Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கதை - 15

நிகழ் காலம்

அரை மணி நேரத்திற்குள்ளாகவே மேடையில் அவனோடு ஆதிரா அமர வைக்கப்பட்டாள்... தம்பதி சமோதரமாய் அமர்ந்திருப்பது மற்றவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் மணமக்களுக்கு தான் துடிக்கும் இதயத்தின் அளவு தெரிந்திருந்தது...

அனைவரும் அவர்களுடன் நின்று புகைபடமெடுத்து கொண்டதும் இயல்பின் படியே இருவரையும் ஒரு அறைக்குள் விட்டு விட்டு மற்றவர்கள் வெளியே வந்தனர்...

தொண்டையை செருமியபடி என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்த நம் நாயகன் கை பிடித்து உள்ளே அழைத்து வந்த ஆதிராவோ அவனுக்கு மேலான படபடப்பில் அமர்ந்திருக்க ஒரு சீரான மூச்சை இழுத்து விட்டு அவளருகில் அமர்ந்தான்...

இருவரும் ஒருவருக்கொருவர் சலாம் கூறி கொண்டதும் தன் தயக்கத்தை தூக்கி எறிந்து விட்டு ஆதிராவின் கரத்தை பிடித்தவன் " ஆதிரா " என மென்மையாய் அழைக்க அவள் மெதுவாய் தலையை மட்டும் நிமிர்த்தினாள்...

" நமக்கு... கல்யாணம் ஆய்டுச்சு... எனக்கு புரியிது இதுக்கு நீ தயாரா இருந்துர்க்க மாட்ட... ஆனா கவலப்படாத நா எப்பவும் உன் கூட இருப்பேன்... உன்ன புரிஞ்சிக்க என்னாலான எல்லா முயற்சியும் எடுப்பேன்... என் கூட உனக்கான கல்யாணம் ஒரு தப்போங்குர எண்ணம் உனக்கு வராத அளவுக்கு நான் நடந்துப்பேன்மா... " என அமைதியாய் கூறி எதிர்பார்ப்புடன் அவளை நோக்கிக் கொண்டிருக்க " இந்தளவுக்கு என்ன... புரிஞ்சிக்கிட்டதே எனக்கு சந்தோஷமா இருக்கு... என்னால முடிஞ்சளவு நா என்ன மாத்திக்கிறேன்.. " என ஆதிரா காற்றிற்கும் கேட்காத மெல்லிய குரலில் கூறினாள்...

அவன் : அதுக்கு அவசியமில்ல ஆதிரா... நீ நீயா இருந்தாலே போதும் என கூறியவனின் கரம் அவளின் கரத்திலிருந்து அவளின் முகத்தை மூடியிருந்த முக்காடிற்கு சென்றது..

அவனின் செயல் புரிந்து இதற்கு மேல் அவன் அந்நியனில்லையே என்ற எண்ணத்துடன் அவனை பார்க்க தயாராக அந்த முக்காடை மெதுவாய் ஒதுக்கிய நாயகன் தரையை நோக்கிக் கொண்டிருந்த ஆதிராவின் கருவண்டு கண்ளிலே தன்னை மொத்தமாய் இழந்திருந்தான்...

கண்ணுக்கிட்ட மை அவளின் அழகை மெருகூட்டத் தான் போலும்... அவள் மெதுவாய் நிமிர்ந்து அவனின் கண்களை நோக்கிய அதே நேரம் இருவருக்கும் மனம் முழுவதும் ஒரு பரவசம் பரவியது....

ஐந்தே நிமிடத்தில் அவர்கள் இருவரையும் அந்த அறையை விட்டு வெளியே அழைத்து வந்த பெரியவர்கள் உணவுண்ண தனித்தனியே அனுப்பி வைத்தனர்...

தன் தோழிகள் திருட்டு முளி முளித்த படியே புகைபடமெடுக்க தம்பதிகளோடு நிற்பதை இறுதி வரை ஆதிரா கவனிக்கவில்லை... ஆனால் அவளே அறியாமல் " நீங்க செஞ்சது ஒரு வகைல நல்லது தான்... அதனால தான் ஆதிரா எனக்கோ கெடச்சிருக்கா... கவலப்படாதீங்க அவள நா பத்திரமா பாத்துப்பேன் " என நம் நாயகன் அன்பாய் கூறி விட்டு தள்ளி நிற்க அவர்களை கண்டு புன்னகைத்த ஆதிராவையும் கண்ட பின்பே ஒரு நிம்மதியுடன் தோழிகள் ஐவருமாய் வளைத்து வளைத்து புகைபடமெடுத்து கொண்டனர்...

திருமணம் இனிதே நிறைவுபெற்று மன்னவனுடன் புகுந்த மணைக்கு மனம் நிறைய அனுப்பப்ட்ட ஆதிராவின் கரத்தை இறுக்கி பிடித்து கொண்டு அவர்களின் மகிழுந்தில் ஏறினான் நம் நாயகன்...

அடுத்த ஒரு வாரத்திலே சொன்னது போல் அவன் ஆதிராவுடன் வெளிநாட்டிற்கு தங்களின் வாழ்கையை நோக்கி பறந்திருந்தான்...

எதிர்காலம்

நேட்டிலியின் முகம் தோன்றத் தொடங்கிய புகைபடம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதை கண்டு பெருமூச்சு விட்டான் நம் நாயகன்... அந்த புகைபடத்தை அருகிலிருந்த ஸ்டண்டில் வைத்தவன் குனிந்து அவனை கட்டியணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்த ஆதிராவின் நெற்றியில் முத்தமிட அவள் சினுங்கி திரும்பி படுத்து கொண்டதும் புன்னகை மாறாமல் அங்கிருந்து எழுந்து வெளியே சென்றான்...

குளிருக்கு இதமாய் ஒரு மஃக்கில் குலம்பியுடன் பொருமையாய் படிகட்டை விட்டு இறங்கி " சைன்ஸ் லப் " என்ற பெயர் கொண்ட அறைக்குள் நுழைந்தான்...

நீல நிறத்தில் அந்த அறையே கடல் போல் காட்சியளிக்க அவனுக்கு முன்... கண்கள் மூடிய நிலையில் ஒரு கதிரையில் அமர வைக்கப்பட்டிருந்தான் நம் நீல மனிதன்...

" சரியான நேரத்துக்கு நீ எனக்கு புரிய வைக்கலன்னா இவ்வளவும் நடந்துருக்காதுல்ல... நல்லா வச்சு விளையாடீர்க்கேன் டா நான்... கடைசில நீயாவது தெளிவா சொன்னியே " என சிரித்தபடியே அவன் முன் அமர்ந்து மெதுவாய் அவனது குலம்பியை ருசித்தான்...

இரண்டு நொடி போயிருக்கும்... நீல மனிதனின் உடலில் இருந்து " டீன் டீன் " என ஒரு சத்தம் கேட்க எழுந்து அவனின் கழுத்திலிருந்த ஒரு சொடுக்கியை அழுத்தி விட்டு இவன் மீண்டு வந்து அமரவும் " டேய்... எவ்ளோ நேரமாடா என்ன ஷட் டௌன் பண்ணி வச்சிர்க்க?? " என கத்தி கொண்டே கண்களை திறந்தான் நீல மனிதன்...

அவன் : கண்ண திறந்தும் திறக்காததுமா கத்தாத டா... என் பொண்டாட்டி தூங்கீட்டு இருக்கா...

நீல மனிதன் : ஹான் சரி சரி என்ன ஆச்சு... என்ன வர்ஷம் இது... ப்லன்படி தானே நடந்துச்சு...

அவன் : அதே தான் டா... ஆதி தூங்கீட்டு இருக்கா...

நீல மனிதன் : நான் போகும் போதும் தூங்கீட்டு தானே இருந்தா...

அவன் : நீ போய் ஒரு மணி நேரம் தானே ஆகுது... இந்நேரத்துக்கு நிகழ்காலத்துல நானும் ஆதியும் எங்க வீட்ல இருப்போம் டா...

நீல மனிதன் : ஹான் சரி தான்... எல்லாம் நார்மலைய்டுச்சு தானே அப்போ...

அவன் : ஹான் ஹான் எல்லாம் ஆல்ரைட்... இப்போ நேரமாச்சு... கடந்த கால ஆதிராவ பாக்க கெளம்பு... எல்லாம் சரியா ப்லன் படியே தான் நடந்துச்சு...  என அவன் புன்னகை மாறாமல் கூறவும்

நீல மனிதன் : டேய் அதுக்குள்ளையா பத்து வர்ஷமாய்டுச்சு... என்ன திருப்பி திருப்பி சுத்த விடுறதுக்கு அன்னைக்கு உன்னையே சாக விற்றுக்கனும் டா நானு...

அவன் : டேய் அன்னைக்கு நீ சாகாம நா மாறி வந்து செத்துர்ந்தா என்னோட ஃப்யூச்சரே அழிஞ்சு போய் ஆதிராக்கு வேற யார் கூடையாவது கல்யாணம் ஆய்ர்க்கும்... நான் ஒரிஜினல் மகனே.. ஒரிஜினல் மாறி எத்தன காப்பி வேணா ரெடி பண்ணலாம்... ஆனா நா செத்துட்டா என்ன கொண்டு வந்துர்க்க முடியாது...

நீல மனிதன் : ஆமா ஆமா எனக்கு தெரியாதாக்கும்... அதனால தான கடைசி நேரத்துல நேட்டிலிய பாக்குறதுக்கு முன்னாடி உன்ன இங்கையும் என்ன அங்கையும் டெலிபோர்ட் பண்ணேன் என வாகாய் அமர்ந்தபடி கூற நம் நாயகனின் மனதிலே இதே நீல மனிதன் தன் மடியில் தனது இறுதி நொடிகளை எண்ணி கொண்டிருந்த தருணம் வந்து போனது...

அவனிடம் ஆதிராவை இறுதியாய் பார்க்க வேண்டுமென கூறி கொண்டிருந்தவன் பின் ஏதோ முக்கியமான நினைவு வந்தவனாக கன்னாடியற்ற தன் முகத்தை கண்கள் விரிய பார்த்து கொண்டிருந்தவனை நக்கலாய் பார்த்தபடி " டேய் இப்போவே பயந்து செத்துராத... என் முயற்சியெல்லாம் வீணா போய்டும்... நான் வெறும் க்லோனு தான்... ஒரிஜ்னல் இல்ல " என கூறி கொண்டே தான் உயிர் நீத்தான்...

அவன் : உண்மை தான்.. அன்னைக்கு நான் எதிர்காலத்த யோசிக்காம என் நிகழ்காலத்த காப்பாத்த ட்ரை பண்ணீர்ப்பேன்... நல்லவேளை நீ வந்த...

நீல மனிதன் : அதுக்கு தான் இந்த மாரி ட்ரை ஆர் ஃடை சிச்சுவேஷன்ல மனுஷன அனுப்பாம என்ன மாரி க்லோன அனுப்பனும்ங்குரது... எங்க கேட்ட நீ...

அவன் : சரி சரி விடு டா அதான் முடிஞ்சிடுச்சே...

நீல மனிதன் : சரி தான் இப்போவாவது தியாகவல்லலா இல்லாம உன் பொண்டாட்டிய போய் பாரு டா போ... என இவன் கூறிக் கொண்டிருக்கையிலே " என்னங்க.. எங்க இருக்கீங்க?? " என உறக்கம் கலையாமல் மாடியிலிருந்து கேட்டது ஆதிராவின் குரல்...

அவன் : லப்ல இருக்கேன் மா என இவன் குரல் கொடுத்ததும் " என் குட்டி ஆதிரா கூட என்ன கூப்புட்ரா... இதுக்கு மேல ஒரிஜ்னல் நீ இங்கையும் போக மாட்ட... சோ நானே போறேன்... வரேன் டா டேய் " என சிரிப்புடன் கூறி விட்டு நேர வளையத்தைத் தொடர சென்றான் நகல் நீல மனிதன்...

மனநிறைவுடன் தன் சுழலும் கதிரையில் திரும்பியவன் திறந்த அறை கதவை கண்டதும் அவனையுமறியாது புன்னகைக்க தனக்கு பெரிதாக இருக்கும் அவனது சட்டையை அணிந்து கொண்டு கலைந்த தலை முடியுடன் கொட்டாவி விட்டபடி முகம் சுருங்க அவர்களின் முன்று மாத உயிரை தன்னுள் தாங்கி கொண்டு மெதுவாய் நடந்து வந்தாள் ஆதிரா...

" என்ட்ட சொல்லாம எங்க போனீங்க..?? எனக்கு திரும்ப மார்னிங் சிக்னெஸ் ஆரம்ச்சிடுச்சு " என பாவமாய் கூறி கொண்டே வந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்... தனிச்சையாக அவனது கரங்கள் அவளின் இடையை பத்திரமாய் அதே நேரம் மென்மையாய் வளைக்க அவன் மீது சாய்ந்து கண்களை மூடி கொண்டவள் பின் ஏதோ நினைவு வந்தவளாய் படக்கென எழுந்து " ஹப்பி வெஃட்டிங் அணிவெர்செரி பை பேபி அண் மம்மி " என உற்சாகமாய் கூறினாள்...

சிறிது நேரம் முன்பு இருந்த சோர்வு கண் காணா இடம் சென்றிருக்க புன்னகைக்கும் தன் மனைவியை கண்டு " ஹப்பி வெஃட்டிங் அணிவெர்செரி " என அவனும் புன்னகையுடன் அவளின் நெற்றியில் முத்தம் பதிக்க " பேபி... டடி உங்களுக்கு கிஸ்ஸி குடுக்களையே... உங்கள மறந்துட்டாரா டடி? " என ஆதிரா தன்னிடமே கேட்டு கொள்ள " பேபிக்கும் சேத்து மம்மிக்கே குடுத்தாச்சு " என அவனும் சிரிக்கவும் அவனின் கழுத்தை அணைத்து கொண்ட ஆதிரா

ஆதிரா : ப்பா... மூணு வர்ஷமாச்சுங்க.. அன்னைக்கு மட்டும் உங்கள நா பாக்கலன்னா எனக்கு உண்மையே தெரிஞ்சிருக்காதில்ல.. ஆமா எங்க மிஸ்டர் க்லோன் ப்லூ மன்...

அவன் : ஹாஹாஹா ஆமாமா... உன் எனெர்ஜிய வேற கதைலையே வேஸ்ட் பண்ணீட்டேன்... ஆனா அந்த கதை தானே எல்லாத்துக்குமே காரணம்... அவன இப்போ தான் என் குட்டி ஆதிய பாக்க அனுப்பீர்க்கேன்...

ஆதிரா : ம்கும் நா மட்டும் கதை ஆரம்பிச்சப்பவே உங்கள பாத்துர்ந்தா ஒரு வாரம் நா அழுதுர்க்கவே மாட்டேன் போங்க... நீங்க தான் இதையெல்லாம் பண்ணீங்கன்னு தெரிஞ்சிருக்கும்

அவன் : ஹான் நீ பாத்துர்ந்தாலும் எனக்கெதுவும் தெரிஞ்சிருக்காதே... இவ்ளோ கற்பனை திறனுள்ள ராணி எனக்கு வேணாம்ப்பான்னு நா பெல்ஜியம்க்கே ஓடீர்ப்பேன் என அவன் நக்கலாய் கூறவும் அவனை விளையாட்டாய் முறைத்தாள் அவள்...

ஆதிரா : ஹ்ம்ம் இந்த ஆதிரா உங்க கிட்ட கதை சொன்னதால தான் இப்போ என் கிட்ட முழுசா சிக்கீட்டீங்க...

அவன் : ஆமா ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி கூட நா சும்மாவே கல்யாணம் வேணாம்னு சொல்லீருப்பேன் டி... ஆனா உன் கதைய கேட்டு தா இன்னும் உன்ன காதலிச்சிட்டேன்... என காதல் நிறம்பிய விழிகளுடன் அவளின் நெற்றி மீது மோத முறைத்து கொண்டே கடிந்து கொண்டவளின் முகம் மாறாக மகிழ்ச்சியுடன் பூரிப்பை பூசியிருக்க தன்னவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் நம் நாயகி...

ஆதிரா : இடியட்....

ஆம் அவளின் இடியட் தான்... அவளுக்கென எதிர்காலத்திலிருந்து கடந்த காலம் பயணித்து வந்தவன்.. அவளுக்காக காலத்தையும் மாற்றியவன்... அவளுக்காகவே அவளை விட்டு நீங்கியிருந்தவன்.. அவளுக்காகவே அவளை அவனின் கடந்த காலத்துடன் எப்பாடு பட்டாவது சேர்த்து வைக்க நினைத்தவன்... அவளுக்காக அதை செய்தும் காட்டியவன்... அவளுக்காக நெஞ்சில் தோட்டாக்களை தாங்க முன் வந்தவன்... அவளுக்காகவே தன் உயிரையும் மாய்க்க துணிந்து இறுதியில் அவளின் கை பிடித்தவன்... அவளின் நீல மனிதன்... அவளின் மனித வர்ஷென் டோரீமான்... அவளின் காதல் கணவன்... இடியட்...

கடந்த காலம்

ஆதிரா : டேய் இடியட் எங்க டா போன இவ்ளோ நேரமா... என பதினைந்து வயதான ஆதிரா அவனை கர்ண கொடூரமாய் முறைக்க அவளுக்கு பல்லை இளித்து காட்டினான் நகல் நீல மனிதன்...

நீல மனிதன் : ஈஈஈஈ சும்மா ஒரு புதைகுழி வர வாக்கிங் போய்ட்டு வரேன் தங்கமே...

ஆதிரா : நீ மட்டும் இந்நேரத்துக்கு வராம இருந்துருந்தா நானே உன்ன புடிச்சு பொதை குழில தள்ளீருப்பேன்... என வெகு தீவிரமாய் கூறியவளை கண்டு இளிக்கத் தான் முடிந்தது அவனால்...

நீல மனிதன் : சரி ஏன் என்ன தேடுன...

ஆதிரா : ஹான் அத சொல்ல மறந்துட்டேன் பாரு... இங்க வா, இங்க வா, இங்க வா இப்டி உக்காரு... இன்னைக்கு ஸ்கூல்ல என்னாச்சு தெரியுமா என வேக வேகமாய் இழுத்து அமர வைத்தவள் " என்னாச்சு " என அவன் கேட்டதுமே " என் செல்லக்குட்டிக்கு ப்ரேக்கப் ஆய்டுச்சு " என ஹஸ்கி வாய்சில் கூறி விட்டு ஆட்டம் போடாத குறையாக ஒரு கத்து கத்தினாள்...

நீல மனிதன் : ஹாஹாஹா நா சொன்னேன்ல... பில்டிங் சைஸ்ல இருக்க பாரைய தாண்டி சீக்கிரமே அந்த புள்ள வந்துடும்னு...

ஆதிரா : ஆமா ஆமா... இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு தெரியுமா... ஐம் சோ ஹப்பி... ஆமா கேக்கனும்னு நெனச்சேன்... எனக்கு கொஞ்ச நாளா நீ கூட இருக்குர ஃபீலே இருக்க மாட்டுது... எனக்கென்னமோ நீ என்ன விட்டு போய்டுவியோன்னு தோனுது... உன் மிஷன்ல அப்டி எதாவது இருக்கா... என்ன விட்டு போ மாட்ட தானே.. என பாவமாய் அவனை பார்க்க அவளின் தலையை மெதுவாய் கலைத்து விட்டு புன்னனைத்தான் அவன்...

நீல மனிதன் : இப்போ நீ குழந்தையாவே இரு டி... உன்ன விட்டு நா எங்கையும் போக மாட்டேன்... நீ வேணா பாரு நா எங்கையாவது போனாலுமே உன் கிட்ட ஒரு நாள் வந்துடுவேன்...

ஆதிரா : பக்கா ப்ராமிஸ்??

நீல மனிதன் : பக்கா ப்ராமிஸ்...

ஆதிரா : பின்கி ப்ராமிஸ்...??

நீல மனிதன் : எத்தன ப்ராமிஸ் டி என அலுத்து கொண்டனிடம் பிடிவாதமாய் தன் குட்டி சுண்டு விரலை நீட்டி " முடியாது முடியாது ப்ராமிஸ் பண்ணு " என அடம்பிடித்தாள் ஆதிரா...

நீல மனிதன் : சரி சரி பின்கி ப்ராமிஸ்... எனக் கூகூறி அவளின் சுண்டு விரலுடன் தனது சுண்டு விரலை கோர்த்து அவன் கூறியதும் தான் அவள் முகத்தில் மீண்டும் புன்னகை அரும்பியது...

ஆதிரா : அவ்ளோ தான்... இனிமே உன்னால இந்த ப்ராமிஸ உடைக்கவே முடியாது... ஹாஹாஹா சரி அத்தா இன்னைக்கு ஐஸ்க்ரீம் வாங்கீட்டு வந்தாங்க வேணுமா... ஹான் இல்ல இல்ல உனக்கு ஐஸ்க்ரீம் இல்ல... யாரையோ என்ட்ட சொல்லாம பாக்க போனல்ல... இன்னைக்கு ஐஸ்க்ரீம் கட்டு...

நீல மனிதன் : ஏய்ய் இதெல்லாம் போங்கு.. எப்டியும் என்னோட ஐஸ்க்ரீம நீ தான் புடுங்கி சாப்ட போற... அதோட நா ரொம்ப முக்கியமான ஒருத்தர தான் பாக்க போனேன்... இப்படி தன்னை பற்றிய உண்மையை பட்டென உடைப்பானென எதிர்பார்க்காமல் முளித்து கொண்டிருந்த ஆதிரா யாரோ முக்கியமானவர் என்பதை அறிந்ததும்

ஆதிரா : அது யாரு... என்ன விட முக்கியமானவங்க... என முறைத்தவளுக்கு வலிக்காமல் கொட்டு வைத்து இந்த கதைக்கான அந்த ஒரே முக்கிய பதிலை வெளிப் பற்றினான்...

நீல மனிதன் : உனக்காக இன்னும் எட்டு வர்ஷத்துல அவரோட க்லோனையே டைம் ட்ரவல் பண்ணி அனுப்பி வைக்கப் போறவரு... உன்னோட வெல் விஷர்...

முற்றும்...

நன்றி!!!

அன்புடன்

தீராதீ

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro