ஈரம் - 26
அந்த ஆளில்லாத மைதானத்தில் நின்ற நான்கு ஆண்களின் பார்வையும் ஒருவரை ஒருவர் தீண்டி வர அபிமன்யு கூறிய பதிலை கேட்டு எவ்விதமாய் பதில் தருவதென தெரியாமல் ஹரீஷும் ஸ்டீஃபனும் நம் நாயகனை பார்த்து கொண்டிருந்தனர்.
அவர்களிருவரையும் கண்களாலே அமைதியாய் இருக்கக் கூறிய அபிமன்யு திரும்பி தன் சகோதரனின் தோளைப் பற்றினான். புவி பட்டென அவனின் தொடுகையிலிருந்து தள்ளி நின்று கொண்டாலும் அவன் கண்களில் வந்து சென்ற உணர்வை கவனித்திருந்தான் நம் நாயகன்.
" புவி, ரிலக்ஸ். நீ என்ன செஞ்சிக்கிட்டு இருக்கன்னு உனக்கு தெரியுமா??? " என பொருமையாய் அவன் குரல் கொடுக்க புவி அதற்கு பதிலே அளிக்கவில்லை. " உன் அண்ணி உன்ன இந்த நிலைமைல பார்த்தா உயிரோட இருப்பான்னு நினைக்கிறியா?? " என அபிமன்யு மீண்டும் கேட்டபோது அவனை நேருக்கு நேராய் நோக்கிய புவியின் கண்கள் மீண்டும் சிவந்திருந்தது.
" அவங்க கண்ணு முன்னாடி தான் அன்னைக்கு எல்லாமே நடந்துச்சு. என் அண்ணிய என்னோட கண்ணு முன்னாடி தான் அவங்க கொன்னாங்க. நான் ஏன் அதுக்காக அவங்கள உயிரோட வாழ விடனும்?? " என புவி கோவமாய் தன் தமையனை நோக்கினான்.
" சட்டத்தோட உதவியோட அவங்களுக்கு தண்டனை கொடுக்களாம் புவி. சட்டம் தன் கடமையை செய்யும். "
" ஆமா நல்லா செஞ்சிது. உன் சட்டம் நல்லா செஞ்சிது. நீ கேட்ட தானே அந்த முருகேஷ் ஒரு கொழந்தைய கடத்தின முயற்சில ஜெயிலுக்கு போய் ஒரு வாரத்துல வெளிய வந்துட்டான். என்ன செஞ்சீங்க நீங்க??? " என புவி குரலை உயர்த்த ஹரீஷ் துப்பாக்கியை உயர்த்தினான்.
" ஹரீஷ் வெயிட். புவி அன்னைக்கு என்ன ஆச்சு??? ஆதி உயிரோட இருக்காளா??? அவ தான் இந்த கொலையெல்லாம் செஞ்சதா??? " என பதிலறிந்தும் அவன் கேட்க " அண்ணி உயிரோட இல்ல. அவங்கள என் கண்ணு முன்னாடியே அவங்க ரொம்பக் கொடூரமா கொன்னுட்டாங்க. என்னால அப்போ ஒன்னும் செய்ய முடியல. நீ இல்ல. நீ எங்க கூட இல்ல. அண்ணி செத்துட்டாங்க. அவங்க கைலையே செத்துட்டாங்க " என புவி கத்திக் கொண்டே கீழ் விழ அவனை பிடிக்கச் சென்ற அபிமன்யுவிடமிருந்து வேகமாய் நகர்ந்தான் அவன்.
" எல்லா உண்மையையும் கண்டுப்புடிச்சதுக்கு அப்பறமும் நீ இன்னும் அந்த செல்வராஜ அரெஸ்ட் பண்ணலல்ல. என் சொந்த அண்ணன் நீயே செய்யாதப்போ யாரோ ஒருத்தவங்க அவன தண்டிப்பாங்கன்னு என்ன எப்படிண்ணா நம்ப சொல்ற. அன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா அண்ணா??? இது எல்லாம் எங்க ஆரம்பிச்சது தெரியுமா?? " என அவன் கத்த கத்த அபிமன்யுவிற்கும் மனதில் ஒரு வலி எழுந்தது.
நான்கரை வருடத்திற்கு முன்பு.
தான் கருவுற்ற ஆறு மாதத்தில் விடுப்பை மறுத்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கே வந்திருந்தாள் ஆதி. செல்வராஜ் அதே மருத்துவமனையில் தான் தலைமை மருத்துவராய் இருந்தார்.
அதே நேரத்தில் ஆதி ஒரு மருத்துவ விஞ்ஞானியாக சில மருந்துகளை உருவாக்கும் முயற்சிலும் ஈடுபட்டிருந்தாள். லினா அதே மருத்துவமனையில் குழந்தைகள் நல நிபுணராய் பணி புரிந்து கொண்டிருந்தாள்.
ஆதி அந்த நேரத்தில் தான் ஒரு புதிய மருந்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க அதை பற்றிய தகவலையே தன்னுடன் வேலை பார்க்கும் கல்யாணியிடம் மட்டும் தான் பகிர்ந்திருந்தாள் ஆதி.
அம்மருந்து தீ விபத்தில் சிக்கிக் கொண்டு எரிந்த தோல் பிரச்சனைகளை சரி செய்வதற்காய் உபயோகப்பட வேண்டிய மருந்து. இதை பற்றி அறிந்தப் பின் தான் செல்வராஜின் கண்களில் விழுந்தாள் ஆதி.
அவரது திட்டத்திற்கு ஏற்ற அதே நேரம் அடங்கிப் போகும் மருத்துவராய் எண்ணி அவளை அனுகினார். அன்று தன் மருத்துவமனையில் இருக்கும் அனைத்து மருத்துவ விஞ்ஞானிகளையும் கூட்டி அமர வைத்திருந்த செல்வராஜ் ஒவ்வொரு மருத்துவரிடமும் அவர்கள் பயின்று வரும் மருந்தை பற்றி விசாரித்து கொண்டிருந்தார். ஆதியின் முறையும் அவர் எதிர்பார்த்ததை போல் விரைவாய் வந்தடைய அனைவருக்கும் முன் நின்றிருந்த ஆதி குரலை சரி செய்து கொண்டு பேசத் தொடங்கினாள்.
" கண்ணீர். மனுஷ உடல்லையே, உடல விட்டு வெளியேறி உடல் உள்ள இருக்குற பிரச்சனை சீர் படுத்துறது. நாம நினைக்கிறத விடவும் நம்ம கண்களில் நிறையவே சக்தி இருக்கு. அதே மாதிரி அந்த கண்ணீருக்கு உடல் காயங்கள குணப்படுத்துற சக்தியும் இருக்கு. அது இன்னும் நூறு சதவீதம் உறுதியாகலன்னாலும் கண்ணீருக்கு அந்த சக்தி இருக்கு. இதுல என்ன பிரச்சனைன்னா, கண்ணீர் ஒரு சாதரண திரவமா இருந்தாலும் அது கண்கள விட்டு வெளியேறுவதால அதுக்கு இரண்டு பன்புமே இருக்கு. தண்ணீர எந்த பாத்திரத்துல வச்சாலும் அது அதுக்கேற்றதை போல மாறிக்கிர மாரியே கண்ணீரை மருந்தாகவும் உபயோகிக்க முடியும். விஷமாகவும் உபயோகிக்க முடியும் " என ஆதி கூறிய போது செல்வராஜின் கண்கள் அவளை ஆர்வமாய் ஊடுருவியது.
" இது விஷமா மாறாம ஒரு மருந்தா உருவாக்குறதுக்கு தான் நான் முயற்சி செய்யனும். " என்றதோடு ஆதி போய் அமர்ந்து கொண்டாள். மீதமிருந்தவர்களும் தங்களது மருந்தை பற்றி கூறி கைதட்டல்களை பெற்றாலும் செல்வராஜின் கவனம் எதிலும் பதியவில்லை.
செல்வராஜ் சர்வதேச மருத்துவமனைகள் மூலமாக வெளிநாட்டிலிருக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு சில தடைபட்ட மருந்துகளை விற்று பணம் பார்த்து கொண்டிருப்பவர். குறிப்பிட்ட தோலையும் உறுப்புகளையும் விற்றுக் கொண்டிருந்தவரை ஒரு மருந்து தயாரிக்கக் கூறி அனுகியது ஒரு தனியார் மருத்துவமனை.
அது மருந்தென்பதை விடவும், உயிர்கொல்லியாகத் தான் கேட்டுள்ளனர். அன்று முதல் ஆதியின் எண்ணத்தை வைத்து கண்ணீரினால் ஒரு கிருமியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அதற்கு அவர் உபயோகித்ததோ கண் தானம் செய்ய ஒப்புதல் கொடுத்து விட்டதாக கூறப்படும் இளைஞர்களின் கண்களை தான். விபத்தில் இறந்த இளைஞர்களின் கண்களை எடுத்து அதன் மூலமாய் ஒரு சரியான கிருமியை கண்டுப்பிடிக்க முயன்றார். கண் தானம் செய்தவர்கள் மட்டுமல்லாது ஏதேனும் விபத்தில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுள் குறிப்பிட்டவர்களை காப்பாற்றாமல் ' இனிமேல் உயிர் வாழ வழியில்லை.அவரது உறுப்புகளையாவது தானம் செய்து வேறு உடலில் வாழட்டும் " என பேசி கருணை கொலை செய்ததை போல் பாவித்து அவர்களது கண்களை மட்டும் பறித்து கொண்டார்.
அவர் என்ன தான் செய்தும், நூறுக்கும் மேற்பட்ட கண்களை நாசம் செய்தும் அவரால் ஒரு மருந்தை கண்டுப்பிடிக்க முடியவில்லை. அது சாதாரண விஷயமும் இல்லையே. ஆதி தெளிவாகவும் அன்று எதையும் கூறவில்லை. கண்ணீரை ஒரு உலோகமாய் உபயோகிக்கலாமென்று தான் கூறினாள் அதை மட்டும் கேட்டுவிட்டு உடனே செயல்படுத்தவே முயன்றவருக்கு வெற்றி கிட்டுவிடுமா என்ன???
இருந்தாலும் தனது விடாமுயற்சியால் அவர் கண்டுப்பிடித்த கிருமி எதுவும் ஒரு உயிர் வாழும் உடலில் வாழவே வழியற்று இருந்தது. கல்யாணி தொடர்ந்து ஆதியுடன் நெருங்கி பழகவே முயன்று கொண்டிருந்தாலும் ஆதி அவளது மருந்தை பற்றிய எந்த தகவலையும் அவளிடம் கூறவில்லை.
நிறைமாத கர்பவதியை வேலைக்கெல்லாம் அனுப்ப முடியாதென அபிமன்யுவும் புவியும் பிடிவாதம் பிடித்து அவளது எட்டாவது மாதத்தில் அவளை வீட்டிலே இருக்க வைத்தனர். சகோதர்கள் இருவரும் அவர்களது தேவதையை நெஞ்சில் வைத்துத் தாங்கினர்.
புவி படிப்பில் பலே கில்லாடி. அவனது அதீத சக்தி கொண்ட மூளையின் அறிவினால் வருடங்கள் எடுக்கும் படிப்பினை ஒரு வருடத்திலே முடித்து விட்டு இப்போது தீவிரமாக விஞ்ஞானத்தில் பட்டம் பயின்று கொண்டிருக்கிறான். முன்பே கூறியதை போலத் தான், புவிக்கு அவன் அண்ணனும் அண்ணியும் தான் எல்லாம்.
ஆதி அண்ணி மட்டுமல்லாது தாயை காணாத புவிக்கு இரண்டாமன்னை. எதற்கெடுத்தாலுமே புவிக்கு முதலில் வருவது ஆதி தான். அண்ணனை விடவும் அண்ணியிடம் புவிக்கு நெருக்கமான பிணைப்பு. அதை எண்ணி அபிமன்யு மகிழாத நாளே இல்லை.
விரைவிலே அவர்களை பார்க்க வந்தாள் அந்த குடும்பத்தின் குட்டி தேவதை. எயினி பிறந்ததும் அவ்வீட்டில் அனைவருக்கும் குஷியோ குஷி தான். ஆதியை ஓய்வெடுக்க விட்டுவிட்டு அண்ணனும் தம்பியுமாய் வீட்டை பார்த்து கொண்டு அவர்களையும் பார்த்து கொண்டனர்.
புவியின் மடி மீதே எயினியை முதலில் ஆதி குளிப்பாட்ட புவியின் மனதில் அந்த நினைவுகளெல்லாம் இன்னும் அழியா பொற்சித்திரமாய் வாழ்ந்து வந்தது. எயினி பிறந்த ஐந்து மாதத்தில் மீண்டும் ஆதி மருத்துவமனைக்கு வருவதை தொடர்ந்தாள்.
ஆதி எப்பொழுதும் போல தனது நோயாளிகளை பார்த்து கொண்டிருந்த போது அவளை வரவேற்க வந்ததாய் கூறி ஒரு பூங்கொத்தை கொடுத்து விட்டு சென்றார் செல்வராஜ்.
அப்போது தான் நகரத்தில் கல்லூரி மாணவர்களை கடத்தும் வதந்தி பரவி வந்தது. அது வதந்தி மட்டுமல்ல கல்லூரி மாணவர்கள் முதல் நுப்பத்தைந்து வயதுக்கு உட்பட்டோரை செல்வராஜ் தான் முருகேஷை வைத்து கடத்தி வந்தார்.
முருகேஷ் பிட்பாக்கேட் அடிப்பது, செய்னறுப்பதென சிறு சிறு தவறு செய்து வந்தாலும் செல்வராஜுடன் சேர்ந்ததும் அளவின்றி தவறுகளை செய்து பாவத்தை குவித்தான்.
அபிமன்யு இந்த கடத்தலை பற்றி தீவிர விசாரணையில் இருக்க இதை பற்றி ஏதுமறியா ஆதிக்கு ஒரு நாள் செல்வராஜிடமிருந்து அழைப்பு வந்தது.
" சொல்லுங்க டீன் "
" ஆதி, உன் மருந்தோட ஃபார்முலா எனக்கு வேணும்மா. வெளிநாட்டுல ஒரு மருந்துக்காக நம்ம கிட்ட கேற்றுக்காங்க. அதுக்கு உன்னோட உதவி எனக்கு வேணும். " என செல்வராஜ் மிகவும் அன்பாய் அவளிடம் வினவ ஆதி முதலில் தயங்கினாலும் பின் வேறு வழியின்றி அறை மனதாகவே தனது மருந்திற்கான ஃபார்முலாவை அவரிடம் கொடுத்தாள்.
ஆனால் விஷயமென்னவெனில் அந்த ஃபார்முலாவை கொண்டு ஆதியாலே எந்த ஒரு மருந்தையும் கண்டுப்பிடிக்க இயலாத போது அவரால் என்ன செய்திட முடியும்?? அதுவும் வீணாகத்தான் போனது.
இறுதியாக வேறு வழியே இல்லாமல் ஆதியையே அனுகி அந்த மருந்தை கண்டுப்பிடித்துத் தரக் கூறினார். ஆனால் அதில் ஆதிக்கு துளியும் ஈடுபாடு இல்லை. ஊரில் நடக்கும் கடத்தலுக்கும் மருத்துவமனையில் இயல்பிலே இல்லாமல் நடக்கும் அதிகப்படியான இறப்புகளிலும் சந்தேகம் கொண்டாள்.
அதை பற்றி தவறுதலாய் ஒரு முறை கல்யாணியிடம் பகிர்ந்து கொண்டவள், அடுத்த இரண்டு நாட்களில் செல்வராஜ் யாரிடமோ செல்பேசியில் பேசிக் கொண்டிருந்ததை தவறுதலாய் கேட்டிருந்தாள்.
அவர் முருகேஷிடம் அடுத்ததாக ஒரு கல்லூரி மாணவனை கடத்தக் கூறியதோடு நேற்று கொன்ற யாரையோ பாளத்தின் அருகில் வீசிவிடுமாறு கூறிக் கொண்டிருந்தார். அதை கேட்டு விட்டு தடயமின்றி அங்கிருந்து கிளம்பியிருந்த ஆதி அவ்வுண்மையை தன் கணவனிடம் கூறலாமா இல்லை தான் ஏதேனும் தவறாய் கேட்டு விட்டோமா என்ற பதட்டத்தில் இருந்த போதே அவளது சந்தேகத்தை தீர்த்து வைப்பதை போல் அபிமன்யுவே ஒரு கல்லூரி மாணவனின் பிணத்தை மேம்பாலத்தின் கீழிருந்து கண்டுப்பிடித்தான்.
அதற்கு மேலும் ஆதியினால் அமைதியாய் இருக்க முடியவில்லை. இவர் என்ன தான் செய்கிறாரென கண்டுப்பிடித்து விடும் நோக்கில் அவள் மருத்துவமனைக்குச் சென்று அவரது அறைக்குள்ளே நுழைந்த போது தான் ஆதியை கையும் களவமாய் பிடித்தார் செல்வராஜ்.
" என்ன தப்பு பண்ணிக்கிட்டு இருக்கீங்க நீங்க?? யாரக் கேட்டு இதையெல்லாம் பன்றீங்க???இந்த கொலைக்கெல்லாத்துக்கும் நீங்க தான காரணம்?? " என ஆதி கோவமாய் கேட்க அவரோ " என்னமா பேசுற??? என்ன உளறிக்கிட்டு இருக்க?? " என அப்பாவியாய் அவளை பார்த்தார்.
" நடிக்காதீங்க. நீங்க பேசுனதெல்லாம் நான் கேட்டுட்டேன். மரியாதையா இந்த தப்பையெல்லாம் நிறுத்தீட்டு சரண்டராகுங்க. நீங்க ஏகப்பட்ட தப்புப் பண்ணீட்டீங்க " என அப்போதும் ஆதி பொருமையாய் அவரிடம் கூற " என்னமா நீ?? நான் உன்ன மருந்து தானே கண்டுப்புடிக்க சொன்னேன். அத மட்டும் கண்டுப்புடிச்சு குடு. நான் எல்லாத்தையும் விட்டுடுறேன். " என அவளையே சமாதானம் செய்ய முயன்றார் செல்வராஜ்.
" சீ என்ன மனுஷன் யா நீ?? உன்ன நம்பி நான் எவ்ளோ பெரிய பாவம் செய்ய பார்த்தேன். நான் உன்ன திருந்த சொன்னா, நீ திரும்பவும் என்ன அதையே செய்ய சொல்ற?? " என ஆதி தன் பொருமையை இழந்த நேரம் அதையறியாமல் " இங்கப் பாருமா. எனக்கு நீ தேவையே இல்ல. ஆனா நீ உருவாக்கப் போற மருந்து எனக்கு வேணும். அத முடிஞ்சா எனக்கு செஞ்சு குடுத்துட்டு பொட்டி பாம்பா அடங்கி இருந்துக்கோ??? போலீஸோட பொண்டாட்டிங்குற தைரியத்துல என் ஹாஸ்பிட்டலுக்குள்ளையே ஆதாரம் தேடுறியோ?? அந்த மருந்து என் கைல கிடைக்கலன்னு வச்சுக்கோ, உருத்தெரியாம உன் புருஷன் அவன் தம்பி உன் கொழந்தைன்னு எல்லாரையும் அழிச்சிருவேன் " என செல்வராஜ் கை நீட்டி அவளை எச்சரித்த போது தான் ஆதியின் ஐவிரல் அவரது கன்னத்தில் பதிந்திருந்தது.
" இதுக்கெல்லாம் பயப்புடுற ஆள் நான் இல்ல. என் குடும்பத்த காப்பாத்திக்க எனக்குத் தெரியும். முடிஞ்சா நீ உன்ன அரசாங்கத்து கிட்ட இருந்து காப்பாத்திக்கோ " என அவரை முறைத்து விட்டு விருட்டென அங்கிருந்து வெளியேறினாள் ஆதி.
ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு எளிய வழியில் மருந்தை எப்போதோ ஆதி கண்டுப்பிடித்திருந்தாள். அதை பற்றி செல்வராஜிற்கு தெரிந்தால் அதை விஷமாக நிச்சயம் மாற்றி விடுவாறென எண்ணிக் கொண்டே அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி அருகிலே இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி கூடத்தை அனுகினாள்.
அங்கு தான் ஆதி உருவாக்கிய அந்த மருந்தே இருந்தது. ஒரு கன்னாடி குடுவையிலிருந்த நீல நிற திரவத்தை பிரித்து இரண்டு பச்சை நிற கன்னாடி குடுவைக்குள் பதுக்கிய ஆதி அங்கேயே பத்திரப்படுத்தி விட்டு வேகமாய் தன் வீட்டிற்கு விரைந்தாள்.
லினா அப்போது தான் ஆதி இவ்வாறு தலைமை மருத்துவரை அடித்து விட்டாளென்று பேச்சை கேட்டு தன் தோழியை பார்க்க வீட்டிற்கு வந்திருந்தாள். ஆனால் ஆதி பதட்டத்தை முகத்திலே காட்டாமல் லினாவிடம் பேசிவிட்டு அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். அங்கு தான் ஆதி தன் முதல் தவறை செய்தாள். லினாவிடம் உண்மையை கூறாமலே மறைத்தது.
புவி சோர்வாய் வீட்டிற்கு வந்ததும் "அண்ணி அண்ணி அண்ணி "என கூப்பாடு போட்டுக் கொண்டே அவளை தேடி வர விரைவாக தன்னை நிலை படுத்தி கொண்டு அவனை எப்போதும் போல் வரவேற்து உணவுண்ணச் செய்தாள் ஆதி.
ஆனால் புவி அவள் பதட்டமாய் இருப்பதை எளிதாகக் கண்டு கொண்டிருந்தான். அவளிடமே அவன் கேட்ட போதும் ஆதி ஏதோ சொல்லி சமாளிக்க " சரி நல்லா தூங்கி எழுங்க அண்ணி. நாளைக்கு வேலைக்கு போகாதீங்க. அப்பறம் இங்க பாருங்க உங்களுக்கு ஒரு கிஃப்ட் " என ஒரு குட்டி டப்பாவை அவளிடம் கொடுத்தான்.
தனிச்சையாய் மலர்ந்த புன்னகையுடன் அதை திறந்து பார்த்த ஆதி அதில் இருந்த ' ஏ டி ' என்ற டாலரை கண்டு மகிழ்ச்சியாய் சிரிக்க " எப்படி புடிச்சிருக்கா??? நானே செஞ்சேன் " என்றான் புவி பெருமையாய்.
" ரொம்ப அழகா இருக்கு " என அவனை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவள் அவளது சங்கிலியில் அதை கோர்த்து போட்டுக் கொண்டு அவனுக்கு காண்பித்தாள். " அப்படியே அழகு ரதி மாரியே இருக்ககீங்க அண்ணி. " என்றான் புவி புன்னகையோடு.
" என்ன அண்ணிக்கும் கொழுந்தனுக்கும் மீட்டிங்?? " என கேட்டுக் கொண்டே அபிமன்யு உள்ளே வர " என் அண்ணி எங்க மீட்டிங் உனக்கென்ன? " என புவி ஆதியின் கழுத்தை கட்டிக் கொண்டு தன் அண்ணனை முறைக்க " அவ எனக்கு முதல்ல பொண்டாட்டி டா அப்பறம் தான் உனக்கு அண்ணி " என அபிமன்யுவும் சண்டைக்கு வர " இல்ல இல்ல நான் போய் பொண்ணு கேட்டதால தான் உனக்கு கல்யாணமே ஆச்சு. சோ எனக்கு தான் முதல்ல அண்ணி " என குழந்தை போல் சண்டையிட்டான் புவி.
இப்படி அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருந்த ஆதியை எப்படியோ கத்தி அழுது காப்பாற்றியிருந்தாள் குட்டி எயினி.
அன்றைய இரவை மகிழ்ச்சியாக கடந்து வந்த ஆதி மறுநாள் என்ன நடக்க உள்ளதென்பதை அறியாமல் தன் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தாள். அப்போது ஆதிக்கு கல்யாணியிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை ஏற்று சாதாரணமாய் பேசிக் கொண்டே வந்தவள் ஆராய்ச்சி கூடத்திற்கு மருந்தெடுக்க செல்வதாய் அவளே அறியாமல் உளறியிருந்தாள். அது தான் ஆதி செய்த இரண்டாவது தவறு கல்யாணியை நம்பியது. ஆனால் அங்கும் ஒரு திருப்பம் இருந்தது.
ஆதியை அப்போது வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் " அண்ணி வாங்க எயினிக்கு துணி எடுக்கனும் " என கூறி இணையத்தில் புது புது ஆடைகளை பார்க்க வைத்து விட்டான் புவி.
அன்று வீட்டிலே நேரத்தை ஓட்டிய ஆதி மாலை போல மருத்துவமனைக்கு வந்தாள். வந்த போது ஒரு முறை லினாவை பார்த்து விட்டு வருவோமென எண்ணி எங்கோ வந்தவள் கல்யாணியை யாருடனோ கண்டு விட்டு பாதையில் திடீர் நிறுத்தமிட்டு நிற்க கல்யாணியுடன் நின்றிருந்தது செல்வராஜே தான்.
அருகிலிருந்த ஒரு முகக்கவசத்தை அணிந்து கொண்டு வேகமாய் ஒரு அறைக்குள் போய் மறைந்து கொண்டாள் ஆதி. அவர்கள் யாருமற்ற பாதையில் நின்றிருந்ததால் அவர்கள் பேசுவது தெள்ளத் தெளிவாய் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
" காலைல வருவானு சொன்ன, ஆனா அவ வரவே இல்ல. என்ன நினைச்சிட்டு இருக்க கல்யாணி நீ?? " என செல்வராஜ் கோவமாய் கத்த " இல்ல ஸர், ஆதி வரதா தான் சொன்னா. ஆனா அவ ஏன் வரலன்னு எனக்குத் தெரியல " என தலை குனிந்து கூறினாள் கல்யாணி.
" அவ எப்படியும் அந்த மருந்த முடிச்சிட்டா தானே சரி விடு. நீ திரும்ப அவள கூப்பிடு நாம இன்னைக்கே அவ கதைய முடிச்சிடலாம் " என செல்வராஜ் கல்யாணியிடம் கூறிக் கொண்டிருக்க வேகமாய் தன் செல்பேசியை சைலென்ட்டில் போட்டு விட்டு அங்கிருந்து வெளியே விரைந்திருந்தாள் ஆதி.
ஆதிக்கு மனம் படபடவென அடித்து கொண்டது. துரோகம், ஏமாற்றமடைந்த துக்கம் தொண்டையை அடைத்தது. கல்யாணியை நம்பித் தான் லினாவிடம் கூறாத அந்த மருந்தை பற்றிக் கூட அவளிடம் பகிர்ந்து கொண்டாள். ஆனால் ஆதியினால் இனி எதுவும் செய்ய முடியாதே.
என்ன செய்வதென தெரியாமல் பித்து பிடித்தவளை போல் அழுதே புலம்பியவள் பின் ஒரு முடிவெடுத்து கொண்டு முதல் வேளையாக லினாவிடம் சத்தியம் வாங்கினாள். அடுத்து ஸ்டீஃபனிடம் பேசினாள்.
பின் வேண்டுமென்றே கல்யாணிக்கு அழைப்பு விடுத்து தான் மருத்துவமனைக்கு செல்வதாய் கூறிவிட்டு வீட்டில் அபிமன்யு மற்றும் புவியிடம் கடைக்குச் செல்வதாய் பொய்யுரைத்து விட்டு தன் மரணத்தை நோக்கிச் சென்றாள் ஆதி.
ஆதியினால் உண்மையை தன் கணவனிடம் கூறியிருக்க முடியும் தான். இப்போது தானே, தன் மரணத்தைத் தேடி செல்லாமல் காவலுக்குக் கூட செல்ல முடியும் தான். ஆனால் அப்படி ஒரு நிலை வந்தால் தன் குழந்தைக்கும் குடும்பத்திற்கும் எதுவும் ஆகாதென என்ன நிச்சயம்?? இது நாள் வரை செல்வராஜ் அவளை விட்டு வைத்திருந்தது அந்த மருந்தை ஆதியினால் மட்டும் தான் கண்டுப்பிடிக்க முடியும் என்பதற்காகத்தான். ஆனால் இப்போது அவள் மருந்தை எப்போதோ கண்டுப்பிடித்து விட்டாளென தெரிந்து விட்டதால் அவர் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்ல முயல்வாரென பயந்து தான் இப்போது அவளே அம்முடிவை எடுத்தாள்.
மருத்துவமனைக்குச் சென்று அந்த இரு பச்சை குடுவையையும் பெற்றுக் கொண்டு இரவில் தன்னந்தனியே சென்றவளை செல்வராஜின் சொல்லை கேட்டு கடத்தியிருந்தான் முருகேஷ்..
தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro