ரமழான் திக்ர்
🌟🌟🌟🌟🌟🌟🌟
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*📈ரமழான் 9️⃣:*
*_📿இன்றைய திக்ர்:_* 📿 *﷽*
*ٱلْـحَـمْـدُ للهِ حَمْـداً كَثـيراً طَيِّـباً مُـبارَكاً فيه*
*_"📿அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி"_*
*_''📿தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது.”_*
*_💝நபிமொழி:_*💝
ஒரு மனிதர் மூச்சிறைக்க (விரைந்து) வந்து தொழுகை வரிசையில் சேர்ந்து, "அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் "உங்களில் இவ்வார்த்தைகளை மொழிந்தவர் யார்?" என்று கேட்டார்கள். மக்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மீண்டும்), "உங்களில் இதை மொழிந்தவர் யார்? ஏனெனில், அவர் தவறாக ஏதும் சொல்லவில்லை" என்று கூறினார்கள். உடனே அந்த மனிதர் "நான் மூச்சிறைக்க வந்து தொழுகையில் சேர்ந்தேன். ஆகவே, இவ்வாறு சொன்னேன்" என்று பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்_
*👑"பன்னிரண்டு வானவர்கள் தமக்கிடையே "இதை எடுத்துச் செல்பவர் யார்" எனும் விஷயத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன்" என்று கூறினார்கள்.*
*🔊அறிவிப்பாளர் :அனஸ் (ரலி)*
*📚ஸஹீஹ் முஸ்லிம் : 1051*
❀• 🌳🌸🌳 •❀
*🔖‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.*
*(📓திருக்குர் ஆன் 33: 41, 42)*
*📈அனைவரும் இந்த அமல்களை இப்புனித மாதத்தில் அதிக அதிகமாக செய்து நன்மையை பெருக்குவோம் إن شاء الله*
*🤲🏻இந்த சிறிய அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!! أمين*
*📌ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா தினங்களிலும் இதனை பின்பற்றுவோம்... إن شاء الله*
~ *முகம்மது நபி ﷺ உம்மத்*🌹
🌟🌟🌟🌟🌟🌟🌟
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro