கதை - 6
உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே... நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொள்வேனே... கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே ... தேங்காய் குள்ளே நீர் போல நெஞ்சில் தேக்கி வைப்பேனே...
என பாடலின் வரிகளை முனுமுனுத்தவாறு வந்த ஆதிரா வீடே வெருச்சோடி கிடப்பதை கண்டு சுற்றி முற்றி பார்த்தாள்... வீட்டில் எவரும் இல்லை... " என்னடா இது " என யோசித்தவாறே வந்த ஆதிரா... அவனையும் காணாது... நெற்றியை பிடித்து கொண்டு யோசித்தவாறே கத்தி அழைத்தாள்...
ஆதிரா : மிஸ்டர் நீல மனிதா... ம்ம் இல்லனா டைம் ட்ரவலர்... ஹலோ... டேய் மனித வர்ஷன் டோரீமானே... எங்க இருக்க... ஹலோ... மிஸ்டர் இடியட் எங்க டா இருக்க... என அவள் இறுதியாய் கத்திய கத்தில் அடுத்த நொடி அவள் முன் தோன்றினான் அந்த மனித வர்ஷன் டோரீமான்...
அவன் : என்ன ஆச்சு என்ன ஆச்சு...
ஆதிரா : ம் அ..அது எ..எங்க போன... என அவன் வரும் வரை காட்டு கத்து கத்தி கொண்டிருந்தவள் இப்போது தயங்கி தயங்கி கேட்க...
அவன் : ம்ம்ம் அது... உன் எதிர்காலத்தோட நிகழ் காலத்த பாத்துட்டு வந்தேன்...
ஆதிரா : நிழ்காலமா...
அவன் : உனக்கு அதெல்லாம் புரியாது... அது என்ன இப்போ திடீர்னு தயங்கி தயங்கி பேசுர...
ஆதிரா : அது... அப்போ ஏதோ அதிர்ச்சில நா நார்மலா இருந்துட்டேன்... இப்போ எல்லாம் மண்டைல உரச்தும்... கொஞ்சம் தயக்கமா இருக்கு...
அவன் : ஹ்ம்... அதுவும் சரி தான்... இப்போ தா நீ நீயா இருக்க... உன் பரென்ட்ஸ வர்ரதுக்கு இன்னும் ஆறு மணி நேரமாகும்... என்ன பன்ன போற.... என பேச்சை மாற்றினான்...
ஆதிரா : ஆறு மணி நேரமா... மணி இப்பவே அஞ்சாக போகுதே...
அவன் :ம்ம் என்ன பன்ன போற...
ஆதிரா : அதான் காவலுக்கு நீ இருக்கியே... நா ஏன் பயப்புட போறேன்... என சாதாரணமாய் கூறிவிட்டு அஸர் தொழுகைக்கு உழுசெய்ய முத்தத்திற்கு சென்றாள்...
அவள் செல்வதை திரும்பி நின்று பார்த்த அவன் " அப்பப்போ பேக்கு பைத்தியமாய்டுது " என சிரித்து கொண்டான்...
உழு செய்தவள் நிமிர... அவன் அவள் முன் ஒரு காலை செவுற்றில் சாய்த்து கொண்டு... கைகளை கட்டி கொண்டு சாய்ந்து நின்றிருந்தான்... இவள் ஒரு புருவத்தை தூக்கி என்ன என வினவியதற்கு அவன் ஒன்றுமில்லை என தலையை ஆட்ட...
ஆதிரா : இதோ பாரு... அப்பப்போ இப்டி முன்னாடி முன்னாடி வந்து நிக்காத... பயமா இருக்கு... என கூறிவிட்டு கூடத்திற்கு ஓடி விட்டாள்...
இரண்டே நிமிடங்களில் அவள் முன் தொழுக... அவளருகிலே இவனும் தொழுகையை முடித்து ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து மறைந்தான்....
ஆதிரா : இவன் என்ன டப்பு டப்புன்னு மறஞ்சு போயிர்ரான்... என புலம்பி கொண்டே இறை வணக்கத்தை முடித்து எழுந்து வந்து அமர்ந்தாள்...
என்ன செய்யலாம் என இவள் ஓடி கொண்டிருந்த கடிகாரத்தை பார்க்க.... அதுவோ ஆமை வேகத்திற்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது...
ஃபோனில் நாட்டிஃபிக்கேஷன் சௌண் கேட்டு அதை எடுத்து பார்த்தாள்... தமிழ் வாய்ஸ் ஓவர் சனலில் அன்றைய பட ரிவ்யூவை " ஆஜுன் யாரோ " அப்டேட் செய்திருக்க... குதூகலத்துடன் ஹெட் ஃபோன்ஸை எடுத்து கொண்டு அமர்ந்து கதை கேட்க தொடங்கினாள்...
அவள் செய்வதெயெல்லாம் கவனித்து கொண்டிருந்த அவன்... அவள் கேட்டு முடித்ததும் விரலால் சொடக்கிட்டான்... ஆதிராவின் டபில் நாட்டிஃபிக்கேஷன் சௌண் கேட்டது...
ஆதிரா : நாம சைலன்ட்ல தான போட்டோம்... என முனுமுனுத்தவாறு அதை எடுத்தவள் காலையிலிருந்து தான் கதை படிக்காததை அப்போதே நினைவு கொனர்ந்து கதைகளிள் மூழ்கி விட்டாள்...
நம் ஆதிரா ஒரு கதை பிரியை... பெரும்பாலும் அவள் வகுப்பு புத்தகத்தை வாசிப்பதை விட கதை புத்தகத்தை வாசிப்பது அதிகம்... அதனாலோ என்னவோ அவளுக்கு பக்குவ குணம் அதிகரித்தது... அவள் கதையில் மூழ்கியதை உறுதி செய்து கொண்ட அவளின் இடியட்... அங்கிருந்து மறைந்து அவனின் எதிர்காலத்திற்கு பயணித்தான்...
ஆதிரா சட்டென காள் கட்டானதை உணர்ந்து தன் கடந்த கால நினைவிலிருந்து விடு பட்டு நிகழ்காலத்திற்கு வந்து ஃபோனை திரும்பி திரும்பி பார்த்தாள்... பின் " ஐல் கால் யு பக் " என அவனிடமிருந்து மேஸேஜ் வரவும்... சலித்தவாறு அதை அணைத்து விட்டு தலையணையின் கீழே வைத்து விட்டு எழுந்து சென்றாள்....
அந்த ஆள் ஆரவமற்ற அறையில் ஆறடி உயரத்தில் நின்ற ஆதிராவிற்கு நிச்சயிக்க பட்டவன்.... ஒரு வெள்ளை கைகுட்டையில்.... " இடியட் " என கலர் ஸ்கெச்சினால் கிருக்கப்பட்டிருந்ததை வருடியவாறிருக்க.... அவன் முன் தோன்றினான் நம் நீல மனிதன்...
தீரா : இவன் எங்க இங்க...
நீல மனிதன் : உக்காரு...
அவன் : நீ... நீ தான ஆதிரா லவ் பன்றவன்...
நீல மனிதன் : ம்ம் ஆமா.... நான் தான்... அவளோட இடியட்...
அவன் : நீ எப்டி இங்க வந்த... நீ ஏதோ எதிர்காலத்துக்கு மறஞ்சதா தான அவ சொன்னா... இங்க எப்டி வந்த...
நீல மனிதன் : உனக்கு புரியிர மாரி சொல்லனும்னா... அந்த நிமிஷம்... ஆதிராவ விட்டுட்டு நா உன்ன இந்த காலக்கட்டத்துல பாக்க தான் வந்தேன்...
அவன் : வாட் யு மீன்...
நீல மனிதன் : கால மாற்றங்கள விவரிக்கிரது ரொம்ப கஷ்டம்.. இப்போ நா உன் கூட நின்னு பேசுர நேரத்துல எதிர்காலத்துல நீ எங்கையாவது ஆதிரா கூட பேசிக்கிட்டு இருக்கலாம்... கடந்த காலத்துல நா ஆதிரா கூட பேசி கிட்டு இருக்கலாம்... மூனு விதமான வாழ்க்கை இது... நா எப்போ வேணா எங்க வேணா வருவேன்... உனக்கு புரியிர மாரி சொல்லனும்னா... இத பாரு... என ஏதோ நீல நிற திரையை காட்டினான்...
அதில் ஒரு பக்கம் பருவ கால ஆதிரா சிரித்து கொண்டு கதை படித்து கொண்டிருந்தாள்... இன்னோறு பக்கம் நிகழ் கால ஆதிரா சோகமாய் மாடியில் நின்று வாணத்தை பார்த்து கொண்டிருந்தாள்.... மூன்றாவது பக்கம் எதிர்கால ஆதிரா யாரோ ஒருவரின் அணைப்பில் கண்களை மூடி நிம்மதியாய் உறங்கி கொண்டிருந்தாள்....
அவன் : இது என்ன எனக்கு ஒன்னுமே புரியல... என இவன் அதிர்ச்சியாக.... அந்த திரையை நீல மனிதன் மாற்றி காண்பிக்க.... இப்போது அந்த திரையில் கடந்த கால அவன் ஏதோ வகுப்பு புத்தகம் படித்து கொண்டிருந்தான்... நிகழ்கால அவன் நீலமனிதனுடன் நின்று கொண்டிருந்தான்.... எதிர்கால அவன் ஆதிராவின் புகைப்படத்தை பார்த்து கொண்டிருந்தான்....
நீல மனிதன் : இது உன் காலம்...
அவன் : சரி நீ ஏன் டா இங்க வந்த... அத தான கேக்குறேன்...
நீல மனிதன் : ம்ம் இப்போ புரியாது... ஏழு வர்ஷத்துக்கு முன்னாடி தா உன்ன வந்து பாத்தேனே... மறந்துருச்சா... எதையோ நெற்றி சுருங்க யோசித்த அவன்... நினைவு பெற்று...
அவன் : ம்ம் அது... நா படிச்சிட்டு இருக்கும் போது... ப்லூ கலர் ரேஸ்.. என இவன் ஒவ்வொன்றாய் கூற....
நீல மனிதன் : ம்ம் புரியிதா... நா ஆதிராட்ட சொல்லாம முதல்ல போய் பாத்தது உன்னோட கடந்த காலத்த... இரண்டாவது மறஞ்சது உன்னோட இந்த நிகழ்காலமான அன்றைய எதிர்காலத்த....
அவன் : ஆனா நீ ஏன் என்ன பாக்க வந்த...
நீல மனிதன் : ம்ம் நீ தான் ஆதிராவோட எதிர்காலம்... உன்னால தான் நா ஆதிராவ பாதுகாக்கவும் கூட இருக்கவும் வந்துர்க்கேன்... நீ இன்னும் மூணு வர்ஷத்துல என்ன பத்து வர்ஷம் பின்னாடி அனுப்ப போற....
அவன் :வாட்... நானா..
நீல மனிதன் : உன்னோட காதலால தான் நா அவள பாதுகாக்க கடந்து காலத்துக்கு போனேன்....
அவன் : என் காதலா.... பட் ஷி ஈஸ் ட்ரூலி லவ்விங் யு..
நீல மனிதன் : வேற வழியே கிடையாது... நீ என்ன அனுப்புனதால ஆதிராவோட வாழ்க்கைல ஒரு சின்ன மாற்றம் நடக்கும்... அது தான் அவளோட இந்த காதல்.... அத நா மாத்தனும்ங்குரதுனால தான் அவள விட்டு பாதியிலையே போய்ட்டேன்... அவ உன் கூட தான் சேரனும்ங்குரது விதி... சோ இந்த கல்யாணத்த அவ சொல்றான்னு நிறுத்த முயற்சிக்காத...
அவன் : ஹே விளையாடுரியா... இதனால அவளுக்கு ஆபத்து வராதா...
நீல மனிதன் : எந்த ஆபத்து வந்தாலும் நா காப்பாத்துவேன்... நீ எதிர்காலத்த மாத்தீடாத... ஒரு விஷயத்த மாத்துனதால ஆதிரா கஷ்டமில்லா இவ்வளவு வர்ஷம் வாழ்ந்தா... இப்போ நீ அவள கல்யாணம் பன்னிக்காம நிக்காஹ்வ நிறுத்துனா மொத்த எதிர்காலமுமே மாறிடும்... ஆதிராக்கும் சரி... உனக்கும் சரி...
அவன் : எனக்கு ஒன்னுமே புரியல... அவ உன்ன காதலிக்கிரா... ஆனா நீ நா அவள காதலிப்பேன்னு சொல்ற...
நீல மனிதன் : உனக்கு தானாவே புரியும்... நீ புரிஞ்சிக்கிர காலம் நெருங்கீடுச்சு... நா வரேன்... என்ன அவ இப்போ கடந்த காலத்துல தேடிகிட்டு இருக்கா... என கூறியவன் சட்டென அங்கிருந்து மறைந்தான்....
தான் கண்டது கனவோ என்றெல்லாம் யோசித்த அவன்... அங்கு ஒரு கைகுட்டை கிடப்பதை கண்டு கீழே குனிந்தெடுத்தான்... அதில் " மிஸ் யு இடியட் " என கலர் ஸ்கெட்ச்சால் எழுத பட்டிருந்தது...
முன் இவன் வைத்திருந்த கை குட்டையிலிருந்த கையெழுத்தும் இந்த கைகுட்டையிலிருந்த கையெழுத்தும் ஒத்துபோவதை உணர்ந்தவனுக்கு ஏழு வருடம் முன் தன் முன் தோன்றிய நீல மனிதன் இன்றை போலவே அந்த கைகுட்டையை தன்னிடம் விட்டு போயிருக்கிறான் என புரிந்து கொண்டான்....
இரண்டையும் பத்திரமாய் ஓரிடத்தில் எடுத்து வைத்தவனுக்கு மனம் வெறுமையாய் இருந்தது... அதே நேரம் நிகழ் கால ஆதிரா தன்னையுமறியாது உறக்கத்தின் பிடியில் ஆழ்ந்திருந்தாள்....
.....................................
இந்த யூடி கொழப்ப தான் செய்யும்... கொஞ்சம் கவனமா படிச்சு பாருங்க... புரியும்... அப்பையும் புரியலன்னா தயங்காம என் கிட்ட கேக்கலாம்... நா எக்ஸ்ப்லைன் பன்றேன்....
இருந்தாலும் இப்ப ஒரு முறை நா சொல்றேன்....
நம்ம நீல மனிதன அனுப்ச்சது ஆதிராவோட உட்பி தான்... எதிர்காலத்துல தான் அனுப்ப போறான்.... நாம எதிர்காலத்துல என்ன பன்ன போறோம்னு இப்போ நமக்கு தெரியாது... கல்யாணத்த அவ பேச்சு கேட்டு இவன் நிறுத்தீட்டா அவங்க எதிர்காலமே மாறிடும்... அதனால தைன் இப்டி வந்து சொல்லீட்டு போறான்....
அடுத்தது... மூணு விதமான வாழ்க்கைய நாம வாழ்ரோம்... கடந்த காலம்... நிகழ்காலம்... எதிர்காலம்....
ஒரு எடுத்துகாட்டு சொல்லனும்னா... கடந்த காலத்துல நீங்க எதாவது ஒரு கதை புக் படிச்சிட்டு இருந்துர்க்கலாம்... நிகழ் காலத்துல இப்போ நீங்க இந்த கதைய படிச்சிட்டு இருக்கலாம்... அதே நேரம் எதிர்காலத்துல நீங்களே ஒரு கதைய எழுதிகிட்டு இருக்கலாம்... எல்லாமே நடந்துகுட்டு தா இருக்கும்... அதனால தான் டைம் ட்ரவல் பன்னாலும் அந்த நிமிஷத்துக்கு நம்மளால போக முடியிது... அந்த நிமிஷம் நடக்கவும் செய்யிது...
இதுவே நாம கடந்து காலத்த போய் எதையாவது மாத்தீட்டோம்னு வைங்களேன்... எதிர்காலத்துல அது அப்டியே இருக்காது... மாறிடும்...
ஒரு எடுத்துகாட்டு சொல்லனும்னா... இப்போ நா என்னோட பத்து வயசுக்கு டைம் ட்ரவல் பன்னி போய்... நா ஒரு சாவி ஒரு சாவு கதைய என் சிஸ்டர்ஸ் கூட யோசிக்கும் போது எதாவது மாத்தி விற்றுந்தேன்னு வைங்க... அது எல்லா இடத்துலையும் மாற ஆரம்பிக்கும்... நா யோசிக்காம போய்ட்டன்னா... நா என்னோட நிகழ் காலத்துல வட்டில ரைட்டரா இருக்க மாட்டேன்.... எதிர் காலத்துல வேற கதையே யோசிச்சிர்க்க மாட்டேன்....
அதனால தான் காலபயணம் படங்கல்லையும் எதையும் மாத்த கூடாதுன்னு சொல்லுவாங்க... புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்... இல்லனா கேளுங்க... டாட்டா...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro