ஈரம் - 2
" அருண விபுன்யா... பேரே அற்புதமா இருக்கே... பாட்டு அத விடவும் அருமை டா கண்ணா... இப்டி ஒரு குரல நா என்னோட நுப்பது வர்ஷ கரியர்ல கேட்டதே இல்ல... அதுவும் அந்த பிட்ச் இருக்கே... வாவ்... " என பாடகர் ராமன் புகழ்ந்து தள்ள லட்சனமாய் பட்டுப்புடவை அணிந்து மணப்பெண் போல அழகே உருவாய் நின்றிருந்தாள் அருண விபுன்யா..
அனைவரும் அவளுக்குக் கைத்தட்ட தன் வீட்டிலிருக்கும் சோபாவில் அமர்ந்து கொண்டு ஏதோ அவளுக்கே கேட்கப் போவதை போல இங்கிருந்து வேகமாய் கை தட்டினான் அந்த இளைஞன்... வாட்டசாட்டமாய் ஒரு அழகான புன்னகையுடன் ஃபார்மல் உடையில் அழகனாய் அமர்ந்திருந்தான் அவன் அருண விபுன்யாவின் அன்பு தமையன் ஹரீஷ் விபுன்...
அவன் வாயெல்லாம் பல்லாக தன் தங்கையை இரசித்து கொண்டிருந்த நேரம் அவனது செல்பேசி விடாது ஒலிக்கத் தொடங்கியது... இங்கிருந்தே தாவி மேஜையிலிருந்த செல்பேசியை கவ்வி எடுத்தவன் உற்சாகமாய் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்...
ஹரீஷ் : ஹரீஷ் விபுன் ஹியர் என புன்னகையுடன் தொடங்கியவனின் புன்னகை மெல்ல சுருங்க அப்புறம் என்ன கூறப்பட்டதோ " உடனே வரேன் " என்று விட்டு அழைப்பை துண்டித்தான்...
தன் கேசத்தை கோதியபடி தனது ஜீபின் பனெட்டின் மேல் சாய்ந்தமர்ந்திருந்த அபிமன்யு சுற்றுவட்டாரத்தை அமைதியாய் நோட்டமிட அவன் எண்ணியதை போலல்லாமல் அந்த பார்க்கில் நடமாட்டம் அதிகரித்து கொண்டே தான் இருந்தது... எனெனில் விடியற்காலையிலிருந்தே ஒரு மணி நேரத்திற்கு பல முறை பத்து பேராவது அந்த பார்கிற்கு யோகா செய்ய வந்தேன், ஓட வந்தேன், அமர வந்தேன், காற்று வாங்க வந்தேன், விளையாட வந்தேனென மொத்தமாய் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வந்து சென்று விட்டனர்...
அப்படியிருக்க இரவிலும் கூட இந்த பார்க்கில் நடமாட்டம் இருக்க அதிகபட்ச வாய்ப்பிருப்பதாலும் அந்த பெண் நிச்சயம் நேற்று ராத்திரியில் தான் கொலை செய்யப்பட்டிருப்பதால் யாரேனும் ஒருவராவது சம்பவத்தை பார்த்திருக்கக் கூடுமென ஒரு பக்கம் ஒரு யோசனை இருந்தாலும் ஸ்டீஃபன் எடுத்து வந்த சீசீடீவி கமராவில் பார்த்த போது தான் தெரிந்தது அப்பெண் வந்த நேரத்திற்கு வேறெவரும் அந்த பார்க்கிற்கு வரவில்லை... அப்படியே அவள் தனியாக வந்திருந்தாலும் நடு நிசி இரண்டு மணிக்கு அவள் எதற்காய் இங்கு தனியே வர வேண்டுமென்ற ஒரு கேள்வி வேறு மண்டையை குழப்பியது...
ஸ்டீஃபன் : ஏன் ஸர்... சீசீடீவிய எல்லாம் நம்ப முடியாது போல... இந்த பொண்ணு யாருன்னே தெரியல... எப்டி அவங்க ஃபமிலிக்கு இன்ஃபார்ம் பன்றது... கொலைன்னு மட்டும் தான் தெரியிதே தவிற அதத் தவிர்த்து எதுவுமே தெரியலையே... என காரின் அருகில் நின்று இரு கையையும் காரின் மேல் ஊன்றி தாவக்கட்டையை கையில் சாய்த்து நின்று கொண்டு பனெட்டில் சாய்ந்திருந்தவனை நோக்கினான்...
அபிமன்யு : எதாவது ஒரு சின்ன விஷயம் இருக்கும் ஸ்டீஃபன்... என அப்போதும் இவன் அமைதியாகவே ஸ்டீஃபனை சமாதானம் செய்ய ஸ்டீஃபனுக்கு அலுத்தே போய் விட்டது...
ஸ்டீஃபன் : அடப் போங்கயா... எப்டி தான் நீங்க இப்டி இருக்கீங்களோ... என ஸ்டீஃபன் அலுத்துக் கொள்ளும் போதே அபிமன்யு ஏதோ கூற வாயெடுக்க " தெரியும் தெரியும்... ஏன் என்ட்ரன்ஸ் வழியாத் தான் வரனுமா... சுவரேறி குதிச்சு வந்துர்க்கக் கூடாதான்னு கேக்கப் போறீங்க அதான... அடுத்து நாம போய் இந்த பார்க்க சுத்தி இருக்க கடைல உள்ள சீசிடீவிய பாக்கப் போறோம் ன்னு சொல்லுவீங்க... நானே போய் சுத்தி இருக்க கடைல எதாவது ஃபூட்டேஜ் இருக்கான்னு பாத்து வாங்கீட்டு வரேன்... நீங்க இங்கையே இருந்து யோசிங்க " என படபடவென கூறிவிட்டு விருவிருவென அங்கிருந்து சென்ற ஸ்டீஃபனை கண்டு புன்முறுவலிட்டது அபிமன்யுவின் இதழ்கள்...
ஆனால் ஸ்டீஃபன் கூறியதை போல எவரேனும் சுவரேறி வந்திருக்க வாய்ப்பிருந்தாலும் இந்த பார்க்கின் சுற்றுவட்டார சுவரை ஏற நிச்சயம் உடல்வலிமை தேவை... அப்படி பார்த்தால் கொலைகாரன் ஒரு அத்தெலெட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறதென இவன் இங்கு ஒரு கணக்கு போட்டுக் கொண்டிருக்க கொலையாளியோ அடுத்த கொலைக்கு திட்டம் போட்டு கொண்டிருந்தான் போலும்...
திடீரென அபிமன்யுவின் ஃபோன் சினுங்க அதே நேரம் அவனை நோக்கி மூச்சு வாங்க ஓடி வந்தான் ஸ்டீஃபன்... " ஸர்... ஸர்... ஸர் அங்க " என ஸ்டீஃபன் மூச்சு வாங்கிக் கொண்டே ஏதோ ஒரு புறத்தை காட்ட அழைப்பை ஏற்று காதில் வைத்த அபிமன்யு ஸ்டீஃபனிடம் மூச்சு வாங்க சைகை செய்தபடியே அவன் வந்த திசையை நோக்கி நடந்தான்...
செல்பேசியில் " ஹலோ அபிமன்யு சர்... போஸ்ட் மார்டம் இப்போ தான் முடிஞ்சிது... இந்த பொண்ணு பேஸ் தெளிவா தெரியல... இனிமே தான் டிஜிட்டல் ட்ரா வேணா பண்ணி பாக்கனும் " என மருத்துவர் கூற அதை முன்பே எதிர்பார்த்திருந்த அபிமன்யு " அந்த பொண்ணு எதனால இருந்தான்னு எதாவது கெஸ்ஸிங் இருக்குதா டாக்டர்?? " என கேள்வி எழுப்பினான்...
" சரியா தெரியல... ஆனா இந்த பொண்ணு தூக்கு போட்டு இறந்து போகல ஸர்... கழுத்துல உள்ள அடையாளம் வச்சு பாக்கும் போதும் அவங்க உடம்புல இருக்க காயங்களப் பாக்கும் போது இரெண்டுத்துக்கும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வித்யாசம் இருக்கு... " என அந்த மருத்துவர் ஒரு வெள்ளை காகிதத்தை உருத்து நோக்கியபடி கூறினார்...
அபிமன்யு : என்ன சொன்னீங்க... என சட்டென நிற்க ஓடி வந்த ஸ்டீஃபனும் அபிமன்யுவோடு பாதையில் தடைப்பட்டு நின்றான்...
மருத்துவர் : ஆமா ஸர்... இந்த பொண்ணு உடம்புல இருக்க காயமெல்லாமே ஒரு நாழு மணி நேரம் பழசா இருக்கு... ஆனா கழுத்துல இருக்க அச்சுக்கள் முணு மணி நேரம் தான் ஆன மாரி இருக்கு...
அபிமன்யு : நா... நா கொஞ்ச நேரத்துல நேர்ல வந்து உங்கள மீட் பன்றேன் டாக்டர்... என்றவன் வேறெதுவும் கூறாது அழைப்பை துண்டிக்க ஸ்டீஃபன் ஏதோ யூகித்து கொண்டு அமைதியை கடைப்பிடித்தான்...
ஒரு சில நொடிகள் சிந்தையுள் உளன்ற அபிமன்யு பின் தன் நிலையை பிடித்து கொண்டவனாக தொடர்ந்து நடக்க " ஹப்பா ரோபோட்டு ரெஸ்யூம் ஆய்டுச்சு " என புலம்பிக்கொள்ளாத குறையாக ஒரு பெருமூச்சுடன் அவனை பின் தொடர்ந்தான் ஸ்டீஃபன்...
அபிமன்யு : என்னாச்சு ஸ்டீஃபன்...
ஸ்டீஃபன் : சுத்தி இருக்க கடையோட சீசீடீவி ஃபூட்டேஜ செக் பண்ணேன் ஸர்... அதுல இரண்டு கடைல தான் உடனே ஃபூட்டேஜ் பாக்க முடிஞ்சிது... இரெண்டுல ஒன்னு பார்க்கோட பின்னாடி இருக்குறது... இன்னோன்னு பார்க்கோட சைட்ல இருக்குறது... சோ இந்த பார்க் சைட்ல இருக்க கடை வழியா பாத்தா நைட் யாரோ ஒருத்தன் சுவறேறிருக்கான் ஸர்... என வேகமாய் விளக்கிக் கொண்டே ஒரு கணினியை அவனிடம் காட்டினான்...
அதில் நடுநிசி இரண்டரை மணிக்கு அதாவது அப்பெண் முன் வாயிலாக நுழைந்த அதே நேரம்... ஆறடிக்கு சற்றே குறைவில்லாத உயரத்தில் ஜெர்கின் அணிந்து தலையை மறைத்தபடி ஒரு மரத்திலிருந்து கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பார்க்கின் சுவற்றின் மீது தாவியது ஒரு உருவம்... அபிமன்யு கண்களை கூராக்கி அந்த பதிவை பார்க்க எவ்வளவு தான் அந்த காணொளியின் வேகத்தை இவர்கள் குறைத்து பார்த்தாலும் அந்த உருவத்தின் தெளிவான ஒரு உருவே தெரியாமல் இருக்க சரசரவென பாய்ந்த அந்த காணொளியை திடீரென ஸ்டீஃபன் நிறுத்தினான்... அதில் மங்களாய் ஒரே ஒரு விஷயம் தான் தெரிந்தது....
அபிமன்யு : ஏ டி...
ஸ்டீஃபன் : இந்த ஃபூட்டேஜ்ல இந்த ஒன்னு தான் ஸர் தெரியிது... அவன் போற்றுக்குர ஜெர்கின்ல ' ஏ டி ' ன்னு ப்ரின்ட் ஆய்ர்க்கு.... அவ்ளோ தான்...
அபிமன்யு : ஸ்டீஃபன்... என்ட்ரன்ஸ்ல இந்த ஆளு வெளியப் போறதே தெரியலையே... இவன் உள்ளப் போனதோட சரி... பின் பக்கம் வழியாவும் வரல... இரெண்டு வழிலையுமே வெளிய போகல...
ஸ்டீஃபன் : அப்போ நாம வர வரைக்கும் உள்ளையே இருந்துருக்களாம்.... ஏன்னா நாம வந்தப்ரம் ஒரு கூட்டமே வெளியப் போச்சுல்ல ஸர்...
அபிமன்யு : ஹ்ம்ம்ம் மத்த ஃபூட்டேஜஸையும் சீக்கிரம் வாங்கனும் ஸ்டீஃபன்... இப்போ நீங்க ஒன்னு பண்ணுங்க... ' ஏ டி ' ங்குர ப்ரண்டட் ஜெர்கின் எங்க விக்கிதுன்னு பாருங்க...
ஸ்டீஃபன் : என் ஸர் ஒரு சட்டைய ஒருத்தன் தான் விப்பானா... ஊரு உலகத்துல எத்தனையோ கடை இல்ல...
அபிமன்யு : இல்ல ஸ்டீஃபன்... இந்த ப்ரண்ட் அவ்ளோ ஃபேமஸானதா தெரியல... நா கேள்வி பட்டதுமில்ல... சோ குறிப்பிட்ட கடைகளா தான் இருக்கும்... நீங்க விசாரிச்சு பாருங்க... நா டாக்டர பாத்துட்டு ரிப்போர்ட் வாங்கீட்டு வந்துடுறேன்...
ஸ்டீஃபன் : ஸர்... கூட நா வரட்டுமா...
அபிமன்யு : வேண்டாம் ஸ்டீஃபன்... நா பாத்துக்குறேன்... எதாவது டீட்டெய்ல்ஸ் கெடச்சா ஃபோன் பண்ணுங்க... இல்லனா பரவாயில்ல டரெக்டா நம்ம ஸ்டேஷன்க்கே போய்டுங்க... என பொருமையாய் கூறிவிட்டு அவனின் ஜீப்பை நோக்கிச் சென்றான்...
இங்கு ஷூட்டிங் அனைத்தையும் முடித்து விட்டு நம் நாயகி லினா உற்சாகமாய் வெளியே ஓடி வர அவளின் தந்தை ஓரிடத்திலிருந்து லினாவை நோக்கி கையாட்டவும் அங்கு உற்சாகமாய் ஓடப் போன நாயகியை தள்ளி விட்டு விட்டு வேகமாய் ஓடினாள் ப்ரின்சி...
லினா முறைத்து கொண்டே அவளின் தந்தையிடம் செல்ல தன் இளைய மகளை வாரி அணைத்து முத்தமிட்டு விட்டு முறைக்கும் மூத்தவளை நோக்கி அசடு வழிய புன்னகைத்தார் சம் க்ரிஸ்டோஃபர், லினா பெக்யூரா மற்றும் ப்ரின்சி பெக்யூராவின் தந்தை....
ப்ரின்சி : அப்பா ஷூட்ல எல்லாருக்கும் என்ன ரொம்ப புடிச்சு போச்சுப்பா... எனக்கு நிறைய அண்ணன் அக்கா கெடச்சிற்காங்க... என மிகவும் உற்சாகமாய் அவள் கூற அதற்கு க்ரிஸ்டோஃபர் பதிலளிக்கும் முன்பாக
லினா : கூடப்பொறந்த இந்த ஜீவன் உனக்கு அக்காவாத் தெரியல... யார் யாரோ தெரியிறாங்க என முகத்தை திருப்பி கொண்டாள்...
ப்ரின்சி : போடிப் போடி நீயெல்லாம் ஒரு அக்கா...
லினா : அப்பா நீங்க என்ன மட்டும் அழைக்க வரதாத் தானே சொன்னீங்க... ஏன் இப்போ இவள அழைக்க வந்தீங்க... என தந்தையிடம் எகிர
ப்ரின்சி : நீங்க பெரிய மகாராணி உங்களால ஆட்டோ புடிச்சு வர முடியாதா... எங்க அப்பா தான் உங்கள வந்து அழச்சிட்டு போனுமா... என முகவாயை தோளில் இடித்தாள் ப்ரின்சி...
லினா : ஹே உன்னையும் அப்பா தான அழச்சிட்டு போறாரு...
ப்ரின்சி : நா சின்ன பொண்ணு...
லினா : அப்போ நான் மட்டும்??
ப்ரின்சி : நீ வளந்த கழுதை...
லினா : ஏ யாரப் பாத்து டி கழுதைங்குர....அப்பா எதுக்குப்பா இவள பெத்தீங்க... எனக்கப்ரம் நீங்க சும்மா இருந்துர்க்களாம்ல... என கோவமாய் பொரிந்தவளுக்கு இணையாக
ப்ரின்சி : அப்பா பாருங்கப்பா இவள... நீங்க இவள பெக்காமையே இருந்துர்க்களாம்ல....
லினா : ஏய் என்ன டி நான் உன் அக்கா... நாபிறக்கலன்னா நீயும் பிறந்துருக்க மாட்ட...
ப்ரின்சி : நீ என் அக்கா ஒன்னும் இல்ல... உன்ன யாரோ குப்பத் தொட்டில போட்டுட்டு போய்ட்டாங்க... பாட்டி தான் பாவம் பாத்து தூக்கீட்டு வந்துட்டாங்க... எல்லாம் அந்த கெழவிய சொல்லனும்...
லினா : என்ன டி வாய் நீளுது... என் பாட்டிய கெழவீங்குர..
ப்ரின்சி : நீ ஒன்னும் என் பாட்டிய பத்தி பேசாத... அவங்க என்னோட பாட்டி...
லினா : அவங்க எனக்கு தான் முதல்ல பாட்டி...
க்ரிஸ்டோஃபர் தலையிலடித்தபடி தன் மகள்களை நோக்கிக் கொண்டிருக்க இவ்வளவு நேரம் சாந்தமாக இருந்தவளும் குட்டி பொம்மை போலிருந்தவளும் பேயாகவும் குட்டி பிசாசாகவும் மாறி சண்டையிட்டு கொண்டிருப்பதை அந்த சங்கீதசுவரங்கள் கூட்டணியே வாயை பிளந்து நோக்கிக் கொண்டிருந்தது...
ப்ரின்சி : அப்பா ஒன்னு உங்களுக்கு நா பொண்ணா இருக்கனும்... இல்ல இவ பொண்ணா இருக்கனும்...சொல்லுங்கப்பா யாரு உங்கப் பொண்ணு...
லினா : அப்பா அவ கெடக்குரா... வாங்க நாம போலாம்...
ப்ரின்சி : அப்பா நான் தான் உங்க கூட வருவேன்...
க்ரிஸ்டோஃபர் : நா மட்டும் போறேன்... அக்காத் தங்கச்சிங்க இரெண்டு பேரும் இங்கையே கெடங்க என அவர் பொதுவாய் கூறிவிட்டு போய் காரில் எறிக் கொள்ள இந்த அக்கா தங்கைகள் இருவரும் ஓடிச் சென்று அவரவர் சீட்டில் அமர்ந்து கொண்டனர் எங்கு மற்றவள் தன் இருக்கையை பிடித்து விடுவாளோ என்ற வேகத்தில்...
இவர்கள் இப்படித்தான்... எதற்கெடுத்தாலும் வாய் சண்டை... சில நேரம் கை கால் கூட பேசும்... அப்பொழுதெல்லாம் க்ரிஸ்டௌஃபர் அவரின் காலணியை எடுத்து காட்டினால் போதும் சிம்பாலிக்காய் செருப்பு பிய்ந்துவிடும் என்பதை புரிந்து கொண்டு இருவரும் கப்சிப்பென அமர்ந்து கொள்வர்... அவர்களை வைத்து மட்டுமல்லாமல் பத்து வருடம் முன்பே ஹார்ட் அட்டக்கில் இறந்த பாட்டியை இறந்த பின்னும் கூட நிம்மதியாய் விடாமல் அவ்வப்போது அவரை இழுத்து சண்டையிடுவர்...
இவர்கள் இப்படி விளையாட்டாய் சண்டையிட்டபடி வீட்டை அடைந்த நேரம் க்ரிஸ்டோஃபர் வீட்டின் வாசலில் நின்றிருந்தது ஒரு காவல் வண்டி...
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro