Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 32

அன்று தீபக் தன்னுடைய தங்கைக்கு ஒரு நல்ல திருமணப் பரிசு தருவதற்காக "Little Foots" பெட்ஷாப்புக்கு அவளை அழைத்து வந்திருந்தான்.

"டேய் தீபக்..... இந்த ஷாப்ல டாக்ஸ், கேட்ஸ், ராபிட்ஸ், லவ் பேர்ட்ஸ், ஃபின்ஜஸ், பேரட்ஸ்ல காக்டெய்ல், மக்காவ், ஹாம்ஸ்டர் இப்டி எல்லா வெரைட்டியும் கிடைக்கும் தெரியுமா? கீழ ஷாப், மேல வெட் க்ளினிக்னு ஒரே இடத்துல நம்ம பெட்ஸ வாங்கிக்கவும் செய்யலாம்! அதுங்களுக்கு வாக்ஷினேஷன், ஹெல்த் இஷ்யூஸ் இதையும் சரி பண்ணிக்கலாம்...... வசந்த் கிட்ட எனக்கு ஒரு பப்பி வாங்கிக்குடுன்னு கேட்டேன்டா; ஆனா அவன் நான் ஆசையா கேட்டத கண்டுக்க கூட மாட்டேங்குறான்டா! நீ எனக்கு ஒரு பொமரேனியன் பப்பி வாங்கிக்குடு! அப்போ தான் அண்ணி வயித்துக்குள்ள இருக்குற உன்னோட பேபி வெளிய வந்ததும் அதப்பாக்க நான் ப்ரான்ஸூக்கு வருவேன். இல்லன்னா அங்க வர மாட்டேன் பாத்துக்க!" என்று சொன்ன தன் தங்கையின் தலையில் குட்டிய தீபக் அவளிடம்,

"ஏய் வாயாடி! பப்பி வேணும்னா அண்ணா எனக்கு பப்பி வேணும்னு கேட்டு அதோட நிப்பாட்டுறி! அதென்ன உனக்கு பெட் வாங்கித்தந்தா தான் என் பேபிய பாக்க வருவேன்னு ப்ளாக்மெயில் பண்றது? நீ ஒண்ணும் என் ப்ளேஸ்க்கு வரவே வேண்டாம்! நான் உனக்கு இங்க எதுவும் வாங்கித்தர மாட்டேன்; வா போலாம்!" என்று உறுதியாக சொல்லி தன் தங்கையை கையைப்பிடித்து அழைத்துச் சென்ற தீபக்கின் கை யாராலோ பின்புறமிருந்து இழுத்து நிறுத்தப்பட்டது.

"தீபக் ப்ரோ..... என்ன நம்ம கடைக்கு வந்துட்டு நம்ம செல்லங்கள்ல ஒருத்தரக் கூட வாங்காம போறீங்க? பாலிவுட் ஆக்டர் மாதிரி மொளுமொளுன்னு இருக்கீங்களே ப்ரோ...... எத்தன வருஷம் ஆச்சு உங்கள பாத்து? எப்டி இருக்கீங்க? என்ன பண்றீங்க?" என்று புன்சிரிப்புடன் வினவியவனை தீபக்கும், திவ்யாவும் ஒருநிமிடம் யோசிப்புடன் பார்த்துவிட்டு சட்டென முகம் மலர்ந்தனர்.

"நீ செல்வா தான......?" என்று சற்றே சந்தேகமாக கேட்ட தீபக்கிடம்,

"உனக்கு என்ன கண்ணு தெரியலயா? இது அவரே தான்டா அண்ணா...... சாம் அக்காவோட கஸின்; நீங்க தானன்னா அவரு? அ.......ப்பா! என்ன ஒரு சேன்ஜ்ஓவர் உங்க கிட்ட? இது உங்க ஷாப்பா அண்ணா? எனக்கு ஒரு பொமரேனியன் பப்பி வேணும். தர்றீங்களா?" என்று கேட்ட திவ்யா
சிறுபெண்ணாக தன் பிறந்தநாள் கேக் உடைந்து விட்டது என்று அழுதது நினைவிற்கு வந்தது செல்வாவுக்கு. இப்போது எவ்வளவு வளர்ந்து ஆளே மாறி விட்டாள்! இதே மாதிரி தான் என் மைமாவும் ஆளே மாறியிருப்பாளோ என்று எண்ணம் யாவும் அவன் மனதிற்குள்ளாக இருக்கும் கன்னியிடம் செல்ல திவ்யாவை பார்த்துக் கொண்டிருந்தான் வாகை செல்வன்.

தீபக்குடன் பேசிக் கொண்டிருந்த செல்வாவை திவ்யாவும் அளவெடுப்பது போலத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது வருங்கால கணவன் வசந்த் மட்டும் இந்தக் காட்சியைப் பார்த்திருந்தால் பொறாமையில் பொசுங்கி செத்திருப்பான். நல்லவேளையாக அவன் இப்போது திவ்யாவுடன் வரவில்லை.

செல்வா வெள்ளை நிற காலர் நெக் டீஷர்ட்டும், அதற்குமேல் கறுப்பு, வெள்ளையில் காட்டன் ஸ்லிம் ஃபிட் மென்ஸ் ஷர்ட்டும் அணிந்திருந்தான். கறுப்பு நிற ஃபேடட் ஜீன்ஸூம், ப்ளாக் அண்ட் வொய்ட் காம்பினேஷனிலேயே லைட் வெயிட்டட் ஸ்போர்ட் ஷூவும் அணிந்திருந்தான். இவன் தினமும் ட்ரிம்மர் போடும் பழக்கமுடையவன் போலும்..... தாடையில் குட்டியான உரோமங்கள் ஒரு ஒழுங்கான முறையில் கன்னமெங்கும் வளர்ந்திருந்தது. தீபக்கை விட இரண்டு, மூன்று கலர் ஷேடுகள் கம்மியாக இருந்தாலும், ஆறரடி ஒரு அங்குலத்தில் ஏழுபத்தைந்து கிலோ எடையில் அவ்வளவு கவர்ச்சிகரமாக கண்களிலும், உதடுகளிலும் கவர்ந்திழுக்கும் காந்தப் புன்னகையுடன் நின்றான்.

"ஐயயோ தீபக்..... அந்த வசந்துக்கு ஓகே சொல்லி நான் அவசரப்பட்டு தப்பு பண்ணிட்டேனேடா! நம்ம கஸின் அண்ணா பாரு; எவ்ளோ ஹாண்ட்சம்மா இருக்காரு; நம்ம பப்பி எல்லாம் வாங்க வேண்டாம்! பேசாம இவர வாங்கிட்டுப் போயிடுவமா?" என்று கேட்ட தங்கையிடம், "அடச்சீ! மெண்டல் வாய மூடு!" என்று தங்கையை திட்டிவிட்டு செல்வாவிடம் பேசிக் கொண்டிருந்தான் தீபக்.

"விடுங்கண்ணா! நம்ம பாப்பா தான? சும்மா கிண்டலுக்கு ஏதோ பேசுறாங்க? எம்டி முடிக்கப்போறீங்க... அதுவும் ப்ரான்ஸ்ல; ஆட்லின்னு ஒரு அக்காவ லவ் பண்ணி, கல்யாணம் பண்ணி அங்கயே செட்டில் ஆகுறதா முடிவும் பண்ணிட்டீங்க; நாடு விட்டு நாடு லவ் பண்றது, கல்யாணம் பண்றதெல்லாம் சரிதான்னா! ஆனா அங்கயே செட்டில் ஆகுறதும் கரெக்ட் தானா? இன்னிக்கு இந்த உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் அங்க ஒரு தமிழனப் பார்க்க முடியறது கொஞ்சம் பெருமையான விஷயமா இருந்தாலும், நாம நம்ம நாட்டுக்காக வேல செய்யலங்குறது கொஞ்சம் வருத்தமான விஷயந்தான் இல்லையா?" என்று தீபக்கிடம் கேட்டான் செல்வா.

"ம்ப்ச்! என்னைப் பொறுத்தவரையில இது தப்பா தெரியல செல்வா!" என்று தோள்குலுக்கிய தீபக்,

"பாரேன்.... என்னைப் பத்தியே பேசிட்டு உன்னைப் பத்தி கேக்காம விட்டுட்டனே? நாம கடைசியா மீட் பண்ணி ஒரு எட்டு வருஷம் இருக்குமா? என்னடா சொல்லாம கொள்ளாம திடீர்னு காணாமப் போயிட்ட? ஸ்கூலுக்கு அப்புறம் எனக்கு சாம் கூடயும் அவ்வளவா டச் இல்ல; நான் கிட்டத்தட்ட உன்னை மறந்தே போயிட்டேன்; ஆனா நீ என்னைப் பார்த்ததுமே எங்கிட்ட வந்து பேசுனது; என் பெயரக் கூட மறக்காம வச்சிருந்தது இதெல்லாம் சூப்பர்டா! இன்னும் ரெண்டு நாள்ல இந்த லூசுக்கு மேரேஜ் செல்வா! நான் இவளோட மேரேஜ்ல அட்டெண்ட் பண்றதுக்கு தான் ஒன் வீக் லீவ்ல வந்தேன்! வந்த இடத்துல உன்னை மீட் பண்ணினதுல ரொம்ப ஹாப்பி! இப்ப சொல்லு..... நீ என்ன பண்ற?" என்று கேட்ட தீபக்கிடம்,

"இந்த ஷாப் நம்ம ஷாப் தான் தீபக் அண்ணா! இத நாந்தான் ரன் பண்ணிட்டு இருக்கேன். இங்க பெட்ஸ் சேல்ஸ் கம் பெட் கேர் க்ளினிக்கும் வச்சுருக்கோம். இத ஆரம்பிச்சு நாலு வருஷம் ஆச்சு! அதுக்கு முன்னால என் ப்ரெண்ட்ஸோட சேர்ந்து ஒரு ரெஸ்டாரென்ட்ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன். இப்ப அத அவங்க பொறுப்புல விட்டுட்டு இத என்னோட ஃபுல்டைம் பிஸினஸ் ஆக்கிட்டேன். அப்பப்ப நம்ம பெட்ஸோட ஷோஸ்க்கும் போயிட்டு வருவேன். பிஸினஸ் நல்லா போயிட்டு இருக்குண்ணா. நல்லா இருக்கேன்!" என்று சிறு புன்னகையுடன் சொன்னான் செல்வா.

"அப்ப சாம் என்னடா ஆனா? ட்டூ யூ ஸ்டில் லவ் ஹெர்?" என்று கேட்ட தீபக்கிடம்,

"என்னங்கண்ணா இப்டி கேட்டீங்க? ஐ வில் லவ் ஹெர் ட்டில் மை லாஸ்ட் ப்ரெத்..... பட் மேடம நான் ரொம்ப வருஷமா பாக்கல..... நீயும், உன் ப்ரெண்ட்ஸூம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு தான் என்னை வந்து பாக்கணும்னு சொல்லியிருந்தாங்கண்ணா! அவ எப்ப என்னைக் கூப்டுவான்னு ஒவ்வொரு நாளும் ஏங்கிக் காத்துட்டு கெடக்கேன்!" என்று சொன்னவனிடம்,

"யாஹூ! செல்வா அண்ணா நீ சாம் அக்காவ தான் கல்யாணம் பண்ணிக்கப் போறன்னா சீக்கிரமே அவங்கள கல்யாணம் பண்ணிக்கோ! மை ஹார்ட்டி கங்க்ராஜுலேஷன்ஸ்!" என்று அவனுக்கு வாழ்த்து தெரிவித்தாள் திவ்யா.

"பாத்தியா? இது லூசுன்னு நான் சொன்னேனா இல்லயா? கொஞ்சநேரம் முன்னால உன்னைய தூக்கிட்டுப் போயிருவோம்னு கேட்டா; இப்ப உன் கல்யாணத்துக்கு விஷ் பண்றா பாரு! பை த வே, சாம் என்ன பண்றா?" என்று கேட்டான் தீபக்.

"பவி பிடிஎஸ் கோர்ஸ் முடிச்சிருக்காண்ணா; எம்பாப்பா ஒரு பல் டாக்டர்!" என்று சொன்ன செல்வாவிடம் சாம்பவி இன்னும் அதே வீட்டில் தான் இருக்கிறாளா என்று கேட்டான் தீபக்.

"ஆமாண்ணா; நீங்களும், திவ்யாவும் ஒருதபா வந்தீங்களே அதே வீடு தான்..... ஏன்ணா கேக்குறீங்க? திவ்யா கல்யாணத்துக்கு அவள கூப்டப் போறீங்களா? அவள கண்டிப்பா கூப்டுங்கண்ணா! அப்டியே நானும் கல்யாணத்துக்கு வந்துனு அவள ஒருக்கா பார்த்துட்டு போவேன்!" என்று தீபக்கிடம் பாவமாக கேட்டவனை கையசைத்து தன் அருகினில் அழைத்த திவ்யா செல்வாவிடம்,

"நீங்களே போய் சாம் அக்காவ பாக்க வேண்டியதுதான செல்வாண்ணா? எதுக்கு தீபக்ட்ட போய் இவ்ளோ கெஞ்சுறீங்க?" என்று சந்தேகமாக கேட்டாள்.

"அது வந்துடா கல்யாணப் பொண்ணு; உங்க அக்கா நான் டெவலப் ஆகுறது மட்டுமில்லாம, என் ப்ரெண்ட்ஸ் நாலு பேரையும் சேத்து டெவலப் பண்ணி விடணும்னு சொன்னா! சொன்னாளா; ரெண்டு பேருக்கு கார் க்ளீனிங் சர்வீஸ், ரெண்டு பேருக்கு ரெஸ்டாரென்ட்னு வச்சுக் குடுத்து அதுல வர்ற துட்டுல எம்பது பர்சென்டேஜ் பணத்த நாலு பேருக்கும் ஈக்வல் ஷேரா மாசா மாசம் முடியும் போது சம்பளமா குடுப்போம்னுலாம் பேசி வச்சி இத்தன வருஷமா அதுவும் நல்லபடியா தான் போயிட்டு இருக்கு. ஆனா அது மட்டும் போதுமா......? உங்க சாம் அக்கா பெரிய படிப்ஸ் ஆச்சே..... அவ முன்னால போயி நின்னவுடனே எல்லாரையும் பாத்து என்ன படிச்சிருக்கீங்கன்னு தான கேப்பா? என் ப்ரெண்ட்ஸ்ல ரெண்டு டூமாங்கோலிங்க இன்னும் அவனுங்களோட ஆட்டோமொபைல் டிப்ளமாவுல ரெண்டு அரியரும், நாலு அரியரும் வச்சுருக்குதுங்க! அத எப்ப அந்த நாதாரிங்க க்ளியர் பண்ணி, நான் எப்பப்போயி உங்கக்காவ பாத்து அதுக்குள்ள நமக்கு இன்னும் ரெண்டு வயசு போயிடும் போ!" என்று சலித்துக் கொண்டான் செல்வா.

"ப்ரெண்ட்ஸ் அரியர் வச்சுருக்காங்கன்னு நீங்க உங்க லவ்வ சொல்லப் போகலையா? இது கொஞ்சம் புதுசா இருக்குண்ணா!
உங்களோட ப்ரெண்ட்ஸ் சீக்கிரத்துல அரியர்ஸ க்ளியர் பண்ணி, நீங்க சாம் அக்காவோட பேசப் போறதுக்கு என்னோட அட்வான்ஸ் விஷ்ஷஸ்; என் மேரேஜ் இன்விடேஷன் இப்போ நான் கொண்டு வரல, பட் என் கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும். ஆல் த பெஸ்ட் அண்ணா!" என்று சொன்ன திவ்யாவிடம் முகம் மலர்ந்து புன்னகைத்தவன் அவளது திருமணம் எந்த மண்டபத்தில், முஹூர்த்தம் எத்தனை மணிக்கு என்ற விபரங்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

"நீங்க ரெண்டு நிமிஷம் உட்கார்ந்துருங்க தீபக் அண்ணா!" என்று தீபக்கிடம் சொன்னவன், திவ்யாவை கூட்டிச் சென்று அவளுக்குப் பிடித்த ஒரு நாய்க்குட்டியை அவளது திருமணப்பரிசாக அவளுக்கு வழங்கினான். அதன் இயல்பு, உணவுப் பழக்க வழக்கம், பராமரிப்பு இவைகளைப் பற்றி திவ்யாவிற்கு சற்று எளிய முறையில் விளக்கியவன், திவ்யாவும் தீபக்கும் கிளம்பும் போது ஒருமுறை பவியை திருமணத்திற்கு கூப்பிட்டு விடுங்கள் என்று அவர்களுக்கு
நியாபகப்படுத்தினான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திவ்யாவின் திருமணத்தில் பவியை பார்க்கப் போகிறோம் என்ற குதூகலத்தில் தரையில் கால்படாமல் உலவிக் கொண்டிருந்தான்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro