பெருநாளை தினத்தை கொண்டாடும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்குகளையும் இஸ்லாம்
1) புத்தாடை அணிதல்
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள். ‘நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாட்களின்போதும் தன்னிடம் இருக்கின்ற ஆடைகளுள் மிக அழகான ஆடையைத் தெரிவு செய்து அணிந்து கொள்வார்கள். அவர்களிடம் ஒரு விஷேடமான ஆடை இருந்தது. குறிப்பாக அந்த ஆடையை ஈதுல் பித்ர் பெருநாள் தினத்திலும் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்திலும் அவர்கள் அணிவார்கள்.’
2) பெருநாள் தின காலை உணவு
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் காலை உணவை அருந்திய பின்னரே தொழுகைக்குச் செல்வார்கள். ஆனால், ஹஜ்ஜுப் பெருநாளில் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு வந்துதான் காலை உணவை சாப்பிடுவார்கள் என்று அபூ (ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
3) ஒரு பாதையால் தொழுகைக்குச் சென்று மற்றொரு பதையால் திரும்புதல்
ஜாபிர் (ரழியல்லா{ஹ அன்{ஹ) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘நபி (ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்கின்றபோது ஒரு பாதையால் செல்வார்கள். திரும்புகின்றபோது மற்றோரு வழியால் திறும்புவார்கள்.’ (ஸஹீஹ் முஸ்லிம்)
4) குறித்த நேரத்தில் தொழுதல்
பெருநாள் தொழுகையுடன் தொடர்புடைய மிக முக்கியமான மற்றுமொரு ஸுன்னா பெருநாள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுவது. ஆனால், இன்று பெருநாள் தொழுகை முடியுமானவரை தாமதப்படுத்தப்படுகிறது. இது நபியவர்களின் ஸுன்னாவுக்கு மாற்றமானது. அதிலும் குறிப்பாக, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுக்குரிய தொழுகையை முடியுமான வரை நேரகாலத்தோடு தொழுவது மிக முக்கியமான ஒரு ஸுன்னா.
ஜுன்துப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘இரண்டு ஈட்டியின் அளவு உயரத்திற்கு சூரியன் உயரும்போது ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையையும் சூரியன் ஓர் ஈட்டின் அளவுக்கு உயரும்போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நிறைவேற்றுவார்கள்.’ ஆதாரம்: அஹ்மத்
5) தக்பீர் சொல்லுவது
பெருநாள் தினத்தல் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் சொhல் வேண்டும். அதுவும் முக்கிய ஸுன்னாக்களில் ஒன்று. ‘ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்ந்தும் தக்பீர் கூறியும் அழகுபடுத்துங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.6) வாழ்த்துத் தெரிவித்தல்பெருநாள் தினத்தில் நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு ஸுன்னா இருக்கின்றது. அதுதான் வாழ்த்துத் தெரிவிப்பது. பெருநாள் தினத்தில் நபித் தோழர்கள் சந்தித்துக் கொண்டால் ‘தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்’ (அல்லாஹ் உங்களையும் என்னையும் பொருந்திக் கொள்வானாக) என்று வாழ்த்துக் கூறியவர்களாக முஸாபஹா, முஆனகா செய்து கொள்வார்கள். இது வெறுமனே ஒரு வாழ்த்து மட்டுமல்ல, ஓர் உயர்த பிரார்த்தனையும்கூட.
எனவே, பெருநாள் தினம் என்பது எமது குடும்பத்தினரிடையே, சகோதர சகோதரிகளுக்கு மத்தியில், அண்டை அயலவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டிய நாள். எம்மைச் சூழ வாழ்கின்ற அனைவர் மத்தியிலும் சாந்தி சமாதானத்தை உருவாக்க வேண்டிய நாள். அதற்கான சந்தர்ப்பத்தை பெருநாள் தின வணக்கங்கள் எற்படுத்தித் தருகிறது. அந்த இலக்குகளையும், நோக்கங்களையும் அடையும் வகையில் பெருநாள் தின கொண்டாடத்தை அமைத்துக் கொள்வோம்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro