💚 இணை 17
செல்வாவும், சாம்பவியும் திவ்யாவின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று வந்ததற்கு பிறகு பள்ளியில் தீபக் சாம்பவியை பார்க்கும் போதெல்லாம் ஐயோ பாவம் இந்தப் பெண் என்ற மாதிரியான பரிதாபகரமான ஒரு பார்வையுடனே சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கும், செல்வாவிற்கும் விழாவில் பிரச்சனை நடந்தது வேறு திவ்யாவின் வாய்வழியாக சாம்பவிக்கு தெரிந்திருந்தது. ஆனால் தீபக் அவளை முறைப்பதற்கு பதிலாக சிரித்ததற்கும், செல்வா தீபக்குடன் சண்டைக்கு சென்றதுக்கும் சேர்த்து அவனுக்குத் தான் சரியான மண்டகப்படி கிடைத்தது.
"டேய்.... உனக்கு நான் எத்தன தடவ உட்கார வச்சு க்ளாஸ் எடுத்தாலும், எதையுமே காதுல வாங்க மாட்டியா நீ? தீபக் கூட ஏன் சண்ட போட்ட?" என்று கேட்டவளிடம்,
"ஐய.... இல்ல பாப்பா! நீ சாப்ட போயிருந்தசொல அத்து நம்மளாண்ட ரொம்ப புளிப்பு காட்டினு இருந்ச்சு! அப்பால நாங்க கொஞ்ச நேரம் சொம்மா பேசினு இருந்ததுல அல்லாம் சரியாய்டுச்சு! நானும், அண்த்தயும் ரொம்ப ப்ரெண்ட்சாகிக்கினோம்; நீ ஒண்ணியும் ஃபீல் பண்ணிக்காத! தெர்தா?" என்று அவளுக்கு சமாதானம் சொன்னான் செல்வா.
"என்ன ஃபீல் பண்ணிக்காத......? யாரும் எங்கூட ப்ரெண்ட்லியா இருக்குறதெல்லாம் எனக்குப் பிடிக்காது செல்வா! அதுனால ஸ்கூல்ல கூட நிறைய நேரம் நான் உண்டு, என் வேல உண்டுன்னு தான் இருப்பேன். யார் கிட்டயும் என் நோட்ஸெல்லாம் ஷேர் பண்ணிக்க மாட்டேன். ப்ரேக் டைம்ல கேங்கா கிளம்பி கேன்டீன் போனாங்கன்னா அத பார்த்துட்டு பார்க்காத மாதிரி இருந்துடுவேன். அதுனாலயே எங்க க்ளாஸ்ல தீபக் கேங்க், வதனி கேங்க் பசங்க எல்லாரும் என்னை சாம் ரொம்ப ஹெட்வெயிட்பான்னு தான் சொல்லுவாங்க. இப்டி ஒழுங்கா போயிட்டு இருந்த என்னோட லைஃப நீ உள்ள புகுந்து குழப்பி வச்சுருக்க! தீபக்கே இப்போ எங்கிட்ட வந்து வந்து பேசுறான்; மூவிக்கு வர்றியா, க்ரூப் ஸ்டடீஸ்க்கு வர்றியா, வீக் எண்ட் நம்ம ரெண்டு க்ரூப் மெம்பர்ஸூம் சேர்ந்து ஏதாவது கெட் ட்டூ கெதர் ப்ளான் பண்ணிக்கலாமான்னு கேக்குறான்! இதுக்கு எல்லாம் நான் என்னடா பதில் சொல்லட்டும்?" என்று குறை படித்தவளிடம்,
"வர்றேனே, போவமேன்னு சொல்றது.......! எந்நேரமும் ஒரே ரூமுக்குள்ள அடைஞ்சுக்கினு கெடக்குறதுக்கு நீ என்ன ஹோம்ல இருக்குற பொண்ணா பாப்பா? எங்களுக்குக் கூட வெளாட, துன்னன்னு வெளிய வர்ற நேரமெல்லா இருக்கும்! எப்ப பாரு எம்மாம்பெரிய புக்குக்குல்லயே மண்டைய உட்டுக்கினு இருந்தா மூள சூடாகிடாது? படிச்சதெல்லாம் கொஞ்ச நாள் வரைக்குதா நியாபகத்துல நிக்கும் கண்ணு; ஆனா இப்டி ப்ரெண்ட்சோட சந்தோஷமா ஊரு சுத்துறது, ஏதாவது வெளாடுறது இதெல்லாந்தான் காலம் பூரா மனசுல அப்டியே நிக்கும்!
தீபக்கு அண்த்த அத்தோட நைனாவாண்ட ஒரு வாரத்துக்கு ஆயிர ரூபா துட்டு வாங்குமாம்..... சொல்ச்சு! நீ அப்டி ஏதாவது துட்டு வாங்கினு எங்கயாவது போயிருக்கியா? இந்தா செல்வாவோட சம்பள துட்டு...... ஒனக்கு ஒநைனா குடுத்த நோட்ட கிழிச்சுக்குனதுக்கு பதிலா ஒண்ணு; இத்த திருப்பி குடுக்க எம்மா நாளாச்சுடா ஒன்க்குன்னு கேட்டு வட்டி துட்டு கேட்றாதமே!
இன்னொரு ஐநூறு நீயும் அந்த பசங்களமேரி செலவு செஞ்சுனுருக்குறதுக்கு....... பத்திரமா ஒங்க ஆயா கண்ணுல படாம இத்த வச்சுக்க! இல்ல இத்தயும் ஏதாச்சு கத சொல்லி வாயில போட்டுக்கப்போவுதுங்க!" என்று சொல்லி விட்டு அவளிடம் ஆயிரம் ரூபாயை நீட்டியவனை குறுகுறுவென பார்த்தாள் சாம்பவி.
"இன்னா கண்ணு.... நம்மள இப்டி லுக் உட்டுனுகீற?" என்று கேட்டவனிடம்,
"நீ டாடி உனக்கு குடுக்குற மன்த்லி சேலரிய யூஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறியா செல்வா? அது மட்டுமில்ல; எனக்காகவும் உன்னோட மணிய செலவு பண்ணனும்னு நினைக்குற! அதுனால தான் காலையிலயும், ஈவ்னிங்லயும் தனியா வேலைக்கு வேற போயிட்டு இருக்க.... அன்னிக்கு எங்கையில இருந்த காச வாங்கும் போது என்ன மாதிரி ஒரு கோபத்துல பிடிச்சு இழுத்த? இப்ப எவ்ளோ ஸ்மூத்தா பேசிட்டு, உங்கிட்ட இருக்குற மணிய என்னை வாங்கிக்க சொல்ற? எதுக்கு இதெல்லாம் பண்ற செல்வா?" என்று சரியாக அவன் எங்கும் தப்பிக்காத வகையில் பாயிண்டை பிடித்து அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டாள் சாம்பவி.
"ஒவூட்டு ஆளுகளே ஒங்கிட்ட எப்படா எத்தையாவது புடுங்குவம்னு தான பவிம்மா இருக்குதுங்க? அந்த கழிசடங்களோட ஒருத்தனா போயி சேர புடிக்கல எனக்கு! அதா நம்ம ரெண்டு பேரு தேவைக்கும் சேத்து நானே சம்பாத்யம் பண்ணிக்கலாம்னு! இப்டி யாருக்கோசரமும் நா காச சேத்ததில்ல தெரியுமா...... என் வார்டனம்மாவுக்காக இத்த செய்யுறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்!" என்றான் அவன் சொன்ன சந்தோஷத்தை தன் முகத்தில் காட்டி.
"இல்ல செல்வா..... இதெல்லாம் தப்பு! என்னைய பெத்ததுனால எனக்கு செலவு பண்ற ரெஸ்பான்ஸிபிளிட்டி டாடி ஒருத்தருக்கு தான் இருக்கு! நீ இனிமே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்யாத! நீ எனக்காக எதையும் ஃப்ரீயா பண்றத என்னால அக்செ..... ஒத்துக்க முடியல!" என்றாள் பவி.
"நீயுந்தான எனக்கோசரம் நிறைய வேலைய ஃப்ரீயா செஞ்சு தர்றடா கண்ணு; புளிப்பா புளியங்கான்னு பாட்டு போட்டு ரீல்ஸ் செஞ்சுனு இருந்தவன உன்னோட ட்டேஸ்ட்ட கொஞ்சம் மாத்திக்க; நம்ம நடந்துக்குற முறை தான் நாளிக்கு நம்ம பர்ச்னாலிட்டிய முடிவு பண்ணும்னு சொல்லி என் செவுளு மேலயே ஒண்ணு உட்டியா இல்லையா? அதுக்கு எதுனாச்சு துட்டு வாங்குனியா? உங்க ஆயா என்னைய மீனு சமைக்கக்கூடாதுன்னு சொல்லயில எனக்குன்னு ஒரு சின்ன வெறகு அடுப்ப வாங்கினு வந்து தோட்டத்து மூலையில அழகா செட்டப் பண்ணி குடுத்தல்ல..... அதுக்காவது காசு வாங்குனியா? எம்மேல மொத மொதலா இப்டி அக்கற காட்றது நீதாம்மே..... அதுனால ஒன்னைய என்னால வேத்தாளா பாக்க முடியல; ஒன்னாண்ட காசும் வாங்க முடியல! ஒரே ஒரு வருஷந்தான ஒங்கூட நா இருக்கப்போறேன்! அதுவரைக்கும் செல்வா துட்டுல சந்தோஷமா, மனசும் வயிறும் நிறயிறமேரி சாப்டா ஒன்க்கு எங்க நோவுதாம்?" என்று கேட்டவனின் முன் தன் கையை நீட்டினாள் சாம்பவி.
"இன்னாத்துக்கு இப்ப கைய நீட்டினு இருக்க? செல்வா ரொம்ப கோபமா இருக்கான். ஒனக்கோசரம் நா பண்றத சரிம்பியா? வேணாம்பியா? அத்த சொல்லு மொதல்ல!" என்று முறுக்கிக் கொண்டு கேட்டவனிடம்,
"உன்னோட துட்டுல சாப்பிடுறது எனக்கு எங்கயும் நோவல..... நல்லாவே சாப்டுறேன்னு சொல்ல நினைச்சு ஹேண்ட்ஷேக் பண்ணிக்கலாம்னு தான் கைய நீட்டுனேன். எங்க நீ தான் ஒரு சமாதானத்துக்கு வர மாட்டேங்குறியே?" என்று கூறிப் புன்னகைத்தவளின் கையை விரைந்து சென்று பற்றிக் கொண்டான் செல்வா.
"டேங்க்ஸ்மே! ரொம்ப ரொம்ப டேங்க்ஸ்! யாரு எப்டிப் போனா என்ன பாப்பா! செல்வா உன்னைய பத்துரமா பார்த்துக்குறேன் இன்னா?" என்று சொல்லி விட்டு சிரித்தான்.
அவனுடன் இணைந்து நகைத்தவள், "செல்வா...... நம்ம எல்லாரும் அன்னிக்கு பீச்சுக்குப் போன மாதிரி இன்னொரு நாள் வேற எங்கயாவது போக ப்ளான் போடுவமா? பார்க், தியேட்டர், ஷாப்பிங் மால் இந்த மாதிரி..... எனக்கு அப்பப்ப நம்ம ப்ரெண்ட்சோட ஜாலியா ஊர் சுத்தணும்னு ஆசையா இருக்கு!" என்று கேட்டாள்.
"ரூல்ஸ் ஒன்னியும், என்னியும் டாரா கிழிச்சு தோரணம் தொங்க உட்டுடும். என்னா வெளயாடுறியா பாப்பா நீ? நம்ம பசங்களாண்ட கூட இங்க வாங்கடா, அங்க வாங்கடான்னு கேக்க முடியாதுடா தங்கம்! ஏன்னா டோப்பன் ஊருலல்ல குந்திக்கினுருக்கான்?" என்று அவளிடம் சொல்லி விட்டு தன்னுடைய வாயில் அடித்துக் கொண்டான் செல்வா.
"இப்ப எதுக்கு வாயில அடிச்சுக்குற?என்ன தப்பா பேசுன?" என்று புருவம் சுருக்கியவளிடம்,
"ஒன்னியும் இல்ல!" என்று இடமும் வலமுமாக தலையை ஆட்டினான் செல்வா.
"உங்க ஓனருக்கு தலையில முடி இருக்காதாடா ஒலக்க? அதுக்குத்தான் அவருக்கு டோப்பன்னு பேரு வச்சுருக்கிங்களா? டோப்பான்னா விக் தான?" என்று கேட்டவளிடம் சலித்தபடி,
"ஐய பாப்பா..... பேசக்கூடாதுன்னு நாம வாயில கை வச்சுனுக்குற விஷயத்துக்கு எல்லாம் நீ ஆல்ட்டு எடிட்டு டெலிட்டுன்னு சொல்லுவியே? அதேகாண்டி இந்த வார்த்தைக்கும் ஒருக்கா சொல்லு!" என்று சொன்ன செல்வாவை ஒரு மாதிரியாக முறைத்தவள்,
"கண்ட்ரோல் ஆல்ட் டெலிட் டோப்பன்!" என்றாள் பல்லைக் கடித்தவாறு.
"இன்னிக்கு சாயந்தரம் நீ
சொம்மா இருந்தன்னா என்னோட கடைக்கு வாரியா பாப்பா? ஒரு சைக்கிளு ஒண்ணு வாங்கணும்! நம்ம வேலைக்கெல்லாம் ஒரு சைக்கிள் இருந்தா சூளுவா இருக்கும்!" என்று சொன்னவனிடம் குதூகலக் குரலில்,
"ஐய்..... புது சைக்கிள் வாங்கப் போறியா? மார்க்கெட்ல புதுசா கியர் சைக்கிள்லாம் வந்துருக்காம் செல்வா; டாட் குடுத்த பணத்தயும் சேத்து வச்சுருப்ல? அத வச்சு நாம உனக்கு சூப்பர் சைக்கிளா வாங்கிட்டு வரலாம்! எப்ப ஷோரூம் போறோம்? ஈவ்னிங் 7 மணிக்கு ரெடியா இருக்கட்டுமா?" என்று கேட்டவளிடம்,
"ஐய பாப்பா! சைக்கிளு வாங்கப்போறம்னு தாம்மே சொன்னேன் நானு; புத்சாவா வாங்கினு வரப்போறம்னு சொன்னேன்? நம்ம கஜபதி அண்த்த வூட்டாண்ட ஒரு செகண்ட் ஹேண்ட் சைக்கிளு சொம்மா கெடக்குதாம்; காயிலாங்கடைக்கு போறதுதான்டா செல்வா! வந்து பாரு! ஒனக்கு தேவைப்பட்டுனுச்சுன்னா நூறோ, எரநூறோ குடுத்துனு எடுத்துன்னு போய்க்கன்னு சொன்னாரு! எரநூறுக்கு அத்த வாங்கினு, கூட எரநூறு துட்டுக்கு ஒடஞ்சு போன பார்ட்ஸ பர்ச்சேஸ் பண்ணிக்கினா முடிஞ்சது ஜோலி! நமக்கு புத்சா ஒரு சைக்கிளு சல்லிசான துட்டுல கெட்ச்ச மாதிரி ஆச்சு! இன்னா சொல்ற?" என்று கேட்டவனின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தோட்டத்தில் நின்றிருந்தால் என்றால் செம்மண்ணை கையில் அள்ளி அவன் முகத்தில் அபிஷேகம் செய்திருப்பாள்! நல்ல வேளையாக வீட்டிற்குள் இருந்ததனால் தப்பித்தான் என்று நினைத்துக் கொண்டிருந்தாள் சாம்பவி.
"பாப்பா.... இன்னாமே ஒண்ணுமே சொல்லாம எத்தையோ யோசிச்சுக்கினே நின்னுன்னு இருக்குற? இன்னா மேட்டரு?" என்று கேட்டவனிடம்,
"புதுசா ரோல்ஸ்ராய்ஸ் வாங்கப்போறவன் கூட அவனோட ப்ரெண்டு கிட்ட இவ்ளோ பேஷனேட்டா ஷோரூம் போகலாம்னு கூப்ட மாட்டான்டா! நீ இருநூறு ரூபாய் குடுத்து வாங்கப்போற அந்த செகண்ட் ஹேண்ட் காயிலாங்கடை ப்ராடெக்ட்ட நீ இரண்டு பார்ட்டா வீட்டுக்குள்ள கொண்டு வர்றியா? இல்ல ஒரு பார்ட்டாவே வீட்டுக்குள்ள கொண்டு வந்துடுறியான்னு நீ அத இங்க கொண்டு வரும் போது நான் வேடிக்கை பார்க்கணும்! கஞ்சூஸ்! ப்ளடி கஞ்சூஸ்..... இரு உன்னைய எங்கோபம் குறைஞ்ச பெறகு வச்சுக்குறேன்!" என்று அடங்காத கோபத்தில் அவனிடம் குதித்து விட்டு தன் பாதம் அதிர அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள் சாம்பவி.
"இந்தாம்மே...... அப்ப சைக்கிள வாங்க எங்கூட நீ வரமாட்டியா? சொல்லினு போ!" என்றவன் தன் கேள்விக்கு பதில் வராது என்று தெரிந்து தன்னுடைய வேலையைப் பார்க்க சென்றான்.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro