ஈரம் - 22
" இது ஒரு தோல் வியாதிக்காக போடுற மாத்திரை. ஆனா இத எதுக்காக இவங்க போடனும்??? " என விபுன்யா அனைவருக்கும் கேட்பதை போல் குரலெழுப்ப காவலர்கள் மூவரும் சற்று அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
" என்ன மா சொல்றீங்க??? உண்மையா தானா??? " என ஸ்டீஃபன் இரண்டுக்கு மூன்று முறை உறுதி செய்வதற்காய் அவளை பார்க்க " ஆமா ஸர். உண்மை தான். இது ஒரு மாரியான அரிய வியாதி. வியாதின்னும் சொல்ல முடியாது. ஒரு பழைய கிருமின்னு வேணா சொல்லலாம். இது பட்டா அவங்களுக்கு தோல் சாதாரண சூட்டுலையே வெந்து போக ஆரம்பிக்கும். சரியா அதுக்கு மேல என்ன ஆகும்னு தெரியல. இந்த கிருமிய எதுக்குமே பயன்படுத்த மாட்டாங்க. எப்போவாவது தீ விபத்துல எரிஞ்ச தோல வேணா முழுசா எடுக்குறதுக்காக இத பயன்படுத்துவாங்க ஆனா அதுக்குமே வாய்ப்பு கம்மி தான். பரவுறதுக்கு வாய்ப்பு இல்ல. ஆனா எப்படி இவங்களுக்கு வந்துருக்கும்?? " என விபுன்யா லினாவை பார்க்க ஒரு நீண்ட யோசனைக்குப் பின் " அவங்களோட மெடிக்கல் ஹெல்த் பத்தி நாம ரிசெர்ச் பண்ணியாகனும். அந்த கிருமியால வர வியாதி இவங்களுக்கு இருந்துருக்குன்னா கண்டிப்பா எதாவது ஆப்பரேஷன்லையோ இல்ல சர்ஜெரிலையோ தான் அவங்களுக்குள்ள செலுத்தப்பற்றுக்கனும். " என லினாவும் தன் எண்ணத்தை கூறினாள்.
" அதுலையும் ஒரு சிக்கல் இருக்கு லினா. இந்த வியாதியோட அறிகுறி இருக்குறப்போவே பரிசோதிச்சா தான் அவங்களுக்கு அந்த வியாதி இருக்குறதே தெரியும். இல்லைனா அப்படி ஒரு வியாதி அவங்க உடம்புல இருக்குன்னே தெரியாம போய்டும். எந்த டெஸ்ட்லையும் கண்டுப்பிடிக்க முடியாது. அவங்க வீட்டுல முன்னாடியே எந்த வியாதியும் இல்லன்னு சொல்றத வச்சு பார்த்தா அவங்களோட மெடிக்கல் ரிப்போர்ட்லையும் நம்மளால எதுவும் கண்டுப்பிடிக்க முடியாது " என முட்டுக்கட்டை இட்டாள் விபுன்யா.
" அது ஏன் அந்த அறிகுறி இல்லாம இருக்கு?? " என அபிமன்யு கேட்க " அது தான் இந்த மாத்திரையோட வேலையே. இரெண்டு நாளுக்கு ஒரு முறை எடுத்துப்பாங்க போல " என தன் யூகத்தை கூறினாள் விபுன்யா. " ஏன் எல்லாம் இப்படி குழப்பமாவே இருக்கு?? இவங்க ஏன் இத எடுத்துக்கனும்?? இவங்களுக்கு என்ன சம்பந்தமோ?? " என அபிமன்யு வாய் விட்டு கூறிய போது
" நீங்க இன்னோன்னு மறந்துட்டீங்க. நாளைக்கு ஒருத்தர் காணாம போக போறாரு " என லினா நம் நாயகனுக்கு நினைவு படுத்த மற்றவர்கள் குழப்பமாய் அவர்களை பார்த்ததால் அபிமன்யு லினா கூறியதையும் தான் கல்யாணி பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதை வைத்து பார்த்தால் சம்பத் உடல் கிடைத்த நான்காவது நாள் கல்யாணியை கடத்த முயற்சிகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறதெனவும் கூறினான்.
ஹரீஷும் விபுன்யாவும் கிளம்பியதும் ப்ரின்சியை வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு வந்தான் நம் நாயகன். லினா இன்னுமோர் நாள் அங்கேயே தங்கிக் கொள்வதாய் கூறியதால் அவள் இந்த இளங்காவலர்கள் உணவுண்டதும் எயினியை கட்டிப் பிடித்து கொண்டு உறங்க சென்றிருந்தாள்.
ஸ்டீஃபனின் அறையிலிருந்த ஆண்களிருவரும் படுத்த பின்னும் உறங்காமல் கண்களை விரித்து வைத்து கொண்டு மேலே பார்த்து கொண்டிருக்க " ஏன் ஸ்டீஃபன், ஆதிய பத்தி ஏதோ சொல்லனும் சொன்னீங்களே சொல்லல??? " என நம் நாயகன் மெதுவாய் தூண்டிலிட்டான்.
" எனக்கே மனசு வந்தப்போ நீங்க கேற்றுக்கனும். நீங்க வசனம் பேசீட்டு போனீங்கல்ல, நான் சொல்லமாட்டேன் போங்க " என ஸ்டீஃபன் அவனை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொள்ள " சரி சரி அப்போ தூங்குங்க " என அபிமன்யு சற்றே ஏமாற்றமாய் கூறிவிட்டு கண்களை மூடி கொண்டான்.
" அய்யோ எந்திரிங்க அபி ஸர், உங்கள வச்சிட்டு என்ன தான் பன்றதோ.?? இங்க வந்து உக்காருங்க " என எழுந்து கீழிருந்தவனை தன் கட்டில் மீது அமர வைத்த ஸ்டீஃபன் ஒரு பெருமூச்சின் பின் கூறத் தொடங்கினான்.
" லினா உங்க கிட்ட சொல்லியிருக்கான்னு நினைக்கிறேன், நாங்க இரெண்டு பேரும் ஆதி கூட ஒன்னா தான் ஸ்கூல் படிச்சோம். அவங்க மெடிக்கல் பக்கம் போனப்போ நான் சிவில் பக்கம் போனேன். அப்படி இருந்தாலும் எங்களுக்குள்ள ஒரு சின்ன கான்ட்டக்ட் இருந்துச்சு. உங்க கல்யாணத்தப்போ எனக்கு ட்ரெய்னிங் போய்ட்டு இருந்ததால தான் அபி ஸர் கல்யாணத்துக்கும் என்னால வர முடியல. எயினி பாப்பா பிறந்ததும் எனக்கு தெரியும். நான் ஆதிய வந்து பார்த்துட்டு போனப்போ கூட லினா மட்டும் தான் இருந்தா. நீங்க வெளிய போயிருந்தீங்க. கிட்டத்தட்ட நமக்கு சந்திக்கிறதுக்கு அப்போ வாய்ப்பே அமையல. ஒரு வர்ஷத்துக்கு அப்பறம் ஒரு நாள் ஆதி எனக்கு திடீர்னு ஃபோன் பண்ணா. என்ன ஏதுன்னு சொல்லாம அழுதுட்டே இருந்தா. ஏதோ அவ குடும்பத்த விட்டுட்டு போறதாவும் அவளுக்கு என்ன செய்றதுன்னும் தெரியாததாவும் பொலம்புனா. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியாததால அவ சொல்றதையெல்லாம் முதல்ல சொல்லட்டும்னு அமைதியா இருந்தேன் " என ஸ்டீஃபன் முழுதாய் அன்றைய நினைவில் மூழ்கியிருந்தான்.
" அவள ஏதோ பாதிச்சிட்டே இருந்துச்சுன்னு எனக்கு புரிஞ்சிது. ஆனா ஆதி தெளிவா எதையும் சொல்லல. உங்கள பார்த்துக்க சொல்லி என் கிட்ட சத்தியம் வாங்குனா. நான் இப்படி ஃபோன் பண்ணதோ நான் உன்னோட ஃப்ரெண்டுங்குறதோ உங்களுக்கு தெரியவே கூடாதுன்னு சொன்னா. ஆனா இனிமேலும் மறைக்கிறது நல்லதில்ல. அவளுக்கு அவ சாகப் போறான்னு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அதை ஏன் உங்க கிட்ட சொல்லாம இருந்தான்னு தான் தெரியல. அன்னைக்கு ஆதி கடைசியா அவ வேலை பார்க்குற ஹாஸ்பிட்டல பத்தி ஏதோ சொல்ல வந்தா அபி ஸர். ஆனா அதையும் அவ தெளிவா சொல்லல. அப்போ கூட நிறைய மிஸ்ஸிங் கேஸஸ் போயிட்டு இருந்துச்சு. உங்களுக்கு நியாபகம் இருக்கா??? வயசுப் பொண்ணுங்க பசங்க மட்டும் காணாம போய் பிணமா ரோட்டோரமாவோ ஆத்தோரமாவோ வீசப்பட்டிருந்தாங்களே. அதையெல்லாம் சொல்லி கஷ்டப்பட்டுக்குட்டு இருந்தா. ஒன்னு அந்த கொலைகளப் பத்தி ஆதிக்கு ஏதோ உண்மை தெரிஞ்சிருக்கனும் இல்லைனா அவ ஹாஸ்பிட்டலுக்கும் அந்த கொலைகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கனும் " என ஸ்டீஃபன் அபிமன்யுவை பார்க்க அவன் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கியிருந்தான்.
" எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஸ்டீஃபன். அந்த வழக்க மூடீட்டாங்கல்ல. எல்லாத்துக்கும் சம்பந்தம் இருந்துருக்குமா??? எனக்கும் நியாபகம் இருக்கு. ஆதி காணாம போறதுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி மன நிம்மதியில்லாம ரொம்ப கஷ்டப்பட்டா. அவ ஹாஸ்பிட்டல பிரச்சனைன்னு சொல்லுவா. அவ இறந்ததுக்கு அப்பறமும் அங்க அவ தப்பா நடந்துக்குட்டதா அடிச்சதாவெல்லாம் சொன்னாங்க. ஆனா அவளே கஷ்டத்துல இருக்குறப்போ அவ யார அடிக்கப் போறா?? " என அபிமன்யு இப்போது ஸ்டீஃபனை பார்க்க " இந்த ஹாஸ்பிட்டல் மேல முன்னாடிலேந்தே எனக்கு சந்தேகம் இருக்கு அபி ஸர். ஆதி அங்க வேலை செஞ்சப்போ அங்க என்னமோ நடந்துருக்கு. அதோட அப்போ தான் கல்யாணியும் அங்க வேலை பார்த்துருக்காங்க. " என ஸ்டீஃபனும் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினான்.
" நாம அங்கையும் விசாரணைய ஆரம்பிக்கனும் ஸ்டீஃபன். இது எல்லாம் ஒரு சின்ன கொலைல ஆரம்பிச்சு எங்கெங்கையோ போகுது. ஆனா எல்லாத்துக்கும் என் ஆதி கூட சம்பந்தம் இருந்துருக்கு. இது எங்க முதலில் ஆரம்பிச்சதுன்னு முதல்ல நாம கண்டுப்பிடிக்கனும். சரி ஸ்டீஃபன் நீங்க தூங்குங்க " என அபிமன்யு அவனின் கட்டிலில் இருந்து எழ முணைய அவனை மீண்டும் அமர வைத்த ஸ்டீஃபன் " ஏன் அபி ஸர், அவ உங்க ஆதி தான் நான் இல்லன்னு சொல்லல. ஆனா இன்னும் எவ்ளோ நாளுக்கு நடந்ததையே நினைச்சிக்கிட்டு இருக்கப் போறீங்க?? எனக்குத் தெரியும் இன்னும் நீங்க ஆதிய லவ் பன்றீங்க. அத நினைக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா எவ்ளோ நாளுக்கு நீங்க தனியாவே இருப்பீங்க?? உங்களுக்கென்ன?? நுப்பது வயசு கூட ஆகலையே. இரண்டாவது வாய்ப்பு ஒன்னு கிடைச்சும் ஏன் இப்படி இருக்கீங்க?? " என ஸ்டீஃபன் அவனிடம் இப்படி பேசியது இதுவே முதல் முறை.
" எனக்கு நீங்க என்ன சொல்லவரீங்கன்னு புரியல ஸ்டீஃபன். " என நம் நாயகன் உண்மையாய் பதிலளிக்க ஒரு பெருமூச்சுடன் " என்ன அபி ஸர், புரியாத மாரியே இருக்காதீங்க. ஆதி ஆசைப்பட்ட உங்களுக்கான வாழ்கை உங்க கண்ணு முன்னாடியே தான் இருக்கு. ஆனா உங்களுக்கு தான் அது புரியல. உங்களுக்காக இல்லாட்டியும் எயினிக்காகவாவது அவளுக்கு ஒரு அம்மாவ குடுங்க அபி ஸர். இதுக்கு மேலையும் நான் விளக்கனும்னு அவசியம் இல்ல குட் நைட் " என கூறிவிட்டு ஸ்டீஃபன் படுத்து கொள்ள அவன் கூறியதை கேட்ட அபிமன்யுவின் கண்கள் தனிச்சையாக அறையின் வெளியே தன் மகளை மென்மையாய் தழுவி உறங்கிக் கொண்டிருந்த லினாவை தீண்டி வந்தது.
அவளையே பார்த்து கொண்டிருந்தவன் தான் அவர்களருகில் சென்றதையே அறியாமல் அங்கு மண்டியிட்டு அமர இத்துனை நாட்கள் யாரோ போல் தெரிந்த லினா இப்போது அவனின் மனதில் வேறேதோ ஒரு இடத்தில் இருந்தாள் என்பதை அவனும் அறிந்திருந்தான். அதற்கு காரணம் மூன்று நாட்கள் முன் அவள் தன் கண்களை திறந்து வைத்ததா அல்ல தன் மகளை அவள் பெற்ற மகள் போல் பார்த்து கொள்ளும் அன்பா என்று கேட்டால் அவனுக்கும் பதில் தெரியவில்லை.
ஆதி பல முறை கூறி அவனே கேட்டிருக்கிறான். நாம் காதலிப்பவர்ளை விட நம்மை காதலிப்பவரோடு அமையும் வாழ்கை அழகானதென்று. அவ்வாறு பார்த்தால் நம் நாயகனும் அறிவான் லினாவின் மனதில் ஒரு சொல்லாக் காதல் உள்ளதை.
அதை விளையாட்டாகத் தான் எண்ணிக் கொண்டிருந்தான், சில நாள் முன்பு வரை. அவள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும் தன்னையும் தன் மகளையும் அவளது அனைத்து எண்ணங்கள் மற்றும் முடிவுகளில் இணைத்து கொள்வதும் வேறு விதமான எண்ணங்களை தந்திருந்தது.
" நான் நினைக்கிறது சரியான்னு எனக்கேத் தெரியல ஆதி. ஆனா இது ஏதோ எனக்கு முடிவுப்பட்ட பாதையா தோனுது. உனக்கப்பறம் நான் வேற ஒருத்திய பார்க்கவே மாட்டேன்னு நினைச்சேன். ஆனா நம்ம பொண்ணு என்ன பார்க்க வச்சா. இப்போ " என அபிமன்யு அப்படியே நிறுத்த நிர்மலாய் உறங்கும் நாயகியை கண்டவன் ஒரு மென்னகையுடன் " ஆதிய என்னால மறக்க முடியுமான்னு தெரியல. ஆனா உங்களுக்காக முயற்சி பன்றேன் " என கூறிக் கொண்டான்.
அவன் செய்வதையெல்லாம் தூங்குவதை போல் பால்வா செய்து ஓரக்கண்ணால் நோட்டமிட்டு கொண்டிருந்த ஸ்டீஃபன் " ஹப்பா ஏசப்பா, எப்படியோ எங்க அபி ஸருக்கு புத்தி வந்துடுச்சு. கவலப்படாதீங்க அவருக்கு கல்யாணம் மட்டும் ஆகட்டும் அவர வச்சு திருச்சப்பையே கூட்டீடுவோம். ஓ அது நடக்காதுல்ல சரி பரவாயில்ல அவருக்கு மொட்ட போட்டு விட்டுடுறேன். நீ இன்னும் கொஞ்சம் புத்திய எதவாது ஆடி தள்ளுபடி போட்டு எங்க அபி ஸருக்கு கொடு ஏசப்பா " என தனக்குள்ளே ஒப்பந்தமும் போட்டு கொண்டு வேண்டுதலையும் வைத்து கொண்டான்.
அந்த பாதி கட்டியும் கட்டாமலிருந்த கட்டிடத்தின் ஒரு பாழடைந்த அறையில் பாதி உடையணிந்தும் அணியாமலும் மயக்க நிலையில் தலை பின் சாய ஒரு கதிரையில் அமர வைக்கப்பட்டிருந்தான் முருகேஷ்.
அவன் எப்போது கண் விழிப்பானென பொருமையாய் காத்திருந்த அவ்வுருவம் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் இரு குழாய்களை ஒரு கன்னாடி பெட்டியுடன் இணைக்கும் வேலையில் இருந்தது.
மெல்ல விழிப்புத் தட்ட கண்களை பிரித்து சுற்றமும் நோக்கிய முருகேஷ் தான் ஏதோ ஒரு இடத்தில் கட்டப்பட்டிருப்தை உணர்ந்ததும் உடல் தூக்கிப் போட வேகமாய் அந்த கதிரையிலிருந்து திமிறினான்.
அந்த சத்தத்தில் அவனை திரும்பி பார்த்த அவ்வுருவம் ஒரு ஏளனப் புன்னகையுடன் அவனை நெருங்கியது. அவ்வுருவத்தை தெளிவாய் காண்பதற்கு முன்பே " வேணாம் வேணாம் என்ன விற்று. நான் அவங்க சொல்லி தான் செஞ்சேன். உன்ன கடத்தனும் கொல்லனும்னு எனக்கெந்த எண்ணமும் இல்ல " என வேகமாய் முருகேஷ் தனது செயல்களை நியாயப்படுத்த முயல அவனை ஆச்சர்யமாய் பார்த்த அவ்வுருவம் " நான் கேட்கவே இல்லையே. நீ மன்னிப்பு கேக்குற நேரமெல்லாம் எப்போவோ முடிஞ்சு போச்சு " என கூறிக் கொண்டே தன்னிடமுள்ள கத்தியை எடுத்து கண்ணிமைக்கும் நொடி பொழுதில் அவன் கழுத்தில் குத்தியிருந்தது.
அந்த வலியில் தலைக்குள் மின்சாரம் பாய்ந்ததை போல் வேகமாய் தலைதூக்கிய முருகேஷினால் கத்தி அலற முடியவில்லை. அவனது கழுத்திலிருந்து இரத்தம் கசியவில்லை. அதே நேரம் அந்த கத்தி வலிக்காமலும் இருக்கவில்லை " ரொம்ப யோசிக்காத. நீ இப்போதிக்கு சாகமாட்ட. உன்னால பேச முடியாது. கத்த முடியாது. அந்த கத்திய கழுத்த விட்டு எடுக்கவும் முடியாது " என கூறிக் கொண்டே வேறொரு கத்தியை எடுத்தது.
" இதே கை தான என் நெத்தியில அன்னைக்கு இரக்கமே இல்லாம கத்திய வச்சு கிளிச்சது. இப்போ நான் மட்டும் பாவம் பாக்களாமா? " என கேட்டுக் கொண்டே கத்தியை முருகேஷின் நெற்றிக்கு எடுத்துச் சென்ற அவ்வுருவம் நன்கு ஆழமாய் அதை அழுத்தி அதே நேரம் அழுத்தமாய் பிடித்து கொண்டு அவன் கதற கதற " ஏ டி " என்று கத்தியாலே பட்டையிட்டது.
பத்து நிமிடம் அவன் வலியில் துடிதுடித்து மயங்கும் வரை அதை அழுத்தி பட்டையிட்டு கொண்டிருந்த அவ்வுருவம் ஒரு வேகபெருமூச்சுடன் தள்ளி நின்று அவனை வெறியுடன் பார்த்தது. இன்னும் போதவில்லை போலவே இன்னும் எவ்வளவோ இருந்தது அவன் அதற்கு செய்தவையை திருப்பி கொடுப்பதற்கு
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro