதோ பாரு நா அந்த பக்கம் திரும்புனதும் இந்த பக்கம் நீ ஃபோனெடுத்தன்னா ஃபோன தூக்கி போட்டு உடச்சிடுவேன் " என மிரட்டிவிட்டு புரண்டு படுத்தவர் சில நிமிடங்களில் உறங்கியும் விட்டிருந்தார்...
ஆதிரா : அல்லாஹ்... தூக்கமே வரலையே... நா இப்போ என்ன பண்ணுவேன்... பாட்டு கேட்டா வர்ர தூக்கமும் போய்டுமே... கதை படிக்களாமா... அம்மா பாத்தா நீ செத்தடி மவளே... அப்போ என்ன செய்யளாம்... டேய் நீலமனிதா... என்ன தனியா விட்டுட்டு எங்க டா போனா... ப்லூ மன்... அக்வா மன்... டோரீமான்... மனிஷ வெர்ஷ டோரிமானே என இவள் மனதிலே கூப்பாடு போட்டு கொண்டிருந்த சில நிமிடங்களிலே " என்ன வேணும் உனக்கு " என அவளின் தலை மேலிருந்து அவனின் குரல் வந்தது...
ஆதிரா : எப்டி இடியட் வந்த... நா மனசுக்குள்ள தானே கூப்டேன் என ஆச்சர்யமாய் தலையை பின்னோக்கி சாய்த்து அவள் கேட்க " நீ இப்டி முட்ட கண்ண முளிச்சிட்டு உங்காந்துருந்தா கேக்காம எப்டி இருக்கும் " என்றான் அவன்...
ஆதிரா : ஓஹோ...
நீல மனிதன் : இழுத்தது போதும்... எனக்கு வேலை இருக்கு... ஏன் கூப்ட்டன்னு சொல்லு...
ஆதிரா : எனக்கு தூக்கம் வரல டோரீமான்... என்ன தூங்க வச்சிட்டு போயேன்... என கேட்டதும் அவளை நம்ப முடியாத பார்வை பார்த்தவன் " சும்மா இவ பேரு வச்சாளேன்னு நா ஒன்னும் சொல்லாம இருந்தா உண்மையாவே என்ன டோரீமான் ஆக்கீடுவா போல " என எண்ணி கொண்டே
நீல மனிதன் : என்னால என்ன பண்ண முடியும்... கண்ண மூடி படுத்தா தூக்கம் வரப் போகுது என அவளின் தாய் கூறிய வசனத்தை அலேக்காய் திருடி இவளிடமே கூறினான்...
ஆதிரா : கண்ண மூடுனா எனக்கு எப்ப எப்பையோ நடந்த விஷயம் தான் நியாபத்துக்கு வருது தூக்கம் வரல என கடுகடுத்தாள் அவள்...
நீல மனிதன் : என்ன என்ன தான் பண்ண சொல்ற அப்போ... உன்னோட நித்ரா தேவியையெல்லாம் என்னால தேடி கண்டுபுடிச்சு அழச்சிட்டு வர முடியாது....
ஆதிரா : நீ என் கூட பேசிக்கிட்டு இரு... நா தூங்கீடுறேன்...
நீல மனிதன் : உன் கூட பேசுனா நீ இந்த ராத்திரி தூங்க மாட்ட... அப்ரம் எனக்கும் உன் கூட சேந்ததுக்கு சிவராத்திரி தான்... அதனால நீ பேசு... நா கேக்குறேன்...
ஆதிரா : சரி கேளேன்... எனக்கு ரொம்ப வியர்டான ஒரு ஹபிட் இருக்கு இடியட்... நீ இந்த பெட்ட விட்டு எழுந்தா நடக்கனும்னு தானே யோசிப்ப.. அதுவே நா அப்டி யோசிச்சா எனக்குள்ள இருக்க ஈவில் ஆதிரா நா எந்திரிச்ச உடனே கால் தடுக்கி கீழ விழப் போற மாரி கற்பனை பண்ணீடுவா என முறைத்த படி கூறினாள்...
பின்ன ஒரு படிக்கட்டில் ஏறும் போது... கதவை திறக்கும் போது... பல கன்னாடி தட்டைகளை எடுக்கும் பொழுது... என ஒவ்வொரு செயலிலும் ஒரு அபாயத்தை காட்டினால் அவளும் என்ன தான் செய்வாள்...
நீல மனிதன் : எல்லாம் இமஜினேஷன் தானே விடு விடு
ஆதிரா : அட போப்பா... உனக்கு என் வலியே புரியல... என்ன பத்தி யாருமே புரிஞ்சிக்க மாற்றாங்க தெரியுமா... யாருக்குமே என்ன பத்தி புரியல...
நீல மனிதன் : புரியல புரியலன்னு மனசுக்குள்ளையே புலுங்கீட்டு இருந்தீனா யாருக்குமே தெரியாது... வாயத் திறந்து என்ன பிரச்சனைன்னு அவங்க கிட்ட சொல்லனும்
ஆதிரா : என்னால முடியலையே... கண்ணு கலங்க ஆரம்சிடுச்சுன்னா தொண்டைல ஏதோ அடச்சிக்கிது... என்னால ஒன்னுமே சொல்ல முடியல.. என திரும்பி படுத்து கொண்டாள்... அவளின் குரல் உடைவதை கவனித்தவன் உடனே சுதாரித்து கொண்டான்...
நீல மனிதன் : அதுக்கு தானே நான் இருக்கேன்.. என் கிட்ட சொல்லு...
ஆதிரா : உன் கிட்டையா... உனக்கு புரியுமா... என கொட்டாவி விட்டவாறே அவள் கேட்க
நீல மனிதன் : நா எவ்ளோ பெரிய எதிர்காலத்துலேந்து வந்துர்க்கேன்... எனக்கு புரியாம போகுமா... அப்டியே போனாலும் நா ஃப்யூச்சர்க்கு போய் கூகுல் கிட்ட கேட்டுக்குவேன்.. என் கிட்ட சொல்லு... என அவன் கூறி கொண்டே அவளை பார்க்க அவள் எப்போதோ கண்களை மூடி உறங்கியிருந்தாள்...
ஒரு புன்னகையுடன் அவளின் கண்ணீரை துடைத்தவன் அங்கிருந்து மறையவும் மீண்டும் ஆதிரா அரை உறக்கத்தில் கண்களை திறந்து விட்டு தன்னை சுற்றி பேயிருக்க வாய்ப்பிருக்கிறது கண்ணை மூடி விடு என இதயம் கூறிய எச்சரிக்கையினால் கண்களை மூடி தூங்கியும் விட்டாள்...
எதிர்காலம்
ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்குள் புயலென நுழைந்த நீலமனிதன் அங்குமிங்கும் ஓட அதே நேரம் அவனிருந்த அறைக்குள் அறக்க பறக்க தன் கோட்டையெல்லாம் கலட்டி வைத்து விட்டு ஓடி வந்தான் நம் ஆதிராவின் ஃபீயான்சி...
அவன் : டேய் என்னடா ஆச்சு.... நா உன்ன எதுக்கு அனுப்பி வச்சா அங்க என்ன டா நடக்குது...
நீல மனிதன் : அது இருக்கட்டும்... ஃப்யூச்சர்ல என்ன டா நடக்குது...
அவன் : அன் உன் அரும காதலி உன்ன இழந்துட்டன்னு ஓன்னு அழுதுட்டு இருக்கா டா... உண்மையாவே என்ன நடந்துச்சு... எங்களுக்கு தான் கல்யாணமாய்டுச்சே... என்ன பண்ணி வச்சா அவ...
நீல மனிதன் : ஆதிராவ குறை சொல்லாத அவ ஒன்னும் செய்யல... நாம தான் கொஞ்சம் ப்ராப்லம்ல மாட்டிக்கிட்டோம்...
அவன் : கொஞ்ச ப்ராப்லமா... இது கொஞ்சமா டா என அவன் ஒரு புகைபடத்தை எடுக்க அதில் அவனும் ஆதிராவும் மணக்கோலத்தில் நின்றிருந்தனர்...
ஆனால் பிரச்சனை என்னவென்றால்... கோர்க்கப்பட்டிருந்த அவர்களின் கரம் இரண்டும் மெதுமெதுவாய் மறைந்திருந்தது...
நீல மனிதன் : இதுக்கு என்ன அர்த்தம்-
அவன் : இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியும் தானே... கடந்த காலத்துல ஏதோ ஒன்னு மாறுனதால இப்போ எங்க வாழ்கையே மாறிகிட்டு இருக்கு... என கூறியதும் நீல மனிதன் வேகமாய் அங்கிருந்து " ஆதிரா ஆதிரா " என கத்தி கொண்டே கீழே ஓடினான்....
ஒரு அறை கதவை படாரென திறந்தவன் உள்ளிருந்தவளை கண்டு அதிர்ந்து நிற்க அங்கு சேலையில் நின்றிருந்த ஆதிராவும் இவனை கண்டதும் உறைந்து நின்றிருந்தாள்....
" நேத்து வர உன்ன தெரியாத அவளுக்கு இப்போ உன்ன அடையாளம் தெரியிது " என கத்தி கொண்டே வந்த அவன் நீல மனிதனை ஒரு இழுஇழுத்து விட்டு ஆதிரா இருந்த அறை கதவை மூடினான்...
நீல மனிதன் சற்றும் நடப்பதை பகுத்தறிய இயலாமல் சிலையாய் நிற்க மூடிய கதவை திறக்க சொல்லி கத்திய ஆதிராவின் குரலிலே நிலை பெற்றான்...
அவன் : சரி சரி இங்க பாரு... பத்து வர்ஷத்துக்கு முன்னாடி கதை வேற... இப்போ கதையே வேற... இத காலத்த எழுத விட்டா நம்ம இரெண்டு பேரும் என்ன நிலமைல இருப்போம்னு தெரியல... ஆதிராக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தே ஆகனும்...
நீல மனிதன் : ஆமா நடந்தே ஆகனும்... நடக்கலன்னா என்னாலையே என்னோட உயிர் போய்டும்... இல்ல அப்டி நடக்காது...
அவன் : ஆதிரா கிட்ட என்ன சொன்னாலும் அவ உன்ன மறக்க மாட்டா... உன்ன மறக்குர மாரி தான் நீ எதாவது பண்ணனும்... ஆனா அதுக்கு முன்னாடி எங்க கல்யாணத்த தயவு செஞ்சு நடக்க வை டா... எனக்கு எங்க கல்யாணத்துல என்ன நடந்துச்சுன்னு இப்போ நியாபகம் வர மாட்டுது... ஏதோ ஒன்னு பயங்கரமா நடக்க போகுது... அதுக்கு நானே வழி வகுக்க போறேன்னும் புரியிது... இப்போ நியாபகம் இருக்குர வர நா ஆதி சொல்றதுக்காக கல்யாணத்த ஏன் நிறுத்தனும்னு யோசிச்சிட்டு இருக்கேன்.... சோ தயவு செஞ்சு என் முடிவ மாத்த விற்றாத..
நீல மனிதன் : ஓக்கே ஓக்கே என பறக்காத குறையாக படபடத்தவனை
அவன் : இருடா இருடா... ஆதிரா கூட கல்யாணம் ஆகலன்னா அதே நேரம் என்னோட கொலிகோட பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதா அம்மா பேசீட்டு இருந்தாங்க.. அந்த பொண்ணு கொஞ்சம் இல்ல ரொம்ப பிடிவாதக்காரி... நா தெரியாத்தனமா கூட அவளுக்கு ஓக்கே சொல்லீடாம பாத்துக்கோ ப்லீஸ்... என எங்கிருந்தோ அவளின் நினைவு முளைக்கவும் நிச்சயம் இவளை வைத்து ஏதோ நடக்க உள்ளதென்ற எண்ணத்தில் இவன் படபடத்தான்...
நீல மனிதன் : ஹான் சரி டா சரி டா... நா கெளம்புறேன்...
" அவளோட பேரு ந- " என அவன் முழுவதுமாய் கூறும் முன்னே நீல மனிதன் அது எத்தகைய விஷயம் என்பததை அறியாது எதிர்காலத்திலிருந்து நிகழ்காலம் சென்றிருந்தான்...
நிகழ்காலம்
ஆதிராவின் வீட்டில் அனைத்து வேலைகளும் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது... இன்னும் திருமணத்திற்கு சரியாய் ஐந்தே நாட்களிருக்க நாளை மறுநாள் ஆதிராவின் குடும்பத்தினர் அனைவரும் சென்னைக்கு கிளம்ப உள்ளனர்...
திருமணம் இயல்பிலே மாப்பிள்ளையின் ஊரில் நடப்பதால் ஆதிராவின் திருமணமுமே சென்னையில் தான் அமைக்கப்பட்டிருந்தது...
இங்கொருவன் யாரின் வாழ்கைக்காக படாது பாடு பட்டு கொண்டிருக்கிறானோ அவ்விருவரின் நிகழ் காலத்தவர்களோ தீவிரமாய் அவர்களின் கடந்த காலத்தை பற்றி பேசி கொண்டிருந்தனர்....
எதிர்காலம்
தன்னை தயார் படுத்தி கொண்டு மெதுவாய் கதவை திறந்த அவன் ஆதிரா உள்ளிருந்து வேகமாய் வரவும் அவள் வந்த வேகத்திற்கு எங்காவது சென்று முட்டி கொள்ளும் முன் பிடித்து நிறுத்தினான்...
அப்போதே அவன் தன் கண் முன் இருப்பதை கண்ட ஆதிராவின் கன்னங்கள் கண்ணீரின் வடுக்களால் நிறைந்திருக்க " என்னங்க... இங்க.. இங்க நா யாரையோ பாத்தேன்... அவன்.. அவன்.. நாம... நா சொன்னேன்ல... நம்-ம கல்யாணத்துக்கு முன்னாடி... அவன் என்னோட இடியட்... அவன நா பாத்தேன்.. அவன்.. அவன் உங்கள மாரி... " என சரியாய் கூற இயலாமல் தடுமாறினாள்...
அந்த நேரம் அவளுக்கு சரியாக அவர்களின் திருமண காலத்தை பற்றி சிந்தித்தால் தன் கணவனிடம் அவனை பற்றி கூறி கொண்டிருந்தது மட்டும் தான் நினைவில் இருந்தது... அதன் பின் என்ன நடந்தது... அவன் வந்தானா... வரவில்லையா... தனக்கு திருமணமானதா இல்லையா... ஏன் அவள் முன் நிற்கும் அவனின் முகமே அவளுக்கு சரியாய் தெரியவில்லை...
இது தான் நீல மனிதன் பத்து வருடம் பயந்ததற்கான காரணம்... கடந்த காலத்தின் ஒரு சிறு மாற்றம் முன்பே வரையப்பட்ட கோட்டை தாண்டி புதிய நிகழ்காலத்தை தான் தேடி செல்லும்... அவ்வாறிருக்கையில் அந்த இரு கட்டத்தையும் தாண்டி மூன்றாம் கட்டமான எதிர்காலத்தை அடைந்தவர்களுக்கு நிகழ்காலத்தில் நடப்பது நடக்க நடக்க தான் தெரியும்... ஏனெனில் அவர்கள் அந்த வாழ்கையையே வாழவில்லை...
ஆதிராவின் வாழ்கையில் ஒரு படி மாற்றமடைந்தது அவளின் திருமணத்தில் தான்... ஆதலால் அவளின் திருமணம் நிகழ்காலத்தில் நடந்து முடியும் வரை அன்று என்ன நடந்ததென்பது ஆதிராவிற்கே புரியாத புதிர் தான்...
தன்னவளை அணைத்து வார்த்தையின்றி ஆறுதல் படுத்து கொண்டிருந்தவனின் காதுகளில் கேட்ட ஆதிராவிற்கு பிடித்த பாடலின் ஒரு வரி ஏனோ அவனின் வாழ்கையையே எடுத்துரைப்பது போல் தோன்றியது....
-மார்கழி மாதத்தின் பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவளிருக்க.. மருகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா?
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே..
கதை தொடரும்...
ஹலோ இதயங்களே... ஹிஹிஹி நேத்து உங்கள்ட்டு புலம்பீட்டு போன கொஞ்ச நேரத்துலையே ஐடியா வந்துருச்சுப்பா... ஹிஹிஹி என் ஐடியா எனக்கு புரிஞ்சிடுச்சு... உங்களுக்கு புரிஞ்சிடுச்சான்னு தான் கேள்வி... புரியிதா.???
DhiraDhi
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro