Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 31

"போனதபா இங்க வந்தசொல நீ எம்மாஞ்ஜாலியா இருந்துனு வந்த? இப்ப ஏம்பாப்பா மூஞ்சிய தூக்கி வச்சுனு ஒக்காந்துனு இருக்குற? ஏதாச்சு பேசு பாப்பா!" என்று பதினோராவது தடவையாக சாம்பவியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான் செல்வா.

இங்கிருந்து கிளம்புவதற்குள் தனக்கு தொண்டை அடைத்து அழுகை வந்துவிடக் கூடாது என்று நினைத்த சாம்பவி அவனிடம் எரிச்சல் நிறைந்த குரலில்

"ம்ப்ச்! பேசு, பேசுன்னா என்ன பேசுறது உங்கிட்ட? பேசுறதுக்கு எல்லாம் ஒண்ணுமில்ல. வா போலாம்!" என்று சொல்லி விட்டு எழ முயற்சி செய்ய அவளது கையைப்பற்றி அவளை எழ விடாமல் தடுத்து நிறுத்தினான் வாகை செல்வன்.

"எங்கிட்ட பேசுறதுக்கு உனக்கு ஒரு விஷயமுமே கெடக்கலையா பாப்பா? சொம்மானாச்சுக்கு நெறைய கண்டிஷன் பண்ணுவல்ல; அந்தமேரி ஏதாவது கூட சொல்லேன்! ஆறு வருஷம் கழிச்சுதா பார்த்துக்கப் போறோம்; தண்ணியடிக்கக் கூடாது; தம்மடிக்க கூடாது; துட்ட கண்டமேனிக்கு செலவு பண்ணக்கூடாது; வேற எந்த பொண்ணான்டயும் போயி வழியக்கூடாது! நான் சொன்னது அல்லாத்தையும் செஞ்சு முடிக்கலன்னா நீ என் மூஞ்சியில முழிக்கக்கூடாது! இப்டி எதுனாச்சு கூட சொல்லுமே!" என்று கேட்டவனின் கையை உதறியவள்,

"நான் எதுக்கு இதெல்லாம் ஒங்கிட்ட சொல்லணும்? நீதான் என்னை விட்டுட்டு போறல்ல?" என்று சொல்லிவிட்டு கழுத்தை நொடித்துக் கொண்டாள்.

"ஐய.... நீதான கண்ணு செல்வாவ ஒன்னாண்ட இருந்து அப்பால போயி நிக்கச் சொன்ன; இப்ப என்ன எனக்கு ஒன்னியும் வோணான்னுட்டு செல்வா உன்னோடவே இருந்துடட்டுமா?" என்று கேட்டவனிடம்,

"ம்ஹூம்! நீ கண்டிப்பா என்னை விட்டு விலகிப் போகணும். நிறைய அச்சீவ் பண்ணனும்; அப்பத்தான நீ அப்புறமா எங்கூடவே இருக்க......?" என்று கேட்டவள் பாதியிலேயே தன்னுடைய பேச்சை நிறுத்தி விட்டு அவன் முகத்தைப் பார்க்க அவளுடைய திருதிருவென விழித்த விழிகளே அவன் முகத்தில் சிரிப்பை கொண்டு வருவதற்கு போதுமான கருவியாக இருந்தன.

"செல்வா உனக்கு வோணுமா வோணாவான்னு எனக்குத் தெரியாது வார்டனம்மா; ஆனா வார்டனம்மா செல்வாவோட ஆயுசுக்கும் செல்வாக்கு கண்டிப்பா வோணும்! இப்ப கூட எனக்கு கண்ணக் கட்டி காட்டுல உட்டமேரி தான் பாப்பா இருக்கு! என்ன பண்ணப்போறோம், எங்கருந்து ஆரம்பிக்கப் போறோம் எதுவுமே பிரியல; ஆனா எம்பாப்பாவ எங்கூடவே வச்சுக்குறதுக்கோசரம்
நா அல்லாத்தையும் செய்யப்போறேன். அது மட்டும் எனக்கு சூரா பிரியுது. நீ நல்லா படிச்சு நீ ஆசப்பட்டமேரி டாக்டராவணும் பாப்பா! ரேணும்மாவையும், ரூல்ஸையும் நல்லா பார்த்துக்கணும். அப்பப்ப போயி அந்த பெரிசுங்க உயிரோடதா கெடக்குதுங்களான்னும் பாத்துக்கினு வா! ரேணும்மாவாண்ட கேட்டு பாட்டு, கீட்டு கத்துக்க! வண்டி எடுத்துட்டு அப்டியே ஒரு ரவுண்டு அடிச்சுனு வா! பஸ்ல நீயா தனியாப் போயினு வரப் பழகு! நாலு பேரோட கலகலப்பா இரு! நீ படிக்குற புத்தகத்த தாண்டி ஒரு வெளியுலகம் இருக்கு. அத கொஞ்சம் புரிஞ்சுக்க! நல்லா சாப்ட்டு இன்னுங்கொஞ்சம் ஒசரமாகி, இன்னுங்கொஞ்சம் பூசுனமேரியாகி எம்பாப்பா இன்னும் ரொம்ப அழகான பாப்பாவாகிடணும். சரியா?" என்று கேட்டவனிடம் சும்மா நேரமாக இருந்தால்,

"நீ எதுக்குடா எனக்கு க்ளாஸ் எடுக்குற? அட்வைஸ் எல்லாம் உனக்கு நான் சொல்லணும்; அத விட்டுட்டு எனக்கு நீ சொல்லக்கூடாது!" என்று கேட்டிருப்பாள். இப்போது அவனுடைய பேச்சுக்கு தலையை மட்டும் பெரிதாக ஆட்டி வைத்தாள்.

அவளது சின்ன விரல்களை மறுபடியும் பற்றிக் கொண்டவன், "பாப்பா..... வருசத்துல ஒரு நாள் ஒரு தீவாளி, பொங்கலு இல்ல ஒம்பொறந்தநாளுலயாச்சு ஒன்னிய நா பாக்க வரவாம்மே? ஒட்டுக்கா அம்புட்டு வருசம் ஒன்னிய பாக்காம நா எப்டி நாள ஓட்டப்போறேனோ எனக்குத் தெரியல கண்ணு!" என்று தளுதளுத்த குரலில் சொன்னவனிடம் கறாரான குரலில்,

"லிஸன் செல்வா! உன்னை இனிமே நானா நம்ம வீட்டுக்கு எப்பக் கூப்டுறேனோ அப்பத்தா நீ என்னைப் பார்க்க வரணும்! டாடிய, அவங்களயும் வேணும்னா எங்கயாவது வெளியில பாத்து பேசிக்க; பட் என்னை நீ எப்பவுமே பாக்க ட்ரை பண்ணக்கூடாது. உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்ல? அப்ப நீ வில்பவரோட நான் கேட்டத செஞ்சு முடிக்கணும்! இஸ் தட் க்ளியர்?" என்று கேட்டவளிடம் இப்போது அவன் தலையாட்டினான். அவளிடம் அதற்கு மேல் என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. அவளது அருகாமையை இழக்க மனதும் வரவில்லை. தன் கால்கள் இரண்டையும் கட்டிக்கொண்டு, தன் முட்டியின் மீது முகம் வைத்து அமர்ந்திருந்தான்.

"சியர்அப் டாம்பாய்..... நீ இப்டி பாவமா முகத்த வச்சுட்டு உட்கார்ந்துருக்குறது நல்லாவேயில்ல; இப்ப எங்கூட தான இருக்க..... ஸோ ஹாப்பியா இரேன். உனக்கு ஒரு சின்ன கிப்ட் வாங்கலாம்னு நினைச்சேன்;
பட் நான் குடுக்குற கிப்ட் உனக்கு க்ளோஸ் ட்டூ த ஹார்ட் ஐயிட்டமா இருக்கணும். ஸோ உனக்காக நானே ஒரு ஸாங் பாடி அத வீடியோ பண்ணி வச்சிருக்கேன். அதோட என்னோட ஃபேவரைட் ரைம்ஸையும் கூட பாடியிருக்கேன்.
நீ எப்பல்லாம் கொஞ்சம் டயர்டா ஃபீல் பண்றியோ அப்பல்லாம் இந்த ரெண்டு வீடியோவையும் பார்த்துக்கோ...... ஓகேவா?" என்று அவனிடம் கேட்ட படி தன்னுடைய மொபைலில் இருந்து இரண்டு வீடியோக்களை அவன் மொபைலுக்கு அனுப்பி வைத்தாள் சாம்பவி.

உன் கேள்விக்கு விடை நீயடா
மண்பானையாய் உடையாதடா
வாழ்கின்ற காலத்து வாழ்வாயடா
டோன்ட் ஒர்ரி பி ஹேப்பி

தோல்வி எலாம் தோல்வி இல்லை
வெற்றி என்றும் தூரம் இல்லை
அண்ணாந்து பார் ஆகாயம் நீ
புல் மீது பார் பூலோகம் நீ

உன் தேடல் உன்னோடு தான்
வேறு எங்கும் தேடாதடா
நீயாக நீ மாறுவாய்
உச்சத்தில் நீ ஏறுவாய்

என்ற பாடலை கேட்ட செல்வாவுக்கு தனக்கான தேடல் என்னவென்று ஓரளவிற்கு புரிந்தது போல் தெரிந்தது.

"பாப்பா..... வாழ்க்கையில என்னத்தயாவது உருப்படியா பண்ணிட்டு, அதுக்கப்பறம் தான் உன்னை வந்து பாப்பேன்!" என்று சொன்னவன் அவளுடைய பூனைக்குட்டி ரைம்ஸை அன்று நேரில் பார்த்து ரசித்தது போல இன்று அந்த வீடியோவில் பார்த்து ரசித்தான்.

"டைமாச்சு செல்வா! டாடி தேடுவாங்க; கிளம்பிப் போகலாமா?" என்று கேட்டவளிடம் ஒன்றும் சொல்லாமல் எழுந்து அவள் கூட சபாபதியின் கார் வரை நடந்து வந்தவன் காரில் ஏறாமல்
காரிலிருந்து இரண்டு அடி தூரத்தில் நின்று கொண்டான்.

"வா செல்வா! நீ எங்க போகணுமோ அந்த இடத்துல நாங்க உன்னை ட்ராப் பண்ணிட்டுப் போறோம்!" என்று சொன்னவளிடம் மறுப்பாக தலையசைத்தவன்,

"நீங்க முதல்ல கெளம்புங்க கண்ணு! செல்வா இங்கயே ஒன்க்கு டாட்டா சொல்லிக்குறேன்......! கண்டிப்பா சீக்கிரத்துல நாம கண்டுக்குவோம்!" என்று சொன்னான்.

சபாபதி தன்னுடைய ஸீட்டிலிருந்து இறங்கி வந்து அவனிடம்,

"ஆல் த பெஸ்ட் மிஸ்டர் வாகை செல்வன்...... யூ கேன் டூ வொண்டர்ஸ்! பணம் ஏதாவது வேணுமாடா ஒனக்கு?" என்று சொல்லி அவருடைய பர்ஸை எடுக்கப் போனவரை லேசாக சிவந்த தன் கண்களால் கொடூரமாக முறைத்தவன்,

"எல்லா வெனையும் ஒன்னியால வந்ததுதாயா! நா பாட்டுக்கு எஞ்சத்துக்கு ஒரு வேல, அதுல தம்த்தூண்டு சம்பளம், அதுக்கேத்த மாதிரி ஒரு வாழ்க்கன்னு சந்தோஷமா சுத்தினு இருந்தேன். என்னிக்கு ஒன்னியும், உள்ளார ஒக்காந்துனு இருக்காளே ஒருத்தி அவளையும் பாத்து தொலச்சனோ அன்னிக்குப் புடிச்சது எனக்கு ஏழரைநாட்டான் சனி! ஒனக்கின்னா இப்ப கைய குடுத்துன்னு நீ பாட்டுக்குப் போயினே இருப்ப! ஒடம்பு இத்து உழுவுறமேரி அக்கு அக்கா வலிக்குதே உள்ளுக்குள்ள...... அத்த நான் இன்னா பண்றது? ஆறுதல் சொல்றேன்னு மொக்கய போட்டுனு இருக்காம எதுவும் பேசாம அப்டியே கெளம்பி போயிரு! இல்ல இந்த பீச்சு மண்ண அள்ளி ஓவாய்க்குள்ள போட்டு ரொப்பிடுவேன் பாத்துக்க!" என்று சொன்ன செல்வாவிடம் அதிர்ச்சிக் குரலில்,

"என்னது நீயுமா?" என்று கேட்டார் சபாபதி.

"சபா..... கிளம்பலாம்! லேட்டாகிடுச்சு! நாளைக்கு காலையில ஸ்கூலுக்கும், ஆஃபிஸூக்கும் கெளம்பணும்ல?" என்று கேட்ட ரேணுகா செல்வாவின் புறம் திரும்பி,

"தேங்க்ஸ் தம்பி! போயிட்டு வர்றோம்!" என்று சொல்லி கையசைத்தார்.

"வாங்க யம்மா! பாப்பாவுக்கு இனிமேலாச்சு நிறைய நல்லது கெட்டத சொல்லிக் குடுத்து நல்லா வளருங்க!" என்று சொல்லி விட்டு  பெரிய காலடிகள் வைத்து அங்கிருந்து வேகவேகமாக கிளம்பிச் சென்றான் வாகை செல்வன்.

"இடியட்; ஒரு டாட்டா, பைபை கூட சொல்லாம போறோன் பாரு! இப்பவும் அவன் பின்னால ஓடிப்போயி எங்க போற செல்வான்னு கேட்டுட்டு வந்துடுவமா?" என்று மனதிற்குள் சாம்பவி நினைத்துக் கொண்டிருக்க சபாபதி அங்கிருந்து தன் காரை கிளப்பினார்.

அதற்கு அடுத்த நாள் செல்வா எழிலினுடைய வீட்டில் தன் நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டியிருந்தான். மனோகரன், ஜெயராஜ், வினோத்குமார், எழிலரசன் அனைவரும் செல்வாவை சுற்றி அமர்ந்திருக்க செல்வா அவர்களிடம்,

"டேய்.... நா ரூல்ஸோட வீட்ல வந்து வந்துக்குனேன்டா! இனிமே வழக்கம்போல நம்ப ஏரியாவாண்டதா நம்ப ஜாக; இப்போதைக்கு நீங்கலா நம்ப ஓனராண்ட வேல பாக்குறது சர்தான்! ஆனா அந்தாளாண்டயே கட்சி வரைக்கும் செட்டில் ஆகிடக்கூடாதுடா; நாம செய்ற பொழப்ப நாமளே டிஸைடு பண்ணிக்கணும்..... டேய் எழிலு நீ என்னடா வேல பாக்கப் போற? நாம என்ன வேல செய்யப்போறோமுனு கரீட்டா திட்டம் போட்டா தான், நாம அதுக்கு ஏத்தமேரி பணத்த ரெடி பண்ண முடியும்! இன்னும் ஒரு வருஷத்துல நம்ம சம்பாத்தியத்துல சின்னதானாலும் நம்ப தொழில நாமளே ஆரம்பிச்சுக்கினுருக்கோம்!" என்று சொன்ன செல்வாவிடம் பயக்குரலில்,

"டேய் ஒலக்க.... ஒம்மனசுல நீ இன்னாடா நென்ச்சுன்னு இருக்குற? சொந்தமா தொழிலு தொடங்குறதெல்லாம் அவ்ளோ சூளுவான சமாச்சாரம்னு நெனச்சுக்குனியா? மாசம் பொறந்தா எட்டாயிரம் துட்ட நவட்டாம வூட்ல  நொழஞ்சிக்கின்னா, வூட்ல இருக்குறதுகளே நம்ப சோத்துல வெஷத்த வச்சிடுங்க...... இந்த அழவுல ஐயாவுக்கு சொந்தத் தொழிலு கேக்குதாம்! கனவுல மொதக்காதடா; மொத ஒரு நல்ல ஓட்டலா பாத்து வேலையில சேரப் பாரு!" என்று சொன்னான் எழிலரசன்.

"டேய் செல்வா! நானும், எழிலும் சவுதி, குவைத்து இந்தமேரி எங்கயாவது வெளிநாட்டுல போயி டிரைவரா தான் சேரப்போறோம்.....!" என்று சொன்ன வினோத்திடம்

"மாப்ள..... ரெண்டு பேருமா சேந்து
இதத்தே சொல்லுவீங்கன்னு நெனச்சன்டா! கார ஓட்டுறதுக்கு கொல்லப் பயலுக இருக்கானுவடா! நம்ம ஏன் கார கழுவித்தார காரு க்ளீனிங் சர்வீசு வைக்கக்கூடாது? ரெண்டு பேருமா சேந்து அத ஆரம்பிச்சுங்கன்னா நான் அதுக்கு துட்டு தர்றேன்டா!" என்று சொன்ன செல்வாவை யோசனையாக பார்த்த வினோத் செல்வாவிடம்,

"டே ஒலக்க..... நீ சொல்ற வேலையில நெறய டப்பு தேறுமாடா?" என்று கேட்டான்.

"நம்ப சேக்காளியா இருந்துட்டு ஒலக்க எப்டிடா இவ்ளோ அறிவாப் பேசுறான்?" என்று வியந்த ஜெயராஜூம், மனோவும்

"மாப்ள..... அப்ப நாங்க என்னடா பண்ணப்போறோம்?" என்று ஆர்வமாக கேட்டனர்.

"சொல்றேன்! சொல்றேன்; அதச் சொல்லாம இருப்பனாடா ராஜு?" என்று சொன்ன செல்வா சபாபதியிடம் வாங்கிய மொத்த ஐடியாவையும் ஏதோ தானே கஷ்டப்பட்டு மண்டையை உடைத்து கண்டுபிடித்தது போல ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினான்.

"பாரு..... அந்த புள்ள பேசுறத கேக்கசொலவே முன்னேறுற லச்சணம் தெரியுது! நமக்கும் வந்து பொறந்துனுருக்குதே ஒரு நாதாரி! பாதி நா வேலைக்குப் போறது; பாதி நா எங்கயாவது போய் பொறுக்கினு வர கெளம்பி போயிர்றது!" என்று தன்னை திட்டிய தன் அன்னையிடம்,

"ம்மோவ்..... என்த்தையாவது சொல்லி சொம்மா என்னிய கரிச்சு கொட்டீனே கெடக்காத! இந்த ஒலக்கப்பய குடுத்த ஐடியாவால நாங்க எப்டி வரப்போறோம்னு மட்டும் பாரு!" என்று சொல்லிக் கொண்டிருந்தான் எழிலரசன்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro