Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம் - 29

செல்வராஜ் அவசர அவசரமாக தன் தனியார் விமானத்தில் வற்புருத்தி லினாவை ஏற்றிக் கொண்டிருந்தார். லினா மற்றும் எயினி இருவருக்கும் க்லோரோஃபார்ம் உபயோகித்திருந்தாலும் நம் நாயகிக்கு அது பெரிதாய் பாதிப்பை தராத பட்சத்தில் குழந்தை என்பதால் எயினி சில நிமிடங்களே மயங்கியிருந்தாள். லினா எயினியை கட்டிப் பிடித்து கொண்டு தரையில் விழ வேகமாய் போய் ஒரு பாதுகாப்பான இடத்தில் அமர்ந்து கொண்ட செல்வராஜ் எப்படியோ தப்பித்து விட்டோமென்ற நிம்மதியில் பெருமூச்சு விட்டார் போலும்.

திடீரென அவரது மூச்சுக் குழாயுள் ஏதோ சிக்கிக் கொண்டதை போல அவருக்குத் தோன்ற பயந்து போய் வாய் விட்டு மூச்சு விட்டவருக்கு மூச்சு உடனே சீராகிக் கொண்டது. இன்னும் விமானம் பறக்கத் தொடங்காததால் விமான ஓட்டுனர் அனைத்து பாதுகாப்பு பரிசோதனையையும் செய்து கொண்டிருந்த போது மயங்கியிருந்த எயினியை தூக்கிக் கொண்டு தப்பிக்க முயன்ற லினாவை மீண்டும் இழுத்து கீழே தள்ளி விட்டார் செல்வராஜ்.

" எங்கள விடுங்க என்ன செய்றீங்க நீங்க?? " என லினா கத்த " எல்லாம் தெரிஞ்சு தான் செய்றேன். நான் குழந்தைய தூக்கீட்டு போயிருப்பேன். உன்ன யாரு வர சொன்னது?? " என செல்வராஜும் பதிலுக்குக் கத்தினார்.

" கொழந்தைய என்னயா பண்ணலாம்னு பார்க்குற?? " என லினா சந்தேகமாய் அதே நேரம் எச்சரிக்கையோடு தள்ளி நிற்க செல்வராஜ் எகத்தாளமாய் சிரித்த படி " ஒன்னுமில்ல. இந்த கொழந்தைய வச்சு அந்த அபிமன்யு கிட்டேந்து தப்பிக்கலாமுன்னு பார்த்தேன். ஒரு பிரச்சனையும் இல்ல உங்கள வச்சு இனிமே பார்த்துப்பேன் " என அவர் கூறி முடிக்க லினா " உன்னால தப்பிக்க முடியாது. நீ செஞ்ச எல்லாத் பாவத்துக்கும் ஆதாரம் கெடச்சிடுச்சு. அவரு கண்டிப்பா உன்ன பிடிச்சிடுவாரு " என அவள் கூறிக் கொண்டிருந்த போதே விமானம் நகரத் தொடங்கியது.

" உன்னோட திமிரு இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இருக்குன்னு நானும் பார்க்குறேன் " என செல்வராஜ் சவால் விடும் போதே பதட்டமாய் அங்குமிங்கும் லினா சுற்றிப் பார்த்தாள். " அவரு வருவாருன்னு நான் சொன்னேன்ல. பாரு நீ மாட்டத் தான் போற " என லினா திடீரென மகிழ்ச்சியாய் சிரிக்கவும் அவள் பார்க்கும் வழியாக பார்த்த செல்வராஜும் அதிர்ந்திருந்தார்.

அபிமன்யுவின் ஜீப் அவரது அடர்ந்த காடுகளையும் தாண்டி சீரிக் கொண்டு வந்தது. அதை கண்டு அவர் பயத்தில் உடனே லினாவை பிடிக்க லினா அவர் என்ன செய்யப் போகிறாரென தெரியாமல் எயினியை வேகமாய் கீழே படுக்க வைத்தாள்.

அதை சட்டை செய்யாமல் விமானம் ஏறப் போகும் தருணம் ஒரு கதவை திறந்து லினாவை அது வழியே காட்டிய செல்வராஜ் ஒரு துப்பாக்கியை சுட்டு " நீ முன்னேறி வந்தா இவளையும் கொன்னுட்டு உன் பொண்ணையும் கொன்னுடுவேன் அபிமன்யு " என அருகிலிருந்த மைக்ரோஃபோன் மூலமாக சத்தம் போட்டார். அடித்த பலமான காற்றில் லினா கதவின் ஒரு புறத்தை பிடித்து கொண்டு பாடுபட அந்த விமானம் கிட்டத்தட்ட ஒரு ஹெலிகாப்ட்டரை போன்றே வடிவமைக்கப்பட்டிருந்ததால் கதவை திறந்ததால் அங்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

லினாவை கவனித்த அபிமன்யுவும் ஒருவழியாக கண்களை பிரித்து முன் நோக்கிய லினாவும் அப்போது தான் ஏதோ ஒன்றை கவனித்தனர். வேகமாய் சென்று கொண்டிருந்த அந்த விமானத்தின் கீழ் ஒரு வண்டி மிகவும் வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது. அந்த மின்னல் வேகத்தின் இடையில் அந்த வண்டியின் கதவை திறந்து கொண்டு எகிரி அந்த வண்டியின் மீதே ஏறினான் புவி.

நம் நாயகன் அவனை கண்டதும் அவர்கள் தாமதமாய் வந்து விட்டனரென்பதை உணர்ந்து அவன் வண்டியில் இன்னும் வேகத்தை கூட்ட " உங்க தம்பி கார் ஒற்றதுல உங்கள விட பைத்தியக்காரனா இருப்பான் போலருக்கே அபி ஸர் " என பின் சீட்டில் அபிமன்யு அந்த வண்டியை ஓட்டிய வேகத்திற்கு இருக்கும் மூன்று சீட் பெல்டையும் இறுக்கி அணிந்து கொண்டு அலறினான் ஸ்டீஃபன்.

லினா புவியை கண்டு அவன் திடீரென அந்த வண்டி மீதிருந்து விமானத்தின் மீது தாவுவதை கண்டு அலற, அபிமன்யுவிற்கு ஒரு நொடி அதை கண்டு இதயமே நின்றுத் தான் துடித்தது. அபிமன்யு விமானமிருந்த மைதானத்தை அடைந்ததும் வண்டியை நிறுத்தி விட்டு வேகமாய் ஓடத் தொடங்கினான். அதே நேரம் அங்கு காற்றடிக்கும் ஓசை அதிகரிக்க அங்கு வந்த அரசாங்க வானூர்தியில் நின்றிருந்தான் ஹரீஷ். ஹரீஷ் " அபி ஸர் " என அவனை கத்தி அழைத்து விட்டு வேகமாய் அந்த கயிறை பிடித்து ஏறி வரும் அந்த ஏணியை வீச அதை பிடித்துக் கொண்டு தன்னால் முடிந்த மட்டும் வேகமாய் அதில் ஏறத் தொடங்கினான் நம் நாயகன்.

லினா கத்தியதில் அவளை முறைத்த செல்வராஜ் " ஏய் இங்கேந்தே தள்ளி விட்டா உன் கதையே முடிஞ்சிடும் கத்தாம இரு " என கத்தினார்.

அண்ணனுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அந்த விமானத்தின் ஒரு பக்கத்தை கெட்டியாய் பிடித்து திறந்திருந்த கதவிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு கெட்டியான கயிற்றை பிடித்த புவி தன்னால் முடிந்த அழுத்தத்துடன் எகிரி வாயிலிலே நின்ற செல்வராஜை உதைத்துத் தள்ளி விட்டு உள்ளே குதித்தான். லினா தடுமாறி பக்கவாட்டில் விழ கீழே விழுந்த செல்வராஜிற்கு இதயம் வெளியே வந்தாலும் ஆச்சர்யமில்லை.

அவரிடம் குனிந்து அவர் எதிர்பார்க்காத நேரம் ஒரு கத்தியை உடையிலிருந்து உருவி அவரின் தொடையில் இறக்கினான் புவி. உள்ளிருந்த விமான ஓட்டுனருக்கு நல்ல வேளையாக இது கேட்காமல் போக லினா பயத்தில் எயினியை தன்னோடு தழுவிக் கொண்டாள்.

செல்வராஜ் வலியில் அந்த கத்தியை பிடுங்க முயற்சிக்கும் முன் அவரது கரத்தில் ஒரு கத்தியை இறக்கி அவரை மேலும் அலற வைத்தான். அவரது இரத்தம் கசியத் தொடங்கிய சில நேரங்களிலே அவரது கண்கள் மெதுமெதுவாய் சிவப்படைய தொடங்கியிருக்க புவி அதை கண்டு சிரித்தான்.

" உனக்கென்ன ஆகுதுன்னு உனக்குத் தெரியல தானே?? நான் சொல்லவா??? என் அண்ணியோட கண்ணு எப்படி உங்களால அழிஞ்சிதோ அதே மாரி உன்னோட கண்ணும் இப்போ வீணாப் போகப் போகுது " என புவி விஷமமாய் சிரிக்க அதை கேட்ட செல்வராஜிற்கு சர்வமும் அடங்கியிருந்தது.

" உன்னையும் மூணு நாள் வச்சு செய்யனும்னு தான் எனக்கும் ஆசை. ஆனா என் அண்ணன் விட மாட்டான். அதான் மூணு நாள் நீ அனுபவிக்க வேண்டிய வலி மொத்தத்தையும் ஒரு சேர குடுத்துருக்கேன் " என கூறிய புவி தான் நேற்று இரவே செல்வராஜின் மாத்திரைகளை மாற்றி வைத்ததை எண்ணிப் பார்த்து கொண்டான்.

" என்ன காப்பாத்து. என்ன காப்பாத்து.. ஆ-ஆஆஆஆ தயவு செஞ்சு என்ன காப்பாத்து." என செல்வராஜ் பார்வை மங்களாக மங்களாக ஏதோ ஒரு வலி பரவுவதை உணர்ந்து கத்தி கதற அதை பொருட்டே படுத்தாமல் தன் கத்தியை எடுத்து மெதுவாய் அதே நேரம் அழுத்தமாய் அவரது உடலில் தன் கலையை காட்டத் தொடங்கினான் புவி.

லினா அதை கண்டு கண்களை இறுக்க மூடிக் கொள்ள செல்வராஜ் எண்ணியதை விடவும் அவரது உடல் மிகவும் விரைவாகவே சோர்வடைந்து கொண்டிருந்தது. வயதானதாலா அல்ல புவியின் மருந்தினாலா என கேட்டால் இறைவனே அறிவான் பதிலை.

அங்கு திடீரென கேட்ட அதீத சத்தத்தில் லினா சுற்றி முற்றிப் பார்க்க புவி தன் கத்திக் கலையை நிறுத்தி விட்டு கதறும் செல்வராஜை பார்த்தான். " ஏன் தான் உன்ன மாரி ஆளுங்க எல்லாம் சாகுறப்போ எவ்வளவோ தப்புப் பண்ணியிருந்தாலும் நான் வாழனும் நான் வாழனும்னு சொல்றீங்கன்னு எனக்குப் புரியல. ஹ்ம்ம் வாழ பேராசை இருக்கும் தான். சரி என் அண்ணன் வந்துட்டான். கவலப்படாத. உன்ன யாராலையும் காப்பாத்த முடியாது. ஏன் தெரியுமா உனக்குள்ள நேத்தே ப்யோரமஸ்டைன் போய்டுச்சு. அது இந்நேரத்துக்கு வேலை செஞ்சு ஒரு மணி நேரமாகியிருக்கும். " என அவருக்கு வலியே இல்லாமல் ஒரு மாரடைப்பை தந்தான் புவி.

அதே நேரம் விமானத்திற்கும் மேல் பறந்த அரசாங்க வானூர்தியின் மூலமாக அந்த கயிற்றை பிடித்து கொண்டே விமானத்திற்குள் குதித்தான் அபிமன்யு. அவன் குதித்த வேகத்திற்கு செல்வராஜின் அலறல் அவன் காதுகளை கிளிக்க நம் நாயகன் அங்கு வருவதற்கு முன்பாகவே செல்வராஜின் கண்களில் தன் கத்தியை இறக்கியிருந்தான் புவி.

நம் நாயகனை தொடர்ந்து சில காவலர்கள் அபிமன்யுவை போலவே இறங்கி அந்த விமானத்திற்குள் குதித்தது துடி துடித்து சாகக் கிடக்கும் செல்வராஜின் உடலை பார்க்கத் தான். நம் நாயகன் புவியை பிடித்திழுத்து வேகமாய் அவன் கரங்கள் இரண்டிலும் விலங்கை மாட்ட புவிக்கு அதில் ஏமாற்றம் மிஞ்சவில்லை.

அதற்கு பதில் அவன் கண்களில் ஒரு புன்னகை தெரிந்தது. தன்னை விட்டுச் சென்ற நிம்மதி கிடைத்து விட்டதை போன்ற ஒரு பரவசத்தில் கண்கள் மூடியவனுக்கு கண்ணீர் தான் அணை கட்டியது.

புவி கண் மூடி கண் திறப்பதற்குள் நம் நாயகன் வந்த வழியிலே ஹரீஷ் எயினியை தூக்கிக் கொண்டும் அவனை பின் தொடர்ந்து லினாவும் மேலே ஏறியிருக்க அபிமன்யு வலுக்கட்டாயமாய் புவியை அதில் ஏற்றி விட்டான். ஹரீஷ் மேலே ஏறியதும் கயிற்றை தூக்கி விட்டு புவியை உள்ளே தூக்கிப் போட்டு விட்டு வேகமாய் அபிமன்யுவிற்கு அந்த கயிறை தூக்கி எறிந்தான்.

" நீங்க உடனே தரையிறங்குங்க " என நடுவானில் இருந்த விமானத்தைத் தரையிறக்க உத்தரவிட்டு விட்டு தன் சகோதரனை வெளுத்து வாங்கும் கோவத்தில் அந்த கயிற்றை பிடித்து கொண்டு ஏறினான் நம் நாயகன்.

ஹரீஷ் அவனுக்கு கை கொடுத்து அவனை தூக்கி விட்டதுமே லினா அவனை தாவி வந்து அணைத்து கொண்டாள். அவளை மறுக்காமல் அணைத்து கொண்ட அபிமன்யு அவள் நலமாகவே உள்ளாள் எனத் தனக்குத் தானே கூறிக் கொண்டு புவியை நோக்கித் திரும்பினான்.

" என்ன டா பண்ணி வச்சிருக்க??? அஞ்சு கொலை டா?? அவரு இனிமே பிழைப்பாரா?? " என அபிமன்யு புவியிடம் எகிரி " அவன் ஐநூறு கொலை பண்ணான் நீ கேட்டியா.??? " என புவி கேட்க " நீங்க எங்க கேட்க விட்டீங்க அதான் அதுக்கு முன்னாடியே அவரு கதைய முடிச்சிட்டீங்களே " என கூறியது தலையில் கை வைத்தபடி அமர்ந்திருந்த ஸ்டீஃபன் தான்.

" அவரு பிழைப்பாரா மாட்டாறா!?? " என மீண்டும் நம் நாயகன் அதையே கேட்க " நீ கூடவே டாக்டர கூட்டீட்டு வந்து அங்கையே ட்ரீட்மென்ட் பார்த்துருந்தாலும் அவரு பிழைக்க மாட்டாரு. அவரு கதை முடிஞ்சிடுச்சு. என் ஆசை நிறைவேறீடுச்சு. என் அண்ணிய கொன்ன எல்லாரையும் நான் என் கையாலையே கொன்னுட்டேன் " என புவி மெதுவாய் நடந்து கொண்டே கூற அவனையே அனைவரும் பார்த்து கொண்டிருந்தனர்.

" அப்பறம் நான் அந்த மனுஷன இதோட விடுவேன்னு நினைக்காத. அந்த ப்லேன் பூரா பாம் செட் பண்ணி வச்சிருக்கேன். உன் ஆளுங்கள இறங்க சொல்லு. " என புவி அசால்டாய் அபிமன்யுவிடம் கூற, எப்படியும் செல்வராஜ் இறந்திருப்பாறென தெரிந்ததால் அபிமன்யு தலையசைத்ததும் ஹரீஷ் உடனே கீழிருந்த தங்களது சககாவலர்களை உடனே அந்த விமானத்தை விட்டு குதிக்கக் கூறினான்.

" ஏன் டா இதையெல்லாம் பண்ண?? "என அபிமன்யு மனமுடைந்து புவியை பார்க்க " என்ன மன்னிச்சிடுடா அண்ணா. என்னால என் கோவத்த அடக்க முடியல. அவங்கள கொல்லலன்னா நான் ஒரு கட்டத்துல உணர்வே இல்லாத மிருகமாய்டுவேன். நீ சொல்லுவியே ஒரு நிமிஷ கோவம் வாழ்கைய அழிக்கனும்னு. என்னோட மூணு வர்ஷ கோபத்துக்கு இப்போ தான் தீனியே கிடைச்சிருக்கு. " என்ற புவி மெதுவாய் கதவின் புறம் சென்றதை கவனிக்க மறந்தான் நம் நாயகன்.

" என்னோட ஆசை நிறைவேறுனதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் அண்ணா. நாங்க இல்லன்னு வருத்தப்படாத. அண்ணியும் இருப்பாங்க. அவங்க தேர்ந்தெடுத்தவங்க உன்ன நல்லாவே பார்த்துப்பாங்க. நான், என் குறையே இல்லாத அளவுக்கு உன்ன ஸ்டீஃபன் பார்த்துப்பாரு. நான் அவங்க மேல சந்தேகப்பட்டேன். ஆனா அவங்க தான் உனக்கு உண்மையா இருந்தாங்க அண்ணா.  என் முகத்த உன்னாலையே பார்க்க முடியல தானே அண்ணா??? ஆனா ஆது ஒரு முறை கூட என்ன பார்த்து முகம் சுழிச்சதில்ல. உன் கிட்ட சொல்றதுக்கு என்ன?? நான் அவள ரொம்ப காதலிச்சேன். உங்க அளவுக்கு காதலிச்சேன். அவ கிட்ட நான் செத்துடுவேன்னு சொன்னப்போவெல்லாம் அவளுக்கு எப்படி இருந்துருக்கும்னு இப்போ தான் எனக்குப் புரியிது அண்ணா. அவ என்ன உண்மையா காதலிச்சா. அதுக்கு அவ உயிரையே தியாகம் செஞ்சிட்டா. அவளே இல்லாத உலகத்துல எனக்கு என்ன வேலை சொல்லு?? " என புவி கதவின் புறம் நகர அபிமன்யு சுதாரித்திருந்தான்.

" டேய் புவி நில்லு டா- " என அபிமன்யு பதறியடித்து அவனை பிடிக்க வர " என் கிட்ட வராத. நான் சொல்ல வேண்டியத இப்போவே சொல்லீடுறேன். இல்லனா இப்போவே குதிச்சிடுவேன். " என புவி மிரட்டவும் லினா அபிமன்யுவை இழுத்துப் பிடித்து கொண்டாள். அவளது கண்ணீரை கண்ட புவி " உங்க கிட்ட நான் பேசுனதே இல்ல. இப்போ பேசிக்கிறேன். எங்க அண்ணி ரொம்ப நல்லது பண்ணியிருக்காங்க. என் அண்ணனையும் எயினியையும் நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்குத் தெரியும். நான் உங்கள முழுசா நம்புறேன். டேய் அண்ணா, அண்ணி நீ இரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கத் தான் ஆசை பட்டாங்க. ஸ்டீஃபன் கிட்ட மட்டுமில்ல இவங்க கிட்டயும் அண்ணி ஒரு சத்தியம் வாங்கீருக்காங்க. உனக்கே புரிஞ்சிருக்கும். இதுக்கு மேல நான் சொல்ல ஒன்னுமே இல்லடா. எயினிய நல்லா வளர்த்து பெரிய பொண்ணாக்கு. முடிஞ்சா அவளுக்கு ஒரு கொலைகார சித்தப்பா இருந்தேன்னு சொல்லாத. " என கண்ணீரோடு சிரிக்க முயன்றான்.

நம் நாயகனின் கண்களிலும் கண்ணீர். கண் முன்னே அவன் குதிக்க நிற்கும் போது தன்னால் அவனை தடுக்க முடியல்லையே என்ற இயலாமையில் கண்ணீர் தடம் புரண்டோட நின்றிருந்தான். " அப்பறம் எனக்கு ஒரே ஒரு உதவி டா அண்ணா. கடைசியா முருகேஷ் இறந்த அதே இடத்துல தான் ஆதுவோட உடலையும் நான் பதப்படுத்தி வச்சிருக்கேன். அவ குடும்பத்து கிட்ட அவள கடைசியா சேர்த்திடு எனக்கு அதுவே போதும். அவ இழப்புக்கு நான் எவ்வளவு மன்னிப்பு கேட்டாலும் அது ஈடாகாது. அதோட அண்ணிய மூணு வர்ஷத்துக்கு முன்னாடி தூக்கீட்டு போனதும் ஆது தான். அவங்க உடல் எங்கன்னே உனக்குத் தெரியாம இருந்துச்சு. ஆதி அண்ணியோட உடலையே புதைக்காம ஆதி அண்ணிக்கு ஒரு காலியான கல்லறை வச்சியே அங்க தான் ஆதி அண்ணி முன்னாடிலேந்தே இருக்காங்க. " என இறுதியாக அபிமன்யுவே நம்ப முடியாத ஒரு செய்தியை கூறிவிட்டு " வரேன் அண்ணா " என கூறிக் கொண்டே பூவி அங்கிருந்து கீழே விழுந்தான்.

" ஆது உன் கிட்டையே நான் வரேன் டி " என கூறிக் கொண்டே கண்களை மூடிய புவியின் கண்ணீர் காற்றில் மிதக்க தன் அண்ணிக்கு தன் சவாலை முடித்து விட்டதாய் கூறிக் கொண்டவன் சரியாக செல்வராஜின் உடல் மட்டுமே இருந்த விமானம் வெடித்து சிதறிய போது அதன் மேலே விழுந்தான்.

எப்போதோ விமான ஓட்டுனரையும் இழுத்து கொண்டு கீழே பரஷூட்டுடன் குதித்திருந்த காவலர்கள் ஒருவன் அதன் மேல் விழுந்ததையும் அந்த விமானம் வெடித்து சிதறுவதையும் கண்டு அதிர மேல் நின்ற அபிமன்யுவினால் உடைந்து கீழே விழத் தான் முடிந்தது.

லினா அவனை அப்போதும் வேகமாய் கட்டிக் கொள்ள தன் சகோதரன் தன் முன்னே இறந்ததை கண்ட நம் நாயகனுக்கு அப்போது தான் புவியின் வலியும் புரிந்தது. இருந்தும் அவன் ஒரு நிம்மதியுடன் இறந்து அவனது அண்ணி மற்றும் காதலியுடன் தானே இருக்கச் செல்கிறான் என தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டு தன்னைத் தானே நிலைபடுத்தி கொண்டான்.

நம் நாயகன் மெதுவாய் லினாவை பதிலுக்கு அணைத்து கொள்ள " தயவு செஞ்சு அழாதீங்க. நடக்கனும்னு இருக்குறத நம்மளால மாத்த முடியாது. ஆனா உங்கத் தம்பி இனிமே நிம்மதியா இருப்பாரு " என லினா அழுகையோடே கூற அதை தலையசைத்து கேட்டுக் கொண்ட அபிமன்யு அவர்களிடையே இருந்த எயினியையும் அணைத்து அவளாவது தன்னுடன் இருக்கிறாளே என்று அவளது நெற்றியில் மிருதுவாய் முத்தமிட்டவன் நம் நாயகியே எதிர்பார்க்காத நேரம் அவளது நெற்றியிலும் முத்தம் பதித்தான்.

ஸ்டீஃபன் அதை கண்டு சிரிப்பதா அல்ல புவியை எண்ணி வருந்துவதா என்று தெரியாமல் பெருமூச்சு விட்டான். மறுநாளே செல்வராஜின் அனைத்து குற்றங்களும் காணொளி ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆதி மற்றும் புவியோடு இன்னும் ஏகப்பட்டோருக்கு நியாயம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

ஏனெனில் ஆதர்ஷனா வைத்திருந்த வித்தியாசமான இரண்டு மெமரி கார்டுகளில் செல்வராஜே தான் செய்த அனைத்து தவறுகளையும் ஒப்புக் கொண்ட காணொளி பதிவு தான் இருந்தது. மற்றொன்றில் அதையே விளக்கமாய் ஆதியின் கொலையோடு புவி விளக்கியிருந்தான்.

ஆதர்ஷனாவின் உடல் அவளது குடும்பத்திடமே ஒப்படைக்கப்பட, எஞ்சியிருந்த இரண்டே ப்யோராமஸ்டைன் திரவமும் செல்வராஜோடே அழிந்ததால் அதை பற்றிய பயம் எவருக்கும் இல்லை. அதை உருவாக்கத் தெரிந்த ஒரே நபருமான புவியே உயிருடனில்லையே.

சில நாட்களிலே ஸ்டீஃபனுக்கு பதவி ஏற்றம் கிடைத்தது. அவன் மீது பொய்யாய் சுமத்தப்பட்ட குற்றங்களையும் அவனே தவறென நிரூபித்திருந்தான்.

இடைப்பட்ட காலத்திலே ஹரீஷிற்கும் ஸ்டீஃபன் அபிமன்யுவிற்கும் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது.

விபுன்யா சங்கீத சுவரரம் என்ற அப்பாட்டுப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்ததோடு ப்ரின்சி முதலிடம் பிடித்து பெரிய படத்தில் அவள் ஆசைகள் நிறைவேறும் பாதையில் காலடியை எடுத்து வைத்திருந்தாள். லினாவிற்கு அதில் பரிசு கிடைக்காததொன்றும் அந்த அளவிற்கு வருத்தமளிக்கவில்லை.

ஏனெனில் நம் நாயகன் நாயகியிடம் தனக்கு சிறிது காலம் கொடுக்குமாறு கேட்டதோடு விரைவிலே வீட்டில் வந்து பெண் கேட்கிறேனெனவும் கூறி அவளை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தான்.

இறுதியாக அபிமன்யு, உண்மையை ஏற்றுக் கொண்டு உடன் இல்லையென்றாலும் அவர்கள் எங்கோ இருப்பரென தன் குடும்பத்தை சற்றும் மறக்காமல் அவர்கள் இருவரை பற்றியும் எயினிக்கு சொல்லி ஆதர்ஷனாவை தயக்கமே இல்லாமல் அவளது சித்தியென கூறி அவளை வளர்த்தான்.

இவ்வாறாக ஆதியின் கண்ணின் ஓரத்தில் மிஞ்சிய ஈரத்தை கண்டுத் தொடங்கிய அதிய புவனனின் கண்ணீர் அபிமன்யுவின் மனதில் தொடக்கி வைத்த ஈரத்தை கரையச் செய்தது.

முற்றும்

நன்றி!!!

அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

DhiraDhi ❤️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro