💚 இணை 4
"மாப்ள..... இந்த செல்வா பையன் நம்ம வீட்டுக்கு வேண்டாம் மாப்ள; நான் நெனச்சத விட அவன் ரொம்ப
திமிரு பிடிச்சவனா இருக்கான்! அவன் நமக்கு வேலை செய்யணும்னு நினைச்சு அவன வேலைக்கு சேத்தா, அவன ஒக்கார வச்சு நாம அவனுக்கு வேல செய்ய வேண்டியதாயிருக்கு. இத சொன்னா நீங்க நம்பக்கூட மாட்டீங்க; ஆனா இன்னிக்கு அந்த பயலுக்கு காலையில காஃபி நான் போட்டுத் தந்துருக்கேன் மாப்ள!" என்று சொன்ன தனசேகரிடம்,
"ஓ.... அப்டியாங்க மாமா?" என்று கேட்டார் சபாபதி.
"என்ன மாப்ள நான் எவ்ளோ பெரிய விஷயத்த உங்க கிட்ட சொல்லிட்டு இருக்கேன். நீங்க பாட்டுக்கு அப்டியான்னு ஒரு கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?" என்று கேட்ட தனசேகரிடம் ஏளனம் நிறைந்த குரலில்,
"என்னிக்காவது நீங்க பவிக்கு ஒரு ட்யூஷன் தேவைப்படுதுன்னோ, இல்ல பவியோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் எப்டி என்னன்னு விசாரிங்கன்னு சொல்லியோ, அவளோட வயசுக்கு அவ ரொம்ப அமைதியா இருக்கான்னோ.... இப்டி ஏதாவது ஒரு விஷயத்த எங்கிட்ட சொல்றதுக்காக எனக்கு கூப்ட்டுருக்கீங்களா மாமா?" என்று பதில் கேள்வி கேட்டார்.
"அது..... வந்துங்க மாப்ள!" என்று தயக்கமாக பேசிய தனசேகரிடம்,
"இட்ஸ் ஓகே மாமா! உங்க ரெண்டு பேருட்டயும், வித்யாட்டயும் நானும், பவியும் எதையுமே எக்ஸ்பெக்ட் பண்ணலங்க மாமா! வித்யா விட்டுட்டுப் போன ரெண்டு வயசு
பவிக்கு துணையா வந்து நீங்க இத்தன வருஷமா எங்க கூட வீட்ல இருக்குறதே பெரிய விஷயம்! செல்வா நம்மள மாதிரி ஒரு பேமிலி அட்மாஸ்பியர்ல வளர்ந்தவன் இல்ல; அவனுக்கு நம்ம வீட்ல இருக்குற சூழ்நிலைய அடாப்ட் பண்ணிக்க கொஞ்ச நாளாகும்; அதுவரைக்கும் அவனோட டிமாண்ட்ஸ் எல்லாம் நாம அட்ஜெஸ்ட் பண்ணிக்கணும் மாமா! ஸோ இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கு எல்லாம் என்னை நீங்க கூப்டாதீங்க!" என்று சொல்லி விட்டு வைத்து விட்டார் சபாபதி.
"என்ன நம்ம சொல்றத காதுலயே வாங்காம அவர் பாட்டுக்கு பேசிட்டு வச்சிட்டாரு!" என்று நினைத்த தனசேகர் ஒரு பெருமூச்சுடன் தனது அலைபேசியை பார்த்தபடி அவரது அறையில் யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
சூடான சாதத்தில் வெண்டைக்காய் புளிக்குழம்பை ஊற்றி, பொடி பொடி துண்டுகளாக சீவி வறுத்த உருளைக்கிழங்கு சிப்ஸை ஒரு தட்டில் வைத்து அவள் புறம் நகர்த்திய செல்வா சாம்பவியிடம்,
"பால் குடிக்குறியாம்மே..... வளர்ற புள்ள நல்லா வலுவா இருக்கணும்ல..... அதுக்கோசரந்தான் கேக்குறேன்! நீ நல்லா வவுறு நிறய துன்றதுக்கு தான் எனக்கு ஓநைனா மாசத்துக்குப் பத்தாயிர ரூவா தருது!" என்று சொன்னவனை நிமிர்ந்து முறைத்தவள்,
"டேய்.... என்னடா தருது! வருது! போகுதுன்னு எப்போ பார்த்தாலும் எங்க டாடிய நீ மரியாத இல்லாம பேசிட்டு இருக்க! யார் கிட்ட என்ன பேசணும், எப்டி பேசணும்னு உனக்கு யாரும் சொல்லித்தரலயா?" என்று கேட்டு அவளுடைய தட்டில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
"எவன் இருக்கான் நமக்கு நல்லது கெட்டத சொல்லி தர்றதுக்கு..... நம்ம கூட ப்ரெண்ட்ஷிப்பு வக்கிற கிராக்கியெல்லாம் நம்மள விட பெரிய கேப்மாரி, பொறம்போக்காவுல்ல இருக்கு! அத்த வுடுமே...... சாப்பாடு புட்ச்ருக்கீதா? நாஸ்துவுக்கு என்ன பண்ணி வக்கட்டும்?" என்று கேட்டவனிடம்,
"சிம்பிளா, உனக்கு ஈஸியா இருக்குற ஏதாவது டிஷ் பண்ணிக் குடு! உங்கிட்ட கொஞ்சம் நான் பெர்ஸனலா பேசலாமா?" என்று தயங்கிய படி ஒரு பதில் கேள்வி கேட்டாள் சாம்பவி.
இன்று காலையில் தன்னுடைய தாத்தாவையே வேலை வாங்கி அவரது கையால் பானம் வாங்கிக் குடித்தவன், இங்கு வந்த நாளில் இருந்து கொஞ்சம் அசட்டையாக உபசரித்தாலும் மூன்று வேலைகளும் தவறாமல் அவளுக்கு உணவிடுகிறான். இப்போது கேட்டானே பால் குடிக்கிறாயா? சாப்பாடு பிடித்திருக்கிறதா என்று
அவ்வப்போது கேட்க வேறு செய்கிறான். தந்தையிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் செய்கிறான் என்றாலும் அவளுடைய அமம்ம்மாவைப் போல் வாரத்தில் நான்கைந்து நாட்கள் ஆன்லைன்ல சாப்ட எதையாவது ஆர்டர் பண்ணிக்கோடா பவிம்மா என்று சொல்லாமல் அவனுடைய நளபாகத்தால் மந்தித்துப் போன தன் சுவை அரும்புகளை கொஞ்சம் இயல்பு நிலைக்கு மீட்டெடுத்து வருகிறான். அதனாலேயே அவனைப் பிடிக்காவிட்டாலும், கொஞ்சம் அவனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது சாம்பவிக்கு.
"அட இன்னாத்துக்குமே இவ்ளோ யோசிச்சுக்கினு......? நமக்கு ஒண்டி ஒங்க நைனா குடுத்துட்டுப் போன வார்டனம்மாவாச்சே நீ? என்னாண்ட இன்னா மேட்டரு கேக்கணுமோ அத்த ஸ்ட்ரைட்டா கேளு!" என்று அவளது விண்ணப்பத்திற்கு தலையை ஆட்டினான் செல்வா.
"லைஃப்ல உன்னோட ஆம்பிஷன் என்ன?" என்று கேட்டவளை நாக்கை மடக்கி முறைத்தவன்,
"இத்த கேக்குறதுக்கோசரந்தான் பர்சனலு அது இதுன்னு ஜபரு காட்டிக்கினியாக்கும்? நான் இன்னாவோ ஏதோ கேக்கப்போறியாக்கும்னு மெர்சலாயிட்டேன். ஆமா ஆம்பிஷன்னா இன்னாமே?" என்று கேட்டவனின் உச்ச கட்ட ஆச்சரியத்தில்,
"சீரியஸ்லி ஐ காண்ட் பிலீவ் திஸ் மிஸ்டர் டாம் பாய்! ஆம்பிஷன்னா என்னன்னு கூட உனக்குத் தெரியாதா? ப்யூச்சர்ல நீ என்ன ஆகப்போறன்னு இப்பவே ப்ளான் பண்ணி அதுக்கேத்த மாதிரி உன்ன நீ ரெடி பண்ணிக்கணும். உன் அகாடமிக் பெர்ஃபாமென்ஸூம் ரொம்ப வீக்கா இருக்கும் போலிருக்கே? உன் டே ட்டூ டே லைஃப மேனேஜ் பண்றதுக்கு என்ன பண்ணப் போற?" என்று கேட்டவளை கண் இமைக்காமல் முழுதாக இரண்டு நிமிடங்கள் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செல்வா.
"ஏய்.... கேள்வி கேட்டா பதில் சொல்லாம என்னையே பார்த்துட்டு இருக்க! உன் ஃப்யூச்சர் ப்ளான் என்ன?" என்று மறுபடி அவனிடம் கேட்டாள் சாம்பவி.
"இன்னாத்துக்குமே இத்தயெல்லாம் நீ கேட்டுக்கினு இருக்க? நான் எப்டிப் போனா உனக்கின்னா?" என்று அவளிம் செல்வா கேட்க சாம்பவி தயக்கக்குரலில்,
"இல்ல..... உனக்கும் என்னோட ஏஜ் தான்னு டாடி சொன்னாங்க. ஸ்கூலுக்குப் போயி அத்தன சப்ஜெக்ட்ஸ்லயும் A+ வாங்குற எனக்கே சில நேரத்துல என்னோட ப்யூச்சர நினைச்சு பயமா இருக்கு! நீ ஒரு ஃபார்ம்லயே இல்லாம ரவுடியா இருந்து, லாக்கப்புக்கு எல்லாம் வேற போயிட்டு வந்துருக்க...... உனக்கு உன் ஃப்யூச்சர நினைச்சு நிஜமாவே பயமாயில்லயா?" என்று செல்வாவிடம் கேட்டாள்.
"தோடா...... அப்ப ஒனக்கு நம்ம மேல அக்கறயெல்லாம் இல்ல! இந்த பேமானி இப்டி தண்ணி தொளிச்சு விட்டாக்காண்டியும் திரியுதே..... இதெல்லாம் எங்க உருப்படப்போவுதுன்ற சந்தேகந்தான் ஒனக்கு! ஒண்ணியும் கவலப்படாதமே; ஒன்னைய ஒழுங்கா பார்த்துக்கினு ஒரு வருஷத்த ஓட்டிட்டாலே நம்ம லைஃப் செட்டில்டு தான்! ஒநைனா ரெண்டு வருஷ கட்சில எனக்கு லம்ப்பா ஒரு அமௌண்ட் குடுக்குறேன்னு ஒத்துக்கினுருக்காரு. அத்த வாங்கினு போயி ஒரு செகண்ட்ஹாண்ட் காரு வாங்கினு செட்டில் ஆகிடுவேன் நானு! நீ காலேஜ், இல்ல வேலைக்குப் போனுமுன்னா கூட சொல்லு! ஒன்னையும் நம்ம டாக்ஸிலே இட்டுக்கினு போய் உடுறேன். ஆனா அதுக்கு நீ கரீட்டா டப்பு வெட்டிடணும் தெர்தா?" என்று கேட்டவனிடம்,
"ஓ..... மன்த்லி பே தவிர பைனல் செட்டில்மெண்ட்டும் இருக்கா உனக்கு? தட்ஸ் குட்! கொஞ்ச நாளைக்கு இங்க தங்கப்போற; வாட் நெக்ஸ்ட்னு உங்கிட்ட கேக்கணும்னு தோணுச்சு; கேட்டேன். தப்பா எடுத்துக்காத!" என்று சொன்னாள் சாம்பவி.
"ச்சே.....ச்சே! நம்மள எல்லாம் ஒரு ஆளுன்னு ரெஸ்பெக்டு குடுத்து, அடுத்து என்ன செய்யப்போறன்னு கேட்ட பாத்தியா? இப்டியெல்லாம் யாருமே என்னையப் பாத்து கேட்டதில்லமே! ஒன்நைனா கூட இந்த கேள்விய எங்கிட்ட கேக்கல. சோக்கா கேட்டமே ஒரு கேள்வி. ரொம்ப டேங்க்ஸ்!" என்று சொல்லி புன்னகைத்தவனிடம்,
"உனக்கும் ரொம்ப தேங்க்ஸ்....! நீ குடுக்குற சாப்பாடு ஹோட்டல் சாப்பாட விட டேஸ்டா இருக்கு! பட் ரோட்சைட் ஷாப்ல சாப்ட மாதிரி இருக்கு! இன்னும் கொஞ்சம் ஹைஜின் லெவல இம்ப்ரூவ் பண்ணிக்கோ! நிறைய பொடி எல்லாம் போட்டு காரமா சமைக்காத!" என்று சொன்னவளிடம் தலையை ஆட்டிய செல்வா,
"நான் ஒன்னாண்ட ஒரு பெருசனல் கேள்வி கேக்கட்டுமா?" என்று கேட்டான்.
"ம்ம்! கேளேன்; இப்டி வீட்ல டைனிங் ஏரியாவுல உக்காந்து, இப்டி ரிலாக்ஸ்டா பேசிட்டு இருக்குறது எனக்கு இதுதான் பர்ஸ்ட் டைம்! இஃப் யூ டோண்ட் மைண்ட், கேன் ஐ ஹாவ் அ கப் ஆஃப் ஹாட் சாக்லெட்?" என்று அவனிடம் கேட்டாள் சாம்பவி.
"நீ பேசுறது மதராசப்பட்டினம் படத்துல நம்ம எமிப்புள்ள பேசுறமாரி இருக்கு வார்டனம்மா! ஆனா புரியல!" என்று அவளிடம் உதடுபிதுக்கினான் செல்வா.
"இங்க வா!" என்று அவனை சமையலறைக்குள் அழைத்து சென்றவள் அவர்கள் இருவருமாக சாப்பிட்ட தட்டை கழுவப் போனாள்.
"ஐய.....இன்னாமே வேல பாக்குற நீ? என்னாண்ட குடு அத!" என்று பதறிய படி அவளது கையைப் பற்றிக் கொண்டவனை பார்த்துப் புன்னகைத்து,
"இட்ஸ் ஓகே! நான் செய்றேன் விடு!" என்று சொல்லி அவன் கையை தன் கையிலிருந்து எடுத்து விட்டு தட்டு, சட்டி, டம்ளர் இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து தேய்க்க ஆரம்பித்தாள் சாம்பவி.
அவள் தேய்த்துக் கொடுத்த பாத்திரங்களை கழுவி கவிழ்த்து வைத்தவன்,
"நா ஒன்னிய ரொம்ப திமிரு பிடிச்சவன்னு நென்சேன் கண்ணு! போறதுக்கு வேற இடம் இல்லாத கேஸான்னு நீ என்னாண்ட கேக்கசொல நீ என்ன பெரிய துபாய் இளவரசியாடீன்னு ஒன்னாண்ட கேக்கணும்னு தோணுச்சு! ஒன்னைய தப்பா நினைச்சதுக்கோசரம் ஸாரி!" என்று சொன்னவனிடம்,
"நான் உங்கிட்ட அப்டி பேசுனதும் தப்புதான? ஸோ நீ ஸாரியெல்லாம் கேக்க வேண்டாம். ஆக்சுவலி நீ இப்போ இங்க வந்தது எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா தான் இருக்கு! ஸோ நாம ஒருத்தருக்கொருத்தர் மியூச்சலா ஹெல்ப் பண்ணிக்கலாம். ஓகே!" என்று கேட்டு இரண்டு டம்ளர் பாலை எடுத்து சட்டியில் ஊற்றினாள்.
"ஹாட் சாக்லெட் எப்டி செய்யணும்னு உனக்கு சொல்லித்தர்றேன் சரியா?" என்று கேட்டவள் கோகோ பவுடர், சிறிது வெனிலா எஸென்ஸ், சர்க்கரை எல்லாவற்றையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் அவற்றை கிளறி விட்டு இரண்டு க்ளாஸில் ஊற்றினாள்.
இரண்டு சாக்லெட் வேஃபர் ரோலை அந்த ஹாட் சாக்லெட் பாலுக்குள் மிதக்க விட்டவள் கொஞ்சம் சாக்லேட் சிரப்பை மேல் பரப்பில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.
"இந்த வேஃபர ஸ்ட்ராவா யூஸ் பண்ணிக்கலாம். குடிச்சுட்டு இருக்கும் போதே அதக் கடிச்சி சாப்ட்டுரு. டேஸ்டா இருக்கும்! சியர்ஸ்!" என்று சொன்னவள் அவனுடைய கண்ணாடி டம்ளரில் லேசாக தட்டிய படி தன்னுடைய பானத்தை அருந்த ஆரம்பித்தாள்.
நீயும் நல்லா சாப்ட்டு, எம் பொண்ணுக்கும் நல்லா சாப்பாடு குடுன்னு சொல்ல வந்தேன் என்ற சபாபதியின் வார்த்தைகளுக்கான முழு அர்த்தம் இப்போது தான் செல்வாவிற்கு நன்றாக புரிந்தது.
இந்த பெண்ணுக்கு சாப்பாட்டுக்கெல்லாம் பஞ்சம் நேரவில்லை. அவளுடன் கூட சேர்ந்து சாப்பிடும் ஆளுக்கு தான் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என்று உணர்ந்தவன் தனது கோப்பையிலிருந்த ஹாட் சாக்லெட்டை பிஸ்கெட் ஸ்ட்ராவால் உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தான்.
"ஏய்.... என்னமோ எங்கிட்ட கேக்கணும்னு சொன்னியே..... நான் மறந்தே போய்ட்டேன் பாரு! இப்ப கேளு! பேசலாம்!" என்று சொன்ன சாம்பவியிடம்,
"அதெல்லாம் ஒன்னியும் இப்ப கேக்க வேணாம் சின்ன மோடம்! சீக்கிரமா உன் ரூமுக்கு ஓடு..... மணியாச்சு! அப்றம் காலையில படிக்கறதுக்கு எழுந்திரிக்க கஷ்டமாயிருக்கும். நாம இனிமே டெய்லி ராவுல நிறைய பேசலாம்..... இப்ப தூங்கப் போ!" என்றவனிடம் புன்னகைத்த படி கையசைத்து விட்டு சென்றாள் சாம்பவி.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro