Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ரமழான் திக்ர்

🌟🌟🌟🌟🌟🌟🌟

*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*

*📈ரமழான் 1️⃣0️⃣:*

*_📿இன்றைய திக்ர்:_* 📿 *﷽*

*لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ*

*_"📿லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன்"_*

*_''📿உன்னைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்.”_*

*(📓அல்குர்ஆன் 21:87)*

*_💝நபிமொழி:_*💝

*மீன் வயிற்றில் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இருந்த போது கேட்ட பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*_லாயிலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல் ழாலிமீன்_*

*_முஸ்லிமான ஒவ்வொருவரும் இதைக் கூறுவாரானால் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படாமல் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்._*

*🔊அறிவிப்பவர்: ஸஅது (ரலி),*
*📓நூல்: திர்மிதி 3427*

             ❀• 🌳🌸🌳 •❀

*🔖‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.*
*(📓திருக்குர் ஆன் 33: 41, 42)*

*📈அனைவரும் இந்த அமல்களை இப்புனித மாதத்தில் அதிக அதிகமாக செய்து நன்மையை பெருக்குவோம் إن شاء الله*

*🤲🏻இந்த சிறிய அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!! أمين*

*📌ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா தினங்களிலும் இதனை பின்பற்றுவோம்... إن شاء الله*

~  *முகம்மது நபி ﷺ உம்மத்*🌹

🌟🌟🌟🌟🌟🌟🌟

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #islam#quiz