ஈரம்-8
அபிமன்யு ஜீப்பை ஓட்டிக் கொண்டிருக்க அவனருகில் இன்னும் தூங்கும் எயினிக்கு தட்டி கொடுத்தபடி அமர்ந்திருந்தான் ஸ்டீஃபன். முதலில் அந்த சர்வதேச வங்கிக்கு செல்ல முடிவெவுத்திருந்த அபிமன்யு ஸ்டீஃபனிடம் கல்யாண் பற்றிய விபரம் அடங்கிய காகிதத்தை கொடுத்திருந்தான். அதில் வரி வரியாய் படித்து கொண்டே வந்த ஸ்டீஃபன் திடீரென அவன் செல்பேசி அலரவும் வேகமாய் எடுத்து அழைப்பை ஏற்று விட்டு அப்புறமுள்ளவரிடம் கூட பேசாமல் எயினியை சோதிக்க அதை அறிந்திருந்ததை போல ஸ்டீஃபனின் செல்பேசியை வாங்கி காதில் வைத்தான் நம் நாயகன்.
ஸ்டீஃபன் : என்னாச்சு அபி ஸர்?? எங்க போறோம் நாம?? மேம்பாலம் போலையா??? என பாதையை திடீரென மாற்றும் அபிமன்யுவை பார்க்க ஸ்டீஃபனின் செல்பேசியை அருகில் வைத்த நம் நாயகன்
அபிமன்யு : அதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போகனும் ஸ்டீஃபன். பக்கம் தான். கான்ஸ்ட்டபில் தெளிவா சொல்லாம ஃபோன கட் பண்ணீட்டாரு.
ஸ்டீஃபன் : சரி போய் பாக்களாம். இந்த கல்யாண் பையன் ஃபேமிலிக்கிட்ட எதாவது விசாரிச்சீங்களா அபி ஸர்??
அபிமன்யு : காலைல போய் பாத்துட்டு வந்தேன் ஸ்டீஃபன். அவங்களுக்கு அம்மா இல்லையாம். அப்பா மட்டும் தான். மூணு நாள் ஆச்சாம் வீட்டுக்கு வந்து. அவங்க தங்கச்சி தான் ரொம்ப பயந்து போயிருக்காங்க.
ஸ்டீஃபன் : இந்த வயசு பசங்க ஏன் காணாம போறதையே வேலையா வச்சிருக்காங்களோ தெரியல.
அபிமன்யு : இன்னைக்கு கன்ட்ரோல் சென்ட்டருக்கும் போகனும் ஸ்டீஃபன். போய் இரெண்டு ஃபூட்டேஜ் வாங்கனும்.
ஸ்டீஃபன் : இரெண்டா???
அபிமன்யு : ஒன்னு கல்யாண் கேசோடது. இன்னோன்னு கல்யாணி கேசோடது.
ஸ்டீஃபன் : கல்யாணி கல்யாண் பரவால்லையே பேரு ஒரே மாரி இருக்கு.
அபிமன்யு : ஸ்டீஃபன் என அதட்டுவதை போல் கூற ஹிஹிஹி என அசடு வழிய அந்த காகிதத்தோடு இருந்த கல்யாணின் புகைபடத்தை ஸ்டீஃபன் பார்க்கவும் அபிமன்யு அவன் கூறிய இடத்தை நெருங்கியிருந்தான்.
ஸ்டீஃபன் : அட இந்த முகத்த நா முன்னாடியே பாத்துட்டேன் போலையே.. என புகைபடத்தை விட்டுவிட்டு வேறெற்கோ பார்த்தபடி குரல் கொடுக்க அபிமன்யு அவனை நோக்கினான்.
அபிமன்யு : என்ன ஸ்டீஃபன் சொல்றீங்க இந்த பையன் யாருன்னு உங்களுக்கு தெரியிதா???
ஸ்டீஃபன் : நிமிர்ந்து பார்த்தா உங்களுக்கே தெரியும் அபி ஸர்.
அபிமன்யு : என்ன சொல்றீங்க ஸ்டீஃபன்???
ஸ்டீஃபன் : அந்த மரத்துல தொங்குதே அந்த பாடி தான இது என அபிமன்யுவின் முகத்தை மேலே நிமிர்த்த இருவரின் பார்வையும் இன்னும் மரங்களின் நீண்ட கொடிகளில் பிண்ணிப் பிணைந்திருந்த கல்யாணின் பிணத்தின் மீது விழுந்தது.
அங்கு கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவில் இன்னும் க்ரிஸ்டோஃபர் நடுக்கமெடுக்காத குறையாக சற்றுத் தள்ளி அமர்ந்திருக்க அவரின் பார்வையோ அவரது கார் மீது மோதியபடி தொங்கிக் கொண்டிருந்த கல்யாணின் சவத்தின் மீதே இருந்தது. ஏற்கனவே அங்கு வந்திருந்த சில காவலர்கள் கூட்டத்தை விலக்கிய சில நேரத்தில் சிலர் மரத்திலிருந்து அவனது உடலை பத்திரமாய் தரைக்கு அப்புறப்படுத்தினர்.
எயினியை பின் இருக்கையில் படுக்க வைத்து விட்டு அபிமன்யு மற்றும் ஸ்டீஃபன் பிணமிருக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.
ஸ்டீஃபன் : யோவ் யாராவது அம்புலன்ஸுக்கு ஃபோன் போட்டீங்களா??? யாரு இத முதல்ல பாத்தது?? என கூட்டத்தை நோக்கிக் குரல் கொடுக்க காவலர்களை கண்டதும் சத்தமெழுப்பாமல் நழுவ நினைத்த சிலருள் ஒருவர் ஸ்டீஃபனின் முதல் கேள்விக்கு பதில் கூறி விட்டு இரண்டாம் கேள்விக்கு ஓரமாய் அமர்ந்திருந்த க்ரிஸ்டோஃபரை காட்டினார்.
அவரை அங்கே சற்றும் எதிர்பார்த்திராத ஸ்டீஃபன் முளியாய் முளிக்க சரியாக அந்த இடத்தை அபாய ஒலியுடன் வந்தடைந்தது அம்புலன்ஸ். அதிலிருந்து வேகமாய் கீழிறங்கிய ஒரு மருத்துவர் வேகவேகமாய் தன் வேலையை பார்க்க ஓடினார்.
கல்யாணின் உடலை திருப்பவே முணைந்தவர் அவனின் கோரமான முகத்தை கண்டு பதறியடித்து இரண்டடி பின்னே தள்ளி விழுந்தார். அதை கண்டதும் உடனே அபிமன்யு அவருக்கு உதவ முன் வந்தான். தலையை இரண்டுக்கு மூன்று முறை சிலிப்பு கொண்டு முகம் வெளிர கல்யாணை நோக்கினார் அந்த மருத்துவர்.
அப்போதே அபிமன்யுவும் அந்த குரோதமான காட்சியை கண்டான். கல்யாணின் கண்களிரண்டும் திறந்த நிலையிலிருந்தாலும் அதில் உண்மையில் இரு விழிகளும் இருக்கவில்லை. அவனின் காதோரம் நெற்றியோரம் வழிந்திருந்த காய்ந்த இரத்தம் பரிசோதனையின்றியே விதவிதமான கதை பேசியது.
பிடுங்கப்பட்ட அவனின் கண்கள் அபிமன்யுவின் மனதை ஒரு நொடி உருக்கியது. அந்த ஒரு விஷயமே கல்யாணி மற்றும் கல்யாண் இருவரின் கொலைக்கும் சம்பந்தம் இருக்குமோ என எண்ணத் தொடங்கியது அவன் மூளை.
அவன் காலும் கைகளும் ஏதோ உடைத்து நொருக்கியதை போல் வெவ்வேறு கோணத்தில் முறுக்கியிருக்க இன்னமும் அவனின் கழுத்ததோரமாய் ஏதோ ஒன்று சொருகிக் கொண்டிருந்தது.
அரை மணி நேரத்தில்
அங்கு கூடியிருந்த பெரும்பாலான கூட்டத்தை கலைத்து விட்டு ஸ்டீஃபன் மற்றும் அபிமன்யு அங்கு ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என அந்த இடத்தையே சுற்றி அலசி கொண்டிருந்த நேரம் ஒரு காவலர் அபிமன்யுவை அனுகி பத்திரிகைக்கு விஷயம் தெரிந்து விட்டதாய் கூறினார்.
அபிமன்யு : ஸ்டீஃபன் இங்க வாங்க என இவன் மறுபுறமாய் சென்று கொண்டிருந்த ஸ்டீஃபனை கத்தி அழைக்க ஸ்டீஃபன் மட்டுமல்லாது கல்யாணின் உடலை பரிசோதித்திருந்த மருத்துவரும் அபிமன்யுவை நோக்கி வந்தார்.
ஸ்டீஃபன் : என்னாச்சு அபி ஸர்?? என்ற அவனின் கேள்விக்கு ஒரு பதில் தரும் முன் அபிமன்யுவிடம் பேசத் தொடங்கியிருந்தார் அம்மருத்துவர்.
மருத்துவர் : ஸர் இது எல்லைக் கோட்ட ரொம்பத் தாண்டி போய்ட்டு இருக்கு. தயவு செஞ்சு இந்த கொலைகாரன கண்டுப்புடிங்க.
அபிமன்யு : என்ன டாக்டர் சொல்றீங்க?
மருத்துவர் : இதெல்லாம் எப்டி ஸர் சொல்றது?? என்னால எதையும் யோசிக்கக் கூட முடியல. ஒரு இரெண்டு மூணு நாள் கட்டி வச்சிருந்துருக்காங்க போல உடம்புல கையிறோட தடையம் நிறையா இருக்கு. இரெண்டு கையோட மணிக்கட்டையுமே ஆழமா கிளிச்சிருக்காங்க. ஆனா அவரு உடம்புல இரத்தத்தோட வேற ஏதோ கலந்துருக்கு. கழுத்துல ஒரே ஒரு கத்தி குத்தியிருக்கு. கண்ணு தான்-
அபிமன்யு : போதும் டாக்டர். நீங்க பாடிய ஹாஸ்பிட்டலுக்கு எடுத்துட்டு போங்க. நாங்க பின்னாடியே வரோம். என அவன் கூறி முடிக்கவில்லை அங்கு விரைந்து வந்து நின்றது பத்திரிகை நிபுனர்களின் வாகனங்கள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் பச்சக் பச்சகென அவர்கள் அந்த இடத்தையே படம் பிடித்திருக்க ஒரு நாழைந்து பேர் வேகமாய் அபிமன்யுவிடம் ஓடி வந்தனர் நான்கைந்து மைக்குகளை நீட்டி கொண்டு.
" கொலை செய்யப்பட்டவர் யாருன்னு கண்டுப்புடிச்சீங்களா ஸர்?? "
" இதுக்கும் கல்யாணி கொலைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?? "
" இந்த கொலை நடந்து எவ்வளவு நேரமாச்சு? "
" கொலையாளி யாரு?? "
" இப்டி தொடர்ந்து கொலை நடந்தா மக்கள் சுதந்திரமா வெளியவே நடமாட முடியாதா?? " என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் கேள்விகளை எழுப்ப அதற்கு அபிமன்யுவிடமிருந்து பதில் எழுந்ததோ இல்லையோ பத்தடி தூரத்தில் காருக்குள் உறங்கிக் கொண்டிருந்த எயினி தூங்கி எழுந்திருந்தாள்.
ஒரு சிலர் க்ரிஸ்டோஃபரையும் அனுகி அவரிடம் விதவிதமாய் கேள்வி எழுப்ப அவரோ " நா இந்த வழியா வந்தப்போ பாத்தேன். மத்தபடி எனக்கு வேற எதுவும் தெரியாது " என கை விரித்து விட்டார்.
அபிமன்யு ஒரு பத்து நிமிடத்தில் எந்த பதிலும் கூறிவிடாமல் கல்யாணின் உடலையும் அப்புறப்படுத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
" சங்கீத சுவரத்திற்கு அன்புடன் வரவேற்பது நான் உங்கள் விக்ராந்த். இடைவேளை முடிந்து எல்லாரும் வந்தாச்சு. சரி சரி வாங்க அடுத்து யாரு பாடப் போறாங்கன்னு பெயர் குலுக்கிப் போட்டு பாப்போம். யம்மாடி ரம்யா நீ தான் வரப் போற போலருக்கு ரெடியா இருந்துக்கோ. உன் ஆப்பனென்ட்டு நம்ம மகாலட்சுமியா தான் இருக்கும்னு நினைக்கிறேன் " என்றபடியே நிகழ்ச்சி அமைப்பாளனான அவன் மிகவும் உற்சாகமாய் பாடகர்களை சிரிக்க வைத்து கொண்டே அந்த குடுவையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்தான்.
அனைவரும் யார் பெயர் போட்டிருக்கிறதென ஆர்வமாய் அவனை நோக்க அவனோ " யம்மா ரம்யா நீ தப்பிச்சிட்ட, தோ இப்போ பாடப் போறது வேற யாரும் இல்லப்பா போன செட்டுல குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்கித் தரலன்னா கூட அழகா கொழந்தங்களாட்டும் இருக்குங்கன்னு நெனச்சு இப்போ ஒரு குச்சிமிட்டாய காமிச்சா அடிச்சு மண்டையையே பிச்சுக்குவாங்கன்னு தெரிய வந்த நம்ம கிலியோபட்ரா சகோதரிகள் தான் " என அவன் உற்சாகமாய் கூறி கை தட்ட அனைவரின் சிரிப்பொலியுடன் எழுந்த கரகோஷத்தோடு நம் பெக்யூரா தோழிகள் அவனை கண்டு விளையாட்டாய் முகத்தை சுருக்கினர்.
" ஹலோ அண்ணா எங்கள என்ன சொன்னீங்க?? " என ப்ரின்சி சண்டைகோழியை போல் சிவக்க விக்ராந்த்தோ " அட அதான் மா இதுல போற்றுக்கு " என மெதுவாய் பின்னே நகர " எங்க அத காமிங்க " என லினா முன் வந்து மேடையில் கால் வைத்ததும் விட்டால் போதுமென விக்ராந்த் ஓடியிருந்தான்.
இவர்கள் சிரித்து கொண்டே பாட்டை தொடருவதற்காய் தயாராய் நின்ற அந்த நேரம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடுதிபுவென நடுவில் புகுந்து நிகழ்ச்சியை சட்டென நிறுத்தினார் அந்த நிகழ்ச்சியின் டரெக்ட்டர்.
மருத்துவமனையில் க்ரிஸ்டோஃபரை பேசி வீட்டிற்கே அனுப்பியிருந்த அபிமன்யு கொட்ட கொட்ட வருவோர் போவோரை பார்த்தபடி இன்னும் தூக்கம் கலையாமலிருந்த எயினியை தூக்கி வைத்திருந்த ஸ்டீஃபனை நோக்கிச் சென்ற நேரம் அவர்களை நோக்கி எங்கிருந்தோ வேகமாய் வந்தார் ஒரு காவலர்.
அவர் கூறியதை பின் தொடர்ந்து அங்கு காக்கிச் சட்டையில் நிமிர்ந்த தோற்றமாய் அபிமன்யுவை நோக்கி வந்தான் ஒருவன். அவனை காட்டி அந்த காவலர் ஏதோ கூறியதும் அபிமன்யு மற்றும் ஸ்டீஃபன் அவனை கண்டு சல்யூட் அடிக்க இவர்கள் எதிர்பார்க்காத வகையில் அந்த வணக்கத்தை திருப்பி தந்த அவ்விளைஞன் " தொடர் கொலை விஷயமா இன்னைக்கு நீங்க மீட்டிங் வைக்க போறதா சொன்னாங்க. நா நேராவே உங்கள பாக்க வந்துட்டேன். நீங்க சொன்ன கல்யாணிங்குரவங்கள கொலை செய்தது போலவே போன வாரம் ஒருத்தரோட கண்ணத் தனியா பிடுங்கி கொலை பண்ணீருக்காக. கொலை செய்யப்பட்டவர் பேரு சம்பத் " என கூறினான்.
அபிமன்யு : தன்க்ஸ் ஃபார் கம்மிங். ஐம் அபிமன்ய ஷேக்கர். இவரு ஸ்டீஃபன் என நம் நாயகன் முதலில் தங்களை அறிமுகம் செய்து கொள்ள அவனும் " ஹோ, உங்கள பாத்ததுல சந்தோஷம். ஐம் ஹரீஷ் விபுன் அசிஸ்டன்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ். " என்றான் நம் நாயகன் முன் நின்றிருந்த ஹரீஷ்.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro