ஈரம் - 14
ஒரு சில நிமிடங்கள் சற்று அதிர்ச்சியோடே இருந்த ஹரீஷ் வேகமாய் தன் செல்பேசியை எடுத்து நேற்று வந்த அந்த குரல் பதிவை கேட்க அவனுக்கு நூற்றுக்கு நூற்றைம்பது சதவீதம் தெளிவாக தெரிந்தது அது ஸ்டீஃபனின் குரலே தானென்று.
கவனமாய் அந்த சட்டையின் இரத்தம் படிந்த ஒரு சிறிய பாகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த குளியலறையை விட்டு வெளியே வந்தான். அதே நேரம் எயினியிடம் ஸ்டீஃபன் விளையாட்டாய் ஏதோ பேசிக் கொண்டே அவளது சடையை பிரித்து இரண்டு குட்டி குடுமி போட்டு விட்டுக் கொண்டிருந்தான்.
அவர்களை தொந்தரவு செய்யாமல் அந்த அறையை விட்டு வெளியேற ஹரீஷ் அருகிலே மூடியிருந்த அறையை சற்று சந்தேகமாய் பார்த்தவன் இருவேறு சிந்தனையின்றி அந்த கதவை திறக்க பெரும்பாலும் அபிமன்யு அந்த அறையை திறக்க மாட்டெனென்று அறிந்ததால் இன்று வெளியே சென்று விட்டு மீண்டும் வந்த போது ஸ்டீஃபன் கதவை பூட்டாமல் விட்டிருந்ததால் அக்கதவு பட்டென திறந்து கொண்டது.
தலையை மட்டும் உள்ளே விட்டு எட்டிப் பார்த்த ஹரீஷ் செய்தி தாள்களால் மூழ்கியிருந்த அவ்வறையை கண்டு அதிசயித்து போய் உள்ளே நுழைய அங்கிருந்த மேஜையிலிருந்த ஏடின் மீது அவனின் பார்வை விழுந்த நேரம் ஸ்டீஃபன் அந்த அறைக்குள் பதட்டமாய் நுழைந்திருந்தான்.
ஹரீஷ் : ஓஹ் சாரி ஸ்டீஃபன். அபிமன்யுவ தேடி வந்தேன்.
ஸ்டீஃபன் : அவரு வெளிய இருக்காரு ஸர் என கூறியவன் பதட்டமாய் அறையை சுற்றி பார்வையை சுழல விட ஹரீஷ் ஒரு முறை அந்த அறையை வித்யாசமாய் பார்த்து விட்டு வெளியே சென்றான்.
ஐந்தே நிமிடத்தில் ஸ்டீஃபன் கொடுத்த தேனீரை குடித்து விட்டு அனைவரும் காவல் நிலையத்திற்கு கிளம்பினர். ஹரீஷ் அவனின் ஓட்டுனரிடம் அந்த இரத்தம் படிந்த துணியை கொடுத்து உடனே பரிசோதனை செய்ய அனுப்பியிருந்தான்.
அபிமன்யு : சோ சம்பத் நாழு நாள் களிச்சு தான் கிடைச்சாறா??
ஹரீஷ் : ஆமா. மூணு நாள் ஔட்டர் சிட்டி முழுக்க தேடினோம். சிட்டிக்குள்ள தேட ஆரம்பிச்சு கொஞ்ச நேரத்துல தான் எங்களுக்கு ஒரு காள் வந்துச்சு.
ஸ்டீஃபன் : ஏன் ஸர் உங்களுக்கு நல்லாத் தெரியுமா?? நாழாவது நாள் தான் கண்டுப்புடிச்சீங்களா???
ஹரீஷ் : என்ன கேக்கவராரு இவரு??
அபிமன்யு : ஒருவேளை எங்க கேஸுக்கும் சம்பத் கொலைக்கும் சம்பந்தம் இருக்கான்னு பாக்குறதுக்காக தான் ஸர். கல்யாண் கல்யாணி இரண்டு பேரோட கொலைலையும் சில சிமிலரிட்டீஸ் இருக்கு. அதனால தான் உறுதி படுத்திக்கிறதுக்காக ஸ்டீஃபன் கேக்குறாரு. இறந்த அரை மணி நேரத்துல அவரு கட்டப்பட்ட மாரி எதாவது அடையாளம் இருந்துதா??
ஹரீஷ் : இப்போ நீங்க சொல்றது புரியிது அபிமன்யு. சம்பத் அவரு காணாம போன மூனாவது நாளே கிடைக்க வேண்டியது தான். ஆனா அது ஆள்நடமாட்டமில்லாத பகுதிங்குரதால 24 மணி நேரம் அந்த பக்கம் யாரும் எப்பவும் போகல போல. ஆனா க்ரிஸ்டோஃபர் அப்டீங்குர ஒருத்தர் அந்த பார்க்குக்கு முன்னாடி தான் ஒரு இடத்தை வாங்கிப் போற்றுக்காரு. அதை பார்க்கப் போனப்போ ரொம்ப கெட்ட வாடை அடிக்கிறத கவனிச்சிட்டு சுத்தி செக் பண்ணப்போ கொஞ்சம் தூரத்துல சம்பத் பாடிய பார்த்துருக்காரு. அவரு இன்ஃபார்ம் பண்ண பிறகு தான் எங்களுக்கு விஷயம் தெரிய வந்துச்சு.
அபிமன்யு : அவரு உடம்புல எந்த விதமான காயமிருந்துச்சு???
ஹரீஷ் : அவரு கண்ணு தான் உடம்புலையே ரொம்ப பாதிக்கப்பற்றுந்துச்சு அபிமன்யு. அவரு உடம்பு பாதி எரிஞ்சு தான் போயிருந்தது. ஆனா அதுக்கு முன்னாடியே ஏதோ ஒரு கத்தி மாரியான பொருள வச்சு அவரோட தோல கீறி கீறி எடுத்துருக்காங்க. இந்தளவுக்கு மோசமா செஞ்சதால டாக்டர்ஸால பெருசா எதுவும் கண்டுப்புடிக்க முடியல. ஆனா அவரு தோல எரிச்சதுக்குக் காரணம் மே பி எதாவது அசிடா இருக்களாம்னு சொன்னாங்க.
ஸ்டீஃபன் : அப்போ எந்த காயத்துக்குமே இடையேயான நேரம் தெரியலையா ஸர்??
ஹரீஷ் : இல்ல. ஆனா அவரு தலை உடஞ்சு தான் கடைசியா இறந்துருக்காரு.
அபிமன்யு : அவரு உடம்புல எதாவது அடையாளம் விடப் பற்றுந்துச்சா???
ஹரீஷ் : அப்டி எதுவும் இல்ல அபிமன்யு
அபிமன்யு : ஓக்கே ஸர் நேத்து நான் கல்யாண் பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ண டாக்டர பார்த்துட்டு வந்தேன் என தொடங்கி அனைத்தையும் அவன் கூறி முடிக்க ஹரீஷிற்கு ஏதோ ஒன்று மட்டும் சரியாய் படவில்லை.
ஹரீஷ் : அபிமன்யு அந்த கத்தி சொன்னீங்களே. அது எங்க இருக்கு???
அபிமன்யு : டாக்டர் அத லப் டெஸ்டுக்கு அனுப்பியிருக்குறதா சொன்னாரு ஸர். அந்த கத்தில இருந்த ப்லட் ஓ நெகெட்டிவா இருந்ததால ஃபிங்கர் ப்ரின்ட் எடுக்க சொல்லீருந்தேன்
ஹரீஷ் : ஓக்கே அபிமன்யு. எனக்கு திடீர்னு ஒரு வேலை. நா உங்கள ஈவ்னிங் வந்து மீட் பன்றேன். தப்பா எடுத்துக்காதீங்க என வேகவேகமாய் கூறி விட்டு இவ்விருவரிடமிருந்தும் வேகமாய் விடைபெற்றுச் சென்றான்.
ஸ்டீஃபன் : என்னாச்சு அபி ஸர் இவருக்கு???
அபிமன்யு : அவர விடுங்க ஸ்டீஃபன். நீங்க என்ன நினைக்கிறீங்க??? எனக்கு நான் எதையோ மிஸ் பன்ற மாரியே தோனுது. எனக்குத் தெரியாத எதாவது உங்களுக்குத் தெரியுமா??? என அவன் சிந்தனையினூடே எங்கோ பார்த்து கொண்டு கேட்டதும் ஸ்டீஃபன் பதட்டமாய் விழித்தான்.
ஸ்டீஃபன் : இல்ல அபி ஸர்..
அபிமன்யு : ஹ்ம் எனக்கென்னமோ இந்த "ஏ டி"யையும் இறந்ததுக்கும் அவங்கள தூக்குல தொங்க விட்டதுக்கும் இருந்த அரை மணி நேர வித்யாசத்த மட்டும் வச்சிக்கிட்டு ஒரே கொலையாளிங்குரதா சந்தேகப்பட கூடாதுன்னு நினைக்கிறேன் ஸ்டீஃபன்.
ஸ்டீஃபன் : ஹையோ அபி ஸர் ஏன் இப்படி திரும்ப முடிஞ்ச விஷயத்துக்கு போறீங்க??? இந்தாங்க இப்போ தான் கல்யாணோட வண்டிய கண்டுப்புடிச்சதா ஃபோன் பண்ணாங்க. வாங்க போய் அத பார்த்துட்டு வருவோம். தயவு செஞ்சு இப்படி முதல்லேந்து ஆரம்பிக்காதீங்க அபி ஸர் என சொல்வதோடு நில்லாமல் அவனையும் இழுத்துக் கொண்டு காவல் நிலையத்தை விட்டு வெளியேறினான்.
நம் நாயகனிடம் விடைபெற்று வேகமாய் எங்கோ சென்ற ஹரீஷ் நேராய் போய் சந்தித்தது அபிமன்யு குறிப்பிட்ட அதே மருத்துவரை தான். தன் தங்கை உடன் வேலை பார்ப்பவராக மட்டுமல்லாமல் இரண்டு வாரத்திற்கு முன் சம்பத்தின் உடலை பரிசோதித்ததும் இவர் தான் என்பதால் அவரை ஹரீஷ் வேலை சம்பந்த பட்ட விஷயத்திலும் அறிந்திருந்தான்.
ஹரீஷ் : ஹலோ டாக்டர். நான் சொன்னத பத்தி யோசிச்சீங்களா???
மருத்துவர் : இல்ல ஸர் எனக்கு ஓக்கே தான் ஆனா என அவர் ஏதோ ஒரு விஷயத்திற்காய் தயங்கினார்..
ஹரீஷ் : என்ன டாக்டர்??? அந்த கத்தியில உள்ள இரத்தம் சம்பத்தோட இரத்தமான்னு தானே செக் பண்ண சொன்னேன். ஏன் தயங்குறீங்க??
மருத்துவர் : அதனால இல்ல ஸர். அபிமன்யு ஸருக்கு தெரியாம பண்ண சொன்னது தான் என அவர் இப்போதும் கூற வருவதை தயக்கமாய் இழுத்தார்.
ஹரீஷ் : நான் கிட்டத்தட்ட கொலையாளிய நெருங்கீட்டேன் டாக்டர். ஒருவேளை நான் யூகிச்சது கரெக்டா இருந்தா இன்னைக்கே நம்ம சிட்டில உள்ள எல்லாரையும் பயமுறுத்தீட்டு இருக்க கொலைகளுக்கு காரணமானவன நான் கையும் கலவமா பிடிச்சிடுவேன் என அவன் மீண்டும் உறுதியுடன் கூறவும் வேறு வழியின்றி அம்மருத்துவரும் ஒத்துழைக்க சம்மதித்தார்.
ஒரு வழியாக வெள்ளை மண்டபத்தைத் தாண்டி கல்யாணின் வண்டி வயல்வெளிகளின் அருகே ஒரு போஸ்ட் கம்பத்தின் மீது முட்டிக் கொண்டு நிற்பதை கண்டுப்பிடித்து அவ்விடத்தை அடைந்தனர் அந்த இளங்காவலர்கள்.
அங்கு முன்னமே வந்திருந்த காவலர் ஒருவர் அந்த சுற்றுவட்டாரத்தை அலசிய போது கிடைத்த கல்யாணின் உறிமபடத்தையும் அவனது செல்பேசியையும் அபிமன்யுவிடம் ஒப்படைத்தார்.
அந்த செல்பேசியை யாரேனும் தூக்கி எறிந்திருக்கலாம் அது உடைந்திருந்ததால் எதுவும் பார்க்க முடியவில்லை என அந்த காவலாளி ஸ்டீஃபனிடம் கூறக் கூற அவன் அனைத்தையும் ஒரு ஏடில் எழுதிக் கொண்டே வந்தான்.
பத்து நிமிடத்தில் அந்த வயலின் ஓரமாய் அமர்ந்திருந்த சிலரிடம் சென்று வண்டியை பற்றியும் கல்யாணை பற்றியும் விசாரித்த நம் நாயகன் பின் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் ஸ்டீஃபனிடமே வந்த நேரத்திற்கு வயலோரமாய் காவல்காரர்களை கண்டதால் சில ஊர் மக்கள் அங்கங்கு நின்று எட்டிப் பார்ப்பதும் கடந்து செல்வதுமாய் குழுமியிருந்தனர்.
அபிமன்யு : எதுவும் கிடைக்கல ஸ்டீஃபன். இங்க சீசீடீவி கூட கிடையாது.
ஸ்டீஃபன் : என்ன அபி ஸர் ஒரு முட்டுச் சந்தா வந்து முடிஞ்சிடுச்சு
அபிமன்யு : இருங்க இங்க யாரு கிட்டையாவது கேப்போம்.. ஏங்க இங்க பக்கத்துல எதாவது சீசீடீவி கமரா இருக்கா??? மூணு நாள் முன்னாடி இங்க இந்த பையன பார்த்தீங்களா?? என அவன் கேட்டு கொண்டிருந்த போதே இவர்களின் பேச்சை கேட்டதும் அங்கு குழுமியிருந்த கூட்டத்தில் ஒரு சிறுவன் திரும்பி பார்க்காமல் ஊருக்குள் ஓடத் தொடங்கினான். அதை கவனித்தும் அமைதியாய் இருந்த அபிமன்யு மக்களனைவரும் மறுப்பான பதில் கூறிவிட்டு நகர்ந்ததும் இன்னும் குழம்பி போனான்.
அவனால் ஏதோ ஒன்றை உணர முடிந்தது. கண்கள் முன்னிருக்கும் ஏதோ ஒன்றை குருடனாய் கவனிக்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அது யாதென தெரியாமல் சிந்தனையிலே உளன்றவனுக்கு திடீரென காலையில் கமிஷ்னர் ஞானவேல் கூறியது நினைவிற்கு வந்தது..
அபிமன்யு : ஆதிய பத்தி அப்பா என்ன சொன்னாரு?? அவ மேல திரும்ப கரை படியிறதா சொன்னாரு, ஆனா என்ன நடந்துச்சு?? எனக்கு தெரியாம?? நான் எதாவது தப்புப் பன்றனா?? ஆதி என்ன டி நடக்குது இங்க?? எனக்குத் தெரியாம யாராவது என்னோட விளையாடுறாங்களா?? ஆனா அப்படி யாரு இருக்கா??நான் கண்டிப்பா யாரையும் தப்பா நம்பல தானே?? என எண்ணிக் கொண்டவனின் பார்வை தனிச்சையாக ஸ்டீஃபனின் மீது விழுந்தது.
ஸ்டீஃபன் எந்தளவிற்கு அபிமன்யு அறிவானவன், பொருமையானவன் என அறிந்து வைத்திருக்கிறானோ அதை விடவும் நம் நாயகன் அசத்தலான கூர்மையுடன் ஒவ்வொன்றையும் வெகு சாதாரணமாய் கவனிக்கக் கூடியவனென்பதை அறியாதிருந்தான். அவனின் சகோதரனுக்கே ஒன்றை என்றும் மறக்க இயலா நியாபக சக்தி இருக்கும் பொழுது அவனுடன் பிறந்த அபிமன்யுவிற்கு அந்த நியாபக சக்தியில் பாதி கூடவா இருக்காது?
ஸ்டீஃபன் ஒவ்வோர் முறை அவனிடம் ஏதோ பேச வந்து விட்டு வார்த்தையை வாயோடு விழுங்கிக் கொள்வதையும் கவனித்திருக்கிறான். ஒரு சில நாட்களாய் தன்னிடம் பொய் சொல்வதையும் கவனித்திருக்கிறான். அபிமன்யு ஸ்டீஃபனை பற்றி நன்கறிவான், ஸ்டீஃபனின் வீட்டு வாசலை வாரம் தவறாமல் வந்து பார்த்து விட்டு போகும் தெரு நாய் கதையிலிருந்து எதுவாக இருந்தாலும் அதை பெரிதாய் எடுத்து கொண்டு தனிப்பட்ட விஷயம், மூக்கை நுழைக்காதீர்கள் என முகத்தில் அடித்ததை போல் பேச மாட்டான் ஸ்டீஃபன்.
அபிமன்யு : என்னோட பிரச்சனை என்னன்னே நான் கண்டுப்பிடிக்காத வரை இதுக்கு பதிலும் கிடைக்காது. ஸ்டீஃபன் எந்த விஷயத்த என் கிட்டேந்து மறைக்கிறாரு?? என் கிட்டேந்து மறைக்கிற அளவுக்கு அது என்ன விஷயம்?? என தன்னைத் தானே குழப்பிக் கொண்டவன் பின் ஒரு பெருமூச்சு விட்டவனாய் " எதுவா இருந்தாலும் ஸ்டீஃபன் எனக்கு நம்பிக்கை துரோகம் பண்ண மாட்டாருன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு " என தனக்குத் தானே கூறிக் கொண்டான்.
மருத்துவமனையில் பொருமையின்றி ஹரீஷ் அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருக்க அந்த மருத்துவர் இரு வேறு ரிப்போர்ட்டுகளுடன் அவனை சந்திக்க வந்தார்.
மருத்துவர் : ஸர் கத்தியில இருக்குர இரத்தம் சம்பத்தோடது தான். அந்த துணியில இருந்த இரத்தம் பீ பாசிட்டிவ். என அதிர்ச்சியாய் அவர் கூற ஹரீஷிற்கு அனைத்தும் விளங்கியது போலும்.
அடுத்த கால்மணி நேரத்தில் நேராக ஸ்டீஃபனின் வீட்டிற்கே சென்ற ஹரீஷ் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஐந்தே நிமிடத்தில் அந்த வீட்டையே அவர்கள் அலங்கோலமாக்கியிருக்க அந்த குறிப்பிட்ட அறைக்குச் சென்ற ஹரீஷ் முதலாவதாக எடுத்ததே அந்த ஏடை தான்.
அதை பார்த்தபடியே சுற்றி முற்றித் தேடியவன் அந்த ஏடில் ஆதியை பற்றிய படங்கள் இருப்பதை கண்டு புருவத்தை சுருக்கினான். ஆதி தான் நம் நாயகனின் மனைவி என்பது தெரியாமல் அந்த அறையை சுற்றி வந்தவன் எதிர்பாராத விதமாய் மூன்று வாரம் முன் காணாமல் போன சம்பத், இரண்டு வாரம் முன்பு காணாமல் போன கல்யாணி, நேற்று சடலமாய் கிடைத்த கல்யாண் என அவர்கள் மூவரின் செய்திகளும் நேராய் பதிக்கப்பட்டிருந்ததை கண்டான். அவை அனைத்திலும் ஸ்டீஃபன் சிவப்பான மையினால் மேலும் கிருக்கி வேறு வைத்திருந்தான்.
அந்த வீட்டின் வெளியே கொள்ளை புறத்தில் ஒரு சீசீடிவி கமெரா இருப்பதையும் ஒரு காவலாளர் அவனிடம் கூறிவிட்டுச் சென்றார். அரை மணி நேரத்தில் அபிமன்யுவின் பொருப்பிலுள்ள காவல் நிலையத்திற்கே நேராய் சென்ற ஹரீஷ் அங்கும் ஸ்டீஃபன் இல்லாததால் உடனே அங்கிருந்தோரை விட்டு அவர்களை தொடர்பு கொள்ள வைத்தான்.
என்ன ஏதென தெரியாமல் காவல் நிலையத்திற்குள் வேகமாய் நுழைந்த அபிமன்யுவை தாண்டிச் சென்ற ஹரீஷ் நம் நாயகனின் பின் வந்த ஸ்டீஃபனின் முன் நின்று " சிட்டில நடந்த கொலைகளுக்கு சந்தேகப்பட்டு உங்கள கைது செய்றேன் ஸ்டீஃபன் " என்று கூறி மற்றவர்கள் அவன் என்ன கூறினான் என்பதை பகுத்தறியும் முன்பாகவே ஸ்டீஃபனின் கைகளுக்கு விலங்கிட்டிருந்தான்.
ஸ்டீஃபன் அதிர்ச்சியில் வாயடைத்திருந்ததால் ஹரீஷை இமைக்க மறந்து மற்ற அனைவருக்கும் மேலாக அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தான். " ஸர் என்ன சொல்றீங்க நீங்க??" என அபிமன்யு அத்தனை பேருக்கு முன் முதல் முறையாய் பட்டென எகிரிய கோவத்தில் கத்திய கத்தில் ஸ்டீஃபன் உடல் நடுங்க அவனை நோக்கினான்.
ஹரீஷை தவிர்த்து மற்ற அனைவரும் கூட அபிமன்யுவை அதிர்ச்சியாய் நோக்கினர். " உங்க கிட்ட விளக்கி சொல்ல நேரமில்ல அபிமன்யு. நீங்க தேடுர கொலையாளியே இவன் தான் போல. அதுல நான் உறுதியா இல்லனாலும் இவன் இரக்கமில்லாம யாரையோ கொலை பண்ணீட்டு போலீஸ் யூனிஃபார்ம்ல ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான். நீங்களே உண்மைய அவன் வாயால கேட்டுத் தெரிஞ்சிக்கோங்க " என அபிமன்யுவிடம் உரக்கக் கூறிவிட்டு ஸ்டீஃபனை அபிமன்யுவின் கண் முன்னே இழுத்துச் சென்றான்.
ஹரீஷ் கூறியதில் ஒரு சில வினாடிகள் உறைந்து நின்ற அபிமன்யு தன்னை காணாமல் இன்னும் அதிர்ச்சியிலே செல்லும் ஸ்டீஃபனையும் ஹரீஷ் கூறியதை கேட்டு அவனோடு வந்த சிலர் ஸ்டீஃபனை தரை மட்டமான பார்வை பார்ப்பதையும் பார்த்து என்ன செய்வதென தெரியாமல் யாரோ நம் நாயகனது மூளையை அணைத்து வைத்து சென்றதை போல் அதே இடத்தில் நின்றான் அபிமன்யு.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro