ரமழான் திக்ர் 2
🌟🌟🌟🌟🌟🌟🌟
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*ரமழான் 6️⃣:*
*_📿இன்றைய திக்ர்:_* 📿 *﷽*
*لا إلهَ إلاَّ اللَّه وحْدهُ لاَ شَرِيكَ لهُ، لَهُ المُلْكُ، ولَهُ الحمْدُ، وَهُو عَلَى كُلِّ شَيءٍ قَدِيرٌ*
*_💓"லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்"_*
*_❣'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்'_*
*_💝நபிமொழி:_*💝
*இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்'*
*'லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)' என்று*
*_ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!_*
*🔊அறிவிப்பாளர் :அபூ ஹுரைரா(ரலி)*
*📚ஸஹீஹ் புகாரி : 6403.*
❀• 🌳🌸🌳 •❀
*🔖‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.*
*(📓திருக்குர் ஆன் 33: 41, 42)*
*📈அனைவரும் இந்த அமல்களை இப்புனித மாதத்தில் அதிக அதிகமாக செய்து நன்மையை பெருக்குவோம் إن شاء الله*
*🤲🏻இந்த சிறிய அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!! أمين*
*📌ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா தினங்களிலும் இதனை பின்பற்றுவோம்... إن شاء الله*
~ *முகம்மது நபி ﷺ உம்மத்*🌹
🌟🌟🌟🌟🌟🌟🌟
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro