Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 21

"சாம்! ஏய் சாம்! ஹலோ மேடம் வேர் ஆர் யூ ட்ரீமிங்......?" என்று கேட்டு அவள் முகத்திற்கெதிராக சொடுக்கு போட்டவன் முன், "ஹாங்...!" என்று திகைத்து சட்டென எழுந்து நின்றாள் சாம்பவி.

"ப்ளீஸ் பீ சீட்டட்! நாம எதுவா இருந்தாலும் உட்கார்ந்தே டிஸ்கஸ் பண்ணலாமே?" என்று கேட்ட படி அவளருகில் அமர்ந்து புன்னகைத்தவனிடம்,

"ஸாரி தீபக்..... நான் வேணும்னு உங்களுக்கு ரெண்டு டிஃபால்ட் போடல. உங்க கேன்வாஸ் ரொம்ப டர்ட்டியா இருந்தது அண்ட் நீங்க ப்ராப்பர் ஹேர்கட்லயும் இல்ல! அதுனால தான் எழுத வேண்டியதாப் போச்சு! என்னை நீங்க மிஸ்டேக் பண்ணிக்காதீங்க!" என்று சொல்லி விட்டு தன்னுடைய உருளைக்கிழங்கு பொரியலை ஸ்பூனால் மிகவும் நாசூக்காக சாப்பிட்டுக் கொண்டிருந்தவளை கன்னத்தில் கைவைத்து, அந்த கையை டேபிளில் ஊன்றி குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான் தீபக்.

French Braid ஸ்டைல் குட்டி இரட்டைப் பின்னலில் சாம் அவளது கண்களில் ஒருவித பயத்துடன் பேசிக் கொண்டிருந்தாலும் அவளது இதழ்களுக்கு எந்தவித பயமும் தெரியவில்லை போலும். சாதமும், பொரியலும் மாறி மாறி சாப்பிடும் அவளது பிங்க் நிற இதழ்கள் மிகவும் அட்ராக்டிவாக தெரிந்து தொலைந்து தீபக்கின் மொத்த கவனத்தையும் தன் பக்கமாய் இழுத்துக் கொண்டிருந்தது.

"ஹலோ.... என்ன சொல்லிட்டு இப்ப நீங்க எங்க ஸார் ட்ரீமுக்குப் போயிட்டீங்க?" என்று சாம்பவி அவனைப் பார்த்து கேட்க தீபக் அவளைப் பார்த்து லேசாக அசடுவழிந்தான்.

"லுக் சாம்! எல்லார்ட்டயும் ஒரு லிமிட்டோடவே நின்னு பேசாம கொஞ்சம் ஜோவியலா தான் இரேன்; அதுல என்ன ப்ராப்ளம் உனக்கு? ஏதோ ப்ரோக்ராம்டு சிஸ்டம் மாதிரி நம்ம ஸ்டாஃப்ஸ் உனக்காக அஸைன் பண்ற டியூட்டீஸ முடிக்குற! அதுல என்னை மாதிரி கொஞ்சம் பாப்புலரான ஸ்ட்டூடெண்ட் எவனாவது சிக்கிட்டான்னா அவன்ட்ட ஒரு ஸாரியோ, தேங்க்ஸோ சொல்லி
வச்சுடுறது. இன்னிக்கு நான் தப்பு செஞ்சேன். ஸோ நீ எனக்கு டிஃபால்ட் போட்ட! நான் ஃபைன் கட்டுனேன்! இதுல நீ எங்கிட்ட ஸாரி கேக்குறதுக்கு என்ன இருக்கு சாம்?" என்று கேட்டவனிடம்,

"இல்ல.... உங்களுக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இருக்காது; பட் உங்க கேங்க் பசங்க சாம் வேணும்ட்டே இந்த வேலைய செஞ்சுட்டா! அதுனால அவ தீபக்ட்ட ஸாரி கேக்கணும்னு ஆரம்பிப்பாங்க! அப்போ ஸாரி சொல்ல ஆரம்பிச்சா உங்க கேங்க்ல இருக்குற எல்லார்ட்டயும் அம்பது, அறுபது ஸாரி சொல்ல வேண்டியதிருக்கும். இப்பன்னா ஒரு ஸாரியோட போயிடும்! அதான்!" என்று  தன்னுடைய சாப்பாட்டை முடித்து லன்ஞ்ச் டப்பாவை மூடி வைத்த படி சொன்னாள் சாம்பவி.

"வாவ்..... இது கூட நல்ல ஐடியாவா இருக்கே..... சாம் வேணும்ட்டே எனக்கு டிஃபால்ட் போட்டு என்னை ஃபைன் கட்ட வச்சுட்டா! அதோட எங்கிட்ட அவ செஞ்ச தப்புக்கு ஸாரியும் கேக்கல. தீபக்கோட கேங்க்ல அடுத்த பிரேக்கிங் நியூஸ் இதுதான்! நிறைய ஸாரி கேக்க நீ ரெடியா இருந்துக்க சாம்!" என்று சொல்லி அவளிடம் குறுஞ்சிரிப்பை உதிர்த்தவனிடம் உச்சுக்கொட்டியவள்,

"ஹலோ.... நான் உங்ககிட்ட இப்பதான ஸாரி கேட்டேன்! பிரச்சனைய அப்டியே விட மாட்டீங்களா?" என்று கேட்டாள்.

"ஸ்கூல் முடிஞ்சதுக்கப்புறம் எங்கூட ஹாஃப் அன் அவர் வெளிய வா சாம்! உங்கிட்ட நான் நிறைய பேசணும். நீ என்னோட வந்தன்னா நான் பிரச்சனைய அப்டியே விட்டுடுறேன்! அண்ட் இது கண்டிப்பா உன்னை த்ரெட்டன் பண்ற அட்டெம்ப்ட் இல்ல.... இத நீ நம்பணும்!" என்று சொன்னவனிடம் தலையை மறுப்பாக ஆட்டி வைத்தவள்,

"பேசணும்னா ஓகே! பட் இன்னிக்கு கண்டிப்பா வரமுடியாது. எனக்கு இன்னிக்கு ரொம்ப முக்கியமான ஒர்க் இருக்கு! இந்த வீக்எண்ட் வேணும்னா நீங்களும், திவ்ஸூம் எங்க வீட்டுக்கு வாங்களேன்!" என்று திடீரென சபாபதி சொன்னது நியாபகம் வந்து
அவனுக்கு அழைப்பு விடுத்தவளிடம் சிரிப்புடன் அவளது அழைப்பை ஏற்றுக் கொண்டு அவளது வீட்டிற்கு வருவதாக ஒத்துக் கொண்டான் தீபக்.

பள்ளி முடிந்ததும் பரபரத்துக் கொண்டு வீட்டிற்கு ஓடியவளிடம் தனசேகரும், கல்யாணியும் முகம் கொடுத்துக் கூடப் பேசவில்லை.

தங்களுடைய அறைக்குள் கதவடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்கள் அறைக்கதவை தட்டி தட்டி ஓய்ந்து போனாள் சாம்பவி.

"அம்மம்மா ப்ளீஸ்.... கதவத்தொறங்க; எங்கூட பேசுங்க அம்மம்மா! தாத்தா நீங்களாவது பேசுங்க! அப்பா மேல உங்களுக்கு கோபம்னா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? என்னை தள்ளிவச்சு ஒதுக்காதீங்களேன்!" என்று கதவடியிலேயே அமர்ந்து மென்குரலில் புலம்பிக் கொண்டிருந்தவளின் கையைப் பிடித்து அவளை தூக்கி நிறுத்திய செல்வா அவளை தரதரவென இழுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றான்.

"கைய விடுறா பொரம்போக்கு! இப்ப நீ எங்கைய விடல; ஒன்ன கொன்னுடுவேன்!" என்று சொன்ன சாம்பவி அவளது பேச்சை கொஞ்சம் கூட மதிக்காமல் செல்வா அவளை ஸோஃபாவில் அமர்த்தியதும் அவன் மீது தாறுமாறாக வந்த கோபத்தில் பாய்ந்து அவன் தொடையை தன் பற்களால் கவ்வியிருந்தாள்.

"ஆ..... யம்மா! அடியே! வலிக்குதுடீ! உடுறீ!" என்றவன் இன்னும் ஏழெட்டு கத்து கத்திய பிறகு தான் அவனுடைய தொடையில் இருந்து தன் பற்களை எடுத்தாள் சாம்பவி.

"என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிட்டே இருக்கேன்! காலையில இருந்து ஓவராவா பண்ணிட்டு இருக்க? காலையில நீ தூக்கிட்டுப் போய் ஸ்கூல்ல விட்டதுக்கும் சேத்துதான் இந்த பனிஷ்மெண்ட்! ஒழுங்கு மரியாதயா என்னைய என் வேலைய பாக்க விடு! நீ உன் வேலையப் பாரு! இல்ல..... உன்  இன்னொரு தொடை ஃப்ரீயா தான் இருக்கு ஜாக்கிரதை!" என்று சொல்லி விட்டு மறுபடி அவளுடைய அம்மம்மாவின் அறையின் முன்பு சென்று அமர்ந்தவளைப் பார்க்க செல்வாவிற்கு பாவமாக இருந்தது.

தன்னுடைய தொடையை தடவிக் கொண்டு அதில் தெரிந்த அவளது பல்தடத்தைப் பார்த்தவன், "ரத்தக்காட்டேரிக்கு தூரத்து சொந்தக்காரியா இருப்பா போல்ருக்கு! என்னா கடி கடிச்சு வச்சுனுருக்குறா பாவிமவ......!" என்று முணங்கிய படியே தன்னுடைய தொடையை தடவிக் கொண்டே தனக்கு ஏற்பட்ட காயம் எவ்வளவு பெரிதென்று பார்ப்பதற்காக தன்னுடைய அறைக்குள் சென்றான்.

அன்று இரவும் கல்யாணி சாம்பவியின் கெஞ்சலை சற்றும் கண்டுகொள்ளவேயில்லை. தனசேகர் தான் தன் பேத்தியின் கெஞ்சல்கள் பொறுக்க முடியாமல் அவளிடம் சென்று அவசர அவசரமாக நாங்கள் இருவரும் நாலு நாட்களில் இங்கிருந்து கிளம்பி விடுவோம்; உன் அப்பா எங்களை இங்கிருந்து வெளியேற சொல்லியிருக்கிறார் என்று மெதுவான குரலில் சொன்னார்.

"அப்ப ஷ்யூரா கிளம்பிடவே போறீங்களா தாத்தா? உங்கள விட்டுட்டு எப்டி இங்க இருப்பேன்? நானும் உங்க கூடவே வர்றேன்! என்னையும் கூட்டிட்டுப் போயிடுங்க!" என்று அழுகையுடன் சொன்னவளை தன் தோளில் சாய்த்து ஒருமுறை தங்களுடைய அறைக்கதவை பார்த்துக் கொண்டவர்,

"பவிம்மா..... அம்மம்மாவும், தாத்தாவும் அவ்ளோ நல்லவங்க இல்லடா கண்ணு! நீ இங்க இருந்தன்னா தான் சந்தோஷமா இருக்கலாம். எங்க தொல்லை இல்லாம, உன் வேலைய நீ பார்த்துக்கிட்டு, உனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கலாம்!" என்று சொன்னவரிடம்,

"நீங்க எனக்கு தொல்லையும் இல்ல; நீங்க எப்டிப்பட்டவங்களா இருந்தாலும் பரவாயில்ல! ஆனா நீங்க ரெண்டு பேரும் இல்லாம என்னால இந்த வீட்ல இருக்க முடியாது தாத்தா! ப்ளீஸ் ஸ்டே ஹியர்! நான் அப்பா கிட்ட பேசுறேன்!" என்று சொன்ன தன்னுடைய பேத்தியை வேண்டாமென சொல்லி தடுத்தவர்,

"உன் அம்மம்மாவுக்கு நாங்க தனியா போகப்போறது ரொம்ப பிடிச்சிருக்குடா பவிம்மா! இதுக்குத்தான் இத்தன வருஷமா காத்துக்கிட்டு இருந்தா! நான் அவளுக்கு சம்பாதிச்சு வாங்கிக் குடுக்காத வீட்டை, அவளே வாங்கிக்கிட்டா! அதுக்கான காசு முழுசும் உங்கப்பாட்ட இருந்து நாங்க எடுத்தது தான்; ஆனாலும் இதுல உன்னோட அம்மம்மாவுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்ல! தாத்தாவுக்கு தான் நாங்க செஞ்ச காரியம் ரொம்ப உறுத்தலா இருக்கு...... இத்தன நாளு நாங்க உன்னை கஷ்டப்படுத்துனதுக்கும், இப்ப உன்னை அப்டியே விட்டுட்டுப் போறதுக்கும் எங்கள மன்னிச்சிடுடா பவிம்மா! நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். வித்யா பண்ணுன தப்ப நீயும் செஞ்சுடாம, மனசுக்குப் பிடிச்ச வாழ்க்கைய சந்தோஷமா வாழணும். மாப்ள பேசுனதுல ஒரு தப்பும் இல்ல; ஆனா உன் அம்மம்மா அவரு மேல ரொம்ப கோபத்துல இருக்கா! அதான் உங்கூடவும் பேச மாட்டேங்குறா. நீயும் அவ கூட பேசுறதுக்கு முயற்சி பண்ணாதடா தங்கம்! நீ அவ்ளோ
கெஞ்சறது என் மனச அறுக்குது!" என்று சொன்னவரிடம் ஒரு தெளிவான முடிவை எடுத்து விட்டவள் போல் நிமிர்ந்து அவரைப் பார்த்து புன்னகைத்தவள்,

"ஆல்ரைட் தாத்தா! நான் யார் கிட்டயும் கெஞ்சல; பேசல; எதையும் நியாயப்படுத்த முயற்சி செய்யல; எதுவும் செய்யல...... இனிமேலாவது என்னோட தொல்லை இல்லாம உங்க லைஃப நீங்க சந்தோஷமா வாழுங்க! ஒருநிமிஷத்துல வந்துடுறேன்.  ரூமுக்குள்ள போய்டாதீங்க தாத்தா!" என்று அவரிடம் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்கு ஓடிச் சென்றாள்.

இரண்டு நிமிடங்களில் மறுபடி அவரிடம் வந்து அவர் கையில் ஆயிரம் ரூபாயை திணித்தவள்,

"உங்க ஹவுஸ் வார்மிங்க்கு என்னால வர முடியாது. ஸோ இந்த பணத்துல அம்மம்மாவுக்கு பிடிச்ச ஏதாவது கிப்ட்ட வாங்கி, அத உங்களோட கிப்ட்டா அவங்க கிட்ட குடுத்துடுங்க தாத்தா! அங்க போயிட்டாலும் நீங்களாவது அப்பப்ப எங்கிட்ட பேசுங்க ப்ளீஸ்!" என்று அவரிடம் சொல்லி விட்டு தன் சக்தியெல்லாம் வடிந்தது போல மேலே ஏறிச் சென்றாள்.

பாசத்தை மருந்துக்குக் கூட கொடுக்காமல், அந்தக் குழந்தையை அவர்களால் முடிந்த அளவிற்கு பாடாய்ப்படுத்தியும், தங்கள் மீது அந்த குழந்தை வெளிப்படுத்திய அளவிலா பாசமும், கையில் வைத்திருந்த அந்த நோட்டுகளின் எடையும் அவ்வளவு கனமாக இருந்தது தனசேகருக்கு! முதுகெலும்பு இல்லாத அந்த வயதான மனிதர் நிமிர்ந்தே நடந்து அவரது அறைக்குள் சென்றாலும், தன்னை ஒரு மண்புழுவைப் போலத் தான் மனதிற்குள்ளாக நினைத்துக் கொண்டார்.

சாம்பவி தன்னுடைய தாத்தாவிடம்
பேசும்போது உணர்ச்சிவயப்பட்டவள் தான்; அதற்குப் பிறகு அவர்கள் இருவருமாக கிளம்புவதறற்கு சில பல ஆயத்தங்கள் செய்த போதும், அவர்களுடைய பொருட்களை  மட்டும் அந்த வீட்டில் இருந்து தனியே எடுத்து மூட்டை கட்டிய போதும், கடைசியில் அங்கிருந்து கிளம்பிச் சென்ற போதும் ஒரு உணர்வையும் காட்டாமல் கிட்டத்தட்ட கல்மலை போல் நின்றாள். இந்த நான்கு நாட்களாக அவள் செல்வாவையும் தன் பக்கத்தில் கூட வரவிடவில்லை. அவன் புதிதாக வந்ததில் இருந்து சற்றே இளகி நட்பாக, குதூகலமாக அவனுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவள் தன்னுடைய அம்மம்மா மற்றும் தாத்தாவின் பிரிவால் மறுபடியும் தன்னுடைய ஓட்டுக்குள் சுருங்கிக் கொண்டாள்.

அழுகை, ஆர்ப்பார்ட்டம், வருத்தம், கோபம், எரிச்சல் என்ற எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல், தன்னிடமும் பேசாமல் மறுபடியும் அவள் முதலில் இருந்தது போல இயந்திரத்தனமாக ஆகி விட்டாளே என்று நினைத்து மிகவும் வருந்தினான் வாகை செல்வன். தன் வார்டனம்மாவின் இந்த மவுனப் போராட்டத்தை எப்படி ஒரு முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் அவன் குழம்பிக் கொண்டிருந்த போது தான் தீபக் நல்ல சமயத்தில் அவனுடைய உதவிக்கென அங்கு வந்து சேர்ந்தான்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro