Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 30

சபாபதி செல்வாவை ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலுக்கு விருந்துக்கு அழைத்து வந்திருந்தார். இன்று அவன் கிளம்புவதாக அவனே அனைவரிடமும் சொல்லியிருந்தான். ரேணுகா தான் வீட்டிற்கு வந்த ஒருவாரத்தில் இவன் கிளம்புகிறேன் என்று சொல்கிறானே என்ற கவலையில் அமர்ந்திருந்தார். இந்த ஒரு வாரத்தில் பவி அவரிடம் அவர் கேட்ட கேள்விக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளிக்கும் வரை முன்னேறி இருந்தாள். தன்னுடைய அம்மம்மாவைப் போல் நினைத்த பொழுது பாசம் வரும், நினைத்த பொழுது போய்விடும் என்ற விதத்தில் இல்லாமல் ரேணுகாவின் அன்பு எப்போதும் ஒரேமாதிரியாக பவிக்கு கிடைத்தது.

அவளே ஓடி ஓடி அவளது அறைக்குள் ஒதுங்கினாலும் ரேணுகா சலிக்காமல் அவளது அறைக்கதவை தட்டி தட்டி அவளை வெளியே இழுத்து வைத்துப் பேசிவிட்டு தான் சென்றார். ஒரு பெண்ணின் கைநேர்த்தியால் குடியிருக்கும் வீடு எவ்வளவு அழகாக இருக்கும் என்பதை தன் செயலில் காட்டினார்.

சாம்பவியால் தான் ரேணுவிடம் கலந்து உறவாட முடியவில்லை. ஆனால் செல்வாவோ அந்த பெண்மணியின் இருப்பை மிகவும் நன்றாக அனுபவித்தான்.

"அட இங்க குடு யம்மா! நான் வெட்டித்தரேன்!" என்று அவர் கையிலிருந்து கத்தியை பிடுங்குவதாகட்டும், வெட்டிப்போட்ட காய்கறி துண்டுகளை இடக்கையால் எடுத்து வாயில் போட்டுக் கொண்டு ரேணுவிடம் தலையில் குட்டு வாங்குவதாக இருக்கட்டும்..... இது எல்லாமே ஹைக்கூ கவிதை போல் ஷார்ட் அண்ட் ஸ்வீட் ரகமாக இருந்தது சாம்பவிக்கு.

பள்ளிக்கு செல்லும் வழியில் அவனிடம், "ஏய்.... என்னடா! நானும் பாத்துட்டே இருக்கேன்; நீ அந்த லேடிட்ட ரொம்ப க்ளோஸ் ஆகுற?" என்று மூக்கை தூக்கிக் கொண்டு கேட்டவளிடம்,

"ம்ப்ச் ஒன்னையமேரி பெத்தது ஒண்ணு, பாத்து பாத்து வளக்கப்போறது ஒண்ணுங்குற யோகமெல்லாம் நமக்கு கெடைக்குமா பாப்பா? கெடைக்குற நேரம் வரைக்கும் அத அனுபவிச்சுக்க வேண்டியதுதான்......!" என்று சொன்னவன் தான் அவளிடம் இன்னும் நான்கு நாட்களில் தான் அவள் வீட்டிலிருந்து கிளம்பி செல்லப் போவதாக அவளிடம் சொல்லி விட்டான்.

"இட்ஸ் ஓகே! ஒரு கஷ்டம்; அத டைஜஸ்ட் பண்ணி முடிக்குறதுக்குள்ள அடுத்த கஷ்டம்; இது எனக்கு நல்லாப் பழகின விஷயம் தான்...... நீ போயிட்டு வா!" என்று அவனிடம் சொன்ன சாம்பவி இதோ சூப் குடித்துக் கொண்டிருந்த இந்த நிமிடம் வரை அவனிடம் பேசவில்லை.

அவனை கிளம்பச் சொன்னது அவள் தான்! ஆனால் அவன் கிளம்புவது அவளுக்குப் பிடிக்கவில்லை! அவனுடன் பேசாமல் இருப்பது அவள் தான்! ஆனால் அவர்களுக்கிடையிலான மௌனமும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

ரேணுகா தன்னுடைய சித்தி என்பதை ஏற்றுக் கொள்ள மிகவும் கஷ்டப்பட்டாலும் ஒரு புதிய நபர் வீட்டிற்கு வந்தது, அவளிடம் நடிக்காமல் சுமூகமாக பாசத்தை காட்டியது இதெல்லாம் சாம்பவிக்கு மிகவும் இதமாக இருந்தது.

"தங்கமே!" என்று வேண்டும் நேரம் கொஞ்சுபவர்கள், "என்ன வேணும்னு சட்டுன்னு சொல்லு!" என தேவைப்படாத நேரங்களில் தூக்கி எறிந்து பேசுவது போல் அல்லாமல், எப்போதும் பவி என்ற உண்மையான அழைப்பு அந்த லேடியிடம் வந்ததில் இருந்து அவர்களை சித்தி என்றே கூப்பிட்டு விடலாமா என்று கூட சாம்பவி யோசித்துக் கொண்டிருந்தாள்.

இப்படி வீட்டுக்கு வந்த உறவை அவள் முழுதாய் ஏற்று முடிப்பதற்குள் இவன் வீட்டை விட்டு கிளம்புவான் என்று அவள் நினைக்கவில்லை.

அந்த லேடி, செல்வா, அவள் மூவருமாக சேர்ந்து ஒரே வீட்டில் இருந்தது அவளுக்கு இப்போது தான் மிகவும் பிடிக்க ஆரம்பித்திருந்தது; ஆனால் செல்வாவிற்கும் இந்த புதிய அன்னையை மிகவும் பிடித்திருக்கும் என்று அவள் நினைக்காமல் போய் விட்டாள்.

இப்போதே கிளம்பினால் தான் உண்டு; இன்னும் கொஞ்ச நாள் என்னை இங்கு இருக்க விட்டால் இந்த அன்பெனும் போதைக்கு நான் மீளா அடிமையாகி விடுவேன் என்று நினைத்து தான் செல்வா இந்த முடிவை எடுத்திருந்தான். ரேணுகாவின் அன்பு அவனுக்கு வேண்டும் தான்; அதை விட அவன் எதிர்கால வாழ்வுக்கு தகுதியானவனாக தயாராவது இப்போது அவனது முதல் ப்ரியாரிட்டியாக இருந்தது. சபாபதியும் அன்று அவனிடம் ஏறக்குறைய ஐந்து மணி நேரங்கள் பேசி அவனுடைய வாழ்க்கை முறைக்கு என்னென்ன வகையான தொழில்கள் சரியான தேர்வாக இருக்கும் என்று மேம்போக்காக ஒரு ஐடியாவை மட்டும் கொடுத்திருந்தார்.

"செல்வா! ரொம்ப நேரமா நீ சூப்ப கையில வச்சுட்டே உட்கார்ந்துருக்கியேப்பா? இதோட டேஸ்ட் பிடிக்கலயாப்பா உனக்கு?" என்று கேட்ட ரேணுவிடம் திணறலுடன்,

"ஆங்..... அதெல்லாம் ஒண்ணுமில்ல யம்மா! நல்லா தான் இருக்கு!" என்று சொன்னவன் தன் வாழ்நாளில் முதன்முறையாக சாப்பாட்டின் ருசி தெரியாமல், தனக்கு எவ்வளவு அளவு சாப்பாடு தேவை என்று தெரியாமல் கான்க்ரீட் கலவை இயந்திரம் கலவையை தருவது போல ஒரு உணவுக்கலவையை தன்னுடைய வயிற்றுக்கு தந்து கொண்டிருந்தான்.

ஒருவழியாக நால்வரும் அங்கு டின்னரை முடித்து ஹோட்டலில் இருந்து கிளம்பி காரில் ஏறிய
பிறகு தன் மகளின் மௌனத்தை உடைக்க நினைத்த சபாபதி, "பவி பீச்சுக்கு போலாமாடா?" என்று கேட்க அவள் தன் தந்தையிடம்,

"உங்க இஷ்டம் டாடி!" என்று மெதுவான குரலில் சொல்லி விட்டு
காரில் நன்றாக சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

ரேணுகாவிற்கு இங்கு ஏன் இவ்வளவு இறுக்கமான மனநிலை நிலவுகிறது என்று புரியவில்லை. செல்வா கிளம்பப்போகிறேன் என்று சொன்னது அவருக்கும் வருத்தமாக தான் இருந்தது. ஆனால் அவனது தனிப்பட்ட வாழ்க்கையில் அவனது முடிவிற்கு குறுக்கே நிற்கும் அளவிற்கு தன்னிடம் உரிமையோ, அதிகாரமோ இல்லை என்று நினைத்தார். ஏற்கனவே பவியை வீட்டிற்கு அழைத்து வந்திருந்த விஷயத்தில் அவனுக்கு ஆயிரம் நன்றிகளை சொல்லி இருந்தவர் அவன் கிளம்புகிறேன் என்று சொன்னதை ஒரு விபரமாக மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

இங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன் அவன் என்ன செய்வான், எங்கு தங்குவான் போன்ற தகவல்களை மட்டும் அவனிடமிருந்து கேட்டவர் அதற்குப் பின் அவனிடம் அவன் கிளம்பப்போகும் விஷயத்தில் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை.

தன்னுடைய கணவர், செல்வா கிளம்பும் விஷயத்தில் எதையோ தன்னிடம் சொல்லாமல் விட்டு வைத்திருக்கிறார் என்பது வரையில் ரேணுகாவிற்கு புரிந்தது. விஷயம் அதுவாகவே வேறு யார் மூலமாகவாயினும் தன் காதில் வந்து சேரட்டும் என்று நினைத்து ஒன்றும் பேசாமல் அமைதியாக வந்தார்.

பீச்சில் இரவுநேர வாக்கிங்கில் நிறைய பேர் அங்கும் இங்குமாக உலவிக் கொண்டிருந்தனர்.

சபாபதி செல்வாவிடம், "நீயும் பவியும் வேணும்னா உள்ள வரைக்கும் போயிட்டு வாங்க செல்வா. நானும் ஆன்ட்டியும் இங்க முன்னால கொஞ்ச நேரம் நடந்துட்டு, உட்கார்ந்து இருக்கோம்!" என்று சொன்ன போது ரேணுகாவிற்கு விஷயம் கொஞ்சமாக புரிந்தது போல் இருந்தது.

அவர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பியதும் தன் கணவரிடம் ரேணுகா சற்றே அதிர்ச்சியடைந்த குரலில்,

"என்னாச்சு சபா? நம்ம பவிய செல்வா கூட போயி தனியா அனுப்பி விடுறீங்க? நான் உன்னை மிஸ் பண்ணுவேன்; நீ நல்லாப் படி; நாம அப்பப்ப மீட் பண்ணிப்போம் இதெல்லாம் சொல்றதுக்கு அவங்க நம்ம கூட இருந்தா போதாதா? இதுக்கு எதுக்கு அவங்க தனியா போகணும்?" என்று கேட்டார்.

"இப்ப பவியோட வாயில இருந்து வர்ற ஒவ்வொரு வார்த்தையும் செல்வாக்கு லைஃப் சேன்ஜர்டா ரேணு! உன்னை எனக்குப் பிடிச்சிருக்குன்னு ரெண்டு பேரும் இன்னும் டைரக்டா சொல்லிக்கல..... அவ்ளோ தான்; மத்தபடி பவிக்காக தான் செல்வா இப்ப நம்மள விட்டு தனியா பிரிஞ்சு போறான்!" என்று சொன்ன சபாபதி தன்னுடைய மனைவியிடம் அதற்கு பிறகு எந்த விஷயத்தையும் மறைக்கவில்லை.

"ம்ப்ச்! இது என்ன சபா பைத்தியக்காரத்தனமா இருக்கு? இதுக்கு நீங்களும் சப்போர்ட் பண்ணிட்டு உட்கார்ந்துருக்கீங்க? பதினேழு வயசுல ஆப்போஸிட் செக்ஸ் மேல வர்ற தடுமாற்றம் இன்ஃபாக்சுவேஷன்! இத பேஸா பிடிச்சுட்டு ரெண்டு பேரும் அவங்க வாழ்க்கைய எதுக்கு போட்டு குழப்பிக்கணும்? நமக்கு ஒரு பொண்ணு இருக்குறதால
இந்த மாதிரி பையன்ட்ட அவள குடுத்துட்டீங்க; இன்னும் நாலு பொண்ணு பெத்து வச்சிருந்தீங்கன்னா, இதே மாதிரி பசங்க இன்னும் நாலு பேர பிடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருப்பீங்களா நீங்க? இது ஜஸ்ட் லைக் தட் ஒரு குட் ஃபீல்னு நினைச்சுட்டு அவங்க அவங்க வேலைய பாக்க வேண்டியதுதான? இந்த பிரிவு, சோகம் எக்ஸட்ரா எக்ஸட்ரா இதெலாம் தேவையா?" என்று சற்றே எரிச்சலுடன் கேட்ட ரேணுகாவிடம் சிறு சிரிப்புடன்,

"ஏன்டீ! நான் மட்டுந்தான் உங்கூட உட்கார்ந்துட்டு இருக்குறதால நீ உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பேசுவியா? என்னைப் பாத்தா ப்ரோக்கர் மாதிரி தெரியுதா உனக்கு? இந்த வாகை செல்வன் ஒரு எக்ஸ்ட்ரீம் லெவல்டீ!
என் கிட்டயே கொஞ்சங்கூட பயமில்லாம பேசி என்னை எதித்துக்கிட்டு நின்னவன்! பேசுற மாரல் தாட்ஸையும் புரிஞ்சுக்காம, வேல்யூஸ மதிக்காம, தறுதல மாதிரி சுத்துறவன அப்டியே சொஸைட்டிக்குள்ள விட்டா பதினேழுல கத்திய புடிக்க தைரியம் இருந்தவன், இருபதுல கேங்ஸ்டர் ஆவான்! இவன மாதிரி அக்ரெஸிவ் கிட்ஸ்க்கு எல்லாம் காட்டு யானையப் புடிச்சு ட்ரையின் பண்ற மாதிரி மெத்தட் தான் சரின்னு என் மனசுக்குப் பட்டது! அதத்தான் அவங்கிட்ட அப்ளை பண்ணினேன். இந்த மாதிரியே எல்லா பசங்களையும் ட்ரீட் பண்ணனும்ங்குற அவசியமும் கிடையாது; தேவையும் கிடையாது! இவன் ஒரு எக்ஸ்டாடினரி எக்ஸெப்ஷன்! இவங்கள இவ்ளோ பேசுன சரி...... நீ காலேஜ் டேஸ்ல
எத பேஸா பிடிச்சுட்டு உன் வாழ்க்கைய குழப்பிட்டு வாழ்ந்துட்டு இருந்த ரேணு? ஜஸ்ட் லைக் தட் இது ஒரு குட் ஃபீல்னு நினைச்சுட்டு நீ வேற எவனையாவது கல்யாணம் பண்ணிட்டு உன்னோட வழியப் பாத்துட்டு போயிருக்க வேண்டியதுதான? ஏன் போகாம என்னை தேடி வந்த?" என்று புருவம் உயர்த்திய கணவரை பார்த்து எரிச்சலடைந்த ரேணுகா,

"என்னோட லவ்வ எதுக்கு இப்ப இந்த ரெண்டு பொடிசுகளோட ஃபீலோட போயி கம்பேர் பண்ணிட்டு இருக்கீங்க சபா! எனக்கு கோபம் வருது!" என்றார் சற்றே தன் குரலை உயர்த்தி.

"ஷ்ஷ்ஷ்.... ஷ்ஷ்! ஈஸி ரேணும்மா; செல்வா இப்டி எதுக்காகவுமே பொறுமையா போற டைப் பையனே கிடையாது! ஒரு பிரச்சனை வந்தா ஒண்ணு அவனோட கை பேசும்; இல்ல வாய் பேசும்! பட் ஹி இஸ் ஒபேயிங்க் பவிஸ் கமாண்ட்ஸ் நௌ; இதுவே ஒரு பெரிய மாற்றம் இல்லையா? டீன்ஏஜ்ல நம்மளால அவாய்ட் பண்ண முடியாததும், நம்ம தாண்டி வர்ற தடைகள்ல ஒண்ணா இருக்கறதும் இந்த லவ் தான்! அதுவும் இப்பல்லாம் டீவில, பேப்பர்ல, மொபைல்ல, ஏன் இந்த பீச்ல கூட இப்டி எங்க பார்த்தாலும் லவ் தான்; இவன் கிடைக்கலன்னா நான் சூசைய்டு பண்ணிப்பேன்; இவ கிடைக்கலன்னா இவ மேல ஆசிட் ஊத்திடுவேன்னு சொல்ற தேர்டு ரேட்டட் பசங்களுக்கு நடுவுல, நம்ம பாப்பா எடுத்த டெஸிஷன் எனக்கு ரொம்ப ரொம்ப வேல்யூபிளா தெரியுது! அதுவும் அவங்க ரெண்டு பேருமா வந்து எங்கிட்ட அவங்க ப்யூச்சர பத்தி பேசி ஒரு டெஸிஷனுக்கு வரலாம்னு சொன்னான்னு கேட்டதுல இருந்து அவள நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு! அவங்க ரெண்டு பேரும் இன்னிக்கு நிறைய பேசிக்கட்டும் ரேணு! எப்டி யோசிச்சுப் பார்த்தாலும், இதுல ஒரு தப்பும் இருக்குறதா எனக்குத் தெரியலம்மா!" என்று உறுதியான குரலில் சொன்ன தன்னுடைய கணவரின் முடிவு சரியான முடிவாகத் தான் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டார் ரேணுகா.

"என்ன மேடம்..... சத்தத்தையே காணும்? நம்ம ப்ளாஷ்பேக் நியாபகம் வந்துடுச்சா உங்களுக்கு? பாவம் விழுந்து விழுந்து லவ் பண்ண பையனோட வொய்ஃப் இப்ப அவன விட்டுட்டு போயிட்டாங்கன்னு தெரிஞ்சு, அவன பத்தி விசாரிச்சு, அவனுக்காக நிறைய அழுது, அவனை இப்பவாவது எப்டியாவது மடக்கிடணும்னு ப்ளான் போட்டு, அவன் போற நேரத்துலயே பார்க்ல போய் வெயிட் பண்ணி, அவன குண்டுகட்டா வீட்டுக்கு தள்ளிட்டுப் போயி...... ஏய்..... தூ..... தூ..... வாயில போயி மண்ணப் போட்டுக்கிட்டு...... என்னடீ விளையாட்டு இது? தூ.... தூ!" என்று ரேணுவை திட்டிக் கொண்டே தன் வாயில் போன மண்துகள்களை வெளியேற்றிக் கொண்டிருந்தார் சபாபதி.

"இதுவா சபா.....வாயை மூடு; இல்ல
பீச் மண்ணோட ஓடுன்னு இப்பதான் நான் கண்டுபிடிச்ச
புது கேம்......!" என்று சொன்ன தன்னுடைய மனைவியிடம் குறுஞ்சிரிப்புடன்,

"எது.... புது கேமா? அப்ப நான் கூட கேம்ல ஜாயின் பண்ணிட்டாப் போச்சு! ஆனா நான் மண்ணை போடுற இடம் கண்டிப்பா உன் வாய் இல்லப்பா! ஏய் நில்லு...... எங்க ஓடுற? நில்லுடீன்னு சொல்லிட்டு இருக்கேன்!" என்று சொன்ன படி தன்னுடைய பேண்ட்டில் ஒட்டியிருந்த மணல் துகள்களை தட்டிக் கொண்டு தன்னுடைய மனைவியின் பின்னே சென்று விரைந்து அவரைப் பற்றி தோளணைத்துக் கொண்டு நடந்தார் சபாபதி.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro