8
நாட்களும் நகர மேகலா மாமியாரிடம் மாமனாரிடமும் முகம் சுழிக்காமல் நல்விதமாகவே நடந்து கொண்டால்.ராஜாவிற்கே அது ஆச்சர்யம் தான் தான் நினைத்ததற்கு மாறாய் அண்ணியார் இருப்பதை கண்டு .
எனில் மேகலாவுக்கு தனியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் மறைந்ததா என்றால் அது தான் இல்லை .அதற்கான வழிகளை ஆராய்ந்து கொண்டு தான் இருந்தால்.எனில் புகுந்த வீட்டின் உறவுகளையும் நேசிக்கவே துவங்கி இருந்தாள்.
தம்பி அண்ணன் இல்லாது வளர்ந்தவளிற்கு மாறனும் ராஜாவும் தம்பிகளாகவே தோன்றினார்கள் அதிலும் துரு துருவென்று பேசும் ராஜா அவளிற்கு செல்ல பிள்ளை என்றே சொல்லலாம் .
இதோடு முருகன் மேகலாவின் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது .வந்ததில் இருந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றாள் .முருகனிற்கு மட்டும் அவ்வப்போது முட்டை மற்ற பலகாரங்கள் செய்து கொடுக்கும் ஷாந்தி மாறனையும் ராஜாயும் கவனிக்காமல் விடுவதையும் மாறன் வெளியே செல்கிறேன் என்ற பெயரில் காலையில் தம்பியுடன் செல்பவன் மாலை நேரம் கழித்தே களைப்போடு வருவதையும் என்ன என்று கேட்ட போது கூற மறுத்துவிட்டனர் .பின் ஒரு நாள் கோயிலிற்கு செல்லலாம் என்று வந்தவள் அப்போதே கவனித்தாள் ராஜா ஒரு மளிகை கடையில் பொட்டலம் கட்டுவதையும் மாறன் அங்கே கணக்கு எழுதுவதையும் .
படிக்கும் பிள்ளைகள் எதற்காக இவ்வாறு வேலை செய்கிறார்கள் முருகன் செலவிற்கு பணம் கொடுக்கிறான் தானா என்ற ஐயம் எழுந்து விட பிறகு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் வீட்டிற்கு வந்துவிட்டாள்.அங்கே ஷாந்தி முருகனிற்கும் அவளிற்கும் மட்டும் ஆட்டுக்கறி செய்து எடுத்து வைத்தபடி இருக்க மேகலா "அத்த எல்லாத்தையும் எங்களுக்கே வச்சுட்டா பசங்க என்ன சாப்பிடுவாங்க ?"என்க
சாந்தியோ "வெட்டிப்பயலுகளுக்கு எதுக்கும்மா இதெல்லாம் நீங்க சாப்பிடுங்க இவனுங்களுக்கு சாம்பாரும் வடகமும் இருக்கு "என்க
அவளோ "இதெல்லாம் தப்பில்லையா அத்த சின்ன பசங்களுக்கு பாகுபாடு பாக்குறீங்க .வளருற பசங்களுக்கு குடுக்குறதுக்கு போய் வெட்டி பயலுங்கனு சொல்றீங்க "என்க
முருகனோ "மேகலா என்ன தேவை இல்லாம பேசிகிட்டு இருக்க ஏன் இப்போ அவனுங்க சாபிடலென என்ன ஆவப்போது உக்காந்து சாப்பிடு"என்க
அவளோ அவனிடம் அனல் விழியோடு திரும்பியவள் "ஏன் நீங்க பெரியவர் தான கொஞ்சம் கம்மியா சாப்பிட்டா ஒன்னும் ஆயராதே எப்படி கொழந்தைங்கள விட்டுட்டு சாப்பிட மனசு வருது உங்களுக்கெல்லாம் "என்றவள் தனக்கென்று தனி கிண்ணத்தில் ஷாந்தி வைத்த மொத்த கறியையும் மூடி வைத்தவள் "எனக்கு வேணாம் மாறனுக்கும் ராஜாக்கும் இதை நா குடுத்துக்குறேன் இனிமே இந்த மாறி கறி எடுக்குறதுனா அவங்களுக்கும் சேர்த்து எடுங்க .உங்களுக்கு சமைக்க கஷ்டமா இருந்துச்சுன்னா நானே சமைச்சு குடுத்துக்குறேன் ரெண்டு பேருக்கும் .இப்டி பாகுபாடு பாக்காதீங்க "என்று கையை கழுவிவிட்டு பாதி சாப்பாட்டிலேயே எழுந்துவிட்டாள்.
அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இப்படி பாகுபாடு பார்த்து செய்வதை .அதோடு கோபமும் வந்தது மாறன் மீது, வயது அவனிற்கு பத்தொன்பது முடிந்து விட்டது தன்னுடைய உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து கேட்க கூடவா அவனிற்கு தைரியமில்லை .என்று நினைத்தபடி அமர்ந்திருந்தவளின் மனதில் முருகன் இந்த சிறு செலவையே செய்ய மறுக்கிறான் என்றால் மாறனின் படிப்பிற்கு எப்படி உதவி இருப்பான் ?தன்னிடம் வங்கியில் கடன் வாங்கியதாக கூறினான் எனில் அதற்கான ஆவணங்கள் எதையுமே நேற்று தன் உடையை அடுக்கும் பொழுது பார்க்கவில்லையே என்று நினைத்தவள் மாறனிடம் பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
இருவரும் மாலை நேரம் ஓய்வொடு வீட்டிற்கு வர மேகலா "மாறா ராஜா போய் கை கால் அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்"என்க இருவருமோ திருட்டு முழி முழித்தவர்கள் "வேணாம் அண்ணி சாப்டுட்டோம் மத்தியானம் friend வீட்டுல "
என்க
அவளோ இடுப்பில் கை வைத்து முறைத்தவள் "மத்தியானம் தான சாப்டீங்க இப்போ ஏழு மணிக்கு மேல ஆயிருச்சு நைட் சாப்பிடலேன்னாலும் பரவால்ல இப்போ வாங்க "என்று அழைக்க இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சென்று அமர்ந்தனர் ,
ராஜாவும் மாறனும் சப்பாத்தியை விரும்பி உண்பதை கவனித்திருந்தவள் இருவருக்கும் சப்பாத்தி செய்து அந்த கறியை குருமாவை போல் வைத்திருந்தாள்.ஷாந்தி இவள் இவர்களை இப்படி கவனித்துக்கொள்வதை கண்டு வழக்கம் போல் நொடித்துக்கொள்ள சத்யமூர்த்தியோ மருமகளின் செய்கைகளால் உள்ளம் குளிர்ந்தார்.
இருவருக்கும் சப்பாத்தி வைத்தவள் கறியை வைக்க இருவரும் முழித்து பார்த்தவர்கள் "அண்ணி நாங்க கறி சாப்பிட மாட்டோம் "என்று ஒரே குரலில் கூற
அவளோ இருவரையும் முறைத்தவள் "சாப்பிட மாட்டிங்களா இல்ல சாப்பிட குடுக்க மாட்டாங்களா ?"என்க இருவரும் பேய் அடித்ததை போல் பார்த்தனர் .அவர்களின் முழியை பார்த்து அவளின் மாமியாரின் மேல் அவளிற்கு வெறுப்பு சுரக்க கணவனின் மேலும் கோபம் வந்தது .இருவரின் தலையையும் வருடியவள்"சாப்பிடுங்கடா மத்தியானம் என்ன சாப்டீங்களோ இப்போ சாப்பிடுங்க "என்க இருவரும் தங்கள் அண்ணியை பாசமாய் பார்த்தவாறே உண்டனர் .அவர்கள் இருவரையும் அதட்டி உருட்டி அதிகமாய் சாப்பிட வைத்தவள் பின் இருவரையும் மாடிக்கு அழைத்தாள் .
மாறனும் ராஜாவும் எதிரில் நிற்க கையை காட்டியபடி நின்ற மேகலா "மாறா உங்க அண்ணன் உனக்கு படிக்கச் பணம் அனுப்புறாரா இல்லையா ?"என்க
அவனோ "அனுப்புறாரு அண்ணி "என்க
அவளோ முறைத்தவள் "அண்ணி இன்னொரு அம்மானு சொல்லுவாங்க இங்க உன் அம்மா சரி இல்ல ஆனா நா அப்டி இல்ல. ஒத்துக்குறேன் எனக்கு கூட்டு குடும்பம் புடிக்காது தான் ஆனா என் கொழுந்தனுங்க எக்கேடோ கெட்டு போகணும்னு நெனைக்குறவ இல்ல நா .நா பிரைவசி அதிகம் எதிர்பார்ப்பேன் நெனச்ச நேரம் வெளிய போகணும் புருஷனோட அதிகம் நேரம் செலவு பண்ணனும் அப்டினு நெனைக்குறவ அதுனால தான் தனியா போகணும்னு நெனச்சு உங்க அண்ணனை வீடு கட்ட சொன்னேன் .ஆனா அவரை பேங்க் லோன் தான் எடுக்க சொன்னேன் .நா ஒரு lecturer emi என் சம்பளத்துல கட்டுறேன்னு தான் சொன்னேன்.அவர் என்கிட்டே emi கட்டறதுக்குனு சொல்லி இப்போ வரைக்கும் எதுவுமே பேசல .ரூமஹ் நா ஒழுங்கு படுத்துனப்ப எனக்கு எந்த டாக்குமெண்டும் கிடைக்கல .ஒழுங்கா மறைக்காம சொல்லு எனக்கு என்ன பண்ணனும்னு தெரியும் ."என்க
ராஜாவோ "அவன் சொல்லமாட்டான் அண்ணி நா சொல்றேன் ."என்று அனைத்தையும் அவன் கூற
மாறனோ "அண்ணனோட ஒரு குணம் எனக்கு புடிக்காது அண்ணி செலவு பண்ணிட்டு சொல்லி சொல்லி காட்டுவார் எனக்கு அவர் கைல காசு வாங்க சின்ன வயசுல இருந்தே புடிக்காது அதுனால தான் அப்போவே பார்ட் டைம் ஜாப் போய் என்னோட தேவைய நானே பாத்துப்பேன் .அவர் பணம் அனுப்பாதது ஒரு வகைல எனக்கு நிம்மதி தான் அண்ணி "என்று கூறி முடிக்க
மேகலா கொலை வெறியில் இருந்தால் முருகனின் மேல் பின் மாறனிடம் திரும்பியவள் "இதோ பாரு மாறா இந்த வயசுல இவ்ளோ பொறுப்பா இருக்கானு பெருமையா இருக்கு ஆனா அதே சமயம் பயமாவும் இருக்கு .கொஞ்சம் சுயநலமாவும் இருந்துக்கோ .உன்னோட உரிமை மறுக்கப்படுதுன்னா அதை நீ தான் கேட்கணும் ."என்க அவனோ ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்தான் .
அதை கண்டு பெருமூச்சுவிட்டவள் "உன் பொண்டாட்டியாச்சும் உன்ன மாறி இருக்காம இருக்கனும்டா உனக்குலாம் தூக்கி போட்டு மிதிக்குறவ வந்தா தான் சரிப்படுவா ."என்க மாறனிற்கு ஒரு மின்னல் கீற்றாய் இலக்கியாவின் முகம் மின்னி மறைந்தது .
பின் மேகலா கீழே செல்ல வழக்கம் போல அண்ணனும் தம்பியும் மொட்டை மாடியில் நின்று சற்று நேரம் பேசிவிட்டு கீழே வந்தனர் .ராஜா உறங்கியதும் பூனை நடையிட்டு தனது பையின் அருகில் சென்றவன் அதிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்தான் .முருகனின் திருமணத்தின் பொழுது இலக்கியாவை தனியாக போட்டோ எடுத்திருந்தனர் .ரெட்டை ஜடையில் முகம் நிறைந்த சிரிப்புடன் நின்றிருந்தாள் இலக்கியா .அதை பார்த்து சிரித்தவன் "லயா பாப்பா என்னாச்சுடா எனக்கு ? "என்று நினைத்தவன் இந்த ஒரு வாரமாய் அவன் செய்யும் செயல்களை நினைத்து பார்த்தான் .
திருமணம் முடிந்த அடுத்த நாளிலிருந்தே ராஜாவும் மாறனும் வழக்கமாய் செல்லும் கடைக்கு வேலைக்கு செல்ல நினைக்க மாறனோ இலக்கியாவின் வீடு இருக்கும் அரேவில் ஒரு கடையில் வேளைக்கு செல்லலாம் என்று கூறி அங்கே சென்றான் .அவள் தண்ணீர் எடுக்க வருவதிலிருந்து அவள் அங்கே சிறுவர்கள் விளையாடுவது வரை அவளை பார்த்தபடியே வேலைகளை கவனிப்பான்.தன்னையே அறியாமல் அவளை ரசிக்க துவங்கியவர் அவளை காணாது தனது நாள் விடியாது எனுமளவுக்கு வந்துவிட்டான் .
அந்த புகைப்படத்தை பார்த்தவன் அதில் இருந்தவள் பிம்பத்தை வருடியவாறே "இது என்ன ஏன் தப்பா சரியா இப்டி எதுவும் புரியல லயா பட் இந்த உணர்வு நல்லா இருக்கு .நாளைக்கு பாக்குறேன் உன்னை "என்று நினைத்து உள்ளே வைத்தவன் நித்திரா தேவியின் பிடிக்குள் சென்றான்.
நாட்களும் செல்ல அவன் இலக்கியாவை பார்ப்பதும் ரசிப்பதும் வாடிக்கை ஆகி போனது .ராஜா இதை கவனித்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .விடுமுறை முடிந்து கல்லூரிக்கு சென்றவனிற்கு தன் உணர்வுகளின் அர்த்தம் தெள்ளத்தெளிவாக புரிந்து விட எனில் ஒரு சிறு பெண்ணின் மேல் இத்தகைய உணர்வு எழுவது தவறாய் தோன்ற அவள் படித்து முடித்தபின் தனது மனதை வெளிப்படுத்தலாம் என்ற முடிவோடு நாட்களை அவள் ஞாபகங்களோடு கடத்தினான் .வருடம் ஒருமுறை வரும் விடுமுறைகளிபோல் ராமனும் வந்துவிட இலக்கியாவும் அவர்களின் குழுவில் சேர்ந்து விடுவாள் .
மாறனிற்கு அது அதீத சந்தோஷத்தை கொடுத்தாலும் பார்வையிலும் நடத்தையிலும் கண்ணியம் காத்து விலகி நடப்பவன் அவளின் குணங்களை கண்டு உள்ளுக்குள்ளே சிலாகித்துக்கொள்வான் .
நெஸ்ட் episodela இலக்கியாவோட கேரக்டர் பத்தி சொல்றேன் friends .ஸ்டோரி எப்படி போகுது. போர் அடிக்குதா இல்ல நல்ல தான் போகுதா ?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro