ஈரம் - 20
அன்றைய விடியலில் சூரிய தேவன் எழும் முன்பே ஸ்டீஃபனின் வீட்டை விட்டு கிளம்பியிருந்தான் நம் நாயகன். மலைமகளடி சாய முணைந்த சந்திரனும் நாயகனை பார்த்தபடி தன் சகோதரனுக்கான இடத்தை கொடுத்து விட்டு விடியல் கதிர்களில் மறைந்தான்.
விடியற்காலையிலே அபிமன்யு போய் நின்றது இரண்டு நாட்கள் முன் இவர்கள் கண்டுப்பிடித்த கல்யாணின் வண்டி இருக்கும் கிராமப்புறம் தான். அதே இடத்திற்கு சென்று விட்டு வயலோரமாய் சற்று நடைபயின்றவன் தூரத்தில் தெரியும் ஊர் மக்களின் குடிசைகளை நோக்கி நடை கட்டினான்.
பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருந்த நேரமதில் மஃப்டியில் பொருமையாய் அனைத்தையும் அலந்தபடியே சென்றவனுக்கு அவனது ஹெட் கான்ஸ்ட்டபிலிடமிருந்து அழைப்பு வந்தது. அதை ஏற்று காதில் வைத்த அபிமன்யு அவர் ஏதோ ஒன்றை கூறியதும் நன்றி கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
இரண்டு நாட்கள் முன்னே ஒரு சிறுவனை கண்டு விட்டு அவனை பற்றி அங்கிருந்த காவலரிடம் விசாரிக்கக் கூறியிருந்தான். " இது தர்மராஜுடைய வீடா?? " என வாயிலில் நின்ற பெண்மணியிடம் அவன் கேட்க நம் நாயகனை குழப்பமாய் பார்த்த அப்பெண்மணி ஆமென தலையசைத்து விட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
" ஏங்க யாரோ உங்கள பார்க்க வந்துருக்காங்க " என அப்பெண்மணி அறையிலிருந்த யாரிடமோ கூறிவிட்டு சென்றதும் அறையிலிருந்து வெளிபட்டார் தர்மராஜ்.
" ஸர் நான் உங்க பையன பார்க்க வந்துருக்கேன். " என அபிமன்யு பொருமையாய் பேச்சை தொடங்க " பையன் இப்போ தான் எழுந்தான் தம்பி. நீங்க யாரு?? " என கேள்வியெழுப்பினார் தர்மராஜ்.
" அபிமன்யு. இரெண்டு நாள் முன்னாடி உங்க ஊர் வெளிய ஒரு கார் கண்டுப்புடிச்சோம். அதை பத்தி விசாரிக்க தான் வந்துருக்கேன் " என நம் நாயகன் விளக்கியதும் அவர் சற்று அதிர்ச்சியாய் " நீங்க போலீஸா " என கேட்கவும் சரியாக " அப்பா அக்கா அடிக்கிறாப்பா " என கத்திக் கொண்டே அவரிடம் ஓடி வந்தான் அந்த சிறுவன்.
இந்த அரவத்தில் அபிமன்யு சட்டென திரும்பி பார்க்க தம் தம்பியை துரத்தி வந்திருந்த அப்பெண் அவனை கண்டு பட்டென ஒரு கதவின் பின் மறைந்து கொண்டாள். அவனை ஒரு நொடி தான் பார்த்திருப்பாள், அதற்குள்ளே அவளுக்கு ஏதோ ஒரு பயத்தில் வேர்த்து கொட்டியிருந்தது.
" அப்பா யாரு இது?? " என அச்சிறுவன் சற்று அமைதியாய் தர்மராஜிடம் கேட்க தன் பார்வையை அவன் புறம் திருப்பினான் அபிமன்யு. " உன் பேரென்ன கண்ணா?? " என அபிமன்யு அவனிடம் அன்பாய் கேட்க அவனோ தன் தந்தையிடம் அனுமதி வாங்கிக் கொண்டு " தனுஷ் " என்றான் கம்மிய குரலில்.
" இரண்டு நாள் முன்னாடி ஊருக்கு வெளிய ஒரு கார் இருந்துதுல்ல. அதுல இருந்த அண்ணாவ நீ எங்கையாவது பார்த்தியா?? தோ இந்த அண்ணா அதுல இருந்தாரா?? " என கல்யாணின் புகைபடத்தை தன் செல்பேசியில் காட்ட தனுஷ் இல்லையென்று இடவலதாய் தலையசைத்தான். அப்போதே அவனின் அக்காவிற்கு உயிர் வர அவளை மேலும் நிம்மதியடைய செய்வதை போல பேசினார் தர்மராஜ்.
" தம்பி அவன் சின்ன பையன். அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியப் போகுது??? அவன் மதிய நேரம் தான் வெளிய சுத்தீட்டு இருப்பான் மத்தபடி யாரையும் பார்த்துருக்க மாட்டான் தம்பி " என தர்மராஜ் கூறிக் கொண்டிருக்கும் போதே " இல்லப்பா நான் அந்த அண்ணாவ பார்த்தேன் " என அவனின் அக்காவின் மனதில் குண்டை தூக்கி எறிந்தான் தனுஷ்.
" என்ன டா சொல்ற?? " என தர்மராஜே தனுஷை அதிர்ச்சியாய் பார்க்க " நான் ஏரோப்லேன் வச்சு விளையாடிக்கிட்டு இருந்தேன்ப்பா. அப்போ தான் யாரோ ஒருத்தவங்க அந்த அண்ணாவ காருலேந்து எங்கையோ கீழ போட்டு இழுத்துட்டு போனத பார்த்தேன் " என கூறவும் ஏரோப்லேனா என இன்னும் அதிர்ந்த அப்பெண் வேகமாய் அவளுடைய அறைக்கு ஓடினாள்.
அவளது அலமாரியை கலைத்து விட்டு எதையோ வேகமாய் தேடியவள் அவளது செல்பேசியும் ஒரு மடிக்கணினி மட்டும் அங்கிருப்பதையும் அவளது ட்ரோமை காணாமல் அந்த அறையை பதட்டமாய் பார்க்க அவளுக்கு மேலும் இதயநோயே வர வைக்கும் நோக்குடன் " இதோ இந்த ஏரோப்லேன் தான் " என அவளது ட்ரோனை தனது புத்தகப்பையிலிருந்து எடுத்து அபிமன்யுவிடம் கொடுத்தான் தனுஷ்.
அதில் கமரா இருப்பதையும் அதை உபயோகிக்க கன்ட்ரோலர் இருப்பதையும் பார்த்து " தனுஷ் இத நான் எடுத்துக்கட்டுமா??? இன்னைக்கு சாய்ந்தரம் உன் கிட்ட திரும்பி குடுத்துடுறேன் " என அபிமன்யு கேட்டதும் தனுஷ் சற்று பயத்துடன் " அது என் அக்காவோடதாச்சே " என்றவாறே தன் அக்காவிருக்கும் பக்கம் நோக்கினான்.
" நீங்க எடுத்துக்கோங்க தம்பி. நான் என் பொண்ணுக்கிட்ட பேசிக்கிறேன் " என தர்மராஜ் சம்மதித்ததும் அவருக்கு நன்றி கூறிவிட்டு " நான் திரும்ப வருவேன் ஸர். வரேன் " என கூறிவிட்டு அவன் விடைபெற்றதும் அப்பெண்ணிற்கு தலையெல்லாம் சுற்றியது.
வேகமாய் தன் அறையை விட்டு வெளியேறியவள் தனுஷை பிடித்து அடிக்கத் தொடங்கினாள். அவன் அலறிய அலறலில் தர்மராஜ் அவனை தூக்கிக் கொண்டு " ஆதி எதுக்கு அவன அடிக்கிற??? " என அவளை அதட்டினார்.
" இவன யாருப்பா என்னோட ட்ரோன எடுக்க சொன்னது?? யாரக் கேட்டு எடுத்தான் இவன்??? " என சட்டென பொங்கிய அழுகையை அடக்க இயலாமல் கத்தினாள் ஆதர்ஷனா.
" இதுலாம் ஒரு விஷயம்னு உன் தம்பிய அடிப்பியா போ உன் அறைக்கு " என தர்மராஜ் கத்தியதும் வேறு வழியின்றி அழுது கொண்டே தன்னறைக்கு ஓடியிருந்தாள் ஆதர்ஷனா. அழும் தனுஷையும் தர்மராஜ் சமாதானம் செய்து தண்ணீர் அருந்த வைத்தார்.
ஆதர்ஷனாவின் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலைமோதியது. பயம் வலி என அவள் என்ன செய்வதென்றே தெரியாமல் அழும் நேரம் அவளருகில் பயந்து பயந்து வந்த தனுஷ் " அக்கா சாரிக்கா " என அழுது கொண்டே கூறினான்.
ஆதர்ஷனா தன்னால் முடிந்த வரை அவனை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அழ கட்டிலில் ஏறி அமர்ந்து அவளது கரத்தை பிடித்து கொண்ட தனுஷ் " அக்கா என்ன எவ்ளோ வேணா அடி அக்கா. நான் கத்த மாட்டேன். நீ அழாதக்கா " என அவன் கூறியப்பின் அவளாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவனை கட்டிக் கொண்டு அழுது தீர்த்தே விட்டாள்.
தனுஷும் அவளை கட்டிக் கொண்டு அழவும் அதை அறையை கடந்து செல்ல முற்பட்ட தர்மராஜ் எதற்சையாய் பார்த்து விட்டு தன் பிள்ளைகளின் ஒற்றுமையை எண்ணியபடி வேலைக்குக் கிளம்பினார்.
" இனிமே என் கிட்ட சொல்லாம என் பொருள் எதையும் எடுக்காத தனுஷ் ப்லீஸ் " என ஆதர்ஷனா கூறியதும் சரி என தலையாட்டினான் அவன். தனுஷை விளையாட அனுப்பி வைத்து விட்டு படபடப்போடு அங்குமிங்கும் குட்டி போட்ட பூனையாய் சுற்றிவளுக்கு அவள் எதிர்பார்த்ததை போலவே ஒரு அழைப்பு வந்தது.
ஆதர்ஷனா ஒரு பெருமூச்சுடன் அதை ஏற்று காதில் வைத்து மறுபுறத்திலிருந்தவர் வாய் திறக்கும் முன்னே " ப்லீஸ் ப்லீஸ் என் தம்பிய எதுவும் செஞ்சிடாத. தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடு. அவன் தெரியாம பண்ணீட்டான். என்ன என்ன வேணா செஞ்சுக்கோ நீ என்ன சொன்னாலும் நான் கேக்குறேன். என் தம்பிய தயவு செஞ்சு விற்று அவன் தெரியாம செஞ்சிட்டான் " என அழுது கெஞ்சினாள்.
மறுபுறத்தில் ஒரு நீண்ட அமைதி நிலவ ஆதர்ஷனா தன் அழுகையை கட்டுப்படுத்தி கொள்ள இயலாமல் பெரும் அவதிப்பட்டாள். " சரி உன் தம்பிய நான் ஒன்னும் செய்ய மாட்டேன். ஆனா எனக்கு பதிலா நீ இத செய்யனும் " என ஒரு வழியாக பதில் வந்ததும் இரண்டு முறை சிந்திக்கக் கூட எண்ணமில்லாமல் தன் தம்பிக்காய் " எது வேணா செய்றேன். " என வாக்களித்தாள் ஆதர்ஷனா.
சரியாக கல்யாண் வண்டியிருந்த இடத்தில் தன் ஜீப்பை நிறுத்தி விட்டு தனுஷ் கொடுத்த ட்ரோமை தனது மடிக்கணினியோடு இணைத்து ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தான் அபிமன்யு. அதிலும் சரியாக ஒரே ஒரு காணொளி மட்டும் பதிவாகியிருக்க அதன் உள் சென்று அதை உன்னிப்பாய் கவனிக்கத் தொடங்கினான்.
தனுஷ் கூறியதை போல அது ஊரை சுற்றி ஒரு பத்து நிமிடம் பின் ஊரின் வெளிப்புறம் சென்ற போது தூரத்திலே கல்யாணின் வண்டி வேகமாய் வந்திருக்கிறது. ஒரு சில மரங்களிடையே சென்று அது மீண்டும் வெளிவந்த போது எப்படியோ தெரியவில்லை கல்யாணின் வண்டி தனிச்சையாக ஒரு புறத்தில் நின்று அடுத்த அரை நிமிடத்தில் கதவை திறந்து கொண்டு கீழே சரிந்தான் கல்யாண்.
ஒரு மிதிவண்டியிலிருந்து இறங்கிய உருவம் கல்யாணை இழுத்துக் கொண்டு தனுஷ் கூறியதை போல பக்கவாட்டில் சென்று மறைந்தது. இது அனைத்தும் மேலிருந்து பதிவாகப்பட்டதால் அவ்வுருவத்தின் முகம் சுத்தமாய் தெரியவில்லை. அது ஏதோ தூக்கி எறிந்து விட்டு செல்வது கல்யாணின் செல்பேசியாய் இருக்களாமென யூகித்தபடி கல்யாணின் செல்பேசியையும் காரின் பனெட்டிலிருந்து எடுத்து பார்த்தான்.
அந்த செல்பேசியை ரீசெட் செய்ய வேண்டாமென கூறியிருந்ததால் செல்பேசியின் லாக்கையும் அவர்கள் சரி செய்திருக்கவில்லை. திரவு எண்ணை அறியாமல் அதை மீண்டும் எடுத்த இடத்திலே வைத்து விட்டு கல்யாணின் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தான்.
அவன் செல்வதற்குள்ளாகவே சற்று நன்றாகவே விடிந்திருந்ததால் கல்யாணின் தந்தை அவனை வீட்டிற்குள் வரவேர்த்தார். கல்யாணை பற்றியும் சற்று தோண்டி தோண்டி விசாரித்தும் எந்த ஒரு புது தகவலும் தெரியாத பட்சத்தில் கல்யாணின் செல்பேசியின் திரவு எண்ணைப் பற்றி விசாரித்தான்.
கல்யாணின் தங்கை உடனே அந்த எண்ணை சொடுக்கி அந்த செல்பேசியை எளிதாய் திறந்திருந்தாள். அவளுக்கு நன்றி கூறிவிட்டு அடுத்து கல்யாணியின் வீட்டிற்கு பயணித்தான் அபிமன்யு.
நேற்று லினா கூறிய மனதில் வைத்து கல்யாணியை பற்றி விசாரித்தவன் கல்யாணி யாரையும் காதலிக்கவில்லை என அடித்து கூறியப்பின்னும் அதை திணிக்க விரும்பாமல் ஜூன் 5 அன்று கல்யாணியின் நடவடிக்கை பற்றி விசாரித்தான்.
அதற்கு கல்யாணியின் தந்தை சற்று நன்கு சிந்தித்து விட்டு அன்றும் கல்யாணி தாமதமாய் வந்ததாய் கூறினார். வந்த போது கிட்டத்தட்ட கல்யாணிக்கு பாதி சுயநினைவே இல்லையென்றும் அவர் கூற சம்பத் உடல் கிடைத்த மூன்று நாள் பின் கல்யாணியும் கடத்தப்பற்றிருக்க வாய்ப்பு இருப்பது இப்போது அபிமன்யுவிற்கு அதிகபட்சம் உறுதி ஆகியிருந்தது.
அடுத்து அவன் நேராய் போய் நின்றது சம்பத்தின் வீட்டில் தான். முதலில் எதை வைத்து விசாரிப்பதென இவன் தயங்கி நிற்கும் போதே சம்பத்தின் தாய் அவனை அடையாளங்கண்டிருந்தார்.
அவர் அவனை அழைத்து அமர வைத்துவிட்டு அமைதியாய் அவனை பார்த்தபடி நின்றிருந்தார். மெதுவாய் சம்பத்தை பற்றி விசாரித்தவன் சில நிமிடங்கள் பின் அவரது அனுமதியுடன் சம்பத்தின் அறையை சோதனையிடச் சென்றான்.
அங்குமிங்கும் தேடி சுற்றி வந்தவன் தூக்க மாத்திரைகள் ஒரு புட்டியில் இருப்பதை கண்டு அதை எடுத்து பார்த்தான். " உங்கப் பையனுக்கு கெட்டப் பழக்கம் எதாவது இருக்கா?? " என கேட்டதற்கு " சிகரெட் பழக்கம் இருக்குத் தம்பி " என்றார் சம்பத்தின் தாய்.
அந்த தூக்க மாத்திரையை பத்திரப்படுத்திய பின் " சம்பத்துக்கு ஹெல்த் ப்ராப்லம் எதாவது இருக்காம்மா?? " என அபிமன்யு கேட்டதற்கு அவர் இல்லையென மறுத்ததும் சேகரித்த தகவல்களுடன் அங்கிருந்து விடைபெற்றான் அபிமன்யு.
மணி ஒன்பதை தொட்ட நேரம் அபிமன்யு மீண்டும் ஸ்டீஃபனின் வீட்டிற்கு சென்ற போது லினா கூறியதை போல ஸ்டீஃபன் கட்டிலை விட்டே எழவில்லை. அவன் அடித்து போட்டதை போல இல்லை இல்லை அடித்து போட்டதனால் நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.
எயினியை குளிக்க வைத்து விட்டு அங்கிருந்த எயினியின் மாற்றுஉடைகளில் அவளை கிளப்பிய லினா ஸ்டீஃபனை பெரும்பாடு பட்டு காலை உணவை உண்ண வைத்து விட்டு அபிமன்யுவை காலை உணவிற்கு அழைக்கலாமா வேண்டாமா என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் நம் நாயகிக்கு மாற்று உடை எடுத்து கொண்டு வந்தாள் ப்ரின்சி. அரை மணி நேரத்தில் லினாவும் குளித்து விட்டு கிளம்பிய பின் அபிமன்யு வீட்டில் தரிசனம் கொடுத்தான்.
அபிமன்யு வந்ததை அரை மணி நேரம் பின்பே அறை தூக்கத்தில் கவனித்த ஸ்டீஃபன் கடினப்பட்டு எழுந்து அறையின் வாயிலை நோக்கி தன் காலடிகளை பதித்தான். அவன் எண்ணியதை விடவும் அது கடினமாய் இருக்க எப்பாடோ பட்டு அந்த அறை கதவு வரை வந்த ஸ்டீஃபன் அதற்கு மேல் முடியாமல் சுவற்றில் சரிந்து கீழே விழுந்தான்.
யாரோ கதவை தட்டும் சத்தத்தில் எழுந்த அபிமன்யு ஸ்டீஃபனை கண்டதும் பதறி போய் அவனுக்கு உதவ ப்ரின்சி கதவை திறந்ததும் அபிமன்யுவை தேடி நின்றிருந்தான் ஹரீஷ்.
ஸ்டீஃபன் வலியில் குழந்தை போல் அழவில்லை என்றாலும் அவன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரும் அபிமன்யுவும் லினாவும் உதவியே இரண்டடி எடுத்து வைத்து ஒரு கதிரையில் அமர்வதையும் கண்டு ஹரீஷின் மனதில் நீண்டு எழுந்தது குற்ற உணர்ச்சி.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro