18
அன்று அந்த சம்பவம் முடிந்து வீட்டிற்கு வந்த மாறன் அயர்வாய் கட்டிலில் விழுந்தவன் பின் விழுக்கென்று நிமிர்ந்து "டேய்ய் தம்பி சரக்கடிக்கலாமா ?"என்க
ராஜாவோ அவனை குழப்பமாய் பார்த்தான் .அவன் குடிப்பதே அரிதிலும் அரிது அதிலும் ராஜாவோடு சேர்ந்து குடிப்பது அதனினும் அரிது .மிகவும் சந்தோஷமாக உணருகையிலோ அல்லது மிகவும் சோகமாக உணருகையிலோ மட்டுமே மது அருந்துவான் .இன்று என்ன மனநிலையில் இருக்கிறானோ அவனிற்கே வெளிச்சம் என்று நினைத்தவன் மண்டையை ஆட்டினான் .
பின் மாறன் முன்னேயே படுக்கை விரிப்போடு மேலே சென்றுவிட ராஜாவோ சென்று மது வாங்கி வந்தவன் காவலிற்காக ஷிவாவை தேடினான் .இது அவ்வப்போது நடக்கும் சம்பவம் தான் .அண்ணனும் தம்பியும் எப்பொழுதாவது சேர்ந்து கதைகள் பேசியபடி மாடியில் மது அருந்திவிட்டு படுத்துவிட ஷிவாவோ கோக்கை கையில் வைத்து அவர்களுடன் பேசியபடி காவல் காப்பான் .
அவனை தேடிய ராஜா அதன் பின்னே அவன் என்.சி.சி கேம்ப் சென்று விட்டான் என்பது ஞாபகம் வர தன் தலையிலேயே அடித்துக்கொண்டான் .இப்போ காவலுக்கு என்ன பண்றது ?என்று யோசித்தவனின் கண்ணில் விழுந்தாள் தன கால்கள் இரண்டையும் குத்தவைத்தபடி இரு கைகளாலும் ரெமோர்ட்டை பற்றிக்கொண்டு அந்த ரிமோட்டை தன் நாடிக்கு சப்போர்ட் கொடுத்தபடி வாயை பிளந்தபடி பாடல்களை பார்த்துக்கொண்டிருந்த இளவரசி .
அவளை கண்டவன் வேற வழி இல்ல என்று நினைத்து "அரசி அடியே அரசி " என்று அழைக்க அவளோ சொரணையே இல்லாமல் கருமமே கண்ணாயினாராய் தொலைக்காட்சியில் மூழ்கிப்போய் இருந்தாள்.
"அட அரிசி மூட்டை" என்று தலையில் அடித்துக்கொண்டவன் பைக் சாவியை அவள் தலை மேலே போட அது சரியாய் அவளது நடு மண்டையில் சென்று விழுந்தது .
அம்மா என்றபடி தலையை தேய்த்தவள் அங்கிருந்த ராஜாவை கண்டு முறைத்தவாறு அருகில் வந்தவள் "என்னடா உனக்கு பிரச்னை ?"என்க
அவனோ தன் மார்பளவே வளர்ந்திருந்த அவள் தலையில் மீண்டும் கொட்டியவன்"கூப்பிட்டா வரமாட்டியோ" என்றவன் பின் சுற்றி முற்றி பார்த்துவிட்டு "உன் மாறப்பனும் நானும் சரக்கடிக்க போறோம் கொஞ்சம் மேல வாயேன் "என்க
அவளோ "அதுக்கு எதுக்கு டா நா ?"என்க
அவனோ "ஆங் கம்பெனி குடுக்க .அடியை அரிசி மூட்டை உன் அப்பத்தா பாத்துச்சுனு வையி நல்ல செந்தமிழ்ல பேச ஆரம்பிச்சுரும் சோ ப்ளீஸ் கோ ஆபரேட் பண்ணுடி "என்க
அவளோ சிறிது யோசித்தவள் "உனக்காக இல்லேன்னாலும் என் மாறப்பாவுக்காக வரேன் "என்க
அவனோ அவளின் கொழுகொழு கன்னங்கள் இரண்டையும் பிடித்து இழுத்தவன் "அரிசி மூட்டைனா அரிசி மூட்டை தான் "என்று விட்டு மேலே சென்று விட அவளோ தலையில் அடித்துக்கொண்டவள் இரண்டு பேரிற்கும் உணவையும் எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.
மாறனோ ராஜா வந்ததும் புன்னகைத்தவன் பின்னே இளவரசி வந்ததும் பதறினான் .ராஜாவிடம் திரும்பி அவனை முறைத்தவன் இளவரசியிடம் திரும்பி "குட்டிமா நீ ஏன்டா இங்க வந்த நீ கீழ போடா "என்க
அவளோ அவனை கேவலமாய் முறைத்தவள் "மாமா நா ஒன்னும் சின்ன புள்ள இல்லை பதினாறு வயசாச்சு.அப்பதாகிட்ட மாட்னா அது தோலை உரிச்சுரும் வாய மூடிட்டு உக்காரு "என்க
அவனிற்கு சற்று சங்கடமாகவே இருந்தது மகளை போல் வளர்த்தவளின் முன் மது அருந்திட .எனில் ராஜாவோ ஒன்றையும் பற்றி கவலைப்படாமல் அதிலிருந்த ஒரு பாட்டிலை எடுத்தவன் குடிக்க ஆரம்பித்து விட்டான் .
பின் மாறனும் குடிக்க இளவரசிக்கு கோக் தரப்பட்டது .
ராஜா "இன்னிக்கு என்னண்ணே நடந்துச்சு ?"என்க
மாறனோ "சிரித்தவன் உன் அண்ணி இருக்காளே ......"என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறி முடிக்க
இளவரசியோ "அப்டி போடு அக்காவா கொக்கா .என்று மாறனின் புறம் திரும்பியவள் ஏன் மாமா எப்போ தான் அக்கா கிட்ட உங்க காதல் விஷயத்த சொல்லுவீங்க? "என்க
அவனோ அவள் தலையை பிடித்து அழுத்தியவன்"சொல்றேன்டா குட்டிமா இந்த தடவ ராமன் விடுமுறைக்கு வரேல dairectaa அவன் கிட்டயே சொல்றேன் "என்க
அவளோ "என்னவோ நீயோ இவனோ யாரோ சீக்ரம் கல்யாணத்த பனி தொலைங்க எனக்கு பாத மூஞ்சிகளையே பார்த்து பார்த்து போர் அடிக்குது "என்க
ராஜாவோ போதையிலேயே"கவலைப்படாத அரிசி மூட்டை அண்ணன் கல்யாணம் முடுஞ்சதும் நம்ம கல்யாணத்த முடுச்சுரலாம்"என்று உலர
இளவரசியோ சிரித்தவள் "லூசு மாமா குடிபோதைல என்ன கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்றடா லூசு பயலே "என்று அவனை மிதிக்க அவனோ அதற்குள் உறக்கத்திற்கு சென்றிருந்தான் .
பின் தலையில் அடித்துக்கொண்டவள் "மாமா நீ சாப்டுட்டு இந்த குரங்குக்கும் மிச்சம் வச்சுட்டு தூங்கு நடுராத்திரி எந்திரிச்சு பசிக்கும்னு உக்காருவான் "என்க மாறனும் சரி என்று தலை அசைத்தவன் எப்பொழுதும் போல் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை கீழே அனுப்பி வைத்தான் .
நாட்கள் அதன் போக்கில் செல்ல அந்த சம்பவத்தின் பின் ராமன் இலக்கியாவிற்கு தெரியாமல் இரண்டு மூடன்று வரன்களை ஏற்பாடு செய்ய அனைவரும் ஓடி போனவள் தங்கை என்ற பழியையே சொல்லி சொல்லி அவளை தட்டி கழித்து வந்தனர். இரண்டு மாதங்கள் கடந்திருக்க ராமனோ விடுமுறைக்கு ஊரிற்கு வந்திருந்தான் தனது மனைவியுடன் .கலா அப்பொழுது மூன்று மாதம் கருவை சுமந்திருந்தாள்.அவளிற்கென சில பழங்களை வாங்கியபடி நண்பனை இரவு ஏழரை மணி போல் பார்க்க வந்தவன் வீட்டிற்குள் சென்றான் .
உள்ளே வீட்டிற்குள் சென்றவன் "ராமா "என்றழைக்க
உள்ளிருந்து வந்த கலாவோ அவனை பார்த்து புன்னகைத்தவள் "அவரு இங்க இல்லன்னா ஏதோ வேல விஷயமா சிவகங்கை வரைக்கும் போயிருக்காரு "என்க
அவனோ அவள் கையில் தான் வாங்கி வந்திருந்த பழங்களை கொடுத்தவன் "ஓ அப்டியா தங்கச்சி சரிமா அப்போ நா நாளைக்கு வரேன் .இந்த கவர்ல பழம் இருக்கு ஜுஸ் போட்டு குடிமா"என்று
திரும்ப கலாவோ"சரிண்ணே"என்று புன்னகை முகமாய் கூறியவள் பின் சற்று தயங்கியவள் "அண்ணா "என்றழைத்தாள்
அவன் திரும்ப "அது அண்ணா இலக்கிய இன்னைக்கு ஏதோ டிரைனிங்குக்காக காளவாசல் வரைக்கும் போனா .இன்னும் வரல.நைட் ஆயிருச்சு கொஞ்சம் கூட்டிட்டு வர முடியுமா அண்ணா ?"என்று தயங்கியபடி கேட்க
அவனோ "இந்தா போறேன் என் செல்ல குட்டிய கூப்பிட "என்று மனதில் நினைத்தவன் அவளிடம் தான் அழைத்து வருவதாக கூறி அவளின் எண்ணிற்கு அழைப்பு விடுத்தான் .
இரண்டு ரிங்கிலேயே எடுத்தவள் "இளா என்ன இந்நேரம் கால் பண்ணிருக்க ?"என்க
அவனோ "எங்கே இருக்க ?"என்று கேட்க
அவளோ "காலவாசலுக்கு ஒரு டிரைனிங்குக்காக வந்தேன்பா இப்போ பஸ்ஸ்டாண்ட்ல நிக்குறேன் "என்க
அவனோ "அங்கேயே நில்லு நானே வந்து கூப்டுக்குறேன் "என்க
அவளோ "ம்ம் சரி பா"என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.அவள் மனதில் எண்ண அலைகள் அலை மோதிக்கொண்டிருந்தது .நேற்றைய தினத்திற்கு அவளின் எண்ணங்கள் சென்றது .
சங்கரர் சாய்வாய் நாற்காலியில் அமர்ந்திருக்க அவரிற்கு வற்புறுத்தி வற்புறுத்தி உணவைக் கொடுத்துக்கொண்டிருந்தாள் இலக்கியா.சங்கரர் ஒரு வழியாய் சாப்பிட்டு முடித்தவர் வாயை துடைத்தவள் தட்டை போட்டு விட்டு வர சங்கரரோ "இலக்கியா "என்று அழைத்தார் .
அவரின் அருகில் சென்றவள் கையை துடைத்தவாறே "என்னப்பா ?"என்று கேட்டவாறு அவர் காலடியில் அமர
அவரோ அவளின் தலையை வருடியவர்"அது அப்பாவுக்கு ஒன்னு தோணுது அதை சொல்லுவேன் ஆனா திட்ட கூடாது "என்று பீடிகை போட
அவளோ "சொல்லுங்கப்பா "என்க
அவரோ "அது... வந்தும்மா மாறான பத்தி நீ என்ன நெனைக்குற ?"என்று கேட்டார்
அவளோ தயங்காமல் சிரித்தவள் "அட அசடு அப்பா இதுக்கு தான் இவ்ளோ சொன்னீங்களா?மாறன் .... எனக்கு ஒரு ரொம்ப நல்ல friend அதையும் தாண்டி ஒரு நல்ல வழிகாட்டி .அவன் எனக்கு தேவையான நேரத்துல நண்பன் தேவையான நேரத்துல அம்மா அப்பப்போ அப்பா .என்னை என்னை விட அதிகமா புருஞ்சுகிட்டவன் அவன் ஏன் கேக்குறீங்க ?"என்க
அவரோ மகளின் பதிலில் முகம் மலர்ந்தவர் "அப்போ ஏன் மா அவனை நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது "என்க
அதுவரை மலர்ந்த முகம் சட்டென்று வாடி விட கோபத்தை தத்தெடுத்துக்கொண்டாள் "என்னைய பாக்கியான்னு நேனைசீங்களா அப்பா ?"என்க
அவரோ "அய்யயோ அப்டி இல்லம்மா .அப்பாவுக்கும் உடம்பு சரி இல்லடா எப்போ வேணாலும் நா சாகலாம் "என்க
அவளோ அவசர அவசரமாய் வாயை மூடினாள் "என்னப்பா பேசுறீங்க "என்று
அவரோ அவளின் கையை விளக்கியவர்"உண்மையா தான்டா சொல்றேன் டாக்டர் இன்னும் ரெண்டு வருஷம்னு தேதி குறிச்சது எனக்கும் தெரியும் .நா உன்னைய கட்டாய படுத்தல உன் மனச தெருஞ்சுகிட்டா தான் நா அடுத்து ஏதாச்சும் பண்ண முடியும் .உன் அக்கா விஷயத்துல பண்ண தப்பையே உனக்கு பண்ண விரும்பல டா நான் "என்று கூறி விட்டு எழ அவளும் படுக்கையில் வந்து விழுந்தவள் யோசித்தாள்.
அவன் தன்னை அனுசரித்து போவது ,தன்னிடம் கோபப்படுவது ,உரிமையாய் நடந்து கொள்வது, தவறு செய்தாலும் பொறுமையாய் அவளின் முன்கோபப்புத்தியை புரிந்து வைத்துக்கொண்டு குழந்தைக்கு சொல்வதை போல் சொல்வது என அனைத்துமே அவனை திருமணம் செய்துகொண்டால் வாழ்வு சிறக்கவே செய்யும் என்று அடித்து கூறியது .எனில் திருமணத்திற்கு அடித்தளமான காதல் ?அது அவளிடம் இல்லையே .என்று நினைத்தவள் பின் உறங்கிவிட்டாள்.இன்று காலையிலிருந்தே அதே நினைவில் இருந்தவள் என்னை முடிவெடுப்பது என்று தெரியாமல் இருந்தாள் .அப்பொழுது மாறன் அழைக்க அவனிடம் பேசிவிட்டு வைத்தவள் அவனின் வரவிற்காக காத்திருந்தாள்.
கிளம்பியவன் அவளை பார்க்க பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியிலேயே மழை நன்றாக பிடித்துக்கொண்டது .பின் அவளை தூரத்திலேயே கண்டுகொண்டவன் அவள் அருகில் சென்றான் அவள் அவனை கண்டதும் புன்னகை முகமாய் கீழே வர அவள் அணிந்திருந்த சேலையோ மழையில் நனைந்து அவளின் உடலோடு ஒட்ட ஆரம்பித்தது .
அதை பார்த்து பதறியவன் தன் வண்டியில் எப்பொழுதும் வைத்திருக்கும் ரெயின் கோட்டை எடுத்து அவள் புறம் நீட்டினான் .அவன் தலையை குனிந்தவாறு "இதை போட்டுட்டு உக்காரு லயா"என்க
அவளை கீழே குனிந்து பார்த்தவள் மறுபேச்சின்றி வாங்கிக்கொண்டாள் .ஒரு சிறு புன்னகையும் தூண்டியது அவனின் கண்ணியத்தை நினைத்து .பின் அவனின் வண்டியில் அமர்ந்தவள் யோசித்தவாறே வந்தாள்.
அவள் இது வரை யோசித்திராத கோணத்தில் இலக்கியாவை அவளின் மூளை ஏனோ இன்று யோசிக்க வைத்து .அதாவது மாறனிற்கு தன் மேல் காதல் இருக்குமோ? என்று அவள் யோசிக்க இது வரை அவள் கருத்தில் பதியாது போன அவனின் காதல் நிறைந்த புன்னகை முகத்துடன் கூடிய பார்வைகள் வரிசையாய் கண் முன் தோன்றியது .முதல் முதலாய் application வாங்க சென்ற பொது பார்த்தது ,கோவிலில் அவள் பணத்தை தரும்பொழுது பார்த்தது ,ராமனின் திருமணத்தின் பொழுது பார்த்தது,விஷ்ணுவின் தாயார் அவளை பெண் கேட்ட போது அவனின் கண்ணில் தோன்றிய வலி அனைத்தும் அவளின் சந்தேகத்தை வலுக்க அதுவே அவளிற்கு ஒரு முடிவை கொடுத்தது .
அவள் யோசித்து முடிக்கும் பொழுது வீடும் வந்திருக்க அவனின் "லயா வீடு வந்துருச்சு "என்ற சொல்லில் நினைவிற்கு வந்தவள் இறங்கி அவனை பார்த்து "இளா "என்க
அவனோ என்ன என்று பார்க்க அவளோ பட்டென்று "கல்யாணம் பண்ணிக்கலாமா ?"என்று கேட்க அவனோ திக்ப்ரம்மை பிடித்தவன் போல் அதே இடத்தில சிலையாய் சமைந்திருந்தான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro