Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

~~ நோன்பின் சட்டங்கள் ~~


                        🌹🌹🌹🌹

      நோன்பின் சட்டங்களை அறிந்து நோன்பு நோற்கவேண்டும். மனம் விரும்பியவாறு நோன்பு வைத்தால் நாள்முழுதும் பசித்திருந்ததைத் தவிர வேறு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.

👉   குறைந்தளவு வாந்தி வந்தால் நோன்பு முறியாது. வாய் நிரம்ப வாந்தி வந்தால் நோன்பு முறிந்துவிடும்.

👉  மிஸ்வாக் செய்வதால் நோன்பு முறியாது.

👉 நோன்பு நினைவிருக்க வாய் கொப்பளிக்கும்போது தண்ணீர் தொண்டையினுள் சென்றுவிட்டால் நோன்பு முறிந்து விடும்.

👉 கண்களுக்கு சுருமா இடுவது, எண்ணெய் தேய்ப்பது, சோப்பு போட்டுக் குளிப்பது, அத்தர் பூசுவது இவைகளால் நோன்பு முறியாது.

 👉  பீடி, சிகரெட், பொடி போன்றவைகளை உபயோகித்தால் நோன்பு முறிந்து விடும்.

👉 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நோன்பு முறியாது.

👉   மாதத் தீட்டின் போது பெண்கள் நோன்பு வைக்க கூடாது. ஆனால் விடுபட்ட நோன்புகளை அவசியம் களாச் செய்யவேண்டும்.

👉 முடி வெட்டுவது, நகம் வெட்டுவது இவைகளால் நோன்பு முறியாது.

 👉 நோன்பு வைக்க எழும்போது பஜ்ரு பாங்கு சொல்லப்பட்டு விட்டால் எதுவும் சாப்பிடாமல், குடிக்காமல் நோன்பின் நிய்யத்துடன் தொடரலாம்.

 👉 நோன்பாளி பொய், புறம், கோள், கெட்டவார்த்தைகள் பேசுவது மாபெரும் குற்றமாகும். நோன்பை முறிக்கா விட்டாலும் நோன்பின் நன்மைகளை அழித்து விடும்.

  👉 எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது.

  👉 நோன்பு வைத்த நிலையில் நோன்பு திறக்கும் நிய்யத்தைச் சொல்வதால் நோன்பு முறியாது.

  👉 தாமதம் செய்யாமல் குறித்த நேரத்தில் நோன்பு திறப்பது நோன்பின் நிபந்தனையாகும்.

  👉  தூங்கி எழுந்ததும் கனவின் மூலம் ஸ்கலிதம் ஆகியிருந்தால் அவரது நோன்பு முறியாது. குளித்துக் கொள்ளலாம்.

  👉 குளிப்பு கடமையானவர் ஸஹர் நேரம் குறைவாக இருப்பின் ஒளுசெய்துவிட்டு சஹர் செய்தபின் குளித்துக்கொள்ளலாம். நேரம் இருப்பின் குளித்துவிட்டு ஸஹர் செய்யவேண்டும்.

  👉 உடல் நலமில்லாவிட்டால் நோன்புடன் ஊசி போடலாம்.

  👉 சிறுவயது பிள்ளைகளை நோன்பு வைக்க, பழக்கப்படுத்த வேண்டும்.

  👉 பகலில் நோன்பிருக்கும் நினைவுடனேயே உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொண்டால் நோன்பு முறிந்து விடும்.

  👉  நோன்பு வைக்க முடிகிறது. ஆனால் தொழ முடியவில்லை என சிலர் நோன்பையும் விட்டுவிடுகின்றனர். நோன்பு ஒரு தனி கடமையாகும். தொழுகை தனி கடமையாகும். ஒன்றை காரணம் காட்டி ஒன்று விடுவது பெரும் குற்றமாகும். கண்டிப்பாக தொழ வேண்டும்.

 👉 ரமலான் மாதம் முழுவதும் நோன்புடைய காலமாகும். எனவே ஒருவர் ஸஹர் செய்து நிய்யத் வைக்காமல் தூங்கிவிட்டு காலையில் எழுந்து  நிய்யத் வைக்க மறந்து விட்டோமே என்று எண்ணம் வேண்டியதில்லை. நோன்பை தொடர்ந்து கொள்ளலாம்.

👉 தக்க காரணமின்றி வேண்டுமென்றே நோன்பை ஒருவர் முறித்தால் அது பெரும் பாவமாகும். அந்த நோன்புக்குப் பகரமாக 60 நோன்பு தொடர்ச்சியாக வைக்க வேண்டும். 60-ல் ஒரு நோன்பு இடையில் தவறினாலும், மீண்டும் 60 நோன்பு வைக்கவேண்டும் என குர்ஆனில் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே நோன்பு விஷயத்தில் அதிக அக்கறையோடு நடந்து கொள்ள வேண்டும்.

                 🌼🌻🌼🌻🌼🌻

  நாமும் தெரிந்து கொள்வோம்.       மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.

          ஜாஸ்ஸாகள்ளாஹ்

    Ămmű (s)....🍁

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro