💚 இணை 27
"என்ன டாடி சொல்றீங்க? இவங்க ஏஜ்க்கு ரெஸ்பெக்ட் குடுத்து, நா இவங்கள ஆன்ட்டின்னு வேணும்னா கூப்டலாம். ஆனா அம்மான்னு எப்டி கூப்ட முடியும்?" என்று சபாபதியிடம் திகைப்புடன் வினவியவளிடம் ரேணுகா,
"அது ஒண்ணுமில்ல பவி..... உன்னோட அம்மா இப்போ உங்க கூட இல்லன்னு சபா ஸார் எங்கிட்ட வருத்தப்பட்டு சொல்லிட்டு இருந்தாங்க. அதுனால என்னை அம்மா மாதிரி நினைச்சுக்கன்னு சொல்ல வந்தாங்களோ? என்னவோ? இல்ல சபா ஸார்?" என்று கேட்டு அவரை ஒரு கெஞ்சல் பார்வை பார்த்த ரேணுகாவின் கண்ஜாடையை சபாபதி கொஞ்சங்கூட சட்டை செய்யவில்லை.
மனைவியின் வாயிலிருந்து புறப்பட்ட ஸார் என்ற அழைப்பு அவரது பிபிஐ எகிற வைத்துக் கொண்டிருந்தது. ஏற்கனவே இவள் பேச்சைக் கேட்டு பத்து வருடங்களை வீணாக்கி விட்டார். இன்றும் இவளுடைய பேச்சைக் கேட்டார் என்றால், இவள் வாழ்வு முழுவதற்கும் பவிக்கு ஹெல்பராக வாழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நினைத்தவர் ரேணுகாவை ஒரு அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தார்.
"என்னங்க ஸார்! கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எதையோ யோசிச்சுட்டு நின்னுட்டு இருக்கீங்க?" என்று அவரை மறைமுகமாக தான் பேசும் போக்கிலேயே பேசுமாறு உந்திய ரேணுகாவிடம்,
"பதில் தான ரேணு சொல்லணும்? சொல்லிட்டாப் போச்சு!" என்று சொல்லி விட்டு தன்னுடைய மகளின் எதிரே சென்று நின்றார்.
"பவி..... உங்கிட்ட பேசுறதுக்கு என்னோட தயக்கமே எனக்குப் பெரிய எதிரியா இருந்துச்சுன்னு ஏற்கனவே உங்கிட்ட நான் சொல்லியிருந்தேன்ல! அது இந்த விஷயத்துல தான்..... ரேணுகா என்னோட காலேஜ் மேட்! நௌ ஷீ இஸ் மை வொய்ப்! நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு பத்து வருஷம் ஆச்சு! படிக்குறப்பவே இவளுக்கு எம்மேல லவ்..... என்னை நெறய தடவ சுத்தி சுத்தி வந்தா! நான் இவள திட்டி, அட்வைஸ் பண்ணி, கோபத்துல ஒரு நாள் அடிக்கக்கூட செஞ்சுட்டேன். அதுக்கப்பறம் எனக்கு வித்யாவோட மேரேஜ் நடந்தது. அந்த மேரேஜ்ல நான் மட்டுமே சந்தோஷமா இருந்தேன்; நான் மட்டுமே வித்யாவ லவ் பண்ணவும் செஞ்சேன்! கடைசில நான் மட்டுமே உனக்கு அப்பாவாவும் ஆனேன்!"
"நீ குழந்தையா இருக்கும் போது உன்னை தூரத்துல இருந்து பார்க்குறப்ப எல்லாம் இந்த குழந்தை எங்குழந்த; நம்ம வெறுக்குற அளவுக்கு இந்த குழந்தை என்ன தப்பு செஞ்சான்னு தோணும்! ஆனா உன்னை தூக்கி வச்சுட்டு இருக்குறப்ப சொல்லாமலே வித்யாவோட நியாபகம் தான் மனசுக்குள்ள வந்து உக்காந்துக்கும். முதல்ல எம்பொண்டாட்டியா இருந்தாலும், என்னை விட்டுப் போனதுல இருந்து அவள நான் நினைக்குறது ரொம்ப தப்பு இல்லயா? அதுனால உம்பக்கத்துல ரொம்ப வராம தூரத்துல இருந்தே உன்னை ரசிச்சுப் பழகிட்டேன் பவி. ஒரு அப்பாவா உன்னோட பெஸ்ட் மொமெண்ட் எதுலயும் நான் உன் பக்கத்துல நின்னதில்ல; அதப்பத்தி ரொம்ப அலட்டிக்கிட்டதும் இல்ல;
அதுக்குத்தான் உன் அம்மம்மாவும், தாத்தாவும் உங்கூடவே இருக்காங்களேன்னு நினைச்சே ஒதுங்கி இருந்துட்டேன். ஆனா அப்டி ஒதுங்கியிருந்ததும் நான் செஞ்ச பெரிய தப்புன்னு ரீசண்டா தான் தெரிஞ்சது......!"
"எட்டு ஒன்பது மாசத்துக்கு முன்னால ஒருநாள் நைட் டைம்ல மொட்டமாடியில கொஞ்ச நேரம் காத்தாட நிக்கலாம்னு தோணுச்சு! அப்போ அங்க நான் வந்தப்ப தான் நீ அங்க உக்காந்து சைலண்டா அழுதுட்டு இருக்குறத பாத்தேன்; உன்னோட ப்ரச்சன என்னன்னு எனக்குத் தெரியல; சரி உங்கிட்டயே வந்து ஏன் அழுறடான்னு கேக்கலாம்னு நினைச்சா, என் பிரச்சனைய பத்தி கேள்வி கேக்குறதுக்கு நீங்க யாருன்னு கேட்டுடுவியோன்னு ரொம்ப பயமா இருந்தது......"
"அதுக்கப்புறம் தான் வீட்ல உன்னோட தாத்தா, பாட்டியோட ஆக்டீவிட்டீஸ வாட்ச் பண்ண ஆரம்பிச்சேன்! அவங்க உட்பட யாருமே உனக்கு சரியான கேரும், ப்ரெண்ட்ஷிப்பும் தரலன்னு சொல்லி ரேணுட்ட வருத்தப்பட்டுட்டு இருந்தேன்! இவ தான் உனக்கு ஒரு ப்ரெண்ட வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற ஐடியாவ எனக்கு குடுத்தா! இப்ப மட்டுமில்ல; நீ குழந்தையா இருக்கும் போதே உம்மேல அக்கற காட்டல; உன்னை நான் நல்லா பார்த்துக்கலன்னு எங்கிட்ட சொல்லிட்டே இருப்பா! இவள நான் கல்யாணம் பண்ணினப்பவே இங்க கூட்டிட்டு வந்துருக்கலாம் பவி; ஆனா உங்க அம்மம்மா உன்னை இவகிட்ட ஒட்ட விடாம பண்ணிட்டாங்கன்னா, இந்த வீட்டுக்கு அவ வந்தும் ப்ரயோஜனமே இருந்துருக்காது! அதனால தான் அவள அவ இடத்துலயே விட்டு வச்சுட்டேன். இப்ப உங்க ரெண்டு பேருக்குமே ஒரு ஸப்போர்ட் தேவைப்படுது! ஸோ இது சரியான நேரம்னு நெனச்சு தான் நான் இவள இங்க கூட்டிட்டு வந்தேன். நீ ரேணுவ அம்மான்னு கூப்ட்டா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும் பவி!" என்று சொன்ன தன்னுடைய தந்தையை கொழுந்து விட்டு எரியும் தீஜ்வாலையின் சூட்டுக்கு இணையான சூட்டுடன் ஒரு பார்வை பார்த்தாள் சாம்பவி.
"என்னடா திடீர்னு டாடிக்கு நம்ம மேல பாசம்லாம் வருதே.... அம்மம்மா, தாத்தா விட்டுட்டு போய்ட்டதால ஒருவேள நம்ம கிட்ட டாடிக்கு சாப்ட் கார்னர் வந்துடுச்சோன்னு நினைச்சேன். நீங்க என்னடான்னா ஒரு லேடிய லவ் பண்ணி, மேரேஜ் பண்ணி, எனக்கு ப்ரெண்டுங்குற பேர்ல உங்க ஹோம்ல இருந்தே ஒருத்தன இங்க கூட்டிட்டு வந்து, அவன அம்மம்மா, தாத்தாட்ட சண்ட போடச் சொல்லி, அவங்கள வீட்ட விட்டு வெளிய கிளப்பி விட்டுட்டு, இப்ப உங்க ப்ளான்ல மாஸ்டர் பீஸா இந்த லேடியையும் இந்த வீட்டுக்குள்ளயே வந்து செட்டில் பண்ணிட்டீங்க! வாட் அ க்ரேட் ப்ளான்...... ஹாட்ஸ் ஆஃப்
மிஸ்டர் சபாபதி! ஆக மொத்தத்துல முதல்ல இருந்து எல்லாமே இந்த லேடிய வீட்டுக்குள்ள கூட்டிட்டு வர்றதுக்கு நீங்க போட்ட ப்ளான் தான் இல்ல மிஸ்டர் சபாபதி?" என்று கேட்ட தன் மகளிடம் சற்றே இறங்கிய குரலில்,
"பவி..... நீ அப்பாவோட டெஸிஷன புரிஞ்சுக்குவன்னு நினைச்சேன்டா! ஆனா நீயே இப்டி தப்பு தப்பா பேசுனா அப்பா என்னடா பண்ணுவேன்?" என்று கேட்டவரிடம்,
"வெஷம் குடிச்சுட்டு சாவுங்க!" என்று எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத குரலில் பதிலளித்தாள் சாம்பவி. சபாபதி, ரேணுகா, செல்வா அனைவருக்கும் அவள் பேசிய பேச்சில் மிகப்பெரிய அதிர்ச்சி! காதால் கேட்ட சம்பவத்தில் செல்வாவும் மிகவும் அதிர்ச்சியடைந்திருந்தான். தானும் இப்போது அவர்களுடைய குடும்ப விவகாரத்தில் குறுக்கிட்டு இன்னும் கொஞ்சம் குழப்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று எண்ணித் தான் சொல்லற்று நின்றான்.
"பவிம்மா.......!" என்று கீச்சிட்ட ரேணுகாவின் புறம் திரும்பியவள் அவரிடம்,
"என்ன.....ப்ரச்சன உங்களுக்கு? ஹஸ்பெண்ட் சென்டிமெண்ட்டா? இதல்லாம் நான் நிறைய பார்த்தாச்சு! என் அம்மம்மா அவங்க ஹஸ்பெண்ட் கிட்ட காலையில என் தெய்வம் நீங்கதான்பாங்க; சாயந்தரம் ஏ சனியனே எங்க இருக்க சீக்கிரமா வாம்பாங்க! ஸோ உங்க ட்ராமவ நீங்க எங்கிட்ட போட்டுக் காட்டாதீங்க; டென் இயர்ஸ் ஆஃப் லாங்க் லாஸ்டிங் ரிலேன்ஷிப்...... ஹாங்! உங்க பேபி என்ன பண்ணுது? போர்த்தா இல்ல தேர்டு க்ரேடா?" என்று சற்றே அசதியான குரலில் கேட்டவளிடம்,
"நெஜமா அப்டி எல்லாம் யாரும் இல்லம்மா! நான் இப்டி சடனா உன் வாழ்க்கையில இன்டர்ஃபியர் ஆகணும்னு நினைக்கல. பட் இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் உருவாகிடுச்சு! ஐ'ம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி பவி!" என்று அந்த சின்னப் பெண்ணிடம் தன் மனமார்ந்த மன்னிப்பை கேட்டுக் கொண்டார் ரேணுகா.
"ஷ்ஷ்ஷ்! எனஃப் வித் யுவர் காம்ப்ளிகேட்டட் ஸ்டஃப்! என்னால இதுக்கு மேல நார்மலா இருக்குற மாதிரி நடிக்க முடியல; தயவுசெஞ்சு எனக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் குடுங்க!" என்று சொல்லி விட்டு மாடியேறப் போனவள் தன்னுடைய பின்னாலேயே வந்த செல்வாவை அங்கேயே நிற்க சொல்லி சைகை செய்தாள்.
"உனக்கு வேற ஸ்பெஷல் அனௌன்ஸ்மெண்ட் குடுக்கணுமா? லீவ் மீ அலோன்!" என்று அவனிடம் சொல்லி விட்டு தன்னுடைய பாரத்தைக் கூட சுமக்க முடியாதவள் போல் படிக்கட்டுகளில் நிதானமாக ஏறிக் கொண்டிருந்தாள்.
தன் மகள் அவளது அறைக்கதவை அடித்துச் சாற்றும் சத்தம் கீழே வரை கேட்டதும் சபாபதி செல்வாவிடம் வந்தார்.
"செல்வா.... ப்ளீஸ் டூ சம்திங்க்! பவிம்மா ரொம்ப வருத்தமா இருப்பாடா! அவகிட்ட நீ போய் பேசு!" என்று கெஞ்சலாக கேட்டுக் கொண்டிருந்தார்.
"யோவ்..... இப்பயும் நாந்தானாய்யா போவணும்? உம்புள்ள உம்மேல கொலகாண்டுல இருக்கான்னு தெரியுதுல்ல..... போ; போயி அத்த மடியில போட்டு தட்டிக் குடு! உன்னாண்ட அத்து கோபப்பட்டு, கத்தி ஒங்கன்னத்துல ரெண்டு அப்பு அப்புனாலும் வாங்கிக்க! ஒனக்கு இத்தும் வோணும்! இன்னமும் வோணும்! கட்டிக்கிட்ட பொண்டாட்டி போயிருச்சுன்னு நீ மறுக்கா கல்யாணம் பண்ணத்த அல்லாம் நான் தப்புன்னு சொல்லல! இம்மாவருஷம் ஒம்பொண்ணான்ட அத்த மறச்சு வச்சுனு இருந்தத கூட தப்புன்னு சொல்லல; ஆனா இப்ப போட்டு ஒடச்ச பாரு...... விசியத்த! எனக்கே கொஞ்சம் அல்லு உட்ருச்சு வாத்யாரே; கட்டிக்கின பொண்டாட்டி ஒன்னாண்ட அத்தோட உரிமையக்கூட கேக்காம பத்து வருஷம் வாழ்ந்துக்குது பாரு; அதுக்கு குடுக்குற மரியாதயும் நீ ஒழுங்கா தர்ல; ஒம் பொண்ணான்ட காமிச்சுன்னுருக்குற பாசத்தையும் நீ ஒழுங்கா காமிக்கல...... சீக்கிரத்துல மேல ஏறு..... போய்யா!" என்று சொன்னவனிடம் பேச்சற்று படிக்கட்டுகளை பார்த்துக் கொண்டு நின்றார் சபாபதி.
ரேணுகா தன் கணவரின் முன்னே வந்து நின்று கோபத்துடன் அவரது சட்டைக் காலரைப் பற்றிக் கொண்டார். பவியின் வருத்தத்துக்கு சற்றும் குறைவில்லாத வருத்தம் ரேணுகாவின் கண்களிலும் சபாபதிக்கு தெரிந்தது.
"ஸாரிம்மா..... நான் வந்து!" என்று ஆரம்பித்தவரின் பேச்சை இடையில் நிறுத்திய ரேணுகா அவரிடம்,
"எல்லா விஷயத்துலயும் நான் சொன்னத கேட்டீங்களே சபா....? அதே மாதிரி இந்த ஒரு விஷயத்துலயும் கொஞ்சம் பொறுமையா முடிவு எடுத்து இருக்கலாமே? இதுக்கு மேலயும் நடிக்க முடியாது. என்னை விட்டுடுங்கன்னு சொல்லிட்டு போறா பாருங்க; இதுக்குத்தானா நம்ம ரெண்டு பேரும் இவ்ளோ நாளா பொறுமையா இருந்தோம்? இந்த சின்னப் பையன் கூட உங்கள விட மெச்சூர்டா பேசுறான்; நீங்க தான் பேச வேண்டிய நேரத்துல தயங்கி, தயங்க வேண்டிய நேரத்துல பேசின்னு எல்லாத்தையும் குழப்பி வச்சுருக்கீங்க! போங்க! பவிம்மாட்ட போய்ப் பேசுங்க!" என்று சொல்லிக் கொண்டிருந்த போது சாம்பவி கீழிறங்கி வந்து கொண்டிருந்தாள். அவளது தோளில் ஒரு ட்ராவல் ஷோல்டர் பேக்கை மாட்டியிருந்தாள்.
"யோவ் ரூல்ஸூ! ஒம்மவ எங்கயோ பட்டணப்ரவேசம் கெளம்பிட்டாய்யா! நாதாரிப்பயலே....... எனக்கே எனக்குன்னு இப்பத்தாய்யா ஒரு மைமா கெடச்சுனுச்சு! அத்தையும் வூட்ட விட்டு வெரட்டி உடப் பாக்குறியே..... நீயெல்லாம் பாம்பு கொத்தித்தாயா சாவ!" என்று புலம்பிக் கொண்டிருந்தவனிடம்,
"ஷட் அப் யூ இடியட்! பவிம்மாவ சமாதானம் பண்ணி வீட்ல இருந்து கெளம்பாம தடுக்கப் பாரு! அப்டியே அவ வெளிய போய்ட்டான்னா, பின்னாடியே போயி வீட்டுக்குக் கூட்டிட்டு வா! போடா!" என்று சொன்ன சபாபதியும், ரேணுகாவும் அவளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளை பாவமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
"எத்தையும் நீ பண்ணாத! சொம்மா ஒக்காந்துனு செல்வாக்கு ரூல்ஸ மட்டும் போடு! தண்டக்கருமாந்திரம்; இன்னிக்கு எந்தெந்த ஊரல்லா ரவுண்டு அடிக்கணும்னு தெரியலயே முப்பாத்தம்மா! போயினு வர்றேன்யா; யம்மா வர்றேயம்மா!" என்று இருவரிடமும் சொல்லி விட்டு வீட்டின் முன்பக்க வாசல் வரை சென்றிருந்த பவியின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் செல்வா.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro