*_மனித குலத்தை ஒருங்கிணைக்கும் ரமலான்._*
*☝இஸ்லாம் என்ற இறைமார்க்கம் அதில் இணைந்தவர்களுக்கு விதிக்கும் ஒவ்வொரு கடமைகளிலும் இந்த மனிதகுல ஒருங்கிணைப்பிற்கு முன்னுரிமை அளிப்பதை ஆராய்வோர் அறியலாம்.*
*😌இஸ்லாம் என்ற வார்த்தையின் பொருள் அமைதி என்பதாகும். இதன் இன்னொரு பொருள் கீழ்படிதல் (discipline) என்பதாகும். அதாவது இறைவன் கற்பிக்கும் எவல் விலக்கலகளை ஏற்று அதன்படி வாழும்போது பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம்!*
*🛐இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள்.*
*👥👤அதைப் போலவே ஒவ்வொரு ரமலான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.*
*_🕌”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்._* (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
*_🍉🍌🍜நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை"._* (ஆதாரம்:அஹ்மத்)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro