ஈரம் - 24
அபிமன்யு நேராய் போய் நின்றது தனுஷின் வீட்டின் முன் தான். நேற்றே அந்த ட்ரோனை கொடுப்பதாய் கூறியிருந்தான் ஆனால் அந்த மாத்திரைகளின் ரிசல்ட் வந்ததால் அவனால் இங்கு வர முடியாமல் போயிருந்தது.
கதவை தட்டிவிட்டு காத்திருந்தவன் தனுஷே ஓடி வந்து கதவை திறந்ததும் அவனிடம் புன்னகைத்து விட்டு அந்த ட்ரோனை கொடுத்தான் அபிமன்யு. " உள்ள வாங்க ஸர் " என தனுஷ் அவனை உள்ளே இழுத்துச் செல்ல தர்மராஜும் அபிமன்யுவை பார்த்ததும் அவனை அமர வைத்து பன்பாய் பேசினார்.
" நீங்க என்ன வேலை பன்றீங்க ஸர்??? " என சாதாரணமாய் கேட்ட அபிமன்யு அப்போதே எதற்சையாய் அங்கு சுவற்றில் மாட்டப்பட்டிருந்த அவர்களது குடும்பப் படத்திலிருந்த ஆதர்ஷனாவை கண்டு கொண்டான்.
" நான் மன நல மருத்துவரா இருக்கேன் தம்பி. அது என் பொண்ணு தான் பேரு ஆதர்ஷனா " என அந்த புகைபடத்தையே பார்த்து கொண்டிருந்த அபிமன்யுவிடம் கூற " ஓஹ் சரி ஸர். நான் கெளம்புறேன் " என புன்னகைத்து விட்டு அவரிடம் விடைப்பெற்று கொண்டான் அபிமன்யு.
சம்பத்தின் அலுவலகத்தில் அந்த காணொளிகளுக்காய் காத்திருந்த ஹரீஷ் அவை கிடைத்ததும் ஏதோ ஒரு ஊந்துதலில் அங்கேயே அமர்ந்து அதை பார்க்கத் தொடங்கினான். சம்பத் இறுதியாய் அலுவலகத்தை விட்டு வேகமாய் ஏதோ ஒரு கோவத்தில் சென்ற போது வாயிலில் ஒரு மகிழுந்து காத்திருந்தது. அதை சற்று முன் ஓட விட்டு இவன் காத்திருக்க அந்த மகிழுந்து வந்து நின்றதும் அதிலிருந்து வெளியேறிய ஒரு பெண் திமிராய் அந்த மகிழுந்தின் மீதே சாய்ந்து கொண்டு யாருக்கோ அழைப்பு விடுத்து பேசி விட்டு இரண்டு நிமிடத்தில் அழைப்பை துண்டித்து விட்டு உள்ளேயே அமர்ந்து கொண்டாள்.
அடுத்த மூன்றாவது நிமிடம் சம்பத் அதே மகிழுந்தில் ஏறியிருந்தான். " சம்பத்த கடத்தினது ஒரு பொண்ணா?? " என தனக்குத் தானே கேட்டுக் கொண்ட ஹரீஷ் அதே நேரம் வேறொரு காணொளியை காட்டிய மேலாளரை பார்த்து விட்டு அதை கவனிக்கத் தொடங்கினான்.
அது அபிமன்யு கேட்டிருந்த பார்ட்டி அன்று பதிவாகப்பட்ட காணொளி. ஆதர்ஷனா கூறியது பொய்யில்லை என அபிமன்யு உறுதியாய் கூறியப் பின் நிச்சயம் இதில் சம்பத்தை தான், தான் கவனிக்க வேண்டுமென தன்னால் இயன்ற அளவு அந்த பதிவில் தெரிந்த சம்பத்தின் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான் ஹரீஷ்.
ஆதர்ஷனா கூறியதை போலவே அவளிடம் முதலில் இரைஞ்ச இரைஞ்ச பேசியவன் பின் திடீரென அவளை சுவரோடு தள்ளி அதை மற்றவர்களின் பார்வைக்கு அவள் அவனை இழுத்திருப்பதை போல் காட்டியிருந்தான்.
தவறாய் அவளை அவன் தொட முயற்சிக்கும் போது ஆதர்ஷனா விட்ட அறையில் அனைவரும் அவர்களை கவனித்து சில நிமிடங்களில் ஏதோ கத்தத் தொடங்கி இறுதியில் ஆதர்ஷனா கண்ணீரில் வெடித்து அழுததோடு ஓடியதையும் கண்டான். அந்த மேலாளரை அப்பட்டமாய் முறைத்தவன் அந்த காணொளியை மீண்டும் போட்டுக்காட்டி " ஒரு நல்லப் பொண்ணோட வாழ்கைய கெடுக்கப் பாக்குறீங்களே ஸர். என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிக்கிட்டு இனிமே பேசுங்க " என உரக்கக் கூறிவிட்டு அந்த காணொளிகளுடன் உறைந்து நின்றிருந்த அவரிடமிருந்து விடைபெற்றான்.
நாம் எதிர்பார்ப்பதை விடவும் காலம் துரிதமானதல்லோ. இவர்களின் பறபறப்பான காலை மாலை வேளைகளில் இரண்டு நாள் கடந்ததையே எவரும் அறிந்திருக்கவில்லை.
ஆனாலும் இந்த இரண்டு நாளை எவரும் வீணடிக்கவில்லை. அபிமன்யு ஒவ்வொரு துரும்பிலும் எளிதாய் ஒன்றை பிடித்து கொலையாளியை நெருங்குகிறானோ இல்லையோ அடுத்தடுத்த ஆதாரங்களை நெருங்கிக் கொண்டிருந்தான்.
விபுன்யா செல்வராஜின் மருத்துவனையின் ஆணிவேரையே கண்டறிந்திருந்தாள். கிட்டத்தட்ட அந்த நான்கு மாடி கட்டிடத்திற்குள் ஏகப்பட்ட இரகசியத்தை பூட்டி வைத்திருந்தார் செல்வராஜ். விபுன்யா அந்த மருத்துவமனைக்குள் நுழைந்த பதினான்காவது மணி நேரமே செல்வராஜ் அவளை கண்டறிந்திருந்தார்.
ஆனால் அவரால் என்ன செய்யமுடியும். " முருகேஷ காணும். அவன காணும்னு இப்போ என்னால கேஸும் ஃபைல் பண்ண முடியாது. இந்த அபிமன்யு ரொம்ப கிட்ட வந்துட்டான். இனிமேலும் முருகேஷ் பிழைக்கமாட்டான். நான் தப்பிச்சாகனும். ஆதி என்னத் தேடி வருவதற்குள்ள இங்கிருந்து நான் இங்கிலாந்து போயாகனும். " என தனது மருத்துவமனையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவருக்கு தெரியாது முருகேஷை எப்போதோ சரி கட்டி விட்ட அவளின் ஈரம் மிஞ்சா கண்கள் அவர் மீது விழுந்து விட்டதை.
அன்றைய இரவு அபிமன்யு என்றுமில்லாமல் சற்று அதிகமாகவே பதட்டத்தில் காணப்பட்டான். எயினியை இந்த நிலையில் அவன் தனியே சமாளிப்பானா என்ற பயத்தில் ஸ்டீஃபனும் அவர்களோடு வந்து நேற்று தங்கிக் கொண்டான்.
" அபி ஸர் கொஞ்சம் உக்காருங்களேன். நீங்க நடக்குறத பார்த்து எங்களுக்கு தூக்கம் வருது " என தன் மடியில் அமர்ந்து தூக்கம் சொக்கிய கண்களால் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்த தந்தையை பார்த்து கொண்டிருந்த எயினியுடன் சினுங்கினான் ஸ்டீஃபன்.
" என்ன ஸ்டீஃபன் நீங்க?? உங்களுக்கு என் பதட்டம் புரியலையே. மூணு நாள் ஆகப் போகுது ஸ்டீஃபன். யாரும் காணாலன்னு மிஸ்ஸிங் கேஸ் கூட வரல. தமிழ்நாடு ஃபுல்லா செக் பண்ணியாச்சு. இப்போ எதவச்சு நாம முன்னாடி போறது,???" என அபிமன்யு ஆத்திரத்தில் தலை முடியை கொத்தாய் பிடிக்க " ஹையோ அபி ஸர் இருவத்தெட்டு வயசுல விக்கு வைக்கிற நிலைமைக்கு வந்துறாதீங்க பொருமை பொருமை. என் அறிவு ஃப்ரெண்டு சொன்னான்னு நீங்க இவ்ளோ நம்புறீங்களே?? மூணு நாள்ளையே எல்லாம் நடந்துடாது அபி ஸர். வேண்ணா மிஸ்டர் கொலையாளி ட்ரஃபிக்ல மாட்டியிருக்களாம். அதனால யார கொல்லனுமோ அவங்கள கடத்த தாமதமாகியிருக்களாம். கொலையாளிக்கு உடம்பு சரியில்லாம கூட போயிருக்களாம். யாருக்குத் தெரியும் என்ன வேணா நடந்திருக்களாம். ஏன் அந்த கொலையாளிக்கு இப்போ கல்யாணம் கூட ஆகியிருக்களாம் " என ஸ்டீஃபன் பேசிக் கொண்டே போக " ஐயா ராசா போதும் புரிஞ்சிடுச்சு எனக்கு. படுத்து தூங்கீடுங்க. நானும் தூங்குறேன் " என நம் நாயகனும் படுத்து விட்டான்.
ஸ்டீஃபனும் " ஹப்பாடா வா பேபி டால் தூங்களாம். உன் அப்பா ஒரு வழியா படுத்துட்டாரு " என எயினியிடம் உற்சாகமாய் கூறி அவளின் மழலை சிரிப்பை கேட்டுக் கொண்டே அவளை படுக்க வைத்தான்.
அந்த கட்டிடத்தில் முருகேஷின் சத்தமற்ற கதறல்கள் நிறைந்து நிறைந்து இப்போது கண்களை பிரிக்கக் கூட சக்தியற்று குத்துயிரும் குழையுயிருமாய் கிடந்தவனது உயிரின் இறுதி நொடிகளை முடித்து வைக்க அவனையே அரை மணி நேரமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தது உருவம்.
" உன்ன வந்தப்போவே கொல்லனும்னு தான் நினைச்சேன். ஆனா நீ அனுபவிக்கிற வேதனைய பார்க்குறப்போ இன்னும் கொஞ்சம் நேரம் உன்ன வாழ விடலாமேன்னு தோனுது " என அவ்வுருவம் அவனிடம் ஒரு குரூரமான புன்னகையுடன் கூறிக் கொண்டிருக்க அவர்களிருவரையும் ஓரமாய் நின்று பார்த்து கொண்டிருந்தாள் ஆதர்ஷனா.
" பரவால்ல டா. உன் உடம்புல நான் எதிர்பார்த்தத விடவும் அதிகமாவே நீர் சத்து இருக்குப் போல. ஒரு சாதாரண மனுஷனோட உடம்புல 60% வரைக்கும் தண்ணி இருக்குமாம். ஆனா அதையெல்லாம் விட உன் கண்ணுல இருக்க கண்ணீர் ரொம்ப அதிகம் தெரியுமா.?? தோ நீயே தான் பார்க்குறியே " என சாய்ந்தமர்ந்தபடி அந்த கன்னாடி பெட்டியை பார்க்க அதில் முருகேஷின் கண்ணீரோடு அவனது இரத்தம் கூட கலக்கத் தொடங்கியிருந்தது.
" இனிமேலும் உருஞ்சி எடுக்க உன் கிட்ட கண்ணீர் இல்ல அதே மாரி இந்த பூமில இருக்க உனக்கு நேரமும் இல்ல. முடிச்சிடுவோமா கதைய?? " என கேட்டுக் கொண்டே முருகேஷின் அருகில் சென்றது. முருகேஷ் கிட்டத்தட்ட எப்போதோ மரண வாயிலுக்கு சென்றிருந்தான். ஏதோ ஒரு மெல்லிய கயிறு அவனை இன்னும் பிடித்து வைத்திருக்கிறது.
அதை முடித்து வைப்பதை போல அவன் கண்களில் இருந்து அந்த குழாய்களை அகற்றி விட்டு சரக்கென கத்தியை எடுத்து அவன் கண்களில் இறக்கியது அவ்வுருவம். ஒரு நொடி தான் முருகேஷின் உடல் காற்றில் தூக்கிப் போட்டதோடு அவனை பிடித்திருந்த மெல்லிய கயிறும் அறுந்து அவனை மேலுலகத்திற்கு அழைத்துச் சென்றது.
ஆதர்ஷனா அதை கண்டு வாயை மூடி அழ அவனை கட்டியிருந்த சங்கிலிகளை தாண்டி அவிழ்த்த அவ்வுருவம் அவளுக்கு ஒரு பார்வையை தந்து விட்டு அவன் காலை பிடித்து தரதரவென எங்கோ இழுத்துச் சென்றது.
மறுநாள் விடியலிலே அபிமன்யுவின் கதவை தட்டியது விபுன்யாவின் கத்தல் தான். ஸ்டீஃபன் தூக்கக் கலக்கத்தில் எழுந்து கதவை திறந்தது தான் போதும் விபுன்யா பாயாத குறையாக உள்ளே வந்து அபி ஸர் என ஒரு கத்து கத்தினாள்.
அவ்வளவு தான் அபிமன்யு பதறியடித்து எழ ஸ்டீஃபன் பாய்ந்து சென்று எயினியின் காதை மூடினான். அவள் அசந்து உறங்கிக் கொண்டிருந்ததால் விபுன்யாவின் அந்த அலறல் கூட அவளை நல்லவேளையாக எட்டவில்லை. எட்டியிருந்தது, அனைவரின் கதியும் அதோ கதி தான்.
" என்னாச்சு விபுன்யா?? ஏன் இப்படி கத்துறீங்க?? " என அபிமன்யு இரு கைகளையும் நீட்டி முறிக்க " மன்னிச்சிடுங்க அபி ஸர். ஆனா நேத்து கிட்டத்தட்ட தேவையான எல்லா ஆதாரத்தையும் கண்டுப்புடிச்சிட்டேன் அபி ஸர். நாம நினைக்கிற மாரி இல்ல இந்த செல்வராஜ் ரொம்ப பெரிய விஷயம் பண்ணிக்கிட்டு இருக்காரு " என விபுன்யா படபடக்க அவளை அமர வைத்து விட்டு வேகமாய் ஒரு சட்டையை அணிந்து வந்து அவள் முன் அமர்ந்தான் அபிமன்யு.
" அபி ஸர் கடந்து அஞ்சு வர்ஷத்துல அந்த ஹாஸ்பிட்டல்ல இளைஞர்களிடமிருந்து மட்டுமே கிட்டத்த ஐநூறுக்கும் மேற்பட்ட கண் தானம் நடந்துருக்குறதா ரிப்போர்ட் சொல்லுது " என விபுன்யா அவன் அனுமதியளித்ததுமே தொடங்க " என்ன?? ஐநூறா?? " என அதிர்ச்சியாய் கேட்டு கொண்டே முகம் கழுவிவிட்டு அவர்களருகில் வந்தமர்ந்தான் ஸ்டீஃபன்.
" ஆமா ஸர். இந்த ஐநூறு கண் தானத்துலையும் கிட்டத்தட்ட எழுவதுலேந்து 90 பேருக்கு தான் கண் வைக்கப்பற்றுக்கு. மத்த நானூறுக்கும் மேற்பட்டோர் கண்கள் என்ன ஆச்சுன்னே தெரியல " என விபுன்யா அந்த கோப்புகளை காட்ட அதையெல்லாம் சற்று நம்ப இயலாமல் பார்த்து கொண்டிருந்தான் அபிமன்யு.
" இதுக்கு என்ன அர்த்தம் விபுன்யா?? கண்கள வச்சு அவரு என்ன பன்றாரு??? " என ஸ்டீஃபனே கேள்வி கேட்க " தெரியல ஸர். 5 வர்ஷத்துல ஐநூறுன்னு சொன்னேன். ஆனா உண்மை என்னன்னா முதல் இரண்டு வர்ஷத்துல தான் முன்னூறுக்கும் மேலான கண் தானம் நடந்துருக்கு. இந்த மூணு வர்ஷத்துல தான் நூற்றுக்கும் மேற்பட்டது நடந்துருக்கு " என விபுன்யா விளக்கினாள்.
" இவங்க இத வச்சு என்ன செஞ்சாங்கன்னு நாம கண்டுப்புடிக்கனும் விபுன்யா. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி. நீங்க மட்டும் இத செய்யலன்னா எங்களுக்கு இந்த விஷயமே தெரிய வந்துருக்காது " என நம் நாயகன் அவளை பார்க்க " நீங்க நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்ல அபி ஸர். லினாவால தான் என்னால அங்க போகவே முடிஞ்சிது. அதோட ஆதிக்காக நான் இதுக்கூட செய்யலன்னா நான் அவளுக்கு ஒரு ஃப்ரெண்டே இல்ல " என புன்னகைத்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றாள்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஹரீஷே வந்து அபிமன்யுவை சந்தித்த போது கல்யாணின் செல்பேசியை வைத்து இன்னமும் போராடிக் கொண்டிருந்தான் அபிமன்யு.
" அபி ஸர் எயினிய ஸ்கூல்ல விட்டாச்சு. வாங்க ஸ்டேஷன் போகலாம் " என கத்திக் கொண்டே உள்ளே வந்த ஸ்டீஃபன் ஹரீஷை கண்டதும் மெதுவாய் பதுங்க " ஸ்டீஃபன். என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க. உங்கள ரொம்பவே அடிச்சு துன்புறுத்தீட்டேன். நான் செஞ்சது பெரிய பாவம்னு எனக்கு லேட்டா தான் புரிஞ்சிது. ப்லீஸ் என்ன மன்னிச்சிடுங்க " என ஹரீஷ் வேகமாய் அவனிடம் மன்னிப்பு கேட்க " ஸர் நீங்க உங்க கடமைய தான் செஞ்சீங்க. சாரியெல்லாம் கேட்காதீங்க. அதெல்லாம் பெரிய விஷயமே இல்ல. நான் உங்கள மன்னிச்சிட்டேன். ப்ரின்சி கிட்ட சொல்லி அவள சமாதானப் படுத்துங்க. அப்பறம் அபி ஸர் என்ன ஃபோனிது?? " என ஹரீஷிடம் சகஜமாய் தொடங்கி அபிமன்யுவிடம் கேள்வியாய் முடித்தான்.
" இது கல்யோண ஃபோன் ஸ்டீஃபன். ஃபோன்ல எல்லா அப்புக்கும் பாஸ்வர்ட் போட்டு இருக்கு. எதுக்குமே பாஸ்வர்ட் தெரியல " என அபிமன்யு அந்த செல்பேசியை அருகிலிருந்த மேஜையில் வைக்க அதை லாவகமாய் தூக்கிப் போட்டு பிடித்த ஸ்டீஃபன் " அட என்ன அபி ஸர் இதெல்லாம் ஒரு பிரச்சனைன்னு நீங்க இரெண்டு நாளா இத நோட்டம் விட்டுட்டு இருக்கீங்களா?? இதோ இப்போ திறக்குறேன் பாருங்க. தோ திறந்தாச்சு " என அனைத்து செயலிகளுக்கும் கடவுசொல் போடும் செயலியையே அந்த செல்பேசியை விட்டு நீக்கியிருந்தான் ஸ்டீஃபன்.
' இது எனக்கு முன்னாடியே தோனாம போச்சே ' என்பதை போல நம் நாயகன் ஸ்டீஃபனை பார்க்க " எப்பவுமே எல்லா கதவும் பூட்டி தான் இருக்கும்னு இல்ல அபி ஸர். சும்மா தள்ளுனா திறந்துக்குற பூட்டில்லா கதவுகளும் இருக்கு. " என ஸ்டீஃபன் அந்த செல்பேசியை அவனிடமே கொடுத்தான்.
அவன் கூறுவதும் உண்மை தான். நாம் மலையளவிற்கு பால்வா செய்து மலையை குடைந்து தான் ஒரு வழியை அடைய வேண்டுமென்றில்லை. எளிதாக அருகில் தேடி ஒரு பாளத்தை கூட கண்டறியலாம். எத்துனை பேர் நம் வாழ்விலே ஒரு சிறிய பிரச்சனைக்கு கண் முன்னே பதிலையும் வைத்து கொண்டு கடல் மலை தாண்டி அந்த வழியை தேடி அல்லாடியிருப்போம்???
அபிமன்யு அதை எண்ணி புன்னகைத்து கொண்டே கல்யாணின் செல்பேசியில் தன் கவனத்தை பதித்தான். அதில் பெரிதாய் எதுவும் இல்லை என்றாலும் அவனது தொடர்பு பட்டியலில் செல்வராஜின் பெயரை கப்பென பிடித்து விட்டான் அபிமன்யு.
ஆனால் அதை விடுத்து கல்யாண் அவருக்கு தொடர்பு கொண்டதை போலவோ குறுஞ்செய்தி அனுப்பியதை போலவோ எந்த ஒரு பதிவும் இல்லை. இறுதியாய் யாருக்கு அழைத்திருப்பானென்ற யோசனையில் தொடர்பு கொண்ட பட்டியலுக்கு வந்தவன் அதில் அவன் தாயாருக்குப் பின் இவன் யாரோ இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தான். அதில் ஒன்று செல்வராஜின் எண் மற்றொன்று யாருடையதென தெரியாமல் அந்த எண்ணிற்கு அழைக்க முணைந்தவன் விரலை சொடுக்கும் முன் " ஸர் " என கத்திக்கொண்டே ஓடி வந்தான் ஹரீஷ்.
ஸ்டீஃபனிடம் அந்த அழைப்பு விடுக்கும் பொருப்பை கொடுத்து விட்டு வேகமாய் ஹரீஷுடன் செல்பேசியில் குறிப்பிட்ட இடத்தை நோக்கி வண்டியோட்டினான் அபிமன்யு.
" என்னாச்சு ஹரீஷ் தெளிவா எதாவது சொல்லுங்க " என அபிமன்யு அவனை துரிதப்படுத்த " எனக்கே தெளிவா சொல்லல ஸர். ஆனா திரும்ப ஏதோ கொலை நடந்துடுச்சு " என்று மட்டும் ஹரீஷ் கூற அபிமன்யுவிற்கு ஸ்டீஃபனிடமிருந்தும் அழைப்பு வந்தது.
" என்னாச்சு ஸ்டீஃபன்? "
" எதுக்கு ஸர் என்ன விட்டுட்டு போனீங்க.?? யாருமே ஃபோனெடுக்கல ஸர் "
" நீங்க முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க ஸ்டீஃபன். இங்க பக்கத்துல திரும்ப ஏதோ ஒரு கொலை நடந்ததா ஹரீஷுக்கு காள் வந்துருக்கு "
" மறுபடியுமா.?? "
" ஆமா ஸ்டீஃபன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க போய்டுவோம். நான் அங்க போய்ட்டு உங்க உதவி தேவைப்பட்டா உங்களுக்கு ஃபோன் பன்றேன் "
" ஃபோன கட் பண்ணாதீங்க அபி ஸர். நீங்களும் யாராவது ஃபோனெடுத்தா உடனே கேட்களாம் இல்லையா?? " என ஸ்டீஃபன் கூறியதும் சரியாய் பட அபிமன்யுவும் அழைப்பை துண்டிக்கவில்லை.
ஐந்து நிமிடத்தில் ஸ்டீஃபன் பதினைந்து முறையாவது அழைத்திருப்பான் போல. ஆனால் எவருமே அந்த அழைப்பை ஏற்கவில்லை. இந்த காத்திருப்போடே அபிமன்யுவும் ஹரீஷும் வரவேண்டிய இடத்தை அடைந்திருந்தனர்.
" இடத்துக்கு வந்துட்டோம் ஸ்டீஃபன் இங்க என்ன பிரச்சனை- ஸ்டீஃபன் நான் உங்களுக்கு திரும்பி கூப்பிடுறேன் " என நம் நாயகன் உறைந்து போய் அழைப்பை துண்டிக்க இங்கிருந்து சற்று தூரத்திலே இருந்த ஒரு ஆள் நடமாட்டமில்லாத கட்டத்தின் உட்சியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான் முருகேஷ்.
இவர்களிருவரும் ஓடிச் சென்று அந்த கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறினர். அவர்களுக்கும் முருகேஷிற்கும் உள்ள தூரம் தூரம் குறைய குறைய ஏதோ ஒரு சத்தம் கேட்டாலும் அதை புறந்தள்ளிவிட்டு மேல்மாடியை அடைந்து முருகேஷிடம் ஓடினர்.
இரத்தவாடை குடலை பிறட்டியதிலே அவன் உயிரிழந்து விட்டான் என்பதை புரிந்து உண்மையை ஏற்றுக் கொள்ள இயலாமல் நின்றவர்களுக்கு அருகிலே வேறொரு சத்தமும் கேட்டது.
சுற்றி பார்த்து விட்டு ஒரு ஓரமாய் கிடந்த பாதி உடைந்திருந்த செல்பேசியை கண்ட அபிமன்யு அதில் வந்த அழைப்பை ஏற்று காதில் வைக்க " யப்பா யாருப்பா நீ?? எவ்வளவு நேரமா ஃபோன் பன்றேன்?? ஃபோனப் பார்க்காம வேறெந்த வேலை பார்த்துட்டு இருந்த நீ?? " என மறுப்புறத்திலிருந்து பேசியது சாட்சாத் ஸ்டீஃபனே தான்.
" ஹலோ " அபிமன்யுவால் அதை தான் கூற முடிந்தது. " அபி ஸர் நீங்களா?? மாத்தி உங்களுக்கு திரும்ப ஃபோன் போட்டுட்டனா?? இல்லையே? இது கல்யாண் ஃபோன் தானே " என ஸ்டீஃபன் மறுப்புறத்திலிருந்து பதட்டமாய் கத்தவும் ஹரீஷ் அபிமன்யுவை பிடித்து திருப்பி ஏதோ ஒன்றை காட்டினான்.
முருகேஷின் நெற்றியில் இன்னமும் வலிந்த இரத்தத்தோடிருந்தது அந்த " ஏ டி " அச்சு.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro