கதை - 11
நிகழ் காலம்
அவன் : கல்யாணமாய்டுச்சா....
நீல மனிதன் : ஆமா... எனக்கு கல்யாணமாய்டுச்சு... இப்போ தான் என் வொய்ஃப் ப்ரெக்னென்ட்டா இருக்கா... என அவன் மூச்சு வாங்கியபடியே கூற இவன் அதே அதிர்ச்சியில் தொப்பென போய் கட்டிலில் அமர்ந்தான்...
நீல மனிதன் : தோ பாருடா... நீ ஹீரோங்குரதால அவ சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் அது வேற எவனுக்காவது அவள விட்டுக்குடுக்குறதா இருந்தாலும் நா செய்வேன்னு தியாகச் செம்மலாகலாம்னு பாக்காத... உன் காதல பத்தி ஒன்னுமே உனக்கு தெரியல... உன் காதலுக்காக, அவளுக்காக நீ காலத்தையும் மாத்த தயங்க மாட்ட... அவ சந்தோஷம் மட்டும் தான் உனக்கு முக்கியம்... உனக்கு மட்டுமில்ல... நா மட்டும் இடைல வராம இருந்துருந்தா இன்னையோட ஆதிரா உன்ன ஏழு வர்ஷமா காதலிச்சிருப்பா டா... நா சொல்றதெல்லாம் உண்மை... நீ நினைக்க முடியாத அளவு நா அவ கூட இருந்துர்க்கேன்... அவ காதலிச்சு இரசிச்சு ஆசைபட்டு எழுதுன கவிதைகள் எதுவும் என்ன நினைச்சு அவ எழுதல... எல்லாமே ஒரு காலத்துல அவளுக்கு கல்யாணம் ஆகும் போது அவ கைய புடிக்கப் போற உன்ன மட்டுமே நினைச்சு தான் எழுதுனா... நா வராமையே போயிருந்தா இந்நேரத்துக்கு நீ ரொம்ப சந்தோஷமா இருந்துருப்ப.. ஆதிரா நாம எதிர்பார்க்காத அளவு சந்தோஷமா இருந்துருப்பா.... நா அவ வாழ்கைல ஏன் எதுக்காக வந்தேன் எதுக்காக போனேன்னே தெரியாம மறஞ்சி போய்ட்டேன்... சோ தயவு செஞ்ச என் மேல அவளுக்கிருக்க காதல பெருசு படுத்தாத... அவ காதல முன்னாடி வச்சு நீ நாளைக்கு நடக்கப் போற கல்யாணத்த நிறுத்துனா உன்ன நீயே மன்னிக்க மாட்ட... நா இவ்ளோ சொல்லியும் நீ கேக்கலன்னா உன்ன என்னால ஒன்னும் பண்ண முடியாதுடா... உனக்கும் அவளுக்கும் நாளைக்கு கல்யாணம் நடக்கனும்... நடந்தே ஆகனும்... நா நடத்தி காட்டுவேன்...
நீல மனிதன் வீராப்பாய் அங்கிருந்து மறைந்திருக்க அவனுக்கு தான் மூளை பாதிக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்திருந்தது... உண்மையை கூற வேண்டுமெனில் அவனுக்கு முதல் பார்வையிலே தன்னை காணாது தலை குனிந்து விரல் நுனியை மடக்கி மடக்கி மறு கரத்தை அழுத்தி கொண்டு திக்கித் திக்கி பேசிய அவள் அவனது மனதில் ஒரு ஆழமான இடத்தை பிடித்திருந்தாள்...
பல நாள் முன் தொலைந்த ஏதோ ஒன்று தன்னை தேடி வந்து அடைந்ததை போல் அவன் உணர்ந்த போது தான் இத்திருமணத்தில் விருப்பமில்லையென ஒரு கல்லை தூக்கி அவன் இதயத்தில் வீசி அவன் மனதில் உருவான காதல் குட்டையை கலைத்திருந்தாள் ஆதிரா..
அவள் தோழிகள் கூறியும் கேட்டிருக்கிறான்... ஆதிரா பல காதல் கவிதைகள் எழுதுவாளென்றும் அவை அனைத்தும் அவளுக்கென பிறந்த யாரோ ஒருவருக்கானதும் தான் என்றும்... அவை எல்லாம் கேட்டு அனைவரையும் சமாளிப்பதற்காய் நீல மனிதனுக்காய் எழுதியவையை அவள் மறைக்கிறாளென்றே எண்ணினான் இவன்... ஆனால் நீல மனிதன் கூறியது போலவே ஆதிரா இரசித்து காதலித்து எழுதிய அனைத்தும் உண்மையிலே அவளுக்கென பிறந்தவனுக்காய் எழுதியது தான்... அவை எதையும் அவள் நீல மனிதனை எண்ணி எழுதவில்லை...
தற்போது ஏது செய்ய என்ற கேள்வியில் மூழ்கி அவன் அமர்ந்திருக்க ஆதிராவின் நினைவுகளோடு அன்பாய் அவனை வந்து தழுவி கொண்டது உறக்கம்...
மறுநாள் விடியற்காலையிலே ஆதிராவின் குடும்பம் சென்னையை அடைந்திருந்தது... இவர்கள் அனைவரும் மண்டபத்திலே தங்கிக் கொள்வதாய் முடிவெடுக்கப்பட ஆதிராவிற்கு விடியலிலே மனம் பதைபதைக்கத் தொடங்கியிருந்தது...
இரவு பேசியது தான்.. அதன் பின் அவனிடமிருந்து ஒரு மேஸேஜும் இல்லை... இவனை நம்பலாமா வேண்டாமா என ஒன்றும் புரியாமல் அமர்ந்திருந்தவளை சுற்றி அவளின் தோழிகளும் அக்கா தங்கைகளும் அமர்ந்து ஒரு புறம் மருதாணி கோன் விட்டு கொண்டிருந்தனர்...
ஆதிராவின் இரு கரங்களும் பிசியான அந்த நேரம் அந்த செல்பேசி சினுங்கியது... அதன் அதிர்வில் இவள் சட்டென நிமிர இரு கரத்தையும் உபயோகிக்க இயலாமல் என்ன செய்வதென தெரியாமல் திருட்டு முளி முளித்தவளின் துன்பம் புரிந்தது போல அவளின் செல்பேசியை எடுத்த சமீனா காலை அட்டேன் செய்து அவளின் காதில் வைக்க அவளுக்கு முழுதாய் ஆதிரா அதிர்ச்சியான பார்வை கொடுக்கும் முன்னே அவனின் குரல் மறுபுறத்திலிருந்து ஒலித்து அவளை திசை திருப்பியது...
சமீனா : பேசு பேசு...
ஆதிரா : ஹ-ஹலோ...
அவன் : ஆதிரா...
ஆதிரா : சொல்லுங்க...
அவன் : சேஃபா சென்னை ரீச் ஆகீட்டீங்களா...?? என கேட்டதும் சமீனா " என்ன ஒரு பாசம் " என ஃப்ரீயாய் இருக்கும் மறு கரத்தை மல்லியின் முதுகிலே அடித்து கை தட்டினாள்....
ஆதிரா : ரீச் ஆய்ட்டோம்ங்க... மண்டபத்துல தான் இருக்கோம்... என முடிந்தளவு மெதுவாய் கூறினாள்...
அவன் : நாளிடுதலுக்கு ரெடியாய்ட்டு இருக்கீங்களா... ஒரே சத்தமா இருக்கு...
ஆதிரா : ஹான்.. ஆ-ஆமா.. மெஹெந்தி போட்டுட்டு இருக்கோம்...
அவன் : ஓஹ்... உங்களுக்கு கோன் போடுறதுன்னா ரொம்ப புடிக்கும்னு கேள்வி பட்டேன்...
ஆதிரா : உங்களுக்கு யாரு சொன்னா...
அவன் : சொல்ல வேண்டியவங்க சொன்னாங்க...
மல்லி : டரெக்டா விஷயத்துக்கு வராம என்ன இவங்க இன்னும் கடல போட்டுட்டு இருக்காங்க... என காதை சரி செய்தபடி சமீனாவிடம் சாய அவளின் முதுகிலடித்து ஓரமாய் தள்ளி விட்டாள் சமீனா...
சமீனா : போ எரும உன் வேலைய பாக்க கரெக்ட்டா வந்துடுவ...
ஆதிரா : அப்ரம் என்ன ஆச்சு...
அவன் : இந்த கல்யாணத்த நிறுத்துரதுல எனக்கு இஷ்டமில்ல ஆதிரா...
அவன் கூறிய அந்த ஒரு விஷயம் அவளுக்கு மட்டுமல்ல அவளை சீண்ட முயன்ற மல்லிக்கும் மல்லியை தடுக்க முயன்ற சமீனாவுக்கும் கூட கேட்டிருந்தது...
ஆதிரா : வா-ட்...
அவன் : என்னால... என்னையே தடுக்க முடியல... ஆதிரா... ஐம் லாஸ்ட்...
ஆதிரா : ஹ-ஹ.. ஹ-ஹலோ என்ன.. சொல்-றீங்க...
அவன் : நாளைக்கு நம்ம கல்யாணத்துல பாக்களாம்
ஆதிரா : ஹலோ.. ஹ-ஹலோ.. ஹலோ.. ஹலோ என இவள் கண்ணீரோடு கடைசியில் கத்தத் தொடங்க மெஹந்தி விட்டு கொண்டிருந்த அனைவரும் அவளை சற்று அதிர்ந்து நோக்கிய உடன் மல்லி உடனே நிலமையை புரிந்து கொண்டாள்...
மல்லி : அவளோட ப்ரீ ஆர்டர் ஃபேவரைட் கதை புக் கன்செலாய்டுச்சான்.. அதான் எமோஷ்னலாய்ட்டா... அவள கொஞ்சம் தனியா விடுங்க.. ஒரு ஹாப் அன் ஹவர் தனியா இருக்கட்டும்... என மற்றவர்களை பேச விடாமல் சில நிமிடங்களில் வெளியே விரட்டியடித்திருந்தாள்...
பர்வீன் : ஆதி... ஆதி என்ன பாருடி... என்ன டி ஆச்சு... மச்சான் என்ன சொன்னாங்க...
ஆதிரா : என் வாழ்கையே போச்சு டி... எ-ன் வா-ழ்கை-யே போய்டுச்சு...
மல்லி : ஹே என்ன டி ஒளறுற...
ஆதிரா : அவன் என்ன விட்டுட்டு போய்ட்டான் டி... அவன் எப்போவோ என்ன விட்டுட்டு போய்ட்டான்...
சமீனா : அவரு கல்யாணத்த நிறுத்த முடியாதுன்னு தானே டி சொன்னாரு இவ என்ன டி சம்மந்தமே இல்லாம அழுவுரா... என கூறியதற்கு ஹசீனா மற்றும் பர்வீன் அதிர்ந்து அவளை நோக்கினர்...
பர்வீன் : ஆதி தெளிவா சொல்லு டி... எங்களுக்கு புரியல...
ஆதிரா : என் இடியட் என்ன விட்டு போய்ட்டான் டி... இனிமே இந்த கல்யாணத்த நிறுத்தவே முடியாதுன்னு அவரு சொல்லீட்டாரு... இனிமே என் காதல் இருந்த இடமே தெரியாம ஒரு சொல்லாக் காதலாவே போகப் போகுது என அவளை தாவி அணைத்து கொண்டு கதறி அழுதாள் ஆதிரா...
உண்மையில் கூற வேண்டுமெனில் தோழிகள் எவருமே அவள் இந்தளவிற்கு அழுது பார்த்ததில்லை... அவள் அழுதிருக்கிறாள் தான் இருந்தும் இவ்வாறு கதறி அழுததே இல்லை...
அரை மணி நேரம் ஓயாது அழுதவளை ஓய்வெடுக்கக் கூறிவிட்டு நாழ்வரும் வெளியே வந்தனர்...
அதே நேரம் அவனறையில் சிலையாய் அமர்ந்திருந்த அவன் தன் செல்பேசி அலருவதை கண்டு அதை எடுத்துப் பார்க்க ஆதிராவின் எண்ணிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்திருந்தது...
அதை எதிர்பார்க்காமலே பதிலளித்து காதில் வைத்தவன் மறுபுறம் கேட்ட குரலில் முளிக்கத் தொடங்கினான்...
பர்வீன் : ஹலோ... ஹலோ இருக்கீங்களா...
அவன் : யார் நீங்க...
மல்லி : அது முக்கியமில்ல... ஆதிரா கிட்ட என்ன சொன்னீங்க... அவ எதுக்கு அழுகுறா... எங்களுக்கு இப்பவே உண்மை தெரிஞ்சாகனும்...
ஹசீனா : அவ கிட்ட கேட்டா இந்த ஜென்மத்துல எங்களுக்கு உண்மை தெரிய வராது... ப்லீஸ்...
எடுத்தோம் கௌத்தோமென ஆதிராவின் காதல் விடயத்தை அவளின் தோழிகளிடமே கூற இவனுக்கு சரியாய் படவில்லை...
அவன் : இந்த கல்யாணத்த ஆதிரா நிறுத்த சொன்னாங்க... ஆனா என்னால முடியல... காரணம் என்னன்னு ஆதிரா கிட்ட நீங்க கேக்குரது தான் நல்லது... என்றதோடு இவன் குற்ற உணர்லே அழைப்பை துண்டிக்க தோழிகளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை...
சமீனா : ஆதி நமக்கு தெரியாம யாரையாவது லவ் பண்ணாளா டி...
பர்வீன் : நமக்கு தெரிஞ்ச வர அவ லவ் பண்ணதில்ல... லவ் பண்ண மாரி காமிச்சிக்கிட்டதும் இல்ல...
மல்லி : அப்போ இந்த கல்யாணத்த ஏன் நிறுத்த சொன்னா... கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி எவனையோ இழந்துட்டேன்னு ஏன் அழுதா... அப்போ அவன் யாரு ...
ஹசீனா : இதெல்லாத்துக்கும் அவ தான் பதில் சொல்லனும்...ஆனா சொல்லித் தொலைய மாட்டாளே...
மல்லி : இதெல்லாம் சரி பட்டு வராது... அவ லவ் பண்ணாளோ இல்லையோ... அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லங்கும் போது அது நடக்கக் கூடாது....
மற்ற மூவர் : என்னது என அதிர்ந்து போய் அவளை நோக்கினர்...
மல்லி : ஆமா டி... உங்களுக்கு தெரியாததா என்ன... அவளுக்கு புடிக்காத ஒரு விஷயத்த நாம வலுக்கட்டாயமா செய்ய வச்சா அத அவ அடியோட வெறுக்கவும் தயங்க மாட்டா... இந்த கல்யாணம் அவ வாழ்கையோட ஒரு மிக முக்கியமான பகுதி... எல்லாரும் சொல்ற மாரி அவ கல்யாணம் ஆனா சரியாய்டுவான்னு அவள விட முடியாது... அவளப் பத்தி நமக்கு தான் தெரியும்... சொல்லப் போனா நமக்குக் கூட முழுசா தெரியாது...
சமீனா : என்ன டி இவ இவ்ளோ சீரியசா பேசுற...
பர்வீன் : மல்லி சொல்றது கரெக்ட்டு... இந்த கல்யாணம் நடக்கக் கூடாது... இப்போது இவ்விருவரும் குழப்பமாய் இருந்த மற்ற இருவரை பார்க்க ஆதிரா அழுத அழுகையும் இவள்கள் நினைவு படுத்திய ஆதிராவை பற்றி விடயங்களையும் கருத்தில் கொண்டு ஹசீனா மற்றும் சமீனாவும் அந்த முடிவிற்கு ஒத்துழைக்க முடிவெடுத்தனர்...
இதை எதையும் அறியாத மணமக்கள் இருவரும் கனத்த மனதுடன் அன்றைய இரவில் நிகழவிருக்கும் நாளிடுதல் விழாவிற்காய் தயாராகத் தொடங்கினர்...
கதை தொடரும்...
ஹல்லல்லோஓஓஓ இதயங்களே... அடுத்த யூடியோட சீக்கிரமே வரேன்... டாட்டா
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro