ஈரம் - 27
என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆதி எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருந்தாலோ தெரியவில்லை. அவளது உடலின் அனைத்து பகுதியும் வலியில் அலறியது.
நிற்க கூட திராணியற்று அவளது கால்கள் தளர்ந்திருக்க அவளை இன்னும் சுவரோடு நிற்க வைத்தது அவள் இடையோடு கட்டியிருந்த கையிறு தான். கரங்கள் இரண்டும் பின்னுக்கு இழுத்து கட்டப்பட்டதால் ஆதி அதை அசைக்க இயலாமல் அரை மயக்கத்தில் கண்ணீர் மழ்க ஏதோ குரலை கேட்டு நிமிர்ந்து நோக்கினாள்.
" ப்பா பரவால்ல. ஒரு நாள் களிச்சு ஒரு வழியா கண்ண முளிச்சிட்டா " என ஒருவன் அவளுக்கு முன் நின்று சிரித்து கொண்டே கூறினான்.
" சம்பத் தயவு செஞ்சு சும்மா இரு " என ஒரு பெண்ணின் குரல் கேட்க பாரமான தலையை கடினப்பட்டு திருப்பிய ஆதிக்கு மங்களாய் தெரிந்தாள் கல்யாணி.
" என்ன கல்யாணி??? நாம எவ்ளோ பெரிய பணக்காரர்களாகப் போறோம். அதுக்குக் காரணமான டாக்டரம்மாக்கு நாம வணக்கம் சொல்ல வேண்டாமா??? நம்ம கல்யாணத்துக்கு ஆசிர்வாதம் வாங்கிக்களாமே??? நாம ரொம்ப சந்தோஷமா இருக்களாம் " என சம்பத் கல்யாணியை இழுத்து அணைக்க முயல அவனிடமிருந்து திமிறி வெளியேறிய கல்யாணியை கண்டு சிரித்தான் இன்னோறுவன். கல்யாண்.
" என்னமா, ஏதோ அவன் புதுசா தொடுர மாரி தள்ளி விடுற?? " என கல்யாண் நகைக்க கல்யாணி அவனை முறைத்து வைத்தாள். " சரி பேசுனது போதுங்க. வாங்க அதான் அந்த பொண்ணு முளிச்சிடுச்சே " என முருகேஷ் குரல் கொடுக்க அவனுடன் அமோதித்து மற்ற மூவரும் தலையசைத்தனர்.
சம்பத் ஆதி எடுத்து வந்த அந்த பெட்டியிலிருந்த திரவத்தை ஒரு ஊசியில் ஏற்றி ஆதியை நெருங்கினான். " என்ன என்ன செய்யப் போறீங்க?? என் கிட்ட வராதீங்க!!" என ஆதி மயக்கத்திலே பிதற்ற சம்பத் அவளை பொருட்டாகவே மதிக்காமல் அவளது கழுத்தில் சட்டென அந்த ஊசியை இறக்கி ஆதியை அலற வைத்தான்.
அவன் எதை குத்தினானோ தெரியாது, குத்திய வேகத்தில் ஆதி அலறலோடே மீண்டும் மயங்கியிருக்க " ஸ்ஸ்ஸ்ஸ் ஏன் டா இவ்ளோ வேகம்??? பொருமை பொருமை " என காதை தேய்த்தபடி குரல் கொடுத்தார் இவ்வளவு நேரமும் மறைவாய் அமர்ந்து இதை பார்த்து கொண்டிருந்த செல்வராஜ்.
செல்வராஜ் மட்டுமல்ல இவ்வைவருமே தான் இத்துனை நாட்களும் அனைத்து தவறையும் செய்து வந்தது. சம்பத் ஒரு தலைமை மேலாளனாய் மட்டுமல்லாமல் பல சர்வதேச நிறுவனங்களோடு தொடர்பு கொள்வதால் பல்வேறு மொழிகளை பயின்றிருந்தான். பொல்லாந்து நாட்டு தனியார் மருத்துவனையிலிருந்து செல்வராஜை பரிந்துரைத்ததே சம்பத் தான். அவர்கள் இருவருக்கும் மொழிப்பெயர்ப்பாளனாய் இருந்து வருகிறான்.
கல்யாணி அவனுக்கு காதலியாய் ஆன பாவத்திற்கு அவனுடன் வாழ வேண்டிய ஆசையில் அவன் கூறுவதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள். ஆதலாலே ஆரம்பத்திலிருந்து ஆதி கூறுவதையெல்லாம் மறக்காமல் செல்வராஜிடம் ஒப்புவித்து விடுவாள்.
கல்யாண் சர்வதேச வங்கியின் மேலாளராய் இருப்பதால் இவர்களுக்கு வரும் வேறு நாட்டுப் பணத்தை இந்திய ரூபாய்க்கு மாற்றி கொடுத்து அவர்களது கூட்டத்தில் ஒரு உறுப்பினராய் இருக்கிறான். இவ்வாறாக தான் இவ்வைவரும் சம்பந்தம் பட்டுள்ளனர்.
" ஸர் ஏன் இவ மயங்குனா?? " என கல்யாண் அலட்சியமாய் கேட்க " தெரியல கல்யாண். இவள வச்சு தான அந்த மருந்து என்ன செய்யுதுன்னு பார்க்கப் போறோம். இது எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு தெரியல பார்ப்போம். கொஞ்சம் நேரத்துல தெரிஞ்சிடும் " என செல்வராஜ் எழுந்து சென்று ஆதியின் உடலோடு பொருத்தப்பட்டிருந்த கருவிகளை இணைத்த கணினியில் அவளது உடல் நிலையை பரிசோதித்தார்.
ஆதிக்கு ஏதோ ஒரு வலி கழுத்திலிருந்து உடல் முழுவதும் பரவியிருந்ததால் சற்று நேரத்திலே அவளுக்கு அந்த குளிரூட்டப்பட்ட அறையில் வேர்க்கத் தொடங்கியது. அதை கவனித்த கல்யாணி வேகமாய் செல்வராஜிற்கு சுட்டி காட்ட அவளது உடல் வெப்பத்தை பரிசோதித்த செல்வராஜ் அது அளவு கடந்திருப்பதை கண்டு " இது நாம தப்பா உபயோகிச்சிருக்கோம் போல. நல்லா இருக்குற அவ எதிர்ப்பு சக்திய இந்த விஷம் அழிச்சிருச்சு " என அவர் கூறியபடியே ஆதியின் மருந்திலிருந்து சொட்டு சொட்டாய் சிறிய குடுவைகளில் சேகரித்தார்.
" அவ முளிச்சதும் இத உபயோகிச்சு பார்ப்போம். இவள விட்டா நமக்கு சரியான ஆள் கிடைக்க மாட்டாங்க " என செல்வராஜ் ஆதியின் முகத்தில் குளிர்ந்த நீரை தூக்கி ஊற்றினார்.
அதில் பதறியடித்து எழுந்த ஆதியின் உடல் தூக்கிப் போட அந்த குளிர்ந்த நீரினால் அவள் நடுங்கத் தொடங்கிய போதே " இத அவள குடிக்க வை கல்யாணி " என அந்த குடுவையை கொடுத்தார்.
அதை எடுத்து கொண்டு ஆதியினருகில் சென்ற கல்யாணி அவளது தலையை தூக்கி வாயை பிடித்து அதை ஊற்ற முயலும் முன் தன் தோளினால் அவளை இடித்து காலால் தள்ளி விட்டாள் ஆதி.
சம்பத் சிந்திக்காமல் அருகிலிருந்த ஒரு கன்னாடி குடுவையை தூக்கி ஆதியின் வயிற்றிலே அடித்தான். அந்த கன்னாடி அடித்த அடியில் அந்த அறை முழுவதும் சிதற சில துண்டுகள் ஆதியின் உடலை முடிந்த மட்டும் கொடூரமாய் கீறி வைத்திருந்தது.
ஆதியின் அலறலோடு சம்பத்திடமிருந்த மீதி கன்னாடியும் கீழே விழுந்து சிதறியது. சம்பத்தை தொடர்ந்து கல்யாண் தேடி எடுத்து வந்த இரும்பு ராடால்ஆதியின் வயிற்றில் அடித்த அடிக்கு, குத்தியும் குத்தாமல் அவளது ஆடையில் சிக்கிக் கொண்டிருந்த சில கன்னாடி துண்டுகள் சதக் சதக்கென தொடர்ந்து அவளது உடலிலும் இறங்கியது.
ஆதி இப்படிபட்ட ஒரு வலியை எதிர்பார்க்கவே இல்லை. அவள் கதறிய கதறலை கூட பொருட்படுத்தாமல் முருகேஷ் அவள் முகத்தை அழுத்தி பிடித்து கொண்டதும் கல்யாணி மற்றொரு குடுவையிலிருந்த அந்த திரவத்தை ஆதியை அருந்த வைத்தாள்.
அது ஆதியை ஏதும் செய்யாத பட்சத்தில் செல்வராஜ் ஏதோ சைகை செய்ததும் அவளை மயக்கமடைய வைப்பதற்காக முருகேஷ் அவளது தலையில் ஓங்கி அடித்தான்.
ஏற்கனவே இருந்த சோர்வில் அதை தாங்க இயலாமல் ஆதி மீண்டும் சுவற்றில் இடித்து மயங்கி சரிந்திருந்தாள்.
ஆதியின் நிலைமை அறியாமல் அபிமன்யுவும் புவியும் பதட்டத்தில் மிகவும் பயந்திருந்தனர். அபிமன்யு வீட்டிற்கே வராமல் ஊர் முழுவதும் தன் மனைவியை தேடி அலைந்து கொண்டிருந்தான்.
அவன் என்னத் தேடியும் ஆதியை அவனால் கண்டுப்புடிக்க முடியவில்லை. ஆதி கடைக்கு செல்வதாயல்லவா கூறினாள், அவள் மருத்துவமனைக்குத் தான் சென்றாளென அவனுக்குத் தான் தெரியாதே.
அவனால் முடிந்த வரை அனைவருக்கும் அழைத்து ஆதியை பற்றி விசாரித்தான். அவள் இறுதியாய் யார் யாருக்கு அழைத்தால் என பார்க்க அவன் தேடிய போதும் கல்யாணியை பற்றி கேட்கையில் அவளுக்கு திருமணமென யாரோ கூறி அந்த வழியையும் அடைத்து விட்டனர்.
புவிக்கு தன் அண்ணி சில நாட்களாய் இருந்து வந்த மன உழைச்சல் எதை பற்றியதென தெரியாமல் அவன் ஒரு பக்கம் ஆதியை பற்றி தேட முயன்றான். அவன் முதலில் ஆராய்ந்ததே ஆதிக்கு தனியே கொடுத்த ஆராய்ச்சி செய்வதற்கான அறையைத் தான். அங்கு ஆதி பதிவு செய்து வைத்திருந்த மருந்தின் ஃபார்முலாக்களையும் அதன் பயன்களையும் கண்டு அதிசயத்து, தன் அண்ணி இத்துனை நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாரென தெரிந்து கொள்வதற்காக இரண்டு நாள் பாடுபட்டு அவள் செய்த ஆராய்ச்சியை பற்றி தெரிந்து கொண்டான்.
அந்த மருந்து, விஷமென தெளிவாய் அனைத்தை பற்றியும் அவனுக்கு தெரியவில்லை என்றாலும் தன் அண்ணியை எவரோ மிகவும் துன்புறுத்தியுள்ளனர் என்பதை அறிந்து அவன் அடுத்து போய் பார்ப்பதாய் முடிவெடுத்தது ஆதி வேலை பார்த்த மருத்துவமனையை.
ஆதியை கடத்தி மூன்று நாளான நிலையில் ஆதி அவ்வப்போது கண்களை திறந்த போதெல்லாம் கண்டது பளிச்சென்ற ஒரு ஒளியைத் தான். அவளது கால்கள் இரண்டிற்கும் மூன்று நாட்கள் ஓய்வே இல்லாமல் இருந்தமையால் ஆதியினால் தற்போது அவளது கால்களையே உணர முடியவில்லை..
ஆதி கண்டுப்பிடித்தது குணப்படுத்தும் மருந்தென தெரியாமல் செல்வராஜ் இரக்கமே இல்லாமல் பத்து மணி நேரத்திற்கு ஒரு முறை ஏதேதோ மருந்துகளை அந்த மருந்தோடு இணைத்து ஆதிக்கு செலுத்திப் பார்த்தார். அவை அனைத்தும் ஆதியின் உயிரை எடுக்கவில்லை என்றாலும் அவளை உயிரோடே கொன்றுக் கொண்டிருந்தது.
" என்ன- என்ன தயவு செஞ்சு கொன்னுடுங்க - ப்லீஸ் " என அரை மணி நேரத்திற்கு முன் கண் விழித்தவளுக்கு மீண்டும் கல்யாண் ஏதோ ஒரு ஊசியை செலுத்தும் முன் ஆதி தன்னால் முடிந்த மட்டும் திமிற அவளை ஒரு அறை அறைந்த கல்யாண் " இரெண்டு நாளா விடாம பேசுற??? உன்ன எப்போ கொல்லனும்னு எங்களுக்குத் தெரியும் " என கத்தினான்.
அதே நேரம் செல்வராஜ் அவளது உடல் நிலையை பார்த்துக் கொண்டே " இது சரிப்பட்டு வராது. இவளுக்கு உயிரே போக மாட்டுது. அவள தூக்கி பெட்டுல போட்டு அவ கண்ணுலையே ஊத்திப் பாரு கல்யாண் " என செல்வராஜ் கூறவும் ஆதிக்கு உடலெல்லாம் நடுங்கியது.
கல்யாண் அவர் சொல்படியே ஆதியை கட்டியிருந்த கயிற்றை அவிழ்க்க முயன்ற போது முருகேஷ் யாரையோ தூக்கிக் கொண்டு அங்கே வந்தான். செல்வராஜ் அவனை கேள்வியாய் பார்க்க தூக்கி வந்தவனை கீழே வீசிய முருகேஷ் " இவன் யாருன்னு தெரியல ஸர். ஆதியோட ரூம்ல ஏதோ நோண்டீட்டு இருந்தான் " என முருகேஷ் அவனை உதைக்க அவன் வலியில் அலரவும் அந்த குரலை உடனே ஆதி அடையாளங்கண்டு கொண்டாள்.
" புவி " என ஆதி சக்தியற்று குரல் எழுப்பவும் முருகேஷ் உதைத்த உதையினால் வயிற்றை பிடித்து கொண்டு சுருங்கியிருந்த புவி அவளது குரலை கேட்டதும் " அண்ணி " என கத்திக்கொண்டே எழ முயல முருகேஷ் அதற்குள் சுதாரித்து அவனை கீழே தள்ளி புவியின் இரு கைகளையும் பின்னுக்கு முறுக்கிப் பிடித்திருந்தான்.
சம்பத்தும் முருகேஷோடு சேர்ந்து புவியை தரையில் அழுத்தி அவனது இரு கரத்தையும் கட்டினான். ஆதி புவியின் கத்தலினால் எப்படியாவது விடுப்பட்டு விட மாட்டோமா என்ற ஆத்திரத்தில் திமிறி சற்று சாயும் போது ஏற்கனவே கல்யாண் அவிழ்த்திருந்த கயிறினால் ஆதி தடுமாறி கீழே விழுந்தாள். அவள் காலும் கைகளும் அவளுக்கு உதவவில்லை. கல்யாண் ஆதியை வேகமாய் தூக்கி அந்த சுவற்றோடே அழுத்தி அவளை கட்டிப் போட முயன்றாலும் திமிறி அவனிடமிருந்து தப்பிய ஆதி பிடிக்காய் ஒரு மேஜையின் மீது சாய்ந்தாள். அதை பிடித்து நேராய் நிற்க முயன்றவளை சம்பத் பின்னிருந்து பிடித்து இழுக்க நடுங்கும் கரத்தால் அருகிலிருந்த எதையோ கடினப்பட்டு பற்றிய ஆதி சம்பத் இழுத்த வேகத்திற்கு அவனை தாக்க இயலாமல் தவறி அவனுக்கு பக்கவாட்டில் ஆதியை பிடித்து கட்டுவதற்காய் நின்றிருந்த கல்யாணியின் கழுத்தில் அந்த ஏதோ ஒன்றை இறக்கியிருந்தாள்.
மேஜையில் வைத்திருந்த ஊசிகளில் ஒன்றையே எடுத்திருந்த ஆதி கல்யாணியை தாக்கியதும் அவள் அலறிய அலறலில் மீண்டும் தன் கரத்தை இழுத்துக் கொண்டாள். கல்யாணியின் அலறலினால் ஆதியை தள்ளி விட்டு விட்டு சம்பத் கல்யாணியியை பார்க்க, கல்யாண் ஆதியை பிடித்து சுவற்றில் இடித்தான்.
ஆதி வலியில் கத்திக் கொண்டே கல்யாணையும் அதே ஊசியை வைத்து தாக்க முயன்றாள். அந்த ஊசியில் மீதமிருந்த திரவம் கல்யாணுக்குள் இறங்க அவனுக்குள் எழுந்த அந்த வலியில் கல்யாணும் ஆதியை விட்டு விட்டான்.
" ஒரு பொண்ணப் புடிக்கத் தெரியிதா டா உனக்கு?? " என ஒரு கத்து கத்திய சம்பத் ஆதியின் பின் கழுத்தை பிடித்து அவளிடமிருந்த ஊசியை மறுகையால் பிடுங்கி எறிந்து விட்டு ஆதியை மேஜை புறமாய் தள்ளினான்.
ஆதியின் வயிற்று பகுதி மேஜையின் கூரான முணையில் இடித்தமையால் அந்த வலியில் ஆதி இன்னும் சோர்வுற்றாள். இருந்தும் தன் வலது கரத்தால் அந்த மேஜையில் துளாவி வேறொரு ஊசியையும் எடுத்தவள் வேகமாய் முடியவில்லை என்றாலும் சம்பத் அவளை திருப்பிய போது அந்த ஊசியை சம்பத்தின் தோளில் இறக்கியிருந்தாள்.
சம்பத்தும் அதிர்ந்து அவளை தள்ளி விட, கீழே விழுந்த ஆதி எழ முயலும் முன் முருகேஷ் அவளது தலையில் ஒரு கன்னாடி குடுவையை தூக்கி அடித்தான்.
இரத்தம் பொலபொலவென கொட்ட கீழே விழுந்த ஆதியின் கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் மட்டும் வலிய அவள் அசைவே இல்லாமல் கிடந்ததால் எங்கு இறந்து விட்டாளோ என்ற பயத்தில் முருகேஷ் அவளருகில் செல்லும் முன் ஆதி சட்டென பெருமூச்சு விட்டு வலியில் அலறத் தொடங்கினாள்.
புவியால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளை முருகேஷ் சுவற்றோடு வைத்து கட்டி வைத்திருந்தான். ஆதி வலியில் கதறும் கதறலில் அவனுக்கும் கண்கள் பணித்தது.
" அவங்கள விற்றுங்க ப்லீஸ். ப்லீஸ் அவங்கள விற்றுங்க " என புவியும் அலற ஆதியின் முடியை பிடித்து அவள் அலற அலற அதை பொருட்படுத்தாமல் அவளை தூக்கி அங்கிருந்த கட்டில் மீது போட்டான் முருகேஷ். இதற்கிடையில் புவி ஆதிக்கு பரிசளித்த அந்த டாலர் கீழே கிடக்க அதை தன் கழுத்தை தேய்த்தபடி எடுந்த கல்யாணி ஆதியை முறைத்து கொண்டே அதை தூக்கி எறிய முணைந்தாள். ஆனால் அதை கவனித்த ஆதி " இல்-ல வேண்டாம் " என கத்திக் கொண்டே படுத்திருந்த மெத்தையிலிருந்து கீழே விழுந்தாள்.
ஆதி கல்யாணி பக்கம் வர முயலும் முன் அவள் தலை முடியாய் கொத்தாய் பிடித்த கல்யாண் " எவ்ளோ தைரியம் இருந்தா எங்களையே அடிச்சிட்டு நீ இவ்வளவு பண்ணீருப்ப. அது வேணுமா உனக்கு?? இங்க குடு கல்யாணி " என அந்த டாலரை கல்யாணியிடமிருந்து வாங்கி ஆதியிடம் காட்டினான். ஆதி அழுது கொண்டே அதை நோக்கி கையை நீட்ட அதை நகர விடாமல் இறுக்கிப் பிடித்தான் கல்யாண்.
" டேய் அவங்கள விடு டா. அண்ணி அண்ணி " என புவியும் கத்த " இவன் ஏன் இவ்வளவு குதித்கிறான்??? ஓஹ் அவ்வளவு பாசமா?? " என சம்பத் அங்கிருந்த ராடால் புவியின் முகத்திலே அடித்தான்.
" நோ! !! " என ஆதி அலற அந்த டாலரை கொடுக்கக் கூறி அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் மசியவில்லை. " அத குடுத்துடுங்க டா. அத தயவு செஞ்சு குடுத்துடுங்க " என புவியும் தலையிலிருந்து வலிந்த இரத்தத்துடன் கதறினான்.
" உனக்கு இது அவ்வளவு வேணுமுன்னா அத நானே குடுத்துடுறேன் " என பல்லைக் கடித்த கல்யாண் அருகிலிருந்த ஆப்பரேஷனில் உபயோகிக்கும் கத்திரிக்கோலை எடுத்து ஆதி கதற கதற அவளது நெற்றியில் ' ஏ டி ' என கிருக்கத் தொடங்கினான்.
செல்வராஜ் அதையெல்லாம் பார்க்காமல் மிகவும் தீவிரமாய் ஆதியின் உடல் நிலையை பார்த்துக் கொண்டிருந்தார். புவி கதறினான். எவ்வளவோ கதறினான். ஆனால் அவனையும் அவர்கள் மதிக்கவில்லை.
" போதும் உங்களுக்கு முதல்ல என்ன ஆச்சுன்னு பார்க்கனும் வாங்க " என செல்வராஜ் அவர்களனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியேற ஆதி அந்த இரத்த கோலத்திலே கீழே விடப்பட்டிருந்தாள்.
புவி கத்தி கத்தி அழுதபடியே மண்டியிட அவனை சுவற்றோடு வைத்து கட்டியிருந்த கயிறு அவன் இவ்வளவு நேரம் திமிறியதால் திடீரென அவிழ்த்துக் கொண்டது.
இருந்தும் கரங்கள் இரண்டும் பின் கட்டப்பட்டிருந்ததால் தடுமாறி கீழே விழுந்த புவி தவழ்ந்து கொண்டே ஆதியிடம் சென்றான். கடினப்பட்டு அவளை அடைந்தவன் அவளை விடாது அழைத்து கொண்டே இருக்க ஆதியால் கண்களையே திறக்க முடியவில்லை. அவள் முகமெல்லாம் இரத்தமிருப்பதை கண்டு புவி கத்தி அழுதான். அது அவளுக்குக் கேட்டிருந்தது போலும்.
கண்கள் பிரிக்க இயலாமல் பாதி திறந்த நிலையில் அவனை நோக்கி நடுங்கும் தன் கரத்தை நீட்டினாள். " அண்ணி அண்ணி நான் தெரியிறனா என்ன பாருங்க அண்ணி " என புவி அழ அவன் கன்னத்தை பிடித்த ஆதியினால் வாய் திறந்து எதுவும் கூற முடியவில்லை.
" வலி-க்கிது புவி " என ஆதி பல்லைக் கடிக்கக் கூட தெம்பில்லாமல் கைகளை கீழே விட புவி பதறினான். " அண்ணி, என்னப் பாருங்க அண்ணி நாம வெளிய போய்டலாம் அண்ணி " என புவி அவளை அழைக்க " அண்ணனுக்கு நீ வந்தது தெரியுமா?? புவி " என ஆதி திக்கித் தினறிய போது புவி தலையை தரையில் அடித்து கொண்டான்.
" சொல்லாம வந்துட்டேன் அண்ணி " என புவி அழ " அழாத புவி நான் சொல்றத கேளு. ஒழுங்கா கேளு " என ஆதி அவளுக்குத் தெரிந்த செல்ராஜ் செய்த விஷயம் அனைத்தையும் புவியிடம் கூறினாள். நடந்த அனைத்தையும் அவள் கூற கூற ஆதிக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டது. கண்கள் சொருகுவதை உணர்ந்து ஆதி தலையை நகர்த்த முயன்ற நேரமெல்லாம் வலி அவளை அலறத் தான் வைத்தது.
புவி என்ன செய்வதென்றே தெரியாமல் அவளை அழைத்தபடியே அழுதான். போனவர்கள் மீண்டும் வரும் போது ஆதி ஆழ்ந்த மயக்கத்திற்குள் வீழ்ந்திருந்தாள். புவி ஆதியினருகில் இருப்பதை கண்டதும் வேகமாய் ஓடி வந்த முருகேஷ் புவியை தரதரவென இழுத்துச் சென்று மீண்டும் கட்டி வைத்தான்.
செல்வராஜ் அந்த குடுவையை கல்யாணியிடம் கொடுக்க அவள் அதை ஆதியின் கண்களில் போய் கொட்டினாள். அது செயல்படவில்லையோ என எண்ணிக் கொண்டிருந்த போதே ஆதியின் மூடிய கண்களிலிருந்து கண்ணீர் வடியத் தொடங்கியது.
புவி அதற்கே துடித்துடித்த போது ஒரு நிமிடத்தில் அவளது கண்களில் இருந்து இரத்தம் வடிந்ததை கண்டதும் புவி பதறி விட்டான். ஆதிக்கு வலி உயிர் போய்க் கொண்டிருந்தாலும் வாய் திறந்து அலறும் அளவிற்கு அவளிடம் சக்தி இருக்கவில்லை.
அதை அவர்கள் கண்டு கொண்டதாய் கூட தெரியவில்லை. ஒரு ஆராய்ச்சி பொருளாகவே ஆதியை புவியின் கண்கள் முன்பாகவே உபயோகித்தனர். புவியை தோன்றும் போது அடித்து கொண்டிருந்தனர். அபிமன்யு தம்பியை காணாமல் அவனுக்கு அழைத்த போதெல்லாம் குறுஞ்செய்தி மூலமாக சம்பத் அவனுக்கு நம்பும் படியாக குறுஞ்செய்தி அனுப்பி நம் நாயகனுக்குச் சந்தேகமே வராததை போல் பார்த்து கொண்டான்.
ஆதியின் உயிர் ஊசலாடுவதை புரிந்து கொள்ளாமல் அவர்கள் மேலும் மேலும் எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்தாலும் அவர்களுக்குத் தேவையான விஷம் கிடைக்கவே இல்லை.
" இவள இதுக்கு மேல வச்சிருக்குறது வேஸ்ட்டு தான் " என கல்யாணி கூற தரையில் ஒரு ஓரமாய் கிடந்த புவி தலையை தூக்க இயலாமல் தூக்கி ஆதியை தேடினான்.
" கொஞ்சம் நேரத்துல முடிஞ்சிடும். தூக்கி கரைல எங்கையாவது வீசிடுங்க. டேய் அடையாளமே தெரியாத அளவு செஞ்சிடு. எல்லாம் வீணாப் போச்சு இவளால " என செல்வராஜ் கத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியதும் புவி அதை கேட்டு அழத் தொடங்கினான்.
முருகேஷ் ஒரு ராடால் ஆதியின் தலையில் மீண்டும் அடித்ததும் ஆதி ஒரு பெருமூச்சு விட்டு கண்கள் சொருகிய நிலையில் கீழே விழுந்தாள், புவியின் கண் முன்னே ஆதியின் உயிரும் பிரிந்தது. கல்யாண் சம்பத் மற்றும் கல்யாணியும் செல்வராஜோடே அங்கிருந்து அதை கண்டதும் ஆதியை கடிந்து விட்டு எதுவும் நடவாததை போலவே வெளியேறியிருந்தனர்.
முருகேஷ் அவள் இறந்ததை முடிவு செய்ததும் ஆதியை எரித்து விடலாமா அல்ல தூக்கியே வீசி விடுவோமா என சிந்தித்து கொண்டிருந்த போதே புவி அவனை பார்த்து கெஞ்சினான்.
" அண்ணா ப்லீஸ் அண்ணா தயவு செஞ்சு கேக்குறேன் அந்த டாலர மட்டுமாவது என் கிட்ட குடுங்க. என் அண்ணி நியாபகமா என் கிட்ட அது ஒன்னு தான் இருக்கு. " என புவி அவன் காலடிக்கு தவழ்ந்தே வந்திருக்க இரக்கமில்லாமல் அவனை உதைத்து தூரத் தள்ளிய முருகேஷ் " இது வேணுமா?? நீ ஏன் உன் அண்ணி மாரி தலைலையே இத வாங்கிக்க கூடாது? செத்ததுக்கு அப்பறம் கூட அவ நியாபகம் உன்ன விட்டு போகவே போகாது " என குரூரமாய் கூறியவன் புவியின் தலையை பிடித்து சுவற்றில் மோதி அருகிலிருந்த கத்தியால் அவன் நெற்றியில் அதே ' ஏ டி ' யை கிருக்கினான்.
புவி எவ்வளவோ அலறியும் அவன் கேட்கவில்லை. காலால் முருகேஷை இடித்து விட்டு புவி தட்டுத் தடுமாறி எழுந்த போதும் அவன் கழுத்தை பிடித்து தலையை மீண்டும் சுவற்றில் மோதினான் முருகேஷ். புவி வலியில் கத்திக் கொண்டே முருகேஷை தள்ளி விட்டு விட்டு அவன் சுதாரிக்கும் முன் தன் கைகளை கீழுக்குக் கொண்டு வந்து குதித்து கைகளை முன்னே கொண்டு வந்திருந்தான்.
ஆனால் புவி அந்த கயிற்றை கலட்டும் முன்பே முருகேஷ் அருகிலிருந்த கன்னாடி குடுவையை எடுத்து புவியின் தலையில் போட்டுடைத்தான். அந்த அதிர்வில் புவியின் உடல் பலத்த சத்தத்துடன் கீழே விழ அவன் இறுதியாய் கண்டது ஆதியின் அந்த கோரமான நிலையை தான்.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro