Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 29

பவியை சமாதானம் செய்து செல்வா வீட்டிற்கு அழைத்து வந்திருந்த அந்த ஞாயிறு இரவு உணவு அந்த வீட்டில் இருந்த நால்வருக்கும் தனித்தனியாக நடந்தது. முதலில் செல்வா பவியை கட்டாயப்படுத்தி சாப்பிட அழைத்து வந்ததும் அவள் பெயருக்கு கொஞ்சம் கொறித்து விட்டு அவளறைக்குள் முடங்கிக் கொள்ள, பின் சபாபதி ரேணுகாவை சாப்பிட அழைத்துச் சென்று அவர் உணவு உண்டு முடித்ததும், அவரிடம் சற்று நேரம் பேசி விட்டு கீழே உள்ள ஒரு படுக்கை அறையில் அவரை தங்கிக் கொள்ள சொல்லி விட்டு சற்று தயங்கிய படி அவரது லக்கேஜ்களை அந்த அறைக்குள் அன்பேக் செய்ய தன் மனைவிக்கு உதவிக் கொண்டிருந்தார்.

"சபா..... எதுக்காக உங்களுக்கு இவ்ளோ தயக்கம்? நாம இவ்ளோ வருஷமா தனியா தான இருந்தோம்? நான் சொன்ன மாதிரி பவியோட ஹெல்பராவே நான் அறிமுகம் ஆகியிருந்தா இந்த ரூம்ல தானே இருந்துருக்கணும்? இதுக்கு எதுக்கு நீங்க இவ்ளோ யோசிக்குறீங்க?" என்று கேட்ட தன் மனைவியின் கையைப் பற்றி அவர் தோள் வளைவில் சாய்ந்து கொண்டார் சபாபதி.

"உனக்கான ரெஹக்னிஷன கடைசி வரைக்கும் நான் உனக்கு குடுக்காமலேயே போயிடுவனா ரேணு?" என்று கேட்டு வருந்தியவரிடம்,

"அதெல்லாம் இல்ல சபா! சீக்கிரத்துல நாம மூணு பேரும் ஒரே பேமிலியாகிடுவோம் பாருங்களேன்!" என்று நம்பிக்கை வார்த்தைகளை பேசி தெம்பூட்டினார் ரேணுகா.

"கூடிய சீக்கிரத்துல எல்லாம் சரியாகிடும்னு நம்புவோம் ரேணு; பவி நம்மள புரிஞ்சுக்கிட்டு அக்செப்ட் பண்ணிக்குற வரைக்கும் தான்....... அதுவரைக்கும் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு;
நான் போயி படுக்கட்டுமாம்மா?" என்று சபா கேட்க ரேணு சபாபதியின் வயிற்றை தொட்டுக் காட்டி தன் கணவரிடம்,

"சாப்ட்டுட்டு போய் படுங்க! வெறும் வயித்துல படுத்தா உங்களால கண்டிப்பா தூங்க முடியாது! நாளைக்கு மார்னிங் நான் அந்த பையனோட சேர்ந்து ப்ரேக்பாஸ்ட்டுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா? இல்ல நானே சமைக்கட்டுமா?" என்று கேட்டார். தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்ட சபாபதி,

"பெட்ரூமுக்குள்ள நம்ம லவ்மேக்கிங் மட்டும் தான் கொஞ்ச நாளைக்கு ஸ்டேக் ஆகி நிக்கப்போகுது! மத்தபடி இந்த வீட்டோட ஃபுல் ரெஸ்பான்ஸிபிளிட்டி அண்ட் கண்ட்ரோலையும் நீ எடுத்துக்கணும்! என்னையும் பவியையும் ஹாப்பியா வச்சு பார்த்துக்கணும்; பார்த்துக்குவல்ல?" என்று கேட்ட தன் கணவரின் தோளில் சாய்ந்து கொண்டு,

"பவி நம்மள அக்செப்ட் பண்ணாட்டியும் பரவாயில்ல; அவளுக்காக நம்ம செஞ்சு குடுக்குற வேலைகளயாச்சு அக்செப்ட் பண்ணிக்கணும்!" என்று சொல்லிக் கொண்டிருந்த ரேணு,

"ஆ...... வலிக்குது சபா......ஷ்ஷ்ஷ்!" என்று மெதுவான குரலில் முணங்கிக் கொண்டிருந்தார்.

"காலம் பூரா இங்க ஒரு ஹவுஸ்மெய்டா இருக்க நீ ரெடியா இருப்ப! ஆனா உன்னை அப்டி விட்டு வைக்க நான் ரெடியா இல்ல; இவ்ளோ வருஷமா நான் உனக்கு செஞ்சுட்டு இருந்த பாவமெல்லாம் பத்தாதா? இன்னுமா அத சேர்த்துட்டே போகணும்?" என்று கேட்டு சற்றுமுன் கடித்து வைத்த தன்னுடைய மனைவியின் கன்னத்தை இப்போது விரலால் மென்மையாக வருடிக் கொண்டிருந்தார். ஏதோ நியாபகம் வந்து தன் மனைவியின் காதில் எதையோ முணுமுணுத்தவரிடம் வெட்கம் பூத்த குரலில்,

"ச்சீ..... சும்மாயிருங்க; இதல்லாம் இப்பப் போயி கேட்டுட்டு! நீங்க கேட்டது இன்னும் கொஞ்ச நாளைக்கு நமக்கு தேவைப்படாது! ஸோ இப்பப் போயி சீக்கிரமா சாப்ட்டுட்டு படுங்க!" என்று சொன்ன தன்னுடைய மனைவியின் நிறைந்த புன்னகையை கண்டு நிம்மதியடைந்தவர்,

"என் பெட்ரூமுக்குள்ள, என் பொண்டாட்டிட்ட, எனக்கு தேவையான ஒரு மேட்டர் ஸ்டாக் இருக்கான்னு கேட்டேன்! அதென்ன இப்பப் போயி கேட்டுட்டுன்னு ஒரு கேள்வி...... உங்கிட்ட நான் அப்பப்ப கேக்குற கேள்வி தான? இப்ப ஏன் நீ இவ்ளோ வெக்கப்படுற?" என்று கேட்டவர் ரேணுகாவிடம்,

"ஸாரிம்மா; உன்னைய வீட்டுக்குள்ள கூப்டுறப்ப சரியாவே வெல்கம் பண்ணல! ஏன்..... வெல்கம் ரேணுன்னு சொல்லக்கூட இல்ல; கோவிச்சுக்காத; எப்பயுமே நீ எம்மேல கோபப்பட மாட்ட! பட் இத சொல்லணும்னு தோணுச்சு சொன்னேன்! அது மட்டுமில்ல உனக்கு ஒரு ஸர்ப்ரைஸூம் இருக்கு தெரியுமா? ரெண்டு மாசத்துக்கு முன்னால கொலுசு மாத்தணும்னு சொல்லிட்டு இருந்தல்ல..... அதத்தான் உனக்கு கிப்ட்டா வாங்கிட்டு வந்தேன். உட்காரு! போட்டு விடுறேன்!" என்று சொல்லி தன் மனைவியை படுக்கையில் அமர வைத்துவிட்டு தரையில் அமர்ந்து ரேணு இப்போது போட்டிருந்த கொலுசை கழற்றிக் கொண்டிருந்தார்.

"சபா! நான் பவிக்கு சின்னதா ஒரு முத்து செட் தான் வாங்கிட்டு வந்தேன். என்னடா ஹெல்பரா வர்ற லேடி கிப்ட்டெல்லாம் குடுக்குறாங்களேன்னு அவ யோசிச்சுடக்கூடாதேன்னு எனக்கு தோணுச்சு! இப்ப தான் எல்லாத்தையும் சொல்லியாச்சே? நான் இந்த கொலுச நம்ம பவிக்கு வேணும்னா.....?" என்று கேட்ட படி லேசாக குனிந்து தன்னுடைய கணவரின் கையில் வைத்திருந்த பெட்டியை தன் கையில் வாங்கப் போன ரேணுவிகாவிடம்,

"ஏய்... உன்னக் கொன்னுடுவேன்! கைய எடுறீ முதல்ல!" என்று எரிச்சல்பட்டார் சபாபதி.

"இல்ல..... பழசே இன்னும் நல்லாத்தான இருக்கு? அதுக்குள்ள புதுசுக்கென்ன அவசரம்னு பாத்தேன் சபா!" என்று  சொன்னவரிடம்,

"இப்ப பேசாம இருக்கப்போறியா? இல்ல இதக் கழட்டுறதுக்கு பதிலா அத்து எடுக்கட்டுமா?" என்று கேட்டார் சபாபதி.

"ரவுடி..... வயசுக்கேத்த மெச்சூரிட்டி இருக்கான்னு பாரு; கோபம் வந்துட்டா நம்ம பேசுறது எதுவும் காதுக்குள்ளயே ஏறாது!" என்று முணங்கிய ரேணுவிடம்,

"ஏன் ஏறாம? அதெல்லாம் நல்லாத்தான் கேக்குது! நீ நல்லவளா இரு ஓகே; பட் தியாகியா இருக்க வேண்டிய அவசியம் இல்ல.....! என் பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் என்ன வேணும், என்ன செய்யணும்ங்குறத பாத்துக்க இனிமே நான் இருக்கேன்; ரவுடியாம் ரவுடி.... உன்னைத் தவிர வேற யாரையாவது சபாபதி ஒரு ரவுடின்னு சொல்ல சொல்லுடீ பாப்போம்! நான் எவ்ளோ நல்லவன் தெரியுமா?" என்று சொல்லி தன்னுடைய காலரை தூக்கி விட்டுக் கொண்டவரின் முதுகில் தட்டிய ரேணுகா,

"ஆமா.... புரசைவாக் பூரா உங்களப் பத்தித் தான் பேச்சு! சபாபதி எவ்ளோ நல்லவர் தெரியுமான்னு தான் எல்லாரும் பேசிக்கிட்டாங்க தெரியுமா?" என்று கேட்டு சிரித்தார் ரேணு.

தன்னை ஒரு துலாக்கோலாய் நினைத்துக் கொண்ட சபாபதி, தன்னுடைய வாழ்க்கையில் தனசேகர், கல்யாணி, வித்யாவின் சுயநலத்தால் அடைந்த துன்பம் ஒருபுறம் என்றால் இப்போது ரேணுவின் தன்னமில்லாத அன்பு மற்றும் காதலால் அடைந்த இன்பம் ஒருபுறம் என எந்தப் புறமும் கீழிறங்காமல், சம அளவில் நேராக நின்று கொண்டிருந்தார். அவளது தந்தையின் வீட்டில் எல்லாவற்றையும் ஒதுக்கியது அவளுக்கு அயர்வாக இருக்கும் என நினைத்தவர் ரேணுவிடம்,

"சரி; சரி! விட்டா நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருப்போம் ரெண்டு பேரும்; நீ ரெஸ்ட் எடு! குட்நைட்!" என்று சொல்ல ரேணுவும் சபாவிற்கு குட்நைட் சொன்னார்.

ஹாலுக்கு வந்து செல்வாவை காணவில்லை என்று பார்த்த படி இரவு உணவை சாப்பிட்டவர், அவன் மேலிருந்து கீழே இறங்கி வருவதைப் பார்த்ததும் நிம்மதியாக ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டார்.

"தூங்கிட்டாளாடா?" என்று கேட்டவரிடம் ஆமென்று தலையை ஆட்டியவன் அவர் மிச்சம் வைத்திருந்த உணவுகளை பார்த்து விட்டு முகம் சுளித்தான்.

"என்ன யாருமே சரியா துன்னலயா இன்னிக்கு? நா ஒருத்தன் தானா இத்தையெல்லாம் துன்னனும்? இவ்ளோ சாப்பாடு மிச்சம் கெடந்தா  இன்னா செய்றது? இந்த வூட்ல எந்த பக்கிக்காவது சாப்பாட்டோட அரும தெரியுதா?" என்று திட்டிக் கொண்டே தான் சாப்பிட்டு முடித்து மீந்து போன சாதம், குழம்பு, க்ரேவி எல்லாவற்றையும் குளிர்பதனப் பெட்டியில் வைத்து விட்டு டைனிங் டேபிளை ஒதுக்கி துடைத்துக் கொண்டிருந்தான். இட்லிக்கு அரைக்கும் மாவை மட்டுந்தான் நான்கு நாட்களுக்காவது ஃப்ரிட்ஜில் வைக்க அனுமதிப்பான்! மற்ற படி சாதம், குழம்பு இவையெல்லாம் மீந்து போய் விடாத ஆனால் அனைவருக்கும் வயிறார சாப்பிடும் அளவுக்கு சரியாக செய்வான். இன்று நால்வரும் கொஞ்சம் மனஉளைச்சலில் இருந்ததால் சாதம் கொஞ்சம் அதிகமாகவே மீந்து போய் விட்டது. அதனால் தான் அவனுக்கு இந்த கடுப்பு!

"டேய்.... நாளைல இருந்து நீ சமைக்குற வேலை, ஹோம் மெயின்டனென்ஸ் அதெல்லாம் ரேணு பாத்துப்பா!" என்று சொன்னவரிடம் தோளைக் குலுக்கியவன்,

"அம்மாவேலையும் அந்தம்மாதே பாத்துக்கணும்! இந்த மாசம் முடிய இன்னும் அஞ்சாறு நாத்தா இருக்கு! அதுக்குள்ள செல்வா இங்க இருந்து கிளம்பப் போறேன்!" என்றவனிடம் அதிர்ச்சியடைந்த குரலில்,

"வாட்..... ஏன்டா? நம்ம அக்ரிமெண்ட்லாம் என்ன ஆகுறது அப்போ? எல்லாம் வேஸ்ட் தானா? பவி தான் எங்க மேல இருக்குற கோபத்துல உன்னை இங்கருந்து கிளம்ப சொல்லிட்டாளா?" என்று செல்வாவிடம் கேட்டார் சபாபதி.

"அதெல்லாம் ஒன்னியும் இல்ல; யோவ் வாத்யாரே..... பாப்பா கைல, கால்ல உழுந்து அத்த நா இங்க தள்ளினு வந்ருக்கேன்! மறுபடி அத்த வூட்ல இருந்து எங்கயாவது தொரத்தி உட்டுடாதய்யா!" என்று சொன்னவனிடம் சபாபதி,

"பின்ன ஏன்டா இந்த முடிவு எடுத்த? ரேணுவுக்கும், உனக்கும் செட் ஆகாதுன்னு நினைச்சியா?" என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார்.

"உன்னாண்ட அத்த சொல்லணுந்தா! ஆனா எப்டி சொல்றதுன்னுதா தெரியல ரூல்ஸூ; நீ என்னாண்ட ஏதாவது சொல்லணும்னா மொதல்ல அத சொல்லுவேன்; அதுக்கு அப்பால நான் பேசுறேன்!" என்று சொன்னவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டவர்,

"கண்டிப்பா நிறைய சொல்லணும்
தேங்க்ஸ்டா செல்வா! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்; பவியோட தாத்தா, பாட்டி தொல்லை இல்லாம அவளும், ரேணுவும், நானும் இனிமே ஒரு ஃபீஸ்புல்லான லைஃப லீட் பண்ணுவோம்னு நினைக்குறேன். இத்தன வருஷமா ரேணுவோட அப்பா வீட்ல போயி அவள பார்க்கும் போதெல்லாம் எனக்குக் கொஞ்சம் உறுத்தலா இருக்கும்! அந்த உறுத்தல் இன்னிக்கு தான் மறைஞ்சு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு! உனக்கு என்ன வேணும் கேளு; என்னால செய்ய முடிஞ்ச ஹெல்ப்பா இருந்தா, உனக்கு நான் கண்டிப்பா செஞ்சு தர்றேன்!" என்று அவனிடம் கேட்டார் சபாபதி.

"தோடா..... இன்னா தல நீயி அதுக்குள்ள அன்பாலே அழகாகும் வீடு, ஆனந்தம் அதுக்குள்ள தேடுன்ற ரேன்ஜூல ஃபீல போட்டுனுருக்க? இப்பதாம்மா கண்ணு ஒன்க்கு ட்ரைலரே போட்டுனுருக்கு! இனிமே தான் அந்தம்மா பவியோட ஒட்டுமா ஒட்டாதா.... ரெண்டு பேரும் ராசியாவாங்களான்னு எல்லாம் தெரியும். அதுக்குள்ள நீ நிம்மதிப் பெருமூச்செல்லாம் உடுற?" என்று சபாபதியிடம் பதிலுக்கு கேள்வி கேட்டான் செல்வா.

"நீ நினைக்கிற மாதிரியான எந்த குழப்பமும் வர்றதுக்கு வாய்ப்பேயில்லடா செல்வா;
ரேணு ரொம்ப நல்ல பொண்ணு! எங்க கல்யாணம் முடிஞ்சப்போ ரேணுக்கு 35 வயசாகிடுச்சு; என்னடீ இப்டி என்னையே நினைச்சுட்டு உன் வாழ்க்கைய வேஸ்ட் பண்ணி வச்சிருக்க; இப்ப தான் நாம கல்யாணம் பண்ணிக்கிட்டோமே; சீக்கிரத்துலயே ஒரு குழந்தை பெத்துக்கலாம்னு நான் அவகிட்ட சொன்னப்ப அவ அந்த விஷயத்த பிடிவாதமா மறுத்துட்டா; இவ்ளோ வயசுக்குப்பறம் எனக்கு புதுசா ஒரு குழந்த எதுக்கு? பவிக்கு ஒரு அம்மா வேணும்; எனக்கு ஒரு பாப்பா வேணும்; ஸோ நீங்க பவிய மட்டும் தூக்கி என் கையில குடுங்க! நான் அவள கொஞ்சி தங்கமா வச்சுக்குறேன்னு அவ எங்கிட்ட கேட்டு பத்து வருஷமாச்சு! இப்ப பவிய அவ கிட்ட தூக்கி குடுக்க முடியாது; பட் பார்த்துக்கோம்மான்னு சொல்லி விட்டுட்டுப் போகலாம். அவ பவிய ஈஸியா ஹேண்டில் பண்ணிடுவாடா! இவ்ளோ வருஷத்துல என்னோட வாழ்க்கையில நான் எடுத்த முக்கியமான முடிவு எல்லாமே அவளோட கைய்டென்ஸோட எடுத்ததுதான்; அது அங்கங்க சொதப்புனதுக்கு காரணம் என்னோட தப்பு தான்....... அதெல்லாம் விடு; நீ உனக்கு என்ன வேணும்னு கேளு!" என்று மறுபடியும் அவனிடம் கேட்டார் சபாபதி.

சபாபதியை பொறாமை பொங்கும் பார்வையால் பார்த்த செல்வா அவரிடம்,

"என்னமேரி ரெண்டு பொண்ணுங்க ஒன்க்கு வொறவா கிடச்சுருக்குதுய்யா? ஒன்க்கு எதுக்கு இனிமே ரெண்டு பேரு? மரியாதயா எம்பாப்பாவ அழஉடாம வச்சினுருந்துட்டு, நாங்கேக்குற நேரத்துல எங்கிட்ட திருப்பி குடுக்குற; தெர்தா.....?" என்று கேட்டவனை கைகட்டிய படி நின்று சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் சபாபதி.

"இன்னா என்னிய அப்டி உத்துப் பார்த்துனுருக்க?" என்று அவரைப் பார்த்து அதட்டலாக கேட்டவனிடம்,

"உன்னை இங்க கூட்டிட்டு வரும் போது, நீ பவிக்கு ஒரு நல்ல ப்ரெண்டா இருப்பன்னு நெனச்சேன்; பட் இது ப்ரெண்ட்ஷிப்பையும் தாண்டி  லைஃப்லாங்க் கமிட்மெண்ட்டா மாறப்போகுதா? ஃபைன்! பட் பவியோட பேசறதுக்கு முன்னால நீ எதுக்கும் ரெடியா இருந்துக்கடா! லவ்வெல்லாம் எனக்கு செட் ஆகாதுன்னு அவ சொல்றதுக்கும் நிறைய சான்சஸ் இருக்கு! வீணா நீ மட்டும் ஒன்சைடா ஆசைப்பட்டுட்டு அப்புறம் ஃபீல் பண்ணிட்டு இருக்காத..... அவ்ளோ தான் சொல்லுவேன்!" என்று சொன்னவரை ஒருமார்க்கமாக முறைத்தவன், பவி அவனிடம் பேசிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லி விட்டு
அமைதியாக தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro