Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம் 10

க்ரிஸ்டோஃபரின் வீட்டில் அவரை பார்த்தபடி அமர்ந்திருந்த ஹரீஷ் பொருமையாய் பேச்சை தொடங்கினான்.

ஹரீஷ் : ஸர் நான் சும்மா தான் உங்கள பார்க்க வந்தேன். நீங்க பயப்புட வேண்டிய அவசியமில்ல. என கூறவும் சற்று பதட்டத்துடன் இருந்த க்ரிஸ்டோஃபர் வெளிப்படையாகவே பெருமூச்சு விட்டார்.

" இன்னைக்கு கிடைச்ச கல்யாணோட பாடிய நீங்க தான் முதல்ல பாத்ததா கேள்வி பட்டேன். அதான் உங்க கிட்ட பேசலாமேன்னு இந்த பக்கமா வந்தேன் " என கூறியபடியே மெல்ல தன் பார்வையை சுழல விட்டவன் தான் தேடிய ஒரு முறைக்கும் விழிகளை கண்டுப்பிடித்ததும் மீண்டும் க்ரிஸ்டோஃபரிடமே தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

" எனக்கு அந்த பையன் யாருன்னு கூடத் தெரியாது தம்பி. திடீருனு எல்லாம் நடந்துடுச்சு. இன்னும் அங்க நடந்ததையே என்னால மறக்க முடியல. யாரு அந்த பையன கொலப் பண்ணாங்களோ எனக்கு தெரியாது ஆனா கொலப் பண்ணவன் ரொம்ப ஆபத்தானவன் " என வெளிரிய முகத்தோடு பயத்திலே கூறிய க்ரிஸ்டோஃபருக்கு அமோதித்து ஹரீஷ் தலையாட்டிக் கொண்டே தன் இடது கழுத்தை மெதுவாய் தேய்க்கவும் சரியாக ப்ரின்சி அவ்விருவருக்கும் குடிக்க தேனீர் எடுத்துச் சென்றாள்.

அதை ஒரு சிறிய தலையசைப்புடன் பெற்றுக் கொண்ட ஹரீஷ், எதற்சையாய் எழுந்து அமரும் போது அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து வெளியேறிய ஒரு குட்டி உருண்டையான ஏதோ ஒன்று அவர்களினிடையே இருந்த மேஜையின் கீழ் உருண்டோடியது.

அதை கவனிக்காத அம்மூவருமே சாதாரணமாய் இருக்க தேனீரை மௌனத்திலே அருந்திய ஆண்கள் இருவரும் பார்வை பரிமாற்றம் செய்யாது அமைதியை கடைப்பிடித்தனர்.

" சரிங்க ஸர்,  கிட்டத்தட்ட நாளைல இருந்து நானும் அபிமன்யுவும் ஒன்னா தான் வேலை செய்யப் போறோம். நாங்க எப்போ வேணா உங்களுக்கு ஃபோன் செய்ய வாய்ப்பு இருக்கு. நீங்க ஜாக்கிரதையா இருங்க " என்று விட்டு எழுந்த ஹரீஷ் ஒரு தலையசைப்புடன் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

ப்ரின்சி : அப்பா சாவிய மறந்துட்டாருப்பா. நா குடுத்துட்டு வந்துடுறேன் என குடுகுடுவென அவள் வெளியே ஓட க்ரிஸ்டோஃபரோ அதையெல்லாம் பெரிதாய் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லாததால் எழுந்து மனச்சோர்வுடன் அவரது அறைக்குச் சென்றார்.

கண்களை சுழட்டியபடி வெளியே வந்த ப்ரின்சி வண்டி மட்டும் நிற்க ஹரீஷை காணாமல் மீண்டும் திரும்பும் முன் அவளது பக்கவாட்டிலிருந்து சுவற்றின் பக்கம் இழுத்தது ஒரு கரம். அவன் மீது முட்டி மோதி நின்ற ப்ரின்சி அந்த கரத்தை பிடித்து கொண்டு அவனை நிமிர்ந்து முறைத்தாள்.

ஹரீஷ் அப்பாவியாய் அவளை பார்த்து புன்னகைக்க வந்த கோவத்திற்கு அவன் கரத்தை நறுக்கென கடித்து வைத்தாள். " ஆ ஆ விஷம் விஷம் விஷம் விடு டி என்ன " என வேகமாய் தன் கரத்தை உருவி கொண்ட ஹரீஷ் அவள் மீண்டும் எதையாவது வைத்து அடிக்க தயாராகும் முன் அவளது இரு கைகளையும் அவளின் முதுகு புறமாய் முறுக்கி ப்ரின்சியை அவனருகில் இழுத்தான்.

ப்ரின்சி : நா ஒரு கத்து கத்துனா உங்கள போலீஸ்ல புடிச்சு குடுத்துடுவாங்க என அவள் படு சீரியசாய் மிரட்ட அதற்கு தன் குழி விழும் சிரிப்பை பதிலாய் அளித்த ஹரீஷ்

ஹரீஷ் : இந்த ஹரீஷையே அரெஸ்ட் பன்றதுக்கு ஒரு போலீஸுக்கு தைரியம் இருக்கா?? யாருமா அது??

ப்ரின்சி : ஏன் இல்லாம?? என் மாம்ஸ கூப்பிட்டு நீங்க என் கைய புடிச்சு இழுத்தீங்கன்னு சொன்னா அவரு கண்டிப்பா அரெஸ்ட் பண்ணுவாரு என முகத்தைத் திருப்பி கொண்டாள்.

ஹரீஷ் : சரி சரி மாமன பாக்க வந்த இடத்துல ஏதோ ஒரு மாம்ஸ பத்தி பேசுறியே. என்ன நல்லாயிருக்கியான்னு கேக்கத் தோனுச்சா உனக்கு??

ப்ரின்சி : ஏன் உங்களுக்கு மட்டும் கேக்கனும்னு தோனுச்சா, இல்லல்ல??? ஏன் நா மட்டும் கேக்கனும்???

ஹரீஷ் : சரி தங்கம் நீ கோவமா இருக்கன்னு தெரியிது. அதுக்குன்னு எவ்ளோ நேரம் இப்படியே இருக்க போற??

ப்ரின்சி : ம்க்கும் என் கோவத்த சமாதானம் படுத்தனும்னு தோனுதா உங்களுக்கு?? என கையால் அடிக்க இயலாமல் அவள் அழகாய் திமிற அவளை சுவற்றில் சாய்த்து அமைதி படுத்தியவன்

ஹரீஷ் : சரி சரி சாரி கண்ணம்மா. உன் மாமாவ மன்னின்சிடேன். பாவம்ல உன்னோட போலீஸ் மாமா

ப்ரின்சி : ஆமா ஆமா ரொம்பப் பாவம் தான். ஒரு மாசம் என்ன பாக்க வரல. ஒரு ஃபோன் காள் இல்ல. உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியல. ஏசிபி ஹரீஷ் விபுன் திடீர் மரணம்னு ந்யூஸ்லையாவது வரும்னு பாத்தா அதுவும் இல்ல

ஹரீஷ் : அடிப்பாவி

ப்ரின்சி : பின்ன என்னங்க?? நாழு நாள் முன்ன வந்த நீங்க என் கிட்ட எதாவது பேசுனீங்களா?? நீங்க பாட்டுக்கும் எங்க அப்பாவ குறுக்குக் கேள்வி கேட்டுட்டு ஓடீட்டீங்க.

ஹரீஷ் : அதான் சாரி கேக்குறேன்ல கண்ணம்மா. அப்போ உண்மையாவே செம்ம வேலைடா. கொலை நடந்துடுச்சு. அதுக்கடுத்து தொடர்ந்து சிட்டில இரெண்டு கொலை. எப்படி சும்மா இருக்க முடியும் சொல்லு. நா இரெண்டு வாரமா தேடுன ஒருத்தன தான் ரொம்ப கொடூரமா எவனோ கொலை பண்ணீட்டான் டா கண்ணம்மா. நா எடுத்த கேஸ்லையே முதல் முறையா உயிரில்லாம பிணத் கண்டுப்புடிச்ச கேசே அது தான் என அவன் சற்று சோகமாய் கூறவும் ப்ரின்சியின் கோபமும் மெதுவாய் அடங்கியது.

ப்ரின்சி : கவலப்படாதீங்க ஹரீஷ். இறந்தவருக்கு நீங்க நியாயம் வாங்கிக் குடுப்பீங்க. எனக்கதுல நம்பிக்கை இருக்கு என மெதுவாய் கூறி அவள் அவனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள ஒரு கசந்த புன்னகையுடன் தன்னவளை தானும் அணைத்து கொண்டான் அந்த காவல்காரன்.

ஆனால் அவர்களுக்கு தெரியாதே. ப்ரின்சியின் அந்த நம்பிக்கை ஒரு நாள் உடையத் தான் போகிறதென்று.

ஹரீஷ் : சரி கண்ணம்மா. நீ சாவி குடுக்க வந்து பத்து நிமிஷமாச்சுன்னு யாராவது தேடி வந்துடுவாங்க. நா கெளம்புறேன் சரியா??

ப்ரின்சி : ஹ்ம்ம் பாத்து போய்ட்டு வாங்க என தோய்ந்த முகத்துடன் கூறியவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு புன்னகையுடன் விடைபெற்றான் ஹரீஷ்.

ஹரீஷ் மற்றும் ப்ரின்சி இரண்டு வருடமாய் காதலிக்கின்றனர். ப்ரின்சி கல்லூரியில் இரண்டாமாண்டு படித்தபோது ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராய் அவள் கல்லூரிக்குச் சென்ற ஹரீஷ் அவள் பாடிய பாடலை கேட்டதும் முதல் பார்வையிலே அவளுக்காய் விழுந்திருந்தான்.

ப்ரின்சி ஆறு மாதத்தில் பல முறை அவனை அடிக்கடி பார்த்து பார்த்து அவளே அறியாது அவன் மீது உருவான ஈர்ப்பினால் நட்பென தொடங்கி இறுதியில் காதலிலும் விழுந்திருந்தாள்.

அரை மணி நேரமாய் தான் பார்க்கும் ஒரே காணொளியை மீண்டும் ஓடவிட்டு உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்டீஃபன். அவனுக்கு மேல் அபிமன்யு தான் வந்ததிலிருந்து பார்க்கும் ஒரே காணொளியை நாப்பதாவது முறையாக மீண்டும் வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

ஸ்டீஃபன் : யப்பா அபி ஸர் முடியல என்னால. இந்த கல்யாணி பொண்ணு அந்த ஒரு மணி நேரம் எங்க போனுச்சோ தெரியல, ஆனா நா உறுதியா சொல்றேன் அந்த பொண்ணு தேனாம்பாக்கத்தோட மறுபக்கம் வரவே இல்ல. என சலிப்படைந்து அவன் சத்தமாய் கூறவும் மடிக்கணினியிலிருந்து பார்வையை பிரித்து அவனை நோக்கிய அபிமன்யு.

அபிமன்யு : ஏன் ஸ்டீஃபன் இந்த ரோடு நடுவுல எட்டு பாதைல பிரியிது. எட்டுல நாழு பாதை தேனாம்பாக்கத்தோட இரெண்டு பக்கத்தோடையும் திரும்ப சேரும். அந்த பொண்ணு அந்த நாழு வழியில போயிருந்தா தேனாம்பாக்கத்த கடந்து போக ஒரு மணி நேரம் எடுத்துருக்காது. இதுல இந்த பொண்ணு தேனாம்பாகத்தோட வலது பக்கமே போகாததால அந்த பக்கமே நமக்கு தேவையில்ல. மீதி இருக்க நாழு பாதைல ஒன்னு நான்கு வழி சாலையோட கலக்குது. அந்த வழியில நடுவுல காடு கட்டிடம்னு எதுவும் கிடையாது. ஆறு மட்டும் தான். அப்போ கல்யாணி மீதி இருக்க மூணு பாதைல தான போயிருக்கனும்

ஸ்டீஃபன் : இதான் விஷயம்னா இத முன்னாடியே சொல்லீருக்களாமே அபி ஸர். ஏன் என்ன இந்த வீடியோவ இப்டி ஓட விட்டு ஓட விட்டு பார்க்க வச்சீங்க??

அபிமன்யு : எதுக்கும் ஒரு முன்னெச்சிரிக்கை தான் ஸ்டீஃபன். என்ன விட நீங்க இந்த மாரி ஃபூட்டேஜ கவனமா கவனிப்பீங்க. அதான் உங்கள பார்க்க சொன்னேன். உங்களுக்கும் அந்த பொண்ணு தேனாம்பாகத்தோட வலது பக்கத்த தாண்டுன மாரியே தெரியலங்கும் போது மீதி இருக்கப் போறது இந்த சந்தேகங்கள் மட்டும் தான் என எழுந்து அங்கிருந்த ஒரு வெள்ளை பலகையில் ஏதோ எழுதத் தொடங்கினான்.

ஸ்டீஃபன் : ஏன் அபி ஸர் கொலையாளிய புடிக்க கொலையாளி மாறி யோசிக்கனும்னு சொல்லுவாங்களே. அப்படி எதாவது பண்ணலாமா??

அபிமன்யு : அதுக்கு கொலையாளியோட நோக்கம் தெரியனும் ஸ்டீஃபன். ஆமா உங்கள யாரோ அட்டக் பண்ணதா சொன்னீங்களே, என்னாச்சு அந்த விஷயம்???

ஸ்டீஃபன் : ஹ்ம்ம் தெரியலையே அபி ஸர். வீட்டுக்கு போய் தான் சீசீடீவி கமெராவ பார்க்கனும்.

அபிமன்யு : உங்கள அந்த நேரத்துல யாரு தாக்க வந்துருக்கனும்?? திருடனா இருக்குமா?

ஸ்டீஃபன் : சச்ச கண்டிப்பா இருக்காது அபி ஸர். இந்த காலத்து திருட்டு பசங்க ஒரு வீட்ட கொள்ளையடிக்க போனா ஒன்னு கூட்டமா தான் போவாங்க. இன்னோன்னு அந்த வீட்டுல கொள்ளையடிக்க பத்து ரூபாவாவது இருக்குமான்னு முழுசா உறுதி பண்ணீட்டு தான் போவாங்க. அப்படி பண்ணியிருந்தா என் வீட்டுல பத்து பைசா கூட இருக்காதுன்னு தெரிஞ்சே எவனும் திரும்பி கூட பார்க்க மாட்டான். வந்தவன் ஒரே ஆளு. அவன் நோக்கம் வேற என்னமோ தான்.

அபிமன்யு : அவனுக்கு தேவையான எதாவது உங்க கிட்ட இருந்துருக்களாம். என்ன இருக்கு உங்க வீட்டுல??

ஸ்டீஃபன் : முகம் தெரியாதவனுக்கு தேவையான எது அங்க இருக்கு?? ஒரு மிக்ஸி, ஒரு உறளு, அப்ரம் நாழு நாற்காலி, ஒரு கட்டில், ஹான் என் வீட்டுல உருப்புடியா ஒரு ஃபன் இருக்கு அபி ஸர். அப்பரம் வேற என இவன் யோசித்து கொண்டிருக்கும் போதே அபிமன்யு தலையிலடித்து கொண்டான்.

ஸ்டீஃபன் : ஹையோ அபி ஸர் அது எதையும் அவன் எடுத்துட்டு போகல. நீங்க ஏன் உங்க தலைல அடிச்சிக்கிறீங்க. கண்டுப்புடிச்சிட்டேன் அவன் கண்டிப்பா நா நைட்டு செஞ்ச சப்பாத்திய ஆட்டையாப் போடத் தான் வந்துருப்பான். என ஏதோ ஒரு பெரிய இரகசியத்தை கண்டுப்பிடித்ததை போல் கை தட்ட அவனை பாவமாய் பார்த்த நம் நாயகன்

அபிமன்யு : நீங்க இப்படி இருக்குரதால தான் உங்களுக்கு ப்ரொமோஷனே குடுக்கமாற்றாங்க போல என தனக்குத் தானே கூறிக் கொண்டு மீண்டும் தலையிலே அடித்து கொண்டான்.

" என்ன சொல்லிட்டோம்னு இவரு திரும்ப தலைல அடிச்சிக்குறாரு, நைட்டு இவருக்கு சப்பாத்தி குடுக்கலன்னு கோச்சிக்கிட்டாரா?? " என அவரை குழப்பமாய் பார்த்த ஸ்டீஃபன் பின் ஏதோ நினைவு பெற்றவனாய் " அபி ஸர்,  அது மட்டுமில்லாம கல்யாணி மர்டர் சம்பந்தப்பட்ட ஒரு எவிடென்ஸும் என் வீட்டுல இருக்கு. அது மட்டுமில்ல எயினி குட்டி கூட அப்போ அங்க தான் இருந்தா " என அபிமன்யுவிற்கும் நினைவு படுத்தினான்.

அபிமன்யு : எயினியா??

ஸ்டீஃபன் : ஒரு கெஸ்ஸிங் தான் அபி ஸர். என் வீட்டுல திருடவோ என்ன கொலை பண்ணவோ யாருக்கும் நோக்கம் கிடையாது. அந்த நேரத்துல வீட்டுக்குள்ள வரதுக்கு தடையும் இல்ல. நீங்களும் இல்ல. பாப்பா தூங்கீட்டு இருந்தா

அபிமன்யு : ஸ்டீஃபன், எயினி உங்கக் கூட இருக்குரதென்ன புதுசா? நா இங்க வந்ததுக்கு அப்பரம் பாப்பா என் கூட இருந்தத விட உங்க கூட உங்க வீட்டுல தான இருக்குரது தான் அதிகம்.

ஸ்டீஃபன் : ஆனா அப்போலாம் இந்த கொலை நடக்கலையே அபி ஸர்

அபிமன்யு : எனக்கென்னமோ இது ஆதி சம்பந்தம் பட்டதா இருக்கும்னு தோனல ஸ்டீஃபன்.

ஸ்டீஃபன் : ஹ்ம் மே பி பாப்பாக்காக இல்லனா அந்த மாத்திரைக்காக தான் வந்துருக்கனும் அபி ஸர்.

அபிமன்யு : மாத்திரையா?? அது தான் நீங்கசொன்ன எவிடென்சா??

ஸ்டீஃபன் : ஆமா அபி ஸர். கல்யாணி கிட்ட கிடைச்ச சந்தேகப்படும் படியான ஒரே பொருள் அது தான். அது ஏதோ தோல் நோயிக்காக எடுத்துக்குர மருந்து அபி ஸர்.

அபிமன்யு : தோல் நோயா?? அந்த மாரி நோயிருக்குரதா கல்யாணி வீட்டுல யாரும் சொல்லலையே

ஸ்டீஃபன் : வேற யாரோடதா கூட இருக்களாம் அபி ஸர். அந்த மாத்திரை 20 முதற்கொண்டு 60 வயதுடையோர் யார் வேணாலும் போட்டுக்களாம்.

அபிமன்யு : ஹ்ம்ம் அத எடுக்க எதுக்காக யாராவது வரனும்??

ஸ்டீஃபன் : வந்தவன் கிட்ட தான் கேக்கனும். சரி அபி ஸர் கல்யாண் குடும்பத்து கிட்ட அவர பத்தி சொல்லியாச்சு சரி. ஆனா அவரு எப்படி கடத்தப்பட்டாரு?? எங்க போனாரு?? என்ன ஆனாருன்னு கண்டுப்புடிக்க வேண்டாமா??

அபிமன்யு : ஹ்ம்ம் அதுல தான் ஸ்டீஃபன் ஒரே யோசனையா இருக்கு. கல்யாண் அன்னைக்கு வேகமா அவரு காரெடுத்துட்டு மேம்பாலத்துலேந்து வெள்ளை மண்டபம் வழியா எங்கையோ போயிருக்காரு. அதுக்கு மேல எங்க போனாருன்னு அங்க போய் தான் நாம கண்டுப்புடிக்கனும்.

ஸ்டீஃபன் : இதுல என்ன யோசனை?? அதோட அபி ஸர் கல்யாண் அவரோட கார்ல தான போனாரு. மே பி அவரோட கார் எங்க இருக்குன்னு தெரிஞ்சா எதாவது நமக்கு உதவுமா??

அபிமன்யு : இது எனக்கு தோனவே இல்ல பாருங்களேன். வாங்க ஸ்டீஃபன் உடனே கல்யாண் வீட்டுக்கு போகலாம் என அவன் உடனடியே கிளம்ப இவன் திடுதிபுவென கூறியதால் ஸ்டீஃபனும் வேகவேகமாய் கிளம்பினான்.

ஸ்டீஃபன் : என்ன யோசனைன்னு சொல்லவே இல்லையே அபி ஸர்?

அபிமன்யு : கல்யாண் போன வாரம் அவரு வேலை பாக்குர இடத்துல அவரு தங்கச்சிக்கு கல்யாணம்ங்குரதா சொல்லி ஒரு வாரம் லீவ் அப்லை பண்ணீருக்காரு ஸ்டீஃபன். ஆனா அவரு தங்கச்சி காலேஜ் தான் படிக்கிறாங்க. ஒருவேளை அவரு குடும்பத்துல வேற யாருக்காவது கல்யாணம் நடக்க இருந்துச்சான்னு இப்போ போய் நாம கேட்டுத் தெரிஞ்சிப்போம் என ஜீப்பில் ஏறியவன் ஸ்டீஃபன் ஏறியதும் இஞ்சினை உரும விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

ஏதோ உடைந்து விழும் சத்தத்தில் பதறியடித்து எழுந்த அம்மருத்தவர் சில நொடிகளுக்கு தான் எங்கிருக்கிறோமென்றே தெரியாமல் பதைபதைத்து தன்னை சுற்றி நோக்கினார். அந்த அவன் வந்த தடையமே இன்றி வந்த வழியாகவே சென்றிருந்தான் போலும். அவரது அனைத்து பொருளும் வைத்தது வைத்த இடத்திலே இருக்க, ஒன்று மட்டும் மாற்றமடைந்திருந்தது.

அவர் சுயநினைவிலிருந்த போது அவர் கரத்திலிருந்த கல்யாணின் ரிப்போர்ட் அவரது மேஜையிலிருக்க அதற்கு பதிலாய் அவர் கரத்தில் ஒரு இரத்தம் படிந்த கத்தி தான் இருந்தது.

திடுக்கிட்டு அதை தூர தூக்கி எறிந்தவர் மூச்சடங்க அந்த கத்தியை பார்த்தார்.

தன் காவல் நிலையத்தில் பரபரப்பாய் ஏதோ ஒரு வழக்கில் சேகரித்த விஷயங்களை பார்த்து கொண்டிருந்த ஹரீஷிற்கு ஏதோ ஒரு பெயரில்லா எண்ணிலிருந்து ஒரு குரல் பதிவு வந்தது.

அதை குழப்பமாய் எடுத்து உயிர்பித்த ஹரீஷ் சில நொடிகளில் கேட்டதென்னவோ " அதுக்கு அப்ரம் நா அவன போட்டுத் தள்ளீட்டேன் " என சிரித்தபடியே யாரோ ஒரு ஆண் கூறியதைத் தான்.

தொடரும்...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro