ஈரம் - 7
நட்டநடு ராத்திரியில் அந்த அறையில் அமர்ந்து அங்குமிங்கும் நடந்தபடி பல செய்தி தாள்களில் எதை எதையோ சிகப்பு பேனாவால் குறித்து கொண்டிருந்தான் ஸ்டீஃபன். அவன் உறங்கியிருப்பானென அபிமன்யு நினைத்திருக்க இவனிங்கு சொட்டுத் தூக்கமில்லாமல் பேய் போல் அலைந்து கொண்டிருந்தான்.
விதவிதமான செய்திகளை குறித்து கொண்டிருந்தவன் தீவிரமாய் கல்யாணியை பற்றிய செய்தியை அந்த சிகப்புப் பேனாவால் அழுத்தி ஏதோ கிருக்கிக் கொண்டிருக்க சட்டென அவனின் பின் ஏதோ ஒரு சத்தம் கேட்டது.
மின்னலென தலையை அந்த புறமாக திருப்பிய ஸ்டீஃபன், பேனா பிடித்திருந்த கையை கீழிறக்கி விட்டு மெதுவாய் அந்த அறையின் வாசலுக்குச் சென்றான். ஒரு மையான அமைதி நிலவிய அவன் வீட்டில் வேகமாய் சுற்றும் மின்விசிறியயின் ஓசை மட்டுமே கேட்க அதற்கிடையே ஏதோ ஒன்று அவனது செவியை எட்டியது.
அந்த அறையின் அருகிலிருக்கும் அறையின் கதவு பாதி திறந்திருப்பதை கண்டதும் முழுதாய் திறந்து கொண்டு அதற்குள் சென்றான்.
அங்கு வாயை மூடி மூடித் திறந்தபடி பஞ்சு போலிருந்த ஒரு தலையணையை பிடிக்கத் தெரியாமல் பிடித்து கொண்டு உலகே அறியாமல் உறங்கிக் கொண்டிருந்தாள் எயினி. அவளின் நெற்றியை வருடியவன் பின் சத்தமெழுப்பாமல் அந்த அறையை விட்டு வெளியேறி கதவை அகல திறந்து வைத்து விட்டு மீண்டும் அவனிருந்த அறைக்குள்ளே செல்லத் திரும்பினான்.
ஆனால் மீண்டும் அவன் அதே இடத்தில் நிற்க, அவனின் கழுத்தில் எங்கிருந்தோ காற்றுத் தீண்டுவதை உணர்ந்து மெதுவாய் திரும்பி நோக்கினான். அவன் வீட்டின் பின் கதவு மட்டும் திறந்திருந்து வைக்கப்பட்டிருந்தது.
அதை கண்டு கண்களை அகல விரித்த ஸ்டீஃபன் வேகமாய் அவன் செல்லவிருந்த அறை கதவை பூட்டி விட்டு பின் வாசலை நோக்கி ஓடினான்.
ஸ்டீஃபன் வெளியே வந்த நேரம் அவன் பின்னிருந்து யாரோ அவனை பிடித்து சுவற்றில் இடிக்க தடுமாறி ஒரு கையை சுவற்றில் ஊன்றிய ஸ்டீஃபனின் வலது கையை நகர விடாமல் திருப்பி அவனின் முதுகில் முறுக்கினான் பின்னிருந்த ஒருவன்.
அவனை பார்க்க இயலாமல் முகம் சுவற்றில் பதிய நின்றிருந்த ஸ்டீஃபனின் மூளை அவனுக்கு கட்டளை பிறப்பிக்கும் முன்பாகவே ஸ்டீஃபனின் இடது கரம் மின்னல் வேகத்தில் நகர்ந்து அவனிடமிருந்த அந்த சிகப்பு பேனாவை பின்னிருந்தவனின் கழுத்தில் சரக்கென இறக்கியிருந்தது.
அந்த அதிர்வில் தலை தூக்கி போட ஸ்டீஃபனை விட்ட அவன், கழுத்தை பிடித்து கொண்டு பின்னே நகர்ந்தான். ஸ்டீஃபன் திரும்புவதற்கும் முன்பாக அவன் அந்த பேனாவை பிடுங்கி எறிந்து விட்டு இரத்தம் பீரிட உயிரை பிடித்து கொண்டு தப்பி ஓடினான்.
ஸ்டீஃபன் தட்டுத் தடுமாறி தன் கழுத்தை பிடித்தபடி ஓடும் அவனை பார்த்தான். தன்னை தானே கடிந்து கொண்டபடி கீழே கிடந்த பேனாவை எடுத்து கொண்டு தன் வீட்டிற்குள் சென்று பின் கதவை அடித்து மூடினான். இரவு எயினியை தூங்க வைத்து விட்டு வந்தவன் தான் தூங்கும் போது வீட்டின் கதவை சாத்த நினைத்திருந்தான். அவன் தான் தூங்கச் செல்லவே இல்லையே.
ஸ்டீஃபன் : எந்த நாயோ தெரியல, என் பேனாவ வச்சு என்ன செஞ்சான்?? இருந்த ஒரு பேனாவும் போச்சு என தனக்குள்ளே முகம் தெரியாதவனை வருத்தபடி அந்த பேனாவை கழுவி குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு கடுப்பில் வீட்டை பூட்டி கொண்டு அந்த ராத்திரியில் எங்கோ வெளியே சென்றான்.
" எ-ன்ன என்-ன பண்ண?? எனக்கெ-ன்னடா ஆ-குது?? " என கண்களை திறக்கவும் இயலாமல் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை வைத்து கோர்வையாய் பேசவும் இயலாமல் உளறிக் கொண்டிருந்த கல்யாணின் முன் அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து ஒரு கதிரையில் அமர்ந்து இப்போதும் ஒரு காலை தூக்கி கையை அந்த கால் மீது வைத்து கொண்டு அவனை பார்த்தார் அந்நபர்.
அவர் இப்போதும் எதுவும் கூறவில்லை. கலையற்று சிவந்திருந்த தன் விழிகளில் ஆனந்த கண்ணீர் தேங்க அமர்ந்திருந்தார் அந்நபர். இன்னும் கல்யாணின் வெட்டப்பட்ட மணிக்கட்டில் அந்த குழாயின் வாயிலாக அந்த திரவும் ஊற்றுக் கொண்டே தான் இருந்தது.
" ப்யோரமஸ்டைன். அது. உடம்புக்குள்ள. போனா அப்டி தான் இருக்கும் " என முதல் முறையாய் அந்நபர் தனது மெல்லிய குரலில் கூறினார். குரல் தெளிவாகக் கூட கேட்காத போதிலும் அக்குரல் கூறிய அந்த ஒரு பெயர். அது தான் அவனை உருகுழைய வைத்தது.
" இ-இல்ல. இல்-ல " என கல்யாண் பதற அவனின் மனதிலோ வேறொன்று ஓடிக் கொண்டிருந்தது. " ப்யோரமஸ்டைன் உடம்புல இருந்தா மினிமம் ஒரு நாள் தான் அப்ரம் இறந்துடுவாங்க. ஆனா இரெண்டு நாளாகியும் நீ சாகாம இருக்க காரணம் என்ன தெரியுமா?? கொஞ்சமே கொஞ்சம் வக்ஸ் கலந்துருக்கேன். மெழுகு. " என கூறிக் கொண்டே வந்து அவனருகில் அமர்ந்தார்.
கல்யாண் : நீ-நீ பொய்-பொய் சொ-ல்ற
" நா பேசி ரொம்ப நாளாச்சு தான். ஆனா நா பேசுற முதல் வார்த்தையே பொய்யா இருக்காது. இந்த ப்யோரமஸ்டைன் கூட உனக்கு நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர் தான் எனக்குக் குடுத்தாரு " என அந்நபர் நம்பும் படியாய் கூறிக் கொண்டே ஒரு சின்ன கத்தியை தன் பாக்கெட்டிலிருந்து எடுத்தார்.
அந்த கத்தியால் கல்யாணின் ஒரு கரத்தை தூக்கிப் பிடித்த அந்நபர் அவனின் மணிக்கட்டிலிருந்த கீறலில் அந்த கத்தியை புகுத்தி இன்னும் அதை கிளிக்க கல்யாணின் அலரல் அவரது காதையே கிளிக்கும் அளவிற்கு வீரிட்டு கேட்க ஏற்கனவே கொட்டியிருந்த இரத்தத்தோடு மீண்டும் அவனது இரத்தம் கீழே கொட்டியது.
கல்யாண் : ப்லீஸ் ப்லீஸ் என்ன விற்று என்ன விற்று என அவன் வலியில் கிடைத்த தெளிவில் படுக்கையிலே திமிறினான். அவனை நிறுத்துவதற்காய் அந்நபர் அவனின் மணிக்கட்டை பிடித்து முறுக்க அந்த வலி அதற்கும் மேலிருந்தது.
" கத்தாம இருந்தா நானே விடத் தானே போறேன் " என நக்கல் தோனியில் கூறி கொண்டே அந்த கத்தியை திருப்பி பிடித்து அதை வைத்து கல்யாணின் நெஞ்சில் மெதுவாய் கீறத் தொடங்கினார்.
கல்யாணுக்கு அந்தளவிற்கு அது வலி தறவில்லை என்றாலும் அவன் வலியில் முனகிக் கொண்டே இருக்க ஒரு திருப்தியான பார்வையுடன் அவனை மீண்டும் நோக்கிய அந்நபர் ஒரு நொடியில், அவன் கண்களை இமைத்து மூடிய ஒரே நொடியில், அந்த கத்தியை கல்யாணின் கழுத்தில் சொருகி விட்டு அவனின் மூச்சு முற்றுப்பட்டதை கண்டதும் ஒரு விரக்தியான புன்னகையுடன் எழுந்து நின்றார்.
தன்னறையில் நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த தங்கையை அமைதியாய் பார்த்து கொண்டிருந்த ஹரீஷ் விபுன் அவனின் செல்பேசி மெதுவாய் ஒரு சத்தமெழுப்புவதை உணர்ந்து அதை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.
அழைப்பை ஏற்று கொண்டு வீட்டை விட்டே வெளியேறியவன் " ஹலோ " என்கவும் மறுப்புறமிருந்தவர் ஏதோ படபடவென கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
" இந்த விளையாட்டு எப்போவோ ஆரம்பமாகீடுச்சு அப்போ. ஹ்ம்ம் நானும் அப்போ இறங்க வேண்டியது தான் " என நினைத்தபடியே தன் வீட்டிற்குள் நுழைந்தான் ஒரு பக்க கழுத்தை தேய்த்தபடி.
காலை சேவல் கூவும் முன் சரியாக தன் வீட்டு பின் வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த ஸ்டீஃபன் எயினி இன்னும் தூங்குவதை உறுதி செய்ததும் அவனின் இரகசியங்கள் நிறைந்த அந்த அறைக்குச் சென்று அவனின் ஏடுகளிலிருந்து ஒன்றை மட்டும் பிரித்தெடுத்தான்.
அதில் இருக்கும் ஆதியின் புகைபடத்தை மீண்டும் நோக்கியவன் " என்ன பாக்குறீங்க ஆதி மடம்? தினம் ஏன் உங்கள சைக்கோ மாரி பாத்துட்டு இருக்கேன்னா?? ஹ்ம்ம் உங்க புருஷன என்ன சொல்றது ஆதி மடம்.? நீங்க இறந்து மூணு வர்ஷமாகியும் கூட உங்க கொலைக்கு பின்னாடி என்ன இருக்குன்னு அவரு கண்டேப் புடிக்கல. நா ரொம்ப ஈசியா தப்பிச்சிட்டு இருக்கேன்னு நினைக்கிறேன். உங்க பொண்ணு சமத்தா தூங்கிக்கிட்டு இருக்கா. அவளுக்கு உங்களப் பத்தி எதுவுமே தெரியாது. ஆனா அவளாலயாவது உங்க புருஷன் உங்க கொல கேச திரும்பிப் பாக்குறாரான்னு பாக்களாம். இப்போ நடக்குர எல்லா மர்மத்துக்கும் பதிலே அங்க தான் இருக்கு. அது மட்டும் நடந்துட்டா எல்லாம் சரியாய்டும். " என ஆதியை பார்த்து வாய் விட்டே பேசிக் கொண்டிருந்தவன் திடீரென கேட்ட கதவு தட்டும் சத்தத்தில் பதறி எழுந்தான்.
ஸ்டீஃபன் : உங்க போலீஸ் புருஷன் வந்துட்டாருன்னு நினைக்கிறேன். நான் வந்து பேசுறேன் என அப்போதும் ஆதியிடம் கூறிவிட்டு அந்த ஏடை பத்திரமாய் ஒரு இடத்தில் பத்திரிப்படுத்தினான்.
இவன் பதட்டமாகவும் அதே நேரம் படபடவெனவும் தெரியாததை போல் நன்கு மூச்சை இழுத்து விட்டு அங்கேயே இரண்டு மூன்று மூச்சு பயிற்சியை எல்லாம் செய்து விட்டு போய் வீட்டின் கதவை திறந்தான் ஸ்டீஃபன்.
அவன் எதிர்பார்பை பொய்க்காமல் அபிமன்யு அங்கு போலீஸ் யூனிஃபார்மில் கடிகாரத்தை பார்த்தபடி நின்றிருந்தான்.
அபிமன்யு : என்னாச்சு ஸ்டீஃபன் தூங்குனீங்களா?? என கேட்டுக் கொண்டே உள்ளே வர ' ஓ அதை மறந்து விட்டோமே! ' என நினைவு படுத்தியவனுக்கு மனதிலே நன்றியும் கூறிவிட்டு வராத கொட்டாவியை வந்ததாய் கூறி " போய் பல்லு வளக்கீட்டு வந்துடுறேன் இருங்க " என அறைக்குள் ஓடினான் ஸ்டீஃபன்.
அபிமன்யு சிரித்து கொண்டே போய் ஒரு கதிரையில் அமர ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி பல் துளக்கி விட்டு அவனை பார்க்க வந்தான் ஸ்டீஃபன்.
ஸ்டீஃபன் : அபி ஸர், டீயா?? காஃபியா?? பாலா?? பூஸ்டா?? ஹார்லிக்ஸா??? என டீ மாஸ்டரை விடவும் அவன் வேகமாய் கேட்டு கொண்டே அங்கிருந்த குட்டி சமையலறைக்குள் சென்றான்.
அபிமன்யு : அதெல்லாம் வேண்டாம் ஸ்டீஃபன். உங்களுக்கு மட்டும் எடுத்துக்குட்டு வந்து இங்க உக்காருங்க என்றபடியே அங்கு அருகில் கிடந்த நேற்றைய செய்தி தாளை புறட்டிப் பார்த்தான்.
ஸ்டீஃபன் : அதெப்டி வேண்டாம்னு சொல்லலாம். நா போடுற டீயில்லாம் எந்த டீ கடைல யார கேட்டு நீங்க டீ குடிச்சிட்டு வந்தீங்க என பாலை அடுப்பில் வைத்தபடியே இவன் கத்த அபிமன்யு " நா எந்த கடைலையும் குடிக்கல ஸ்டீஃபன் " என்றான் சிரித்து கொண்டே.
ஸ்டீஃபன் : அப்போ இங்க குடிங்க என்று அவன் வாயை அடைத்தவன் ஐந்தே நிமிடத்தில் " டீ ரெடி,டீ ரெடி " என சுடச்சுட இரண்டு கப்பில் டீயை எடுத்து வந்தான். எதிர்பார்ப்பதை விடவும் அபிமம்யு மற்றும் ஸ்டீஃபன் இடையே இருக்கும் பந்தம் பெரிதானது. அபிமன்யுவிற்கு ஸ்டீஃபனும் அவன் குடும்பத்தில் ஒருவனே. அவனுக்கு முன்பே கிடைக்காத ஒரு நண்பன். உடன் பிறவாதவன். ஆனால் ஸ்டீஃபன் மறைக்கும் அந்த உண்மை பற்றி தெரிந்தால் என்ன ஆகுமோ.??
அபிமன்யு : நீங்க மாஸ்டரா போய்ர்க்கனும் ஸ்டீஃபன். நல்லா அமௌன்ட் பாத்துருக்களாம் என நக்கலாய் கூறிக் கொண்டே இவன் டீயை மறுக்காமல் வாங்கிக் கொள்ள தனக்கும் ஒரு கதிரையை எடுத்துப் போட்டு அமர்ந்திருந்த ஸ்டீஃபன்
ஸ்டீஃபன் : இப்போ மட்டும் என்ன அபி ஸர் பிரச்சனை? உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க தெரு ஓரமா டீ கடை போற்றுவோம். நீங்க தான் அக்கௌன்ட்டட் என அவன் கண்ணடிக்க அபிமன்யு மீண்டும் அவனின் விளையாட்டுத் தனத்தில் தன்னை மறந்து சிரித்தான்.
அபிமன்யு : அப்ரம் ஸ்டீஃபன்- என அவன் தொடங்குவதற்குள்ளாகவே
ஸ்டீஃபன் : என்னா பாஸ் டீ வாசன புடிக்கலையா? கலப்படாதீங்க நா விஷமெல்லாம் கலக்கல
அபிமன்யு : எப்போப்பாரு விளையாட்டு. வேலைக்கு வாங்க ஆஃபீசர்.
ஸ்டீஃபன் : ஹான் ஹான் ஓக்கே ஆஃபீசர். நானே கேக்கனும்னு இருந்தேன். காலங்காத்தாலையே ஏன் அபி ஸர் யூனிஃபார்ம்ல வந்துருக்கீங்க??
அபிமன்யு : இன்னைக்கு நமக்கு மீட்டிங் இருக்கு ஸ்டீஃபன். தொடர் கொலை நடக்குரத பத்தி பாக்குறதுக்காக நாம போகனுமில்லையா??
ஸ்டீஃபன் : அட ஆமா மறந்தே போய்ட்டேன், ஆனா அந்த மீட்டிங் மதியம் தானே ஸர்??
அபிமன்யு : ஆமா ஸ்டீஃபன். ஆனா அதுக்கு முன்னாடி நாம ஒரு மிஸ்ஸிங் கேஸ செக் பண்ணப் போகனும். கல்யாண் அப்டீங்குர ஒருத்தர் மிஸ்ஸிங்.
ஸ்டீஃபன் : கல்யாணா?? ஓ-ஓ ஓ-க்கே அபி ஸர். நா இதோ ரெடியாய்ட்டு வரேன் என நம் நாயகனையே பார்க்காமல் வேகமாய் அறைக்குள் ஓடினான்.
அபிமன்யு : வேலைன்னு வந்துட்டா டீ குடிச்ச கப்பையும் குளிக்கத் தூக்கீட்டு போய்ட வேண்டியது என எதுவும் அறியாமல் இவன் நகைத்தபடியே சமையலறைக்குச் சென்றான்.
அன்று சங்கீத சுவரங்கள் நிகழ்ச்சிக்கு ஷூட்டிங் இருந்ததால் விடியற்காலையிலே எழுந்து பெக்யூரா சகோதரிகள் தங்களின் வேலைக்குச் செல்ல கிளம்பியிருந்தனர். க்ரிஸ்டோஃபர் காரில் மகள்களுக்காய் காத்துக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக ஊணும் உயிருமாய் ஒரு மணி நேரத்தில் சேர வேண்டிய இடத்தை அடைந்த சகோதரிகள் தந்தைக்கு டாட்டா காட்டி விட்டு உள்ளே சென்றனர். உள்ளே சென்றதும் இருவரும் பிரிந்து அவரவருக்கான அறைகளுக்குச் சென்றனர். ப்ரின்சி தனகக்கான அறையை திறந்த உடனே " அக்காஆஆஆ " என கத்திக் கொண்டே ஓடிச் சென்று அங்கு நின்றிருந்த விபுன்யாவை அணைத்து கொண்டாள்.
விபுன்யா புன்னகைத்து கொண்டே ப்ரின்சியின் தலையை அன்பாய் கலைத்து விட அவளிடமிருந்து அழகாய் சினுங்கலுடன் தள்ளி ஓடினாள் ப்ரின்சி. ப்ரின்சி வெகு சீக்கிரமே அங்கிருந்த பலரிடமும் ஒட்டிக் கொண்டிருந்தாலும் அவளுக்கு ஏனோ விபுன்யா மீது தனி பாசம். அரை மணி நேரத்தில் லினாவை கூட பிடித்து இழுத்து வந்து விபுன்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
ஆச்சர்யம் என்னவென்றால் தங்கையை போல அக்காவிற்கும் விபுன்யாவை வெகு சீக்கிரமே பிடித்து விட்டது. விபுன்யா அன்பான அதே நேரம் சற்று அமைதியான குணம், ஏனோ விபுன்யா நம் லினாவிற்கு ஆதியை வெகுவாய் நினைவு படுத்தி கொண்டே இருந்தாள். அதிலும் அவளுக்கு தேவதையின் குரலே தான் அதில் சந்தேகமே இல்லை. இவர்களுக்குள் ஒரு குட்டி நட்பு மலர் மொட்டாய் விதைந்த போது அவர்களை ஷூட்டிங்கிற்கு சரியாய் அழைப்பு விடுத்தனர்.
மகள்களை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த க்ரிஸ்டோஃபர் திடீரென மழை வந்ததால் எங்கிருந்தோ போக்குவரத்து அதிகரித்ததை கண்டு வேறு வழியில்லாமல் ஊரை சுற்றிக் கொண்டு செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பினார்.
அவர் அமைதியாய் காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்த பாதையின் இரு புறத்திலும் பல பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து கொண்டு அந்த மழைக்கு ஒரு அழகான காட்சியை பரிசளித்திருந்தது.
அதை இரசித்தபடி நான்கு ஆலமரங்கள் வரிசை கட்டி நின்ற இடத்தை தாண்டியவர் எதிர்பாராத விதமாய் தன் வண்டியை அழுத்தம் கொடுத்து அந்த இடத்திலே நிறுத்தினார் அவரின் வண்டி மீது எங்கிருந்தோ வந்து விழுந்த ஏதோ ஒன்றின் சத்தத்தினால்.
பதறி போய் நிமிர்ந்து என்னவென்று பார்ப்பதற்காய் வண்டியை விட்டு இறங்கச் சென்ற க்ரிஸ்டோஃபர் எதற்சையாய் தனக்கு முன் கண்டு அவ்விடத்திலே பனிக் கட்டியாய் உறைந்திருந்தார்.
அவரின் வண்டி மீது உடலை நனைத்த அளவற்ற இரத்தத்துடன் கண்கள் மருண்டு கழுத்தறுப்பட்ட நிலையில் கிடந்தான் கல்யாண்.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro