கதை - 5
தன்னை கண்கள் சிமிட்டி சிமிட்டி பார்த்தவளின் குழந்தை தனத்தை எண்ணி சிரித்து கொண்டவன் அவள் நினைப்பிற்கும் பதில் கூறினான்....
அவன் : உன்னோட ஃபேவரைட் கார்ட்டூன்க்கும் எனக்கும் கனெக்ஷன் கிடையாது... நோபீட்டாவ படிக்க வக்கிரதுக்காகவும் கூடவே இருக்குரதுக்காகவும் தான் டோரீமான் வரும்... பட் நா உன்ன படிக்க வைக்கிறதுக்காக வரல... நீ உன் இஷ்டப்படி வாழவும்... சந்தோஷமா இருக்கவும் கூடவே இருக்குரதுக்காகவும் தான் நா வந்துர்க்கேன்... என விளக்கம் கொடுக்க...
ஆதிரா : ஆனா... ஏன்... ஒருவேளை நோபீட்டாவோட பேரன் டோரீமான அனுப்புன மாரி என் பேரன் உன்ன அனுப்பீர்க்கானா... என கேள்வியாய் கேட்க...
அவன் : பத்து வர்ஷத்துல உனக்கு அம்பது அருவது வயசாகீடாது... நா பத்து வர்ஷத்துக்கு முன்னாடில இருந்து தான் வந்துர்க்கேன்...
ஆதிரா : ஆனா எனக்காக நீ ஏன் வரனும்...
அவன் : ம்ம் எதிர்காலத்துல உன்ன பத்தியே நெனச்சு உனக்காகவே வாழ போற ஒரு உறவு... உன் கடந்த கால வாழ்க்கைல தன் துணை இல்லையேன்னு வருத்த பட்டு என்ன உருவாக்கி அனுப்புச்சிருக்கு.... அதான் நா வந்துர்க்கேன்...
ஆதிரா : உருவாக்கி அனுப்ச்சாங்களா... நீ ரோபோட்டா...
அவன் : நா ஒரு மனுஷன் தான்... எதிர்காலத்துல இணைய வசதிகள் ரொம்ப வளந்துருக்கும்... மனுஷங்கள வேற மனுஷங்களாள உருவாக்குவாங்க... அந்த காலமும் நெருங்கீடுச்சு...
ஆதிரா : அதெல்லாம் சரி... நீ எப்டி ப்லூ கலர்ல இருக்க... உனக்கு மஜிக் தெரியுமா...
அவன் : இது மேஜிக் இல்ல.... என் பவர்ஸ்... உனக்காக தான் உருவாக்குனேன்... என்னால மறைய முடியும்... எந்த நேரத்துலையும் எந்த இடத்துல வேணாலும் தோன்ற முடியும்.
ஆதிரா : மேஜிக்கும் பவர்ஸும் ஒன்னு தானே....
அவன் : ம்ஹும்... மேஜிக் வேற பவர்ஸ் வேற... என்னால இத பன்ன முடியும்ங்குரது என்னோட சக்தி... மந்திரம் எத வேணாலும் செய்ய வக்கிறது....
ஆதிரா : நீ என்ன எங்கையாவது கடத்தீட்டு போய்ட்டன்னா...
அவன் : உன்ன இரெண்டு நிமிஷம் நா தூக்குரதே பெரிய விஷயம்... இதுல கடத்தீட்டு போனேன்னா எலும்பு முறிஞ்சு விழ வேண்டியது தான்... என சீரியசாய் கூற...
ஆதிரா : ரோபோட்டு நீயெல்லாம் என்ன கலாய்க்கிர... அது ஜீன் எரும... என அவன் தோளிலே அடித்தாள்...
அவன் : சரி சரி அடிக்காத....
ஆதிரா : எனக்கு புடிச்ச எல்லாமே நீ செய்வியா...
அவன் : நிச்சயமா...
ஆதிரா : அப்போ அந்த வீட்ல இருக்க ரெட் பூவ இங்கிருந்தே பறிச்சிட்டு வா பாப்போம்... என அவள் நின்ற இடத்தினருகிலே இருந்த ஜன்னல் வழியே ஒரு பத்தடி தூரத்தில் எதிரில் இருந்த வீட்டின் வெளியே இருந்த பூ செடியை காட்டி கூற.... அதை பார்த்தவன்....
அவன் : உனக்கே இது சின்ன புள்ள தனமா இல்ல...
ஆதிரா : நா சின்ன புள்ள தான் டா.. பருவமாய்ட்டா உடனே கல்யாணம் பன்ற வயசாகீடுமா எனக்கு....
அவன் : கல்யாணம் பன்ற வயசுலையும் நீ சின்ன பிள்ளன்னு தா சொல்லுவ.... என முனகி கொண்டே அப்பூச்செடியை இவன் நோக்க... ஏதோ நினைத்த ஆதிரா...
ஆதிரா : இல்ல வேண்டாம்... என கூற... அதற்குள்ளே அவள் முன் இருந்த டீபாயில் இருந்தது ஒரு பூ.. அதை கண்டு உதட்டை சுழித்தவள்...
ஆதிரா : நா தெரியாம கேட்டுட்டேன்... இது பாவம்... செடிலையே இருந்தா அழகா மலர்ந்து தானாவே நிலமடி சேரும்... ஆனா என்ட்ட இருந்தா காஞ்சு வதங்கி போய் குப்பைய தான் சேரும்... என சோகமாய் பார்த்து கொண்டே கூற...
அவன் : ம்ம் இப்டி புலம்புவனு தெரிஞ்சு தான் சும்மா த்ரீடி இல்யூஷன் க்ரியேட் பன்னிர்க்கேன்.. என கூறி அவன் விரலை சொடுக்க... அவள் முன்னிருந்த பூ காணாமல் போனது...
ஆதிரா : என்ன டா மந்திரம்லாம் பன்ற...
அவன் : இது டெக்னாலஜி மா...
ஆதிரா : சரி உனக்கு பேரெல்லாம் இல்லையா...
அவன் : இல்ல...
ஆதிரா : அட போயா... பேரில்லாத மனுஷனாம்... ஏதோ ஒன்னு எனக்கு பசிக்கிது டா... காலைலேந்து உன்னால பச்ச தண்ணி கூட குடிக்கில... நகரு டா இடியட்... என அவனை நகர்த்தி விட்டு சமையலறைக்குள் சென்றாள்....
அங்கோ அவள் தாய் சமைத்து வைத்து விட்டு சென்றிருக்க... அதை தனக்கு தேவையான அளவை விட அதிகமாகவே வைத்து கொண்டு வந்தவள்... கூடத்தில் வந்த அமர்ந்து தொலைகாட்சியை உயிர் பித்தாள்...
அவ்விடத்தில் எங்கும் அவனில்லாது போக... சுற்றி சுழன்ற கண்களை இப்போது உணவில் பதித்தவள்... ஹ்க்குக்கும் என செருமி கொண்டே உண்ண தொடங்க... இரண்டு வாய் உணவை விழுங்கி கொண்டிருந்த ஆதிரா சட்டென தன் அருகில் கேட்ட பல்லியின் சத்தத்தில் தட்டையை அப்படியே வைத்து விட்டு சோபாவிலிருந்து குதித்து எழுந்தாள்...
அவள் நேரம் சோபாவின் முன் அவள் இழுத்து போட்ட சேரில் அவள் காலிடுத்து வலியில் இவள் அலர... அச்சத்தத்தில் பல்லி இவள் பக்கம் ஓடி வர... அதை கண்டு பீதியானவள் தடுமாறி போய் பிடித்திருந்த சேரையும் விட்டு கீழே விழ போக.... " அல்லாஹ்வே " என கத்தி கொண்டே விழுந்தவளை சட்டென தாங்கி பிடித்தான் அவன்... இவள் உடனே கண்களை திறந்து பார்க்க... அவளுக்கு வெகு அருகில் பல்லியை முறைத்து கொண்டு அவளை ஒரு கையால் தாங்கியவாறு நின்றான் அவன்....
அவன் : எழுந்திரு போய்டுச்சு...
ஆதிரா : அது என்ன நா பயந்து போகும் போதோ இல்ல எனக்கு அடி படப்போகும் போதோ நீ வந்து காப்பாத்துர...
அவன் : அதான் சொன்னனே.... நா உனக்கு ஒரு துணைவன்... உன் கூடவே இருந்து உன் தனிமைய போக்கி.. உன் சந்தோஷத்த அடைய உதவி உன்ன பாதுகாக்குறதுக்கு நா வந்துர்க்கேன்...
ஆதிரா : தனிமைய போக்குறேன்னு ஏன் மறஞ்சு போன...
அவன் : அதான் சோறு துணையா இருக்குல்ல... அப்ரம் நா வேற எதுக்கு...
ஆதிரா : வாழ்க்க முழுக்கவும் தா எனக்கு சோறு துணையா இருக்கு... அப்போ நீ எதுக்கு... என இவள் எதிர்கேள்வி கேட்க
அவன் : நா இங்க இருக்கனும்.. அவ்வளவு தான... உக்காரு... என அவளுக்கு எதிர்திசையிலிருந்த சோபாவை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான்...
தோளை குலுக்கி கொண்டு மீண்டும் உணவில் மூழ்கியவள் அவன் காண வேறெதுவும் கிடைக்காததை போல் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் பார்த்தவாறு...
ஆதிரா : உ.. உனக்கு பசி..பசிக்கிதா... எனை தயக்கமாய் கேட்க...
அவன் : ஏன்....
ஆதிரா : இல்ல என்னையே பாத்துட்டு இருந்தியா அதான் கேட்டேன்... நா வேணா ஊட்டி விடவா... என அவளின் தட்டையை காட்டி கேட்க...
அவன் : ம்ஹும் வேண்டாம்...
ஆதிரா : பயப்புடாத நா எதையுமே சமைக்கல... எல்லாமே என் அம்மா சமச்சது... என அவள் கூறிய் விதத்தில் சிரித்தவன்...
அவன் : இவ்வ வேண்டாம்... நீ சாப்டு...
ஆதிரா : அப்ரம் எனக்கு தா வயிறு வலிக்கும்.... வா இங்க... என அவளே இழுத்து வைத்து ஊட்டி விட்டாள்... ஆதிராவிற்கே இது புதிய செயல் தான்... ஆனால் அதை எல்லாம் அவள் கண்டுகொள்ள விரும்பவில்லை...
அவள் பதினான்கு வயது குழந்தையாக இருக்கலாம்... ஆனால் ஒரு அந்நிய ஆணிடம் கண்ணி பெண் ஊட்டி விடும் அளவு பக்குமில்லாதவள் அல்ல.... ஆணை கண்டால் தூர ஒதுங்குபவள்... அவனை காட்டிலும் சாதாரணமாய் இருப்பது அவளை பற்றி புக்கு புக்காய் படித்து தெரிந்து அறிந்து வந்த அவனையே ஆச்சர்யத்திற்குள் உள்ளாகியது... தனக்கு ஊட்டி விட்டு அவளும் அடுத்த வாய் உண்பதை கண்டவன்...
அவன் : நீ இந்த மாரி கெடையாதே... நா யாருன்னே உனக்கு தெரியாது... எப்டி நீ என்ன நம்பி இப்டி தன்னந்தனியா இருக்க வீட்ல பயப்புடாமே சாதாரணமா இருக்க... இதுல எனக்கு ஊட்டி வேற விடுர... ஃபர்ஸ்ட்டு இருந்த பயம் இப்போ இல்ல... தயக்கம் இல்ல.... அந்நியன்ங்குர ஃபீலே இல்ல போலருக்கே உனக்கு...
ஆதிரா : ம்ம் எனக்கும் தெரியல... ஃபர்ஜ்ட்டு யாரோ கூட இருக்காங்கன்னு பயம்... நீன்னு தெரிஞ்சதும்... யாருன்னே தெரியலையேன்னு தயக்கம்... தெரிஞ்சாலும் நா அவ்ளோ சீக்கிரம் பேச மாட்டேன்... அது வேற விஷயம்... ஆனா உன்ட்ட நார்மலா இருக்கேன் ஏன்னு தெரியல... எப்டி நம்புறன்னா... இந்த ஒரு நாள் முழுக்க நா இங்க தனியா தா இருக்கேன்... நகை திருட வந்துர்ந்தா அந்த திருடன தெருவுல போடும் போதே என்னையும் எங்கையாவது தூக்கி போட்டுட்டு இருக்குரத எடுத்துட்டு நீ போய்ர்க்கலாம்.... ஆனா நீ பன்னலையே.... என்ன எதாவது செய்யனும்னு நெனைச்சிருந்தா அந்த திருடன்ட்ட இருந்து என்ன நீ காப்பாத்தீர்க்க மாட்ட... இந்த சின்ன பல்லிய பாத்து நீ முறைச்சிர்க்க மாட்ட... ஹ்ம்... இதெல்லாம் உன் கிட்ட என்ன தயக்கமில்லாம பழக வைக்கிது... மத்த காரணங்களை நான் அறியேன்... என அடுத்த வாயை ஊட்டி அவளும் உண்டாள்...
அவன் : ம்ம் எனக்கு போதும் நீ சாப்டு... என அங்கிருந்து எழுந்து எங்கோ செல்ல... நம் ஆதிரா லோகல் சேனலில் ஓடிய ஷின்ஷனின் அட்டகாசங்களில் மூழ்கினாள்....
........................
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro