27
காலை அழகாய் விடிய இளவரசி தன் கண்களை கசக்கி எழுந்தவள் புதியதாய் ஏதோ ஒரு பாரத்தை தன் மேல் உணர்ந்தவள் என்ன என்று பார்க்க அவள் இடையை வளைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ராஜா .அதை கண்டு சிரித்தவள் அவன் கேசத்தை கலைத்துவிட்டு அவன் பிடியில் இருந்து மெல்ல எழுந்தவள் நேரத்தை பார்க்க அதுவோ ஆறு என்று காட்டியது .அவளிற்கே நம்ப முடியவில்லை அவள் ஆறு மணிக்கு எழுந்ததை .
சென்று குளித்து முடித்து வந்தவள் அங்கிருந்த ஆளுயரக்கண்ணாடியின் முன் நின்று ஈரமான முடியை உலர்த்த அதில் இருந்து வந்த நீர்த்துளிகள் முகத்தில் பட்டு தெறிக்க எழுந்தான் ராஜா .
ராஜா "என்ன நம்ம மூஞ்சில மட்டும் மழை பெய்யுது "என்று நினைத்தவன் அங்கு இளவரசியை பார்த்து திடுக்கிட்டான் .
தூக்கம் மொத்தமும் போக எழுந்து அமர்ந்தவன் கத்த துவங்கிவிட்டான் "அடியேய் அரிசி மூட்டை எதுக்கு டி என் ரூம்ல இருக்க ?எங்கடி என் அண்ணன் ?வயசு பையன் இருக்குற ரூம்ல இப்டி வந்து நிக்கிற பாக்குறவங்க என்ன நினைப்பாங்க கெளம்புடி முதல்ல"என்று கூற
அவளோ அவனை அட பைத்தியமே என்பதை போல் பார்த்தவள் அங்கிருந்த குங்குமச்சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைக்க அப்பொழுதே ராஜாவிற்கு தங்களுக்கு திருமணம் ஆனதே நினைவில் வந்தது .
தன் தலையில் தானே தட்டி கொண்டவன் மணியை பார்க்க அது ஆறரை என்று காட்டியது .அவன் குளியலறைக்குள் செல்ல இளவரசியோ தலையில் அடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.அவள் ராஜாவின் அறையில் இருந்து வருவதை பார்த்து சாந்தி வாயை பிளக்க மஹாவோ அவள் தலைக்கு குளித்திருப்பதை பார்த்து மேலும் அதிர்ந்தாள் .
மகா "இளவரசி "என்க
அவளோ அலட்சியமாய் அடுப்படிக்குள் செல்ல போனால் .அவள் கையை பிடித்து நிறுத்தியவள்"என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க உன் இஷ்டத்துக்கு பண்ற ?யாரை கேட்டு அவன் ரூம்ல தங்குன?"என்க
அவளோ அவள் பிடித்த கையை உதறியவள் "என் புருஷன் ரூம்க்கு நா போறதுக்கு யாரை கேக்கணும் ?"என்றவள் அடுப்படிக்கு சென்று தனக்கும் ராஜாவிற்கு மாறனிற்கும் ஷிவாவிற்கும் அவளின் தாத்தாவிற்கு என்று 5 கப் காபி கலந்துகொண்டிருக்க
அவள் பின் ஆத்திரத்தோடு வந்த மகா "ஓஹ் அவ்ளோ திமிராயிருச்சா? அம்மானு ஒருத்தி இருக்குறது ஞாபகம் இருக்கா இல்லையா ?"என்க
அவளோ அவளை தீயாய் முறைத்தவள் "அம்மாவா நீ நடந்துருந்தா இது எதுவுமே நடந்துருக்காது வழிய விடு "எங்க
மகா கடைசி முயற்சியாய் "இளவரசி இதெல்லாம் வேணாம்டி இதை கழட்டி குடுத்துரு டி "எங்க
இளவரசியோ கொதிநிலைக்கு சென்றவள் "மரியாதையா போய்டு உங்கள பொறுத்த வரைக்கும் என்னவோ ஆனா என்ன பொறுத்தவரைக்கும் நா மனசார என்ன பொண்ணுன்னு உணர்ந்த நாள்ல இருந்து மனசுல நின்னவனே தான் கல்யாணம் பண்ணி இருக்கேன் . "என்று கூறியவள் ஐந்து கோப்பைகளை எடுத்துக்கொண்டு செல்லும் வழியிலேயே வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவளின் தாத்தாவிடம் ஒரு கோப்பையை கொடுத்துவிட்டு சென்று விட்டாள்.
ஷாந்தி "என்னடி இப்டி பேசுற உனக்கு புத்தி எதுவும் பேதலிச்சு போச்சா ?கட்டுன தாலிய கழட்டி கேக்குற?"என்க
மஹாவோ "ஓஹோ என்ன ரொம்ப துள்ளுற ?உன் இளைய மவன பத்தி உனக்கு தெரியாதா ?என்னைக்கு இருந்தாலும் என் பேச்சு அவன் கேக்க மாட்டான் .மாறனுக்கு இளவரசியை கட்டிக்குடுக்கணும்னு நெனைச்சதே அவன் என் பேச்சு கேட்டு இருப்பான் ராஜா அவன் பேச மீறி எதையும் பண்ண மாட்டான்னு தான்.புகுந்த வீட்ல தான் நா நெனச்சது ஏதும் நடக்கல ஆனா எப்போவும் என் ராஜ்ஜியம் தான் இந்த வீட்ல இருக்கணும்னு தான் இளவரசியை மாறனுக்கு கட்டி குடுக்க நெனச்சேன் .ஆனா இப்போ அந்த இலக்கியா வந்து இந்த வீட்டை ஆளுவா நா வேடிக்கை பாக்கணுமா ?எப்போ என்ன வீட்டை விட்டு அனுப்புவாளோனு பயந்துகிட்டே நா இருக்கணுமா?"என்க
சாந்தியோ "அதெல்லாம் சரி தான் டி ஆனா இப்போ இளவரசிக்கும் ராஜாக்கும் கல்யாணம் ஆயிருச்சு. இனிமே அந்த எண்ணத்தை மறந்துட்டு .நா ராஜா மாறனுக்கும் அம்மா தான் அதையும் ஞாபகம் வச்சுக்கோ. காலைலயே கிளம்ப சொன்னான் மாறன் ஊருக்கு போகணும்னு போய் கெளம்பு "என்று சற்று மிரட்டல் தொனியிலேயே கூறி விட்டு செல்ல மஹாவிற்கோ மனதில் கோபம் எரிமலையாய் எரிந்தது .
அது அனைத்தும் காரணமே இல்லாமல் இலக்கியாவின் புறம் திரும்ப மனதில் கல்யாணம் முடியட்டும்டி உனக்கும் அவனுக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
இளவரசி முதலில் மாறன் சிவாவின் அறைக்கு சென்றவள் அங்கே இருவரும் தயாராகி இருப்பதை பார்த்து முகமலர்ச்சியோடு "குட் மார்னிங் மாறப்பா"என்று coffeeyai நீட்ட அவனோ ஒரு நிமிடம் புடவையில் நெற்றி வகிட்டில் குங்குமத்துடன் நிற்கும் தன் மகளை வாஞ்சையாய் பார்த்தான்.
கைகளில் முதல் முறை அவளை ஏந்தியது நினைவில் வர இன்று அவள் ஒருவனின் மனைவியாகி நிற்பதை பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத உணர்வு மனதில் எழுந்ததவனிற்கு .அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்த இளவரசி அவன் தோளை தொட்டு "என்னப்பா ?"என்க
அவனோ நினைவுகளிலிருந்து தெளிந்தவன் "ஒண்ணுமில்லடா ஒண்ணுமில்ல எல்லாம் எடுத்து வச்சுட்டியா ?ஒன்பது மணிக்கு வண்டி வர சொல்லிட்டேன் "என்க
அவளோ "இல்லப்பா நேத்து அப்டியே தூங்கிட்டேன். மூணு நாள் துணி தான எடுத்துக்குறேன் "என்க
அவனோ "குட்டிமா எப்படியும் போனதும் கல்யாணம் ஆனதுக்கான காரணத்தை சொல்லணும் அப்போ அடுத்தடுத்த நாள் நீ சுடிதாரோட இருந்தா நல்லாருக்காது டா.போற வழில கடைல நிறுத்தி ரெண்டு புடவை வாங்கிக்கிரியா . உன்கிட்ட புடவை இல்லையேடா அவ்ளோவா ?"என்க
அவளோ "அது.....நேத்து கல்யாணம் முடுச்சதுக்கப்புறோம் கடைக்கு போய் ராஜா வாங்கி குடுத்துட்டான்ப்பா "என்க
மாறன் சிரிக்க ஷிவாவோ "எது ராஜாவா?இன்னுமாடி மரியாதை குடுக்காம பேசுற ?"என்க
அவளோ அவன் தலையிலேயே கொட்டி coffeyai கையில் திணித்தவள் "என்ன சப்போர்ட்டா அப்டி தான்டா கூப்பிடுவேன் போடா "என்று விட்டு
மாறனிடம் திரும்பியவள் "மாறப்பா அக்காவையும் வர சொல்லலாம்ல ?"என்க
அவனோ மறுப்பாய் தலை அசைத்தவன்"இல்லடா அது சரி வராது "என்று கூற அவளும் சரி என்று தங்கள் அறைக்குள் சென்று விட்டாள்.அங்கே ராஜா குளித்து முடித்து வந்தவன் இருவருக்கும் ஒரே suitcaseil பாதி பேக்கிங்கை முடித்திருந்தான் .அதை பார்த்து சிரித்தவள் "ராஜா "என்க
அவன் நிமிர்ந்து என்ன என்று பார்க்க
அவளோ "coffee ஆறிடும் நீ குடி நா மிச்சத்தை எடுத்து வைக்கிறேன் "என்க
அவனும் "சரி டி "என்று அதை கையில் வாங்கியவன் பின் "ஹே நீ போட்ட coffeeyaa ?"என்க
அவள் "ஆமா ஏன்டா ?"என்க
அவனோ அவளிடம் நீட்டியவன் "முதல்ல நீ குடி அப்பறோம் நா குடிக்குறேன் "என்க
இளவரசியோ மனதில் மகிழ்ச்சியுடன் "பரவால்லயே romancelaam பன்றானே "என்று நினைத்து ஒரு மிடறு குடித்துவிட்டு அவனிடம் கொடுக்க
ராஜா "மயக்கம் ஏதாச்சு வருதா? வயிறு ஏதும் எரியுதா ?உப்பு ஏதும் கரிக்குதா "என்க
அவளோ புரியாமல் "இல்லையே ஏன் ?"என்க
அவனோ "அப்போ சரி உயிருக்கு ஆபத்தில்லப்பா "என்று கூறி குடிக்க
அவளோ அப்பொழுதே அவனின் செயலின் அர்த்தம் புரிய "அடிங் கொய்யால "என்று அவன் மேல் கையில் கிடைத்த scent bottleai எரிய
அவனோ லாவகமாய் கேட்ச் பிடித்தவன் சிரிப்புடன் "ஹே சும்மா விளையாண்டேன் டி ஆனா சும்மா சொல்ல கூடாது coffee செம்மயா இருக்குடி "என்று கூறியபடி வெளியில் சென்றுவிட அவளோ சிரித்தபடி தலையில் அடித்தவள் மீதமிருந்த உடமைகளை எடுத்து வைத்தாள்.
மாறனோ ஏதோ யோசனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தவர் தன் அலைபேசி சினுங்க அதை எடுத்தவன் இலக்கியாவின் எண்ணை பார்க்க ஒரு குறுநகை ஒட்டிக்கொள்ள எடுத்து காதில் வைத்தவன் "சொல்லு லயா "என்று துள்ளலோடு பேச அவனின் மனநிலையை அறிய நினைத்து பதட்டத்தோடு இருந்தவள் அவனின் துள்ளலான பேச்சை கேட்டு சற்று நிம்மதி அடைந்தாள் .
இலக்கியா "ஒண்ணுமில்லப்பா சும்மா தான் .கெளம்பிட்டீங்களா ஊருக்கு ?"என்க
அவனோ "ம்ம் கெளம்பிட்டோம்டா "என்க
அவளோ "அது இளா அப்பா கிட்ட மாமா போன் பண்ணி இப்டி நடந்துருச்சுனு சொன்னாரு போல . அப்பா நம்ம கல்யாணத்த தள்ளி வைக்கலாமான்னு கேட்டாரு?"என்க
அவனோ தீவிரத்துடன்"இல்லை லயா ஊருக்கு போய் குறி கேட்டுட்டு கல்யாண தேதியை எவ்ளோ சீக்ரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் குறிச்சுட்டு வரேன் இதுக்கு மேலயும் எதுவும் குழப்பம் வரதுக்கு முன்னாடி நம்ம கல்யாணம் நடக்குறது தான் நல்லது "என்க
அவனின் குரலில் இருந்த தீவிரம் அவனிற்கு முழுதாய் இல்லை என்றாலும் இந்த திடீர் திருமணத்தின் காரணம் தெரிந்திருக்கின்றது என்று அவளால் உணர முடிந்தது .நேற்று என்ன தான் அவனிற்கு தைரியம் கூறினாலும் அவர்கள் காதலின் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவனின் தமக்கையும் அன்னையும் இந்தளவுக்கு துணிந்த பின் இலக்கியாவின் மனதின் ஓரத்தில் பயம் எழுந்தது என்னவோ உண்மை தான் .வருடக்கணக்காக காதலிக்கவில்லை தான் எனினும் அவனின் காதலை உணர்ந்த நொடியிலிருந்து அவனை கணவனாகவே நினைத்து வாழ்பவளாயிற்றே பயம் எழுவது இயல்பு தான் .
புன்னகைத்தவள் "ம்ம் சரி இளா நீ கெளம்பு அப்பறோம் பேசுறேன் "என்க
அவனோ "ஹே வச்சுராத வச்சுராத "என்று கூறுவதற்கும் அவளிடம் இருந்து போன் பறிக்கப்பட்டது சுஜாதாவால் .சுஜாதா "ஹாய் மாமா "என்று கூற
அவனோ "ஹே சுஜி குட்டி எப்படி இருக்க "என்று கூற இது வரை அமைதியாய் இருந்த சிவாவின் முகம் சுஜி என்ற பெயரை கேட்டதில் ஒரு நொடி பிரகாசித்தது .
சுஜாதா "நல்லா இருக்கேன் மாமா "என்க
பின்னாலிருந்து இலக்கியா "மாமா இல்லடி சித்தப்பா முறைய மாத்துறாளே "என்று சிணுங்குவது கேட்க மாறனோ சிரித்தான்
சுஜாதாவோ "மாமா இந்த சித்தி தொல்லை தங்களை சித்தப்பா சித்தப்பான்னு கூப்பிட சொல்லுது .சின்ன வயசுல இருந்து அப்டி கூப்டுட்டு இப்போ சித்தப்பான்னு எப்படி கூப்டுறதாம் "என்று கூற
மாறன் தலை சீவியபடி பேசியதால் loud ஸ்பீக்கரில் போட்டிருக்க அவளின் சிணுங்களான பேச்சு சிவாவிற்கு சிரிப்பை தான் கொடுத்தது .மனதில் "உனக்கு இப்டிலாம் பேச தெறியுமாடி என்று நினைத்தவன் கைகள் அனிச்சையாய் அவனின் கன்னத்தை வருடியது (வாங்குன அடி அப்டி ).
பின் சிறிது நேரம் அவளிடம் பேசி விட்டு மாறன் வைக்க ஷிவா அதிமுக்கிய கேள்வியாய் மாறனிடம் கேட்டான் .ஷிவா "மாமா "என்றழைக்க
மாறன் "என்னடா ?"என்க
அவனோ "அது ... இலக்கியா அக்கா எனக்கு என்ன முறை வரும் ?"என்க
அவனோ "என்னடா லூசு மாறி கேக்குற அத்தை முறை வரும் இப்போ இளவரசி ராஜாவா கல்யாணம் பண்ணிருக்குறதால அக்கா முறை வரும் "என்க
ஷிவா "அப்போ சுஜாதா உங்களுக்கு என்ன முறை வரும் ?"என்க
மாறன் அங்கேயே அவனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டான் உதட்டில் புன்னகை வர என்னை போல் ஒருவனா ஆனா ரொம்ப fastடா இருக்கானே என்று மனதில் நினைத்தவன் "சுஜாதா எனக்கு மக முறை வரும் உனக்கு அக்கா மக "என்று கூற அவனோ அப்பாடா என்று பெருமூச்சு விட்டவன் மாறன் குறுகுறுவென்று பார்ப்பதை உணர்ந்து இளித்துக்கொண்டே வெளியே நகர மாறனோ சிரித்துக்கொண்டான் வயசுக்கோளாறு என்று நினைத்துக்கொண்டு .
பின் குடும்பத்தோடு அனைவரும் தங்கள் சொந்த ஊரை நோக்கி செல்ல மகிழுந்து வந்து நிற்க மகா முடிந்தளவு இளவரசியை நெருங்க முயல ராஜாவோ முட்டுக்கட்டை போல் அவள் அருகிலேயே இருந்தான் .
மகிழுந்திள் ஏறப்போகும்முன் இளவரசி ஜன்னல் புறம் அமர்ந்து விட மகா அடுத்து ஏறப்போக ராஜா எங்கிருந்து வந்தானோ உள்ளே சென்று அவளை ஒட்டி அமர்ந்தவன் மஹாவை பார்த்து "வா மாமியாரே வந்து உக்காரு "என்க
அவளோ அவனை முறைத்தவள் பின்னால் சென்று அமர்ந்துகொண்டாள் பின் ராஜாவின் அருகில் ஷிவா அமர்ந்துகொள்ள மகிழுந்தும் கிளம்பியது .இரண்டு மணி நேரப்பயணம் தான் அவர்களின் சொந்த ஊரிற்கு செல்ல. இளவரசி அமர்ந்ததும் உறங்கிவிட அவள் தலை ஒவ்வொரு குலுக்களுக்கும் மகிழுந்தின் ஜன்னலில் முட்டியது .
அதை கவனித்த ராஜா அவளின் தலையை திருப்பி தன தொழில் வைத்தவன் அவளை தொழுது அணைத்துக்கொண்டு தலையில் அந்த கையை வைத்துக்கொண்டான் தூக்கம் கலையாமல் இருக்க .இதை கண்டு மாறன் முகத்திலும் சத்யமூர்த்தியின் முகத்திலும் நிம்மதி பரவ மஹாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .அவரவர் அவரவர் சிந்தனையில் மூழ்கிவிட ஷிவாவோ வேடிக்கை பார்த்தபடி வந்தவன் மகிழுந்து தமுக்கம் மைதானத்தை கடக்க நான்கு மாதங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை அசைப்போட்டபடி நினைவுகளில் மூழ்க துவங்கினான் அவன் .(அடுத்ததுலயாச்சு அடி ஏன் வாங்குனனு சொல்லுடா )
epdi pogudhu storynu sollungo
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro