☆☆☆
#ரமலான் -பிறை10. முஃமீன்களின் தாயார் (உம்முல் முஃமினீன்) , அன்னை கதீஜா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் 1430ஆவது வஃபாத் உரூஸ் தினம்.
#அன்னை கதீஜா (ரலியல்லாஹூ அன்ஹா) நூலிருந்து தொகுத்தவை...!
1.அன்னையவர்கள் கண்மணி நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களால் உலகத்துப் பெண்களில் சிறந்தவர் என்று சொல்லப்பட்ட பெண்மணி.
2 இவர்களுடைய சகோதரி பெயர் ஹாலா (هالة)
3 நபியவர்கள் ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்களை மண முடிப்பதற்கு முன்னர் இவர்கள் மரணித்து விட்டார்கள்.
4 நபியவர்கள் வீட்டில் இறைச்சி சமைத்தால் நபிகளாரின் அன்னையவர்களின் தோழிகளுக்கு அன்பளிப்பாக வழங்கும் படி கூறுவார்கள்.
5 நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்தப் பெண்மணிக்கு சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று வழங்கப்படும் என்று கூறினார்கள்.
6. ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இந்தப் பெண்மணிக்கு அல்லாஹ் ஸலாம் சொன்னதாக நபி(ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கூறினார்கள்.
7. நபியவர்கள் ஹிரா மலையில் இருக்கும் போது உணவு முடிந்து விட்டால் இந்தப் பெண்மணியிடம் வந்து உணவு பெற்றுச் செல்வார்கள்..
8.நபியவர்களுக்கு முதன் முதலில் வஹி இறங்கும் போது ஆறுதல் கூறி அரவணைத்தவர்கள்.
9.கண்மணி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராவில் தங்கி இருக்கும் போது உணவு சுமந்து கொண்டு போய் கொடுத்தவர்கள்.
10. வரகா பின் நவ்ஃபலிடம் கூட்டிச் சென்று நபியவர்களின் முதல் வஹீ தொடர்பான விளக்கத்தை பெற உறுதுணையாக இருந்தவர்..
முஃமின்களின் அன்னை, நபியவர்களின் அன்புத் துணைவியார். ஹதீஜா பின்த் குவைலித் (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள்.
1 நூல்: புகாரி (3432)
2 நூல்: புகாரி (3821)
3 நூல்: புகாரி (3817)
4 நூல்: புகாரி (3816)
5 நூல்: புகாரி (3817)
6 நூல்: புகாரி (3820)
7 நூல்: புகாரி (4953)
8 நூல்: புகாரி (03)
9 நூல்: புகாரி (6982)
10.நூல்: புகாரி (3821)
ஜஸல்லாஹூஅன்ன முஹம்மதின் மாஹூவ அஹ்லுஹூ
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro