Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம் - 13

லினா விடாப்படியாய் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தானென அமர்ந்திருக்க க்ரிஸ்டோஃபர் இல்லாது தற்போது நம் நாகியிடம் வாய் தகராரில் இறங்கியது அவரது தாய் இசெப்பெல்லா.

இசெபெல்லா : நீ இப்படியே கல்யாணம் பண்ணிக்காம இருந்தா என்ன அர்த்தம் லினா??? உனக்கு இப்போ 25 வயசாச்சு நியாபகம் இருக்கா இல்லையா???

லினா : இப்போ என்ன தான் மா உன்னோட பிரச்சனை???

இசெபெல்லா : உன்னோட கல்யாணம் தான்

லினா : அதான் நானே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லீட்னேல

இசெபெல்லா : அதான டி என் பிரச்சனையே. உனக்கு பின்னாடி ஒருத்தி இருக்கா. அதாவது நியாபகம் இருக்கா உனக்கு???

லினா : இப்போ அதான் உங்களுக்கு பிரச்சனைன்னா இருங்க. ஏ ப்ரின்சி உனக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கனுமா டி என அவளுண்டு அவள் வேலையுண்டென அமைதியாய் தோசையை மென்றுக் கொண்டிருந்த ப்ரின்சியை இவர்களின் வட்டத்திற்குள் இழுத்தாள் லினா.

ப்ரின்சி : இப்போவே கல்யாணம் பண்ணி நான் என்ன டி பண்ணப் போறேன். நா ஒரு பெரிய சிங்கர் ஆகனும். அனிருத் கூட பாடனும். ஏ ஆர் ரஹ்மான் கூட டின்னர் சாப்பிடனும். அதுக்கப்பரம் வேணா கல்யாணத்த பத்தி யோசிக்கிறேன்

லினா : ஹான் பாத்தீங்களா இப்போ உங்க பொண்ணு சொன்ன கணக்கு முடியவே பத்து வர்ஷமாய்டும். சோ அப்போ அவளுக்கு கல்யாணம் பண்ணி வைங்க.

இசெபெல்லா : லினா எங்களுக்கும் வயசாகுது டி. உங்கப்பாக்கு பேரன் பேத்திகள பார்க்க ஆசை இருக்காதா???

லினா : இருக்க வேண்டாம்னு நான் சொல்லவே இல்லம்மா. ஆனா அதுக்காக என்ன வற்புருத்தாதீங்கன்னு தான் சொல்றேன். உங்க சின்ன பொண்ணு யாரையாவது சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து உங்க கைல புள்ள குட்டிய பெத்து குடுத்துடுவா. நீங்க அவங்கள கொஞ்சுங்களேன்.

இசெபெல்லா : ஹே என்ன டி கல்யாணமே பண்ணாம எதாவது பாதரியாருக்கு அஸிஸ்டென்ட்டா போலாம்னு இருக்கியா?? என அதிர்ச்சியாய் கேட்க " அவரு ஒத்துக்கலன்னா கடைசில அப்படி தான் போகனும் போல " என தனக்குள்ளே முணுமுணுத்து கொண்டாள் ப்ரின்சி.

லினா : அம்மா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா இரு மா

இசெபெல்லா : யாரையாவது காதலிக்கிறன்னா தயங்காம சொல்லு டி. அவனையாவது உனக்குக் கட்டி வச்சு நாங்க நிம்மதியா இருந்துக்குறோம் என காதல் திருமணமே கூடாதென ஒரு காலத்தில் கூறிய தாயே இறங்கி வந்ததை ப்ரின்சி ஆச்சர்யமாய் பார்க்க நம் நாயகிக்கு அதுவெல்லாம் பெரிதாய் தெரியவில்லை.

லினா : அம்மா உன் பொண்ணப் பத்தி என்ன நினைச்ச. நான் யாரையாவது லவ் பண்ணா, லவ் பண்ண இரெண்டு மாசத்துலையே நம்ம வீட்டுக்கு கூட்டீட்டு வந்து உனக்கு அறிமுகமே பண்ணி வச்சிருப்பேன். ஆனா என் விஷயமே வேற. நீ கெளம்பு நான் தூங்கனும். நாளைக்கு ஷூட்டிங் இருக்கு என ஏதேதோ சாக்குக் கூறி அவர்களது தாயை அனுப்பி வைத்தாள்.

ப்ரின்சி : ஏன்க்கா நீ ஏன் உண்மையாவே கல்யாணம் பண்ணிக்க மாற்ற??? போய் அபி மாமா கிட்ட பேசலாம்ல??

லினா : ஆமா உன் அபி மாமா நான் எப்போ வந்து ப்ரொப்போஸ் பண்ணுவேன்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காரு, போடி நீ வேற. என் பிரச்சனையே என்னோட காதல் ஒரு தலை காதல் டி. ஆதி இறந்து மூணு வர்ஷமானப் பின்னும் கூட அவரு அவள தான் டி காதலிக்கிறாரு. அவரு என்ன அந்த மாரி ஒரு பார்வைல இப்போ வர பார்த்தது கிடையாது.

ப்ரின்சி : அப்போ நீ தள்ளிப் போய் தானே ஆகனும். கல்யாணம் பண்ணிக்கோ.

லினா : அது தான் என்னால முடியாது ப்ரின்சி. ஏன்னு கேக்காத. அவ்ளோ தான் சொல்லுவேன்.

ப்ரின்சி : சரி சரி எதாவது விளையாடுவோமா?? வர்ட் பில்டிங்??

லினா : வர்ட் பில்டிங்? ஹான் அது சொன்னா ஆதி நினைப்பு தான் வருது.

ப்ரின்சி : ஏன் தி அக்காக்கும் அந்த கேமுக்கும் என்ன சம்பந்தம்???

லினா : அது ஆதிக்கு பிடிக்காத விளையாட்டு ப்ரின்சி. அதுல தொடர்ந்து நாம வார்த்தைகள நியாபகம் வச்சுக்குட்டே இருக்கனும் இல்லையா??? ஆதிக்கு அது ரொம்ப கஷ்டம். குறைஞ்ச பட்சம் அஞ்சு வார்த்தை தான் அவளுக்கு நியாபகம் இருக்கும். அதனால அந்த விளையாட்டுல அவ சீக்கிரமே தோத்துடுவா. அதனால அந்த விளையாட்டே அவளுக்கு புடிக்காது

ப்ரின்சி : ஓஹோ ஆனா நீ கூட இந்த விளையாட்டுல வீக்கு தானே. உன் கிட்டையா தி அக்கா தோத்தாங்க??

லினா : இல்லடி. அவரு கூடையும் புவி கூடையும் விளையாடுவா. அங்க ஒரே இந்த பாரி படிக்கிர விளையாட்டா தான் விளையாடுவாங்க போல, நமக்கு செட்டாகாதுப்பா அதெல்லாம். அதுவும் இல்லாம அவரு தம்பி புவிக்கு இந்த என்னமோ மெமரி டி. பெயர் தெரியல. ஆனா அவருக்கு வாழ்கைல நடந்த எதுவுமே மறக்காதாம். ஒன்னு விடாம எல்லாமே நியாபகம் இருக்குர சக்தி இருக்குரதால அவரு தான் ஆதிய ரொம்ப ஈசியா தோக்கடிச்சிடுவாரு. அதான் ஆதிக்கு பிடிக்கவே பிடிக்காது. என அந்த பழைய நினைவில் நம் நாயகி சிரித்து கொண்டே கூறிய அனைத்தையும் மறைவான இடத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அந்த உருவத்திற்கு தலையெல்லாம் சுற்றியது.

சகோதரிகள் இருவரும் நேரமானாதல் உறங்கலாமென மின்விளக்கை அணைத்து விட்டு படுக்க திடீரென எழுந்த லினா எழுந்து அவளது நாட்குறிப்பை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினாள்.

அதை சற்று கண்ணீர் தடத்துடன் எழுதியவள் அதை அப்படியே வைத்து விட்டு போய் தன் தங்கையின் அருகிலே படுத்து கொண்டாள். கால்மணி நேரம் அவர்கள் உறங்குவதையே சிறத்தையாய் பார்த்து கொண்டிருந்த அவ்வுருவம் அடுத்த ஐந்தாவது நிமிடம் எளிதாய் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்திருந்தது.

நல்லவேளையாக இசெபெல்லா புலம்பியபடியே போய் உறங்கியதால் அவர் கூட வெளியே இருக்கவில்லை. மெதுவாய் ஒரு நிழல் போல் நகர்ந்து லினா இருக்கும் அறைக்குள் நுழைந்து சத்தமெழுப்பாமல் அந்த நாட்குறிப்பை எடுத்தது.

கை தனிச்சையாகவே ஒரு நடுக்கத்தை கொடுக்க அடையாளமிருந்த பக்கத்தை எடுத்து அதில் கண்ணீர் தடம் அங்குமிங்கும் இருப்பதை கண்டு அதை வாசித்தது.

" ப்ரின்சி. உனக்குத் தெரியாத ஒன்னு என்னத் தெரியுமா?? என்னால இத உன் கிட்ட சொல்ல முடியாது டி. நீ நினைக்கிற மாரி நா அவர முன்னாடிலேந்தெல்லாம் காதலிக்கல. ஆதி எப்போப் போனாளோ அப்போ தான் காதலிக்க ஆரம்பிச்சேன். அதுவும் என்னையே அறியாம தான்மா. ஆதி காணாமப் போறதுக்கு மூணு நாள் முன்னாடி எனக்கு ஃபோன் பண்ணா. அழுதா. சிரிச்சா. கடைசியா எனக்கு இரெண்டு சத்தியம் பண்ணி குடுன்னு கேட்டா. ஒன்னு நா அவ குடும்பத்த அவ இடத்துலேந்து பாத்துக்கனும் தயவு செஞ்சு அவர உன்னால மட்டும் தான் காதலிச்சு என்ன மறக்க வைக்க முடியும்னும் சொன்னா. இன்னோன்னு நான் இந்த மாரி உன் கிட்ட சத்தியம் வாங்குனது வேற யாருக்கும் எப்பவும் தெரிய கூடாதுன்னு சொன்னா. அப்போலேந்து எயினிய என் பொண்ணா பாத்த எனக்கு அவர காதலிக்க எண்ணம் வரவே இல்ல. அப்போ தான் நான் ஆதிய இழந்தேன். அவளுக்கு குடுத்த சத்தியத்த காப்பாத்த முடியாம புவியையும் இழந்தேன். அப்போ அவரு அனுபவிச்ச வலியும் வேதனையும் என்ன ரொம்ப வாட்டீடுச்சு. தினம் அவர போய் பார்க்க ஆரம்பிச்சேன். எயினிய பாத்துக்குட்டேன். அந்த ஒரு வர்ஷத்துல அவரோட இழப்புலேந்து வெளிவர அவரு ரொம்ப கஷ்டப்பட்டாரு ப்ரின்சி. அதே ஒரு வர்ஷத்துல தான் நான் அவர விரும்பவும் ஆரம்பிச்சேன். இத என்னைக்குமே என்னால உன் கிட்ட சொல்ல முடியாது. தி கேட்ட இந்த வாக்கையாவது நான் முழுசா காப்பாத்தனும் " என்றதோடு முடிந்திருந்தது அந்த பக்கம்.

அந்த நாட்குறிப்பை வைத்த இடத்திலே வைத்து விட்டு வேகவேகமாய் அவ்வீட்டிலிருந்து வந்த வழியிலே வெளியேறிய அவ்வுருவம் முடிந்தளவு யாருமற்ற தூரத்திற்கு சென்றதும் மடிந்து விழுந்து மனமுடைந்து கத்தி அலறியது.

" ஏன்? ஏன்? ஏன் எனக்கு எதுவும் நியாபகமில்ல?? நான் யாரு?? உண்மையாவே என் குடும்பம் யாரு?? எனக்கு இருக்குர நியாபகமெல்லாம் உண்மை தானா?? ஹையோ ஏன் எனக்கிந்த சோதனை??? ஏன் எனக்கு எதுவும் நியாபகமில்ல?? நான் யார நம்புறது?? ஏன் அந்த ஒரு சம்பவத்தத் தவிற வேற எதையும் என்னால நியாபகப் படுத்த முடியல.?? ஏன் என்ன தவிக்க விட்ட??? " என கத்தி கதறிய அவ்வுருவத்திற்கு தெளிவாய் எந்த ஒரு சலனமுமின்றி நினைவிலிருந்தது என்னவோ அந்த ஒரு சம்பவம் மட்டும் தான்.

மறுநாள் காலையில் அபிமன்யு தன் நிலையத்திலிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்திருந்தான். ஒரு மணி நேரத்தில் குளித்து விட்டு பசித்தும் உண்ண மனமில்லாமல் தன்  வீட்டில் தன்னை தவிர்த்து வேறொருவர் இருக்கின்றார் என்பதை உணராமலே வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றான்.

அவனின் வீட்டிலிருக்கும் ஒரு அறையிலிருந்து வெளியயேறிய அவ்வுருவம் அந்த இடத்தை என்றும் போல் இன்றும் மீண்டும் ஏதோ ஒரு ஏக்கத்துடன் சுற்றிப் பார்த்தது. அதற்கு முன் ஆதி மற்றும் புவியின் இரு புகைபடங்கள் மாட்டப்பட்டிருந்தது.

ஸ்டீஃபன் வீட்டிற்கு செல்லவிருந்த அபிமன்யு இடையில் வந்த ஒரு அழைப்பின் காரணமாய் ஒரு வருடம் களித்து அவர்களது மேலதிகாரியை பார்க்கச் சென்றான். இந்த கொலை வழக்கைப் பற்றிய விஷயமாக இருக்களாமா அல்ல வேறெதுவுமா என பலவாறாக சிந்தித்தபடி பயணித்துக் கொண்டிருந்தான். எனெனில் அவனை இப்போது அழைத்தது அவர்களின் கமிஷ்னர் ஞானவேல்பிரகாசம்.

அரை மணி நேரத்திற்குள்ளாக அவரது நிலையத்தை அடைந்து ஒரு பெருமூச்சுடன் உள்ளே நுழைந்த நம் நாயகன் நிமிர்ந்து நின்று அவர் அனுமதியளித்ததும் உள்ளே நுழைந்து அவருக்கு சல்யூட் அடித்தான். அதை தலையசைத்து ஏற்றுக் கொண்டார் கதிரையில் தனது இறுதி ஐம்பதிலும் கம்பீரமாய் இருக்கும் கமிஷ்னர் ஞானவேல்பிரகாசம்.

கமிஷ்னர் மட்டுமல்லாமல் டெப்புட்டி கமிஷ்னர் கரிகாலனுமே அந்த அறையில் இருந்தார். கரிகாலன் அபிமன்யுவை கண்டதும் புருவத்தை சுருக்கினார். " வந்து உக்காருங்க அபிமன்யு " ஞானவேல்  மரியாதையாய் அழைக்க " வேண்டாம் ஸர் " என அபிமன்யு சற்று இடம் விட்டே நின்று கொண்டான்.

" நீங்க தான் சிட்டில நடக்குர தொடர்கொலைகள கவனிக்கிறதா கேள்வி பட்டேன். ஏசிபி ஹரீஷ் விபுனும் இந்த கேஸ தான் பார்த்துக்குட்டு இருக்காரு. உங்களுக்கு விருப்பம் இல்லனா சொல்லுங்க நான் அவரையே முழுசா சார்ஜ் எடுத்துக்க சொல்றேன் " என அபிமன்யு எதிர்பார்த்ததை போல கமிஷ்னர் ஞானவேல் அவனை பார்த்தார்.

அபிமன்யு : சாரி ஸர். எனக்கு அப்படி எந்த பிரச்சனையும் இல்ல. என்ன என் வேலைய பார்க்க விடுங்க.

" கரிகாலன். கொஞ்சம் வெளிய இருக்கீங்களா?? " என கமிஷ்னர் கேட்டதும் நம் நாயகனை சற்று முறைத்து கொண்டு விடைபெற்று வெளியேச் சென்றார் கரிகாலன். " இப்பையாவது உக்காரு அபி " என ஞானவேல் சற்று முகத்தின் இறுக்கத்தை தளர்த்தி அவரது கதிரையில் சாய அபிமன்யுவும் அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தான்.

" ஏன் அபி உண்மையாவே இந்த கேஸ நீ பார்க்கனும்னு நினைக்கிறியா.??? உனக்கு இஷ்டம் இல்லனா சொல்லுப்பா. நான் பாத்துக்குறேன் " என மீண்டும் அவர் தொடங்க " வேண்டாம் அப்பா. நான் பார்த்துக்குறேன் நீங்க என்ன பத்தி கவலப்படாதீங்க. ஆதியோட கொலையால இந்த கொலை என்ன எந்த விதத்துலையும் பாதிக்காது. நான் கொலையாளிய சீக்கிரமே உங்க முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன் " என தீர்மானமாய் கூறினான் அபிமன்யு.

கமிஷ்னர் ஞானவேல் பிரகாசம் ஆதியின் கார்டியனாக இருந்தவர். ஆதியின் காதலுக்கு ஒப்புக் கொண்டு ஏற்கனவே காவல் பயிற்சிகள் அனைத்திலும் சிறந்து விளங்கிய மாணவனை தன் மகனை போல் பார்த்தவர் அவனே வந்து பெண் பார்க்க தன் தம்பியுடன் நின்ற போது ஒரு மறுப்பேதும் அவனை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நல்ல விதமாய் திருமணமும் செய்து வைத்தார்.

" உன் மேல நம்பிக்கை இல்லாம நாம இத சொல்லல அபி,  " என அவர் அமைதியாய் கூற அபிமன்யு பார்வையை மாற்ற முயன்றான்.

அவர் எவ்வளவோ கூறியும் அபிமன்யு அவரது பேச்சை சில விஷயத்தில் கேட்கவில்லை. ஒன்று ஆதியின் கொலை பற்றி விசாரிக்க விடாமல் செய்தது. மற்றொன்று அவர் எவ்வளவோ கூறியும் தன் ஏசிபி பதவியை இறக்கி வைத்து விட்டு இன்ஸ்ப்பெக்ட்டரானது.

" இங்க பாரு அபி, ஆதி நீ இப்படி இருக்கனும்னு நினைக்கவே இல்ல. இப்போ அவ மேல திரும்ப கரை பட ஆரம்பிக்கிது. உனக்குத் தெரியுமோ தெரியாதோ அது நடக்கத் தான் போகுது. இந்த கொலைகளுக்கான கொலையாளிய கண்டுப்புடிக்கிறதுக்காகவாவது நீ சார்ஜ் எடுத்துகனும் அபி " என அவர் ஏதோ ஒன்றை அவன் மீது மீண்டும் திணிக்க நம் நாயகனுக்கு துளியும் அதில் இப்போது நாட்டமிருக்கவில்லை.

" ஏன் அபி புரிஞ்சிக்க மாற்ற?? இதுக்காக நீ பட்ட கஷ்டத்தையெல்லாம் மறந்துட்டியா?? போலீஸ் டிப்பார்ட்மென்ட்டே உனக்கு நீ ஆசை பட்டத, உன் லட்சியத்த கொடுக்க நினைக்கும் போது ஏன் நீ விலகிப் போற??இதுக்காக தான் ஆதியும் புவியும் உன்ன- " என அவர் ஏதோ கூற வருவதற்குள் " அப்பா ப்லீஸ். வேண்டாம். நான் ஆசை பட்டேன் தான். எனக்கும் மேல என்ன இந்த இடத்துல பார்க்கனும்னு புவிக்கு சின்னப் புள்ளைலேந்து ஆசை. அவனே இல்லாதப்போ எனக்கிந்த பதவி தேவையில்லப்பா. புரிஞ்சிக்கோங்க. நான் கெளம்புறேன் என்ன வற்புருத்தாதீங்க " என முடிவாய் கூறிவிட்டு அங்கிருந்து விருவிருவென வெளியேறினான்.

ஞானவேலுக்கு கண்ணில் ஏக்கம் தான் குடியேறியது. முதல் முறை தன் தமையனுக்காக யாருமே இல்லாமல் ஆதியை பெண் கேட்டு தன் முன் வந்த அந்த கல்லூரி மாணவனின் கடைசி ஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என மனதுக்குள்ளே நொந்து கொண்டார்.

தன் ஜீப்பில் ஏறுவதற்காய் வண்டியின் கதவை திறந்த நம் நாயகன் வேறேதோ ஒரு சத்தம் கேட்டு எதற்சையாய் திரும்பவும் அவன் முன் வந்திறங்கினான் ஹரீஷ்.

ஹரீஷ் " உங்கள ஸ்டேஷன்ல நேரா போய் பார்க்களாம்னு இருந்தேன். இங்கையே பார்த்துட்டேன் " என புன்னகையோடு அவனை பார்க்க அப்புன்னகைக்கு பதில் தலையசைப்பை பதிலாய் கொடுத்த அபிமன்யு "வாங்க ஸர் டரெக்டா ஸ்டேஷனுக்கு தான் போகனும். ஸ்டீஃபன பாத்துட்டு கிளம்பீடலாம் " என வண்டியை உயிர்பிக்க ஹரீஷும் அவனது ஓட்டுனரிடம் அபிமன்யுவின் வாகனத்தை பின் தொடரக் கூறிக் கொண்டு வண்டியில் ஏறினான்.

இருவத்தைந்து நிமிடம் பின் ஸ்டீஃபனின் வீட்டை அடைந்த அபிமன்யு ஹரீஷையும் அழைத்து கொண்டு போய் ஸ்டீஃபனின் வீட்டின் கதவை தட்டிவிட்டு காத்திருந்தான்.

" சப்பப்பா இந்த டெட்பாடிய டிஸ்போஸ் பன்றதுக்குள்ள புதுசா நாழஞ்சு கொலை பண்ணீடலாம் போல " என அந்த நேரம் சரியாக கதவை திறந்து தவறானதை பேசியிருந்தான் ஸ்டீஃபன். அபிமன்யு அவன் கூறியதை கவனிக்காமல் தனக்கு திடீரென வந்த அழைப்பை ஏற்றிருந்ததால் ஹரீஷ் மட்டும் தான் அவனை உன்னிப்பாய் கவனித்து இப்போது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தான்.

குளித்து விட்டு தலை துவட்டியபடி வந்த ஸ்டீஃபன் ஹரீஷை எதிர்பார்க்காததால் திருட்டு முளி முளிக்க, பின் இருவரையும் உள்ளே வரவேற்த்து அபிமன்யு கூறும் முன்பாக " அபி ஸர் உங்களுக்கு டீ ஓக்கே. ஸர் நீங்க என்ன குடிப்பீங்க?? " என ஹரீஷிடம் கேட்டு நிலையை சகஜமாக்கினான். அவனுக்கும் தேனீரென்றதும் வெளியே இருக்கும் ஓட்டுனருக்கும் சேர்த்து ஸ்டீஃபன் தேனீரோடு வந்த நேரம் அப்போதே உறங்கியெழுந்திருந்த எயினி ஸ்டீஃபனை அருகில் காணாமல் தன் தந்தையின் குரலை கேட்டதும் " அப்பா " என கண்களை தேய்த்து கொண்டே வெளியே வந்தாள்.

சம்பத் கொலையை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்த அபிமன்யு திசை திரும்பி தன் மகளை தூக்கிக் கொண்டான். " உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா அபிமன்யு?? " ஹரீஷ் ஆச்சர்யமாய் கேட்க தலையாட்டி அமோதித்த அபிமன்யு " தோ வந்துடுறேன் ஸர் " என எயினியை தூக்கிக் கொண்டு கொள்ளைப் புறமாகச் சென்றான்.

ஹரீஷ் : ஸ்டீஃபன் ரெஸ்ட்ரூம் எங்க இருக்கு? என சாதாரணமாய் கேட்டு விட்டு உன்னிப்பாய் கவனித்தவன் " இந்த ரூம்ல ஸர் " என ஸ்டீஃபன் கூறியதும் அவன் குரலை ஒன்றுக்கு மூன்று முறை மீண்டும் மீண்டும் நினைத்து பார்த்தபடி அவன் காட்டிய குளியலறைக்குள் நுழைந்தான் ஹரீஷ்.

கைகளை கழுவி விட்டு வெளியேறச் சென்ற ஹரீஷ் எதையோ கண்டு அப்படியே நிற்க, அவனருகில் மாட்டப்படிருந்த சட்டையில் மட்டும் காயாமல் சிவப்பாய் இரத்தம் படிந்திருந்தது.

தொடரும்...

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro